February 10, 2020
Shared with Public
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று மழை நிறைவடைந்துள்ளதால் இந்தப் பகுதிகளில் மர நடுகை அடுத்த பருவத்தில் தொடங்குவதுதான் சிறப்பானது. எனினும் வட கிழக்குப் பிராந்தியங்களில் மூங்கில் நடுகை, கண்டல் காடுகள் மீளுருவாக்திற்கு மழை பெரும்பாலும் தேவைப்படாது. ஏனெனில் நீருள்ள பகுதிகளிலேயே அவை செய்யப்படுகின்றன. இப்பிரதேசங்களில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
தென்மேற்குப் பருவக் காற்று பிரதேசங்களில் (மே தொடக்கம் ஓகஸ்ட் வரை மழை காலம்) மரநடுகை, விதைப்பந்துகள் உருவாக்கம் போன்றவற்றிற்கு தேவையான விதைகளை கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை கல்லுாரி, நடனம், நாடகமும் அரங்கியலும், இசை, கட்புலக் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த முதலாம் ஆண்டைச் சேர்ந்த எனது மாணவர்கள் இரண்டாவது வருடமாக, இந்த வருடமும் இலட்சக் கணக்கான விதைகளை சேகரித்து தந்திருந்தார்கள். கலைஞர்கள் பொதுவாக சுற்றுச்சூழல் சம்பந்தமாக கூருணர்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். இந்த மாணவர்கள் எல்லோரும் நடனத்தையும், இசையையும், நடிப்பையும், ஓவியத்தையும், சிற்பத்தையும், மற்றும் அவைகள் தொடர்பான தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட கலைஞர்களாக இருக்கிறார்கள். கற்றறிந்து பழுத்தவர்களுடன் வேலை செய்வதை விட கலைஞர்களுடன் செய்வது இலகுவானது. எனது மாணவர்களான அவர்கள் எனக்கு நிறைய உறுதிமொழி தந்திருக்கின்றார்கள். உங்களை எவ்வாறு பாராட்டுவது? வார்த்தைகளின்றி தவிக்கிறோம். எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment