Monday, January 11, 2021

மூங்கில் மீள்விருத்தி - 111

வீட்டில் விருத்தி செய்துவைத்திருந்த மூங்கில் கன்றுகளை அட்டாளைச்சேனை கோணாவத்தை வாவிக்கரையோரங்களில் பரீட்சார்த்த ரீதியாக இன்று நடுகை செய்தோம். இதற்கு எனது ஒன்றுவிட்ட சகோதரர், விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர் முகம்மட் சஜாத் உறுதுணையாகவிருந்தார். இந்த புண்ணிய மாதத்தில் நாங்கள் உருவாக்கியிருந்த நுாற்றுக் கணக்கான புங்கை, மருதம் கன்றுகளை நிறைய விவசாயிகளுக்கு தங்கள் வயல்களில் நடுவதற்காக கொடுத்திருந்தோம். அவர்களும் வந்து எடுத்துச் சென்றிருந்தார்கள். அடுத்த வாரம் பாரியளவில் நடுகை செய்யவும் உத்தேசித்துள்ளோம். குரோனாவுக்குள்ளும் வெற்றிகரமான பசுமையாக்கத்தை கற்றிருக்கின்றோம். தடையறாது தொடரும்.


பதியப் பகுதிகள் மூலம் மூங்கிலை உருவாக்குவது கடினமாக இருக்கின்றது


அல்லது முடியாமல் இருக்கின்றது என பல நண்பர்கள் என்னிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூங்கிலின் பதியப் பகுதிகளை நேரடியாக நடுகை செய்தால், அவை முளைத்து மரமாவதற்கு பல தடைகள் இருக்கின்றன. அதனை நிவர்த்திக்க, பதியப் பகுதிகளை ஒரு பொலித்தீன் பையினுள் இட்டு, தொடர்ச்சியாக ஈரலிப்பை பேணக்கூடிய இடங்களில் விடவேண்டும். உதாரணமாக நீர்க் குழாயின் அடியில், அல்லது குளியலறையில் இடலாம். பைகளில் நீர் தேங்காமல் இருப்பதற்கு சில துளைகளை ஏற்படுத்தலாம். நீர் வடிந்து விடும். பையை மூடியவாறே வைக்க வேண்டும். சரியாக ஒரு வாரத்திற்கு பிறகு வேர்கள் முளைவிடத் தொடங்கும். இரண்டாம் வாரமளவில் பதியப் பகுதிகள் நடுகைக்கு தயாராகிவிடும். மூங்கிலும் வெற்றியடையும். இது நான் கண்டடைந்த முறை. இதனைவிட பல சிறந்த முறைகளும் இருக்கலாம்..

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...