இந்த நிலைமையைக் கையாளவும் வெற்றிகொள்ளவும் தொழிநுட்ப பாட ஆசிரியர் றமேஸ் சிவஞானம் அவர்களின் நெறிப்படுத்தலில், அவரின் மாணவர்கள் (தற்போது இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடங்களில் கற்கின்றவர்கள்) பிருந்தாபன் Brunthapan Sanmuganadan (றுகுணு பல்கலைக்கழகம்), சினோஜன்
Sinojan Thangarasa (சப்ரகமுவ பல்கலைக்கழகம்), சபிலாஸ் Sabilash Kugathasan (தென்கிழக்கு பல்கலைக்கழகம்), பிருந்தாபன் Bruntha Manick (யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லுாரி), சேருன் Sherun Sivanesan (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), விதைப் பந்துகளை அடைமழையிலும் வெற்றிகரமாகக் காயவைக்கும் விதைப்பந்து போறணையை தங்களுக்கு கிடைத்த பொருட்களிலிருந்து உருவாக்கி விதைப்பந்துகளை காயவைத்திருக்கிறார்கள். இந்த முயற்சி வெற்றியடைந்திருக்கிறது. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். ஏற்கனவே விதைப்பந்துகளை கைகளால் செய்யாமல் இயந்திரமூலம் செய்யும் நுட்பங்களைப் பற்றியும் பல கலந்துரையாடல்களைச் செய்திருக்கின்றோம். விரைவில் அதனையும் சாத்தியப்படுத்துவார்கள். தேவையே கண்டு பிடிப்புக்களின் தாய். அவர்களை வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment