Monday, January 11, 2021

மூங்கில் மீளுருவாக்கம் - ii

 


மூங்கில் மீளுருவாக்கம் சம்பந்தமான தொழில்நுட்ப அறிவு கிடைப்பதில் கடினமான நிலைமை இருந்தது. இந்த லொக்டவ்ன் காலத்தில் மூங்கில்களின் பல்வேறு பகுதிகளைக் கொண்டு வந்து முயன்று தவறிக் கற்றல் முறையில் வீட்டில் நாற்றுக்களை (இரு இனங்களில்) உருவாக்க முடிந்துள்ளது. அதன் சூட்சுத்தையும் புரிந்துகொள்ள முடிந்துள்ளது. மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. பைகளில் போட்டு வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் மிக அதிகமான நாற்றுக்களை இலகுவாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை அந்த நாற்றுக்களைப் போல துளிர்த்திருக்கிறது.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...