Elaeocarpus serratus ஏன்ற விஞ்ஞானப் பெயரையுடைய (சிலோன் ஒலிவ் என்ற பொதுப்பெயரும், வெரளி என்ற தமிழ்ப் பெயரும், வெரளு என்ற சிங்களப் பெயரும் கொண்டது). இந்த அயன மண்டல, என்றும் பசுமையான 10 தொடக்கம் 12 மீற்றர் வரை வளரும், இந்தப் பூக்கும் தாவரமானது, இந்திய துணைக்கண்டத்திலும், இந்திய-சீனா, மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் காணப்படும் இலங்கைக்குரிய உள்நாட்டு தாவரமாகும். குவர்ச்சியான பூக்களைத் தரும் இந்த தாவரத்தின் நீள்வட்ட பச்சையான காய்கள் போசணைப் பெறுமானதும், மருத்துவ குணங்களையும் கொண்டது.
வித்துக்கள் மூலம் இந்த மரத்தை விருத்தி செய்வது மிகக் கடினமானதாகும். மரத்திலிருந்து விழுந்த வித்துக்கள் முளைப்பதற்கு சுமார் இரண்டு வருடங்கள் எடுக்கும். இதற்கு இது கொண்டிருக்கின்ற தடித்த வித்துறைகள் காரணமாகும். பதியமுறை இனப் பெருக்கமே மிகவும் சாத்தியமானதாகும். 5 % சல்பூரிக் அமலத்தில் 20 நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைத்து நட்டால், 14 மாதங்களுக்குப் பிறகு 28 % வித்துக்களும், 10 % சல்பூரிக் அமிலத்தில் 1 மணித்தியாலம் அமிழ்த்தி வைத்து நட, 4 மாதங்களுக்குப் பிறகு 20 % வித்துக்களும் முழைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
01.08.2020 அன்று, 15 வெரளி விதைகளைத் தேர்ந்தெடுத்து, பாக்கு வெட்டியினால் கவனமாக அவைகளின் தடித்த வித்துறைகளில் பிளவை ஏற்படுத்தி (வித்தின் உட்பக்கம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டால் வித்துக்கள் இறந்து போகும்) அவைகளை வீட்டில் நாற்றுமேடையில் நட்டு, நீரூற்றி பராமரித்து வர, நேற்று (09.11.2020) முதலாவது நாற்று விதைகளிலிருந்து சுமார் மூன்றே கால் மாதங்களிற்குப் பிறகு வெளிவந்திருந்தது. நிறைய தாவரங்களை பொறுமையாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. மகிழ்ச்சி. தொடருகின்றன.
No comments:
Post a Comment