Monday, January 11, 2021

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை

இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், டொக்டர் எம்.எச்.எம். ஆசாத் தங்களது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுடன் அந்த வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார். டொக்டர் ஆசாத் மிக நீண்ட கால நண்பர். நாங்கள் இருவரும் உயர்தரப் பிரிவில் சமகாலத்தவர்கள். தலைகரிலிருந்து இந்த வருடம் பெப்ரவரியில் இந்த வைத்தியசாலைக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். அவர் வந்த காலத்திலிருந்து இந்த அழைப்பை எதிர்பார்த்திருந்தேன். குரோனா எல்லாவற்றையும் பிந்தவைத்துவிட்டது.
இன்றைய கலந்துரையாடலில் திண்ம. திரவ கழிவு முகாமைத்துவம, சுற்றாடல் மேம்பாட்டுச் செயற்பாடுகள், உள்ளக சுத்திகரிப்பு, பேணுகை, அழகுபடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு, அழகுபடுத்த பாவிக்கும் பொருட்கள், பசுமை அணுகுமுறைகள்,; உள்ளக, வெளியக பசுமை அணுகுமுறைகள், வெள்ளநீர், மழைநீர் சேகரிப்பு, சக்திச் சேமிப்பு, ஆவணப்படுத்தல், புதிய அணுகுமுறைகள், பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனை, அவற்றிற்கான மாற்றீடு, கூட்டுப் பசளையாக்கம், கழிவு நீர் முகாமைத்துவம், மீன் வளர்ப்புக் குளம், சமூகங்களிற்கான சுற்றாடல் சம்பந்தமான பங்களிப்பு, மர நடுகை, பசுமையாக்கம், மருத்துவ தாவரங்களின் தோட்டம், மரக்கறித் தோட்டம், பழ மரங்களின் நடுகை, விலங்கு வளர்ப்பு, மீன்வளர்ப்பு, காபன் அடிச்சுவடு அல்லது தடங்கள், அதனைக் குறைத்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. எல்லோரும் ஆர்வத்துடன் பங்குபற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்கள். வைத்தியசாலையின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்தோம். உலகி;ன் மிகப் பெரிய மாம்பழத்தை கொடுக்கும் (ஒரு பழம் 600 கிராம் தொடக்கம் 1 கிலோகிராம் வரை) மாமர இனமான ரிஜேசி பழ மர நடுகையும் இடம்பெற்றது. மரநடுகையிலும் பங்குபற்றினோம்.
டொக்டர் எம்.எச்.எம். ஆசாத் வருகையுடன் சில மாற்றங்கள் உருவானதையும், நல்ல பல மாற்றங்கள் உருவாவதற்கான அறிகுறிகளையும் அவதானிக்ககூடியதாயுள்ளது. ஆசாத் திறமையானவர். கெட்டிக்கார். பரந்த வாசிப்புள்ளவர். ஆசாத் எம் ஹனிபா என்ற பெயரில் அறியப்பட்ட, ஆத்மாவின் புண், பிரேத பரிசோதனைகள், தம்பியார் ஆகிய மூன்று கவிதைப் பிரதிகளைத் தந்த புகழ்பெற்ற கவிஞர். நிருவாகத்தில் கண்டிப்பும், மற்றவர்களுடன் தோழமையுடனும் பழகக்கூடியவர்.
கவர்ச்சியான, அழகான தோற்றத்தையுடைய அவர், சிறுவயதிலிருந்தே தன்னை ஒழுங்காகவும், அழகாககவும் பேணக்கூடியவராக இருந்தார். அதுபோலவே தான் கடமையாற்றும், தனக்கு கீழுள்ள நிறுவனத்தையும் ஒழுங்காகவும், அழகாகவும் பேணுவதற்கு அக்கறைகொண்டு, திடசங்கற்பம் பூண்டுள்ளார். அதற்கு எல்லோரது ஒத்துழைப்பும் அவசியம். எல்லோரும் வழங்கவும் வேண்டும். வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. டொக்டர் ஆசாத்தின் காலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பொற்காலமாக இருக்கும் என்பதும் நம்பிக்கை.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...