அம்பாரை, மத்திய முகாம் பகுதியிலுள்ள கூழா மரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பழங்களை அதன் விதைகளுக்காக பெற முடிந்தது. அத்துடன் அந்த மரங்களுக்கு கீழே முழைத்திருந்த கூழாக் கன்றுகளையும் பிடுங்கி பைகளில் அடைக்க முடிந்தது.
Schleichera oleosa என்ற விஞ்ஞானப் பெயருள்ள, ஆங்கிலத்தில் Ceylon Oak எனவும், சிங்களத்தில் කෝන් எனவும், இந்தியத் தமிழில் கும்படிரி எனவும் அழைக்கப்படும், கூழா மரங்கள் மிகவும் அருகி வரும், மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தென்னாசியாவிற்குரிய மரங்களாகும். இதன் பழங்கள் சாப்பிடக்ககூடியவை. புளிப்புச் சுவையுடையவை. இதன் வித்து எண்ணெய்த் தன்மையானது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும், பல்வேறு தேவைகளுக்கு பயன்படுவதுடன், இந்த மரத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளும் பல்வேறு நோய்களைக் குணமாக்கப் பயன்படுகின்றன.
நன்கு தயாரிக்கப்பட்ட மண்ணை பொலித்தீன் பைகளிலிட்டு, அந்த பைகளில் விதைகளை விதைப்பதன் மூலம் அல்லது நாற்று மேடைகளில் விதைத்து நாற்றுக்களை பெறலாம். தேவையான இடங்களில் மீண்டும் நடும்போது, வேர்கள் அறுந்துவிடாமல் பாதுகாப்பது முக்கியமாகும்.
இன்னொரு முறையில் வித்தின் முளைவேரை கிள்ளிவிட்டு, விதைகளை நீரில் 24 மணித்தியாலங்களுக்கு ஊறவிட்டு, அல்லது 500 பீபீஎம் செறிவுள்ள GA3 கரைசலில் ஒரு இரவு முழுவதும் ஊறவிட்டு விதைக்கலாம். இதனால் முழை திறன் 80 தொடக்கம் 85 சதவீதம் அதிகரிக்கும். முழைத்தல் 15 தொடக்கம் 30 நாட்களுக்குள் முற்றுப் பெறும்.
No comments:
Post a Comment