Saturday, October 8, 2011

முருகைக் கற்பாறைகள்

முதலாளித்துவ சூழலியற் சிக்கல்
(செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) - 3

முருகைக் கற்பாறைகள் (Coral reefs):

நீலத் திரையின் கீழே
மச்ச வெளியின் ஊடே
வண்ணங்கொண்டு குழைத்தெடுத்த
ஒரு ஓவியக்காடு
வெண்மையாயொரு காடு
உறுதியாய் தாங்க
பசுமையாயொரு காடு
ஒளி தொகுக்க
நீலமாயொரு காடு
இரையாக மாற
கருமையாயொரு காடு
இரை கொல்லியாக
செம்மையாயொரு காடு
திகில் கொடுக்க
மண்ணிறமாயொரு காடு
வன்முறைகள் செய்ய
மஞ்சளாயொரு காடு
மறைந்து ஒழிக்க
நடத்தைக் கோலங்களின்
கும்மாளம்
வண்ணங்கொண்டு குழைத்தெடுத்த
ஓவியக்காடு

முருகைக்கற் பாறைச் சூழற்றொகுதியே உலகில் உள்ள சூழற்றொகுதிகளில் உற்பத்திகூடியதும், உயிரினப்பன்மை கூடிய சூழற்றொகுதியாகும். ஒரு தனி முருகைக்கற் சூழற்றொகுதி மூன்றாரயிரத்தி;ற்கும் அதிகமான உயிரினங்களுக்கு ஆதாரமளிக்கிறது. உலகில் உள்ள கடல்மீன்களில் மூன்றிலொரு பங்கு மீன்கள் இச்சூழற்றொகுதியிலேயே காணப்படுகின்றன. அத்துடன் இது கரையோரத்தைப் பாதுகாப்பதிலும் மிகுந்த பங்களிப்பைச் செய்கின்றது.

முருகைக் கற்பாறைகள் கணம்; உnனையசயை சேர்ந்த விலங்குகளாகும். பொலிப்புக்களான இவ்வுலங்குகள் தொகுதிகளாக வாழ்கின்றன. இவைகளின் கல்சியம் காபனேற் நிறைந்த உடற்கூறுகள் படிந்து இறுகுவதனாலேயே முருகைக் கற்பாறைகள் தோன்றுகின்றன. இதன் வளர்ச்சி வருடத்திற்கு 0.3 – 10 சென்ரிமீற்றர் வரை வேறுபடுகின்றது. பல்வேறு வகையான முருகைக் கற்பாறை இனங்கள், பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் முருகைக்கற் பாறைகளை உருவாக்குகின்றன. உதாரணம்: விரல், மேசை, இலை, மூளை வடிவங்கள். முருகைக் கற்கள் பல்வேறு வகையான பாகுபாட்டிற்கும் (classification) உட்படுத்தப்படுகின்றன.

முருகைகற் பாறைகள் அயன வலயத்தில் வட அகலாங்கு 30 பாகைக்;;கும் தென் அகலாங்கு 30 பாகைக்கும்; இடைப்பட்ட வலயத்திற்குள்ளேயே செறிந்து பரந்திருக்கின்றன. உலகில் 600000 சதுர மைல் பரப்பில் முருகைக் கல் காணப்படுவதுடன், அவற்றுள் 60 சதவீதமானவை இந்து சமுத்திரத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நன்கு விருத்தியடைந்த மூன்று வகையான முருகைக்கற் பாறைகள்; காணப்படுகின்றன. இலங்கையில் தென்மேற் கரையோரத்தில் அம்பலாங்கொடையில் இருந்து தெவிநுவர வரையும், யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்பிட்டிய, சிலாபம், நீர்கொழும்பு, ஹிக்கடுவை, காலி, மாத்தறை, தங்காலை ஆகிய பிரதேசங்களில் முருகைக்கல் பரம்பிக்;; காணப்படுகின்றன. மன்னார் குடாவிலும், கற்பிட்டி தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் மிகவும் விருத்தியடைந்த முருகைக் கற்களைக் காணலாம். இலங்கையில், உள்நாட்டிற்குரிய 68 இனங்களும், 183 சாதிகளும் இதுவரைக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1585 கிலோமீற்றர் நீளமுள்ள கரையோரத்தை இலங்கை கொண்டுள்ளது. இதிலே கிழக்கு கரையோரம், வாகரையிலிருந்து வாழைச்சேனை வரையும், பின்னர் மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரையும், அடுத்து ஒலுவிலிலிருந்து பொத்துவிலுக்கு அப்பால் வரையும் தொடர்ச்சியாக இதன் பரம்பலைக் காணலாம்.

முருகைக் கற்பாறைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நோக்குவோம். முருகைக் கற்கள் சுண்ணாம்பு உற்பத்திக்காக எடுக்கப்படுதல் ஒருபெரிய பிரச்சினையாகும். ஆதிகரித்துவரும் சனத்தொகைக்கு ஏற்ப, கட்டடத் தேவைகளும் அதிகரிக்க, அதன் நிமித்தம் சுண்ணாம்புத் தேவைக்கான கேள்வியும் அதிகரித்த நிலையில் உள்ளது. இலங்கையின் கட்டுமானப் பணிகளில் 90 சதவீதம் சுண்ணாம்பு பயன்படுகின்றது. இதன் காரணமாக, உயிருள்ள முருகைக் கற்கள் சுண்ணாம்பு உற்பத்திக்காக உடைத்து எடுக்கப்படுகின்றன.

டைனமைற் பாவித்து மீன்பிடித்தல், கரைவலை (Beach sein), பை வலை (moxy net)4, அடித்தள வலை (Bottomset net) பாவித்து மீன் பிடிக்கும் போது அவைகள் முருகைக் கற்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பை வலை, முருகைக் கற்களில் வாழும் அலங்கார மீன்களை பிடிக்க பயன்படுகின்றது. சயனைட் வில்லைகள் போன்ற நஞ்சுகளைப் பாவித்து மீன்பிடிக்கும் போது, இறந்த மீன்கள், முருகைக் கற்களுக்குள் சிக்குப்படும்போது, முருகைக் கற்கள் உடைக்கப்பட்டு அதற்குள் சிக்குப்படும் மீன்கள் எடுக்கப்படுகின்றன.

கடந்த இரு தசாப்தங்களாக அலங்கார மீன்களின் ஏற்றுமதி அதிகரித்து வந்திருக்கின்றது. தற்போது உள்ள நீர்வளர்ப்பு ஏற்றுமதி வர்த்தகத்தில், இறால், சிங்கி இறால் போன்றவற்றிற்குப் பிறகு, அலங்கார மீன்களின் ஏற்றுமதியே அதிக அந்நிய செலாவணியை அச் சூழற்றொகுதியே அழிகின்ற நிலைக்கு உள்ளாகும். இவ்வலங்கார மீன்களில், அழிவுக்குள்ளான நிலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய உள்நாட்டு இனங்கள் பலவும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

1970 களிலிருந்து இலங்கையின் உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. இந்த உல்லாச பிரயாணிகளை கவருவதில் முருகைக் கற்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 1992 யில், 300000 உல்லாசப் பயணிகளின்; இரவுகள், ஹிக்கடுவையில் முருகைக் கற்களுக்காக செலவிடப்பட்டுள்ளன. உல்லாசப் பிரயாணிகளின் முருகைக் கற்களின் மேல் நடத்தல், நீந்துதல், சுழியோடுதல், படகுவிடுதல், கண்ணாடி அடித்தள படகு விடுதல், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான நங்கூரமிடுதல், போன்ற செயல்களால் முருகைக் கற்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றன. இந்த உல்லாசப் பிரயாணிகளுக்கு விற்பனை செய்வதற்கான பல்வேறு வகையான உயிரினங்கள் (உதாரணம்: சங்கு, அலங்கார உயிரினங்கள் போன்றவை) சூழலிருந்து அகற்றப்பட்டு விற்கப்படுகின்றன.

கடல் மாசடைதல் முருகைக் கற்பாறைகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றாகும். ஹோட்டல்கள் தங்களது கழிவுகளை நேரடியாக கடலில் கொட்டுவதாலும், தும்புக் கைத்தொழில், தோல் உற்பத்தி, சாயக் கைத்தொழில், றப்பர் கைத்தொழில், உணவு பதனிடும் கைத்தொழில், கடதாசி ஆலைகள் போன்றவைளும், மனிதர்களும் தங்கள் கழிவுகளை நேரடியாக கொட்டுவதாலும் முருகைக் கற்பாறைகள் பாதிக்கப்படுகின்றன.

நிலப் பிரதேங்களில் காடுகளும், மண்ணைப் பிடித்துவைத்தருக்கக் கூடிய தாவரங்களும் அழிக்கப்படுவதால், நிலப் பிரதேசங்களிலுள்ள அடையல்களும், போசணைப் பொருட்களும், முருகைக் கற்பாறைத் சூழற்றொகுதியை அடைந்து, நற்போசணையாக்கத்தை (நரவாசழிhiஉயவழைn) உருவாக்கி அதன் சூழற்றொகுதியிலுள்ள உயிரினங்களுக்கு பாதிப்பையும் அழிவையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் கடலில் சேரும் விவசாய, வீட்டு, எண்ணெய்க் கழிவுகளும் பாரிய சேதத்தினை ஏற்படுத்துகின்றன.

எண்ணெய் ஆய்வுக்கு கடல் அடித்தளங்களைத் தோண்டுதல், துறை முகம் அகழல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், குளிரவைக்கும் ஆலைகள், கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு, கப்பல் கழுவுதல், போன்றனவும் பாதிக்கின்றன.

முருகைக் கற்களின் பிரதான எதிரி, நட்சத்திர மீன்களாகும். நட்சத்திர மீன்களின் பிரதான உணவு முருகைக் கற்களாகும். ஆய்வாளர்களால் வழமையாக முருகைக் கற்களின் மீது காணப்படுகின்ற நட்சத்திர மீன்கள் வெட்டிக் கொல்லப்படுவது வழக்கம்.

அடுத்ததாக இயற்கை அனர்த்தங்கள் முருகைக் கற்களைப் பாதிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. பெற்றோலியப் பொருட்கள், நிலக்கரி என்பன எரிக்கப்படுவதனால், வெளியேறும் காபனீரொட்சைட்டு;, மெதேன், ஓசோன் போன்ற வாயுக்கள் சூழல் வெப்பநிலையை கூட்டி, கடல் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இதன்காரணமாக கடல்பெருக்கெடுத்து கடலரிப்பைத் தடுக்கும் கண்டல் தாவரங்கள், காடுகள் போன்றவற்றை அழிக்கின்றன. இதன் காரணமாக முருகைக்கற்கள் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் உலக வெப்பமாதலினால் கடல்நீரின் மட்டம் 2 மில்லிமீற்றராக உயருகின்றது. எல்நினோ விளைவாலும் உலகவெப்பமாதல் நடைபெற்று, கடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும் போது, முருகைக்கற் பாறையில் ஒன்றியவாழியாக (ளலஅடிழைவெ) வாழுகின்ற, ஸ_ஸான்தலே என்னும் அல்கா இறக்க நேரிடுகின்றது. இந்த அல்கா ஒளித்தொகுப்பு செய்து உணவை முருகைக் கற்களுக்கு கொடுக்க, முருகைக் கற்கள் அல்காக்களுக்கு இருக்க இடம் கொடுக்கும். இந்த அல்கா இறந்து, சில நாட்களுக்குப் பிறகு, முருகைக் கல்லும் இறந்துவிடும். இது உழசயட டிடநநஉhiபெ எனப்படும். 1998;ல் இந்த பிரச்சினை மோசமான அளவில் அதிகரித்துக் காணப்பட்டது.

இனி பாசிக்குடாவை நோக்குவோம். பாசிக்குடா மட்டக்களப்பிற்கு வடக்கே 28 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் முருகைக்கற் பாறைகளைக் கொண்ட அமைதியான அலையடிப்பு குறைந்த குடாவாகும். பாசிக்குடா இலங்கையின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இது வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளகைளை;க கவர்வதில் முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகின்றது. 1980களின் ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாக பெரிதும் கவனிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. பின்னர் 2003 சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்ட நிலையிலிருந்தது. தற்போது இலங்கையில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக உல்லாசப் பிரயாணிகளின் வருகை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட மோசமான சூழலைத் தொடர்ந்து நிலவிய அச்சுறுத்தல்கள் காரணமாக, தொழில்வாய்ப்பு தேவைப்பட்ட மக்கள், அளவுக்கதிகமாக முருகைக் கற்பாறைகளை கடலிலிருந்து உடைத்தும், அண்டிய நிலப்பிரதேசங்களிலிருந்து அகழ்ந்தும், சுண்ணாம்பு உற்பத்திக்காக பாவிக்கத் தொடங்கினார்கள். இதன் காரணமாக கரையோரம் பல நூறுமீற்றர்களுக்கு கடலினால் அரிக்கப்பட்டது. மீனா தர்மரெத்தினம், கிருகைராஜா (2003) ஆய்வுகளின் படி, இந்த முருகைக் கல் அகழ்ந்தெடுத்தலில் நாளாந்தம் அதிகமான ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் குடும்ப சூளைகள், சிறுவர் சளைகள் என வகைப்படுத்தியுள்ளார்கள்.

தொடர்ச்சியான முருகைக் கல் அகழ்வினால், உல்லாசப் பிரயாண சபைக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பு கொண்ட விடுதியின் எச்ச சொச்சங்களை கடலுக்குள் பார்க்கலாம். அதன் தூண்களை கடற்கரையிலிருந்து 50 மீற்றர் தொலைவில், கடலுக்கடியில் தற்போதும் காணலாம். பல ஏக்கர் தென்னந்தோட்டங்களும் கடல் அரிப்பினால் இன்று வரை இழக்கப்பட்டுள்ளன. கடல் நீர், ஊரை நோக்கி வருவதனால், நன்னீர் உவர்நீராதல் பிரச்சினையும், நிலப்பிரதேசங்களில் சுவட்டு சுண்ணக் கற்கள் அகழப்பட்டு, நிலம் கைவிடப்படுவதால், நிலம் பயனின்றிப் போய், நீர் தேங்கி, நுழம்பு பெருகி சுகாதாரப் பிரச்சினையும் ஏற்படுகின்றது.

மீனாதர்மரெத்தினம், கிருபைராhஜா (2003) யின் படி, உல்லாசப் பிரயாண சபைக்கும், தனியாருக்கும் சொந்தமான பலநூறு ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் குன்று குழியுமாக்கப்பட்டு பயனற்ற நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதையும், அந்தப் பிரசதேசத்தில் இவர்கள் பல நூற்றுக்கணக்கான குழிகளை அவதானித்துள்ளார்கள். சுண்ணாம்புச் சூழைகள் காரணமாக காபனீரொட்சைட்டு விடப்படுதலும், காடழிப்பும் நடைபெற்றன. சமாதான ஒப்பந்த காலத்திற்கு பின்னர், ஏதோவொரு வகையில் குழுக்களினால் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சுண்ணாம்பு உற்பத்திக்காக முருகை; கல்லை உடைப்பது பாரியளவில் குறைந்திருக்கக் காணப்பட்டது.

வாழைச்சேனை வாவியிலிருந்தும், பாசிக்குடாவின் பகுதிகளிலிருந்தும், மீன்பிடிக் கைத்தொழில், விவசாய நிலங்களிலிருந்தும் விடப்படுகின்ற கழிவுகளும், வாழைச் சேனை கடதாசி ஆலையிலிருந்து விடப்படுகின்ற, கழிவுகளும் இம் முருகைக் கற்பாறைத் தொகுதியை அடைவதனால் இச் சூழற்றொகுதியின் கடல்நீரின் பண்புகள் பாதிப்படைகின்றன. றியாஸ் அஹமட், மீனாதாமரெத்தினம் (2004), முன்சுனாமிய ஆய்வுகளின் படி பாசிக்குடா முருகைக்கற்பாறைச் சூழற்றொகுதி 15.81 சதவீத உயிருள்ள முருகைக் கற்களைக் கொண்டுள்ளது. இறந்த, இறந்ததும் அல்காக்களுடன் கூடியதும்;, மணற்பகுதிகள் என்பன முறையே 10.6-29.66 சதவீதம், 3.22-8.6 சதவீதம், 6.2-28.86 சதவீதங்களில் கொண்டிருந்தன. மணற்பகுதிகள் கூடியளவில் மேற்குப் பகுதியிலேயே காணப்பட்டன. இந்தப் பகுதியில்தான் உல்லாசப் பிரயாணிகளின் நடவடிக்கைகள் அதிகமாகக் காணப்பட்டன. இச் சூழற்றொகுதியின் மொத்த அடித்தளப் பரப்பில் உடைந்த முருகைக்கற்பாறைத் துண்டுகள் 18.87 சதவீத இடத்தைப் பிடித்தன. உல்லாசப் பிரயாணிகள் நடவடிக்கைகள் காரணமாக கலங்கற்தன்மை அதிகரித்ததன் விளைவாக உயிருள்ள முருகைக்கற் பாறைகளின் சதவீதம் குறைவடைந்து கொண்டே செல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் காணப்பட்ட முருகைக்கற் பாறை இனங்கள் கொனியஸ்ற்றியா, அக்றோபோறா என்பனவாகும்.

அல்காக் கூட்டம், பெரிய, சின்ன அல்காக்கள் என்பன முறையே 3.47 சதவீதம், 1.89 சதவீதம், 0.79 சதவீத இடங்களைப் பிடிக்கின்றன. கடற்பஞ்சு விலங்குகளும், மற்றவிலங்குகள் (கடல்அனிமன், மீன்கள், புழுக்கள், நட்சத்திரமீன், கடல்அட்டை, முறேவிலாங்குகள், மொலஸ்காக்கள் போன்றன) முறையே 1.23 சதவீத, 1.61 சதவீத இடங்களையும் பிடித்தன.

இந்தச் சூழற்றொகுதியி;;ன் சராசரி உவர்த்தன்மை 32 ppவ ஆகவும், வெப்பநிலை 28.6 செல்சியஸ் ஆகவும், ஒளிபுகவிடு தன்மை 75-88 சென்ரிமீற்றராகவும் இருந்தன.

பாசிக்குடாவின் முருகைக் கற்பாறைச் சூழற் தொகுதியின், உயிருள்ள முருகைக் கற்பாறைகளின் அளவு, நீர்கொழும்பு, ஹிக்கடுவ, போன்ற இடங்களிலுள்ள உயிருள்ள முருகைக் கற்பாறைகளின் அளவுகளுக்கு சமமானதாக இருப்பதால், 1998 யில் இலங்கையில் ஏற்பட்ட உழசயட டிடநநஉhiபெ யினால் பாசிக்குடாவும் பாதிக்கப்பட்டதாக இவர்கள் கருதுகிறார்கள்.

றியாஸ் அஹமட், மீனா தாமரெத்தினம் (2004) ஆகியோர்களின் அறிக்கையின்படி, முருகைக் கற்பாறைச் சூழற்றொகுதியின் அடித்தளங்கள் பாரியளவில் பல்வேறு பொருட்களால் மாசுபடுத்தப்பட்டிருப்பதை அவதானித்திருக்கிறார்கள். பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருட்களே (பொலித்தீன் பை, பொலித்தீன் கடதாசி, பிளாஸ்ரிக் போத்தல்கள்) அதிகளவில் அவதானிக்கப்பட்டன. இவைகள் உல்லாசப் பிரயாணிகளால் பாவிக்கப்பட்டபின் தூக்கியெறியப்பட்டவைகளாகும். இதற்கு அடுத்த நிலையில் தூண்டில் கயிறு, வலைகள், நங்கூரங்கள் என்பனவும் அவதானிக்கப்பட்டடன. இவைகள் மீன்பிடி நடவடிக்கை காரணமாக விடப்பட்டவை. இதற்கடுத்த நிலையில் எலும்புகள், மரத்துண்டுகள், கண்ணாடித் துண்டுகள், கற்கள் என்பனவும் காணப்பட்டன.

மார்ட்டின் மெய்னல், மட்டியாஸ் றஸ்ற் (2005) யின் பின்சுனாமிய ஆய்வுகளின்படி, 100 மீற்றர் நீளமாக இருந்த பாசிக்குடாவின் கடற்கரை, தற்போது 15 மீற்றருக்கு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
புhசிக்குடா முருகைக் கற்பாறைத் தொகுதி தற்போது எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினை என்னவெனில், கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது, அருகிலிருந்த இராணுவ முகாம் முற்றாகப் பாதிக்கப்பட்டதனால், அந்த முகாமிலிருந்த கண்வெடிகளும், பீரங்கிக் குண்டுகளும் கடலுக்குள் அள்ளுப்பட்டுச் சென்றன. எனவே எதிர்கால ஆய்வு வேலைகளுக்கு முதற் கட்டமாக முருகைக் கற்பாறைச் சூழலிலுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.

எனவே பாசிக்குடாப் பிரதேசத்தில் சமாதான ஒப்பந்த காலத்திற்கு முன்னர் தீவிரமாக நடைபெற்ற சுண்ணாம்பு கைத்தொழில், சட்டவிரோத முருகைக் கல் அகழ்வுகள், காடழி;ப்பு காரணமாகவும், ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஒழுங்கற்ற உல்லாசப் பிரயாண முகாமைத்துவத்தாலும், இவ்விரு காலங்களிலும், சுற்றுச்சூழலிலிருந்த கைத்தொழில் முயற்சிகளின் பொறுப்பற்ற போக்குகளினாலும், இச்; சூழற்றொகுதியின் நிலைபேறான தன்மை கேள்விக் குள்ளாக்கப்பட்டுள்ளது. அதற்காக, இயற்கை வளங்களை சிறந்த முறையில் முகாமை செய்வதும், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மக்களை பங்குபற்றச்; செய்;தலும், அதன் மூலம்; சூழலுக்குப் பாதகமாக இருக்கும் தொழில் முயற்சிகளையும், அவர்களின் பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றின்; அடிப்படையில் அவர்களுக்கான மாற்றுத் தொழில் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதும் மிக முக்கியமானவைகளாகும்.

கண்டல் காடுகள்

முதலாளித்துவ சூழலியற் சிக்கல்
(செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) - 2

கண்டல் காடுகள் (Mongroves).

பச்சை பச்சையாய்
இலைகள் பளபளத்துக் கைகள் காட்டும்.
மிண்டி வேரும் உதைப்பு வேரும்
காவல்காரர்களாய் நிற்கும்.
மீன்கள் மரமேறி
பின் வழுக்கி கீழே விழும்.
நண்டுகளும், நத்தைகளும்
ஊரிகளும், மட்டிகளும்
பெருநடையில் படையெடுக்கும்.
புhம்புகளும் முதலைகளும்
ஓடிப்பிடித்து விளையாடும்.
இறால்களும், மீன்களும்
துள்ளிக்குதிக்கும்.
ஒரு பறவை மீன்களைக்
கௌவக் கொத்தும்.
பின்னொரு புறவை முட்டையிடும்
குஞ்சும் பொரிக்கும்.
நாளுக்கு பலமுறை
நீரோ ஏறியிறங்கும்.
குடியானவனின் வாழ்க்கையோ
ஏறியிறங்காமல் ஓட்டும்.
இந்த அற்புத வனம்
அழகுமிகு கண்டல்வனம்.

கண்டல் என்ற சொல் களப்புக்களின் கரையில் வளரும் விசேட இசைவாக்கங்களைக் கொண்ட தாவர இனங்களை பொதுவாக குறிக்கின்றது. உதாரணம்: சிவத்தக் கடண்டல் (றைசோபோறா), கறுப்புக் கண்டல் (புறுகைறா), தேன் கண்டல் (அவிசினியா).

கண்டல் சூழற்றொகுதியில் காணப்படும், வைரம் செறிந்ததும், வித்துக்களில் மிகவும் சிறந்த இசைவாக்கங்களைக் கொண்டதும், வாவி, களப்பு, பொங்குமுகங்கள் போன்றவற்றின் அலையடிப்பு பிரதேசங்களுக்கு இடையில் வளர்வதுமான தாவரங்களை கண்டல்கள் என ஓரளவு வரையறுக்கலாம். இலங்கையில் ஏறத்தாள 40 இனங்கள், மரங்களாகவும், பற்றைகளாகவும், பூண்டுகளாகவும் காணப்படுகின்றன.
குடா, களப்பு, கழிமுகங்கள், பொங்குமுகங்கள் போன்றவற்றின் சேற்றுப் பாங்கான பகுதிகளில், உவர், சேற்று சூழலுக்கு விசேட இசைவாக்கங்களைக் கொண்ட தாவர, விலங்கு குடித்தொகையும், அதன் உயிரற்ற கூறுகளும் கண்டல் சூழற்றொகுதி எனப்படும். கண்டல் சூழற்றொகுதி பல கூறுகளைக் கொண்டதாகும். இதன் சூழற்றொகுதியானது கடல், நன்னீர் சூழற்றொகுதியின் கூறுகளைக் கொண்டள்ளது.

இந்த சூழற்றொகுதி உயர்ந்த உற்பத்தித் திறனை உடையதும், மிகுந்த வளத்தைக் கொண்டதுமாகும். இதன் உற்பத்தித்திறன் மழைக்காட்டின் உற்பத்தித் திறனைவிட அதிகமாகும். அலை ஓட்டங்கள் போசணைப் பொருட்களை மற்றைய சூழற்றொகுதிக்கு விநியோகிப்பதால் கண்டல் சூழற்றொகுதி சக்தி உதவியளிக்கும் சூழற்றொகுதி எனவும் அழைக்கப்படுகின்றது.

இலங்கையின் மிகப்பெரிய கண்டல் சூழற்றொகுதி புத்தள-டச்சுக்குடா-போர்த்துக்கல்குடா தொகுதியாகும். இரண்டாவது பெரிய தொகுதி மட்டக்களப்பு என நம்பப்படுகின்றது. இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 0.1 சதவீத கண்டல் சூழற்தொகுதியைக் கொண்டுள்ளது.
1992ம் ஆண்டு இருந்த இலங்கையின் கண்டல் காடுகளின் பரப்புக்கள் பின்வருமாறு: ஹெக்டேயர்களில்.

அம்பாறை-292, மட்டக்களப்பு-1421, காலி-187, கம்பஹா-122, ஹம்பாந்தோட்டை-539, யாழ்ப்பாணம்-260, களுத்;துறை-70, கிளிநொச்சி- 312, குருநாகலை-1261, மாத்தறை-6, முல்லைத்தீவு-463, புத்தளம்-2264, இரத்தினபுரி-1461. மொத்தம் 8687 ஹெக்டேயர்களாகும்.
இலங்கையின்; கண்டல் தாவரங்களை எடுத்து நோக்கினால் றைசோபோறாவில் இரு இனங்களும், சிரியொப்ஸ் (சிறுகண்டல்) இல் இரு இனங்களும், சொனறேசியாவில் (கிண்ணமரம்) மூன்று இனங்களும் காணப்படுகின்றன. அவிசினியா (கண்ணா)வில் இரு இனங்கள், ஏஜிசிறஸ் (வெற்றிலைக்கண்ணா)வில் ஒரு இனமும்,, அகான்தஸ் (முள்ளி)யில் ஒரு இனமும், எக்ஸோகரியா (தில்லை)யில் ஒரு இனமும், சைலோகாபஸ் (கடல்மாங்காய்)யில் இரு இனமும், கிளடென்றோன் (பிச்சு வெள்ளாத்தி)யில் ஒரு இனமும் காணப்பணடுகின்றன. இங்கு காணப்படும் ஒரே ஒரு பாமே குடும்பத் தாவரம் நிபா புறுட்டிகன்ஸ் ஆகும். ஒரேயொரு பன்னம் அக்றொஸ்ரிகம் (மின்னி)யாகும். ஹெரற்றீரா (சோமுந்திரி), டொலிகோடென்றோன் (வில்பாதரி), செபரா மங்கா (நச்சு மாங்காய்), டெரிஸ் (தேக்கில்) போன்றவையும் காணப்படுகின்றன.

வுpலங்குகளை நோக்கும்போது பறவைகள், இறால், நண்டுகள், மொலஸ்காக்கள், பொலிக்கீற்றாப் புழுக்கள், மீன்கள் போன்றவற்றை காணலாம்.

கண்டல்காடுகளின் பயன்கள்:
ஆதிகாலத்திலிருந்தே மனிதன் இந்த சூழற்றொகுதிக்கு தீங்கு விளைவிக்காமல் நிறைய நன்மைகளைப் பெற்று வந்திருக்கின்றான். இங்கு சில பயன்களை பார்ப்போம்:

மீன்கள், இறால், மொலஸ்காக்கள் உணவுக்காக பிடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அக்ரோஸ்ரிக்கத்தின் இளந்தளிர்கள் கறி சமைக்கப்பயன்படுகின்றன. நிபாவிலிருந்து அல்கஹோல், விநாகிரி என்பன தயாரிக்கப்படுகின்றன. அவிசினியா, றைசோபோறா போன்றவை விறகாகப் பயன்படுகின்றன. றைசோபோறாவில் இருந்து பெறப்படும் காபன் கரியானது மிக உயர்நத வினைத்திறனை உடையது. கண்டல் மரங்கள் உயர்ந்த தனின் அளவைக்; கொண்டுள்ளதால் இயற்கையாகவே பூச்சி புழு அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது. எனவே இது கட்டட வேலைகளுக்குக்;, கம்பாகவும் பயன்படுகின்றது. றைசோபோறா, புறுகைறா, அவிசினியா போன்றவற்றிலிருந்து பெறப்படுகின்ற வெட்டு மரங்கள் படகுகள் கட்டடம், மீன்பிடி உபகரணங்களை செய்யவும்; பயன்படுகின்றது. இங்கு காணப்படும் பொதுவான மீன்பிடிமுறை டிசரளரிடைந1 மீன்பிடி முறையாகும். நீர்;ப்பகுதிகளில் கண்டல் மரங்கள் வெட்டப்பட்டு போடப்படுகின்றன. போடப்பட்ட மரத்தின் பகுதிகளை மீன்கள் வாழிடமாகவும், இரைகொல்லிகளிடமிருந்து தப்பித்து ஒழிப்பதற்கும், இனப்பெருக்கத்தில் சில வாரங்களுக்குப் பின், போடப்பட்டட மரங்களைச் சுற்றி வலை போடப்பட்டு, மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

கண்டல் தாவரங்கள் வீட்டுப் பாவனைப் பொருட்கள், தளபாடங்கள் போன்றன செய்யவும் பயன்படுகின்றன. பெந்தோட்டவில் செபரா, முகமூடி செய்யப்பயன்படுகின்றது. றைசோபோறா, சிரியோப்ஸிலிருந்து பெறப்படும் தனின், வலையை சாயமிட உதவுகின்றது. இது அதன் பாவனைத் தன்மையின் காலத்தைக் கூட்டுகின்றது. இந்த மரங்களின் பட்டைகள் அகற்றப்பட்டு, பைகளில் அடைக்கப்பட்டு கிராமப் புறங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன. ஓவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான கிலோ பட்டைகள் அகற்றப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

கண்டல் சூழற்றொகுதியில் உள்ள மொலஸ்காக்களின் ஓடுகள் சுண்ணாம்பு உற்பத்திக்குப் பாவிக்கப்படுகின்றன. அவிசினியா போன்றவற்றின.; இலைகள் விவசாயத்தில் பசுந்தாட் பசளையாகப் பாவிக்கப்படுகின்றன. கண்டல் நிலங்கள் பெரும்பாலும் மீன் வளர்ப்புக்கும், இறால் வளர்ப்புக்கும் மிகவும் உகந்ததாகும். இறால் வளர்ப்புக்கு உவர் நீர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

கால்நடைகளின் தீவனமாகவும், இதன் இலைகள் பாவிக்கப்படுகின்றன. கிண்ணமரத்தின் சுவாச வேர்கள் தக்கை மூடிகள் உற்பத்திக்குப் பயன்படுகின்றன. எலும்பு முறிவைக் குணப்படுத்த றைசோபோறாவின் பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. காயங்களை சுகப்படுத்தத புறுகைறா, கிண்ண மரங்களின் இலைகள் பாவிக்கப்படுகின்றன. தோல் வியாதிக்கு தில்லை மரத்தின் பால் பயன்படுத்தப்படுகின்றது. கண்டல் சூழற்றொகுதியில் இருந்து தேன், மெழுகு போன்றவைவைகள் கூட ஒரு குறித்த அளவில் எடுக்கப்படுகின்றன. மீனுக்கு உணவாகப் பயன்படுத்தும், புரதம் நிறைந்த பெரிய பொலிக்கீற்றாக்கள் இங்கு பெறப்படுகின்றன.

கண்டற் சூழற்றொகுதியானது கரையோர மீன்பிடியில் பிரதான பங்கை வகிக்கின்றது. இது இளம் கடல் குஞ்சு மீன்களுக்கும், வளரும் இடமாகவம். உணவளிக்கும் இடமாகவும் பயன்படுகின்றது. கண்டல் சூழற்றொகுதி இல்லாத இடங்களில் பிடிபடும் மீனின் அளவு வழமையாகக் குறைவாகக் காணப்படுகின்றது. ஏனெனில், கண்டல் தாவரங்கள் வாழிடமாகவும், எதிரிகளிடமிருந்து ஒழிப்பதற்கும், பயன்படுவதோடு, அதிலிருந்து விழுகின்ற, இலைகள், குச்சிகள் என்பவற்றைக் கொண்டு கூடுகள் கட்டி அவைகளிலேயே முட்டையிட்டு ஒட்டி வைக்கின்றன. மட்டக்களப்பு வாவியில் றியாஸ் அஹமட், மீனா தர்மரெத்தினம் (2003) இரு உள்நாட்டு இனத்திற்குரிய மீன்களில் மேற் கொண்ட ஆய்வுகள், கண்டல் தாவரங்களையொட்டிய பகுதிகளிலேயே அதிகளவான கூடுகள் கட்;டப்பட்டிருந்தன என்று தெரிவிக்கின்றன. இதே மாதிரியான முடிவுகளையே பின்ரோ, புஞ்சிஹேவ (1996), நீர்கொழும்பு வாவியில் பெற்றிருக்கின்றார்கள்.

நீரில் விழுந்து அழுகும் போசணை மிகுந்த தாவரப் பாகங்கள், அலை அடிப்பினால் நுண்ணங்கிகளுக்கு கொடுக்கப்பட்டு, இந்தப் போசணைப் பதார்த்தங்கள் அழுகலுக்கு உட்பட்டு, அழுகல் வளரி உணவுச் சங்கிலியின் முதற் கொழுவியாக தொழிற்பட்டு, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பெரிய மீன்களை போசிக்க உதவுகின்றன. றைசோபோறாவின் மரத்தில் 6.1 சதவீதமும், இலையில் 3.1 வீதமும் புரதம் காணப்படுகின்றது. இவை நீரில் விழுந்து 12 மாதத்திற்குப் பின், இதன் புரத உள்ளடக்கம் 22 சதவீதமாக அதிகரிக்கின்றது.

கண்டல் காடுகள். ஆற்று முகங்கள், கழிமுகங்கள், வாவிகளின் கரையைப் பாதுகாப்பதுடன் அடையல்களை வேர்கள்; பிடித்து வைத்திருப்பதனால் வாவிகளையும், முருகைக் கற்பாறை, கடலின் புற்படுக்கை என்பவற்றiயும் அடையல்கள் சேராமல் பாதுகாக்கின்றது. இயற்கையாக நிலம் வளர்க்கும் செயற்பாட்டில் சூறாவளியின் பாதிப்பு என்பவற்றையும் தடை செய்கின்றன. கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது, உயிh,; பொருளாதார சேதங்களை இந்தக் கண்டல் காடுகள் பெருமளவில் குறைத்திருக்கின்றன (உதாரணம்: அந்தமான் தீவுகள்).

கண்டல் தாவரங்கள் சூழலை மாசுபடுத்தும் காரணிகளை உறிஞ்சும் தகவுடையது. இதனால் வாவிகளில் மாசுபடலை குறைக்கின்றது. கண்டல் காடுகள் மீன்பிடித்து, படகு விட்டு, பறவை,, விலங்குகளை இரசித்து பொழுது போக்கும் ஒரு இடமாகவும், பாவிக்கப்படுகின்றது. வேறு நாடுகளிலிருந்து இடம் பெயரும் பறவைகளுக்கு புகலிடம் அளிக்கின்றன. இவையெல்லாவற்றையும் விட, ஆர்வமுள்ள பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறந்த ஒரு பரிசோதனை கூடமாகவம் பயன்படுகின்றது.

இலங்கையின் கண்டல்காடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:

மனிதன் என்பவன் சுயநலம் கொண்ட ஒரு சமூகப் பிராணி. எப்போதும் சூழலை தனக்கு ஏற்றாற்போல மாற்றி, அதிலிருந்து எவ்வளவிற்கு நன்மைகளைப் பெற முடியுமோ அவ்வளவு நன்மைகளை பெற்று, அதன் தொடர்ச்சியான நிலவுககைக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாமல் சுயநலமாக இருந்து விடுகின்றான். இலங்கையின் கண்டல்காடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இதுதான் மூலகாரணமாக இருக்கின்றது.

இலங்கையின் கலா ஓயா கண்டல் தொகுதிதான் மிகவும் குறைந்த பாதிப்புக்குள்ளானதாகும். பெந்தோட்டை கண்டல் தொகுதி உல்லாசப் பிரயாண கைத்தொழிலினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. புத்தளம்-கல்பிட்டி பகுதிகளில் உள்;ள கண்டல் தொகுதிகள், இறால் வளர்ப்பினால் பாதிக்கப்ட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தசாப்தங்களாக திட்டமிடப்படாமல் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற இறால் பண்ணைகள், தற்போது பல்கிப் பெருகிய வண்ணமே உள்ளன. இதன் காரணமாகவும் கண்டல்கள் பாரிய பிரச்சினையை எதிர்னோக்கியுள்ளன. இதன் காரணமாக மட்டக்களப்பு வாவியின் அண்டிய காடுகளும், வாழைச்சேனை வாவியின், காவத்தைமுனை கண்டல் காடுகளும் பெருமளவில் இறால் வளர்ப்பிற்காக அழிக்கப்பட்டிருக்கின்றன.

வுடக்கு-கிழக்கு மாகாணங்களிலேயே கண்டல் காடுகள் கண்மண் தெரியாமல் கடந்த ஒரு தசாப்பத காலமாக பாதுகாப்பு காரணங்களினால் பாரியளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு வாவியின் கரையோரத்திலும், வீதிகளின் கரையோரங்களில் உள்ள மரங்கள் வருடத்திற்கு பல தடவைகள் வருடம் அடியொடு வெட்டப்பட்டும் (தில்லை) தீயிடப்பட்டுப் (தைபா) வருவதைக் காணலாம். இதே பிரச்சினையை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று-பொத்துவில் (ஊறணி, திருக்கோவில், தம்பிலுவில்) பிரதான நெடுஞ்சாலையிலும் அவதானிக்கலாம். இதே மாவட்டத்தில் ஒலுவில் பகுதியில் குறிப்பிடத்தக்களவு கண்டல்கள் காணப்படுகின்றன. நடைபெறப்Nபுhகும் துறைமுக நிர்மாணத் திட்டத்தால் அவைகளும் கணிசமான அளவு பாதிக்கப்பட வாய்ப்பிருக்கின்றன. இதே மாதிரியான பிரச்சினையை திருகோணமலை மாவட்டத்தில், புல்மோட்டை, இறக்கண்டி, நிலாவெளி, சாம்பல்தீவு, சல்லி, மட்டிக்களி, கொட்டியாரக் குடாவைச் சுற்றிய பகுதிகள், மூதூர் போன்ற பகுதிகளிலும் அவதானிக்கலாம். பயங்கரவாதப் பிரச்சினைகள் காரணமாக காடுகளுக்கு சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத அன்றாடங் காய்ச்சிகள், தங்கள் வீதிக்கு அருகாமையில் உள்ள கண்டல் வளங்களை (குறிப்பாக விறகு) பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். இதன் காரணமாகவும் கண்டல் காடுகள் பெரும் அழிவை எதிர்நோக்கியுள்ளன.

அதைவிடுத்து, அனுமதி பெறாமல் கண்டல் நிலம் விவசாய நிலமாகவும் மாற்றப்படுதல் (உதாரணம்: படுவான்கரைப் பகுதிகள்-பன்குடாவெளி) நகரவாக்கம், வீதி விஸ்தரிப்ப, உல்லாசப் பிரயாண ஹோட்டல நிர்மாணம், தொழிற்சாலை நிர்மாணம் என்பன கூட கண்டல் காடுகளின் தொடர்ச்சியான நிலவுகைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

நீர்கொழும்பு பகுதியின் டிசரளரிடைந மீன்பிடி முறையினால் கண்டல் காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மட்டக்களப்பு வாவியிலும் நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை தமிழில் தூபமுட்டி மீன்பிடி முறை எனலாம். ஒரு சிலரின் கருத்துப்படி ஒரு குறிப்பிட்டளவில் இந்த மீன்பிடி முறைக்காக கண்டல்தாவரங்களின் கிளைகள் அகற்றப்படும் போது, pசரniபெ விளைவால் தாவரம் மீண்டும் செழித்து வளருகின்றது என்கின்றனர். இந்த முறைகளுக்காக பெரும்பாலும் முழு மரங்களும் அடியோடு வெட்டப்படுவதில்லை;. மேம்போக்காக சில சிறு சிறு கிளைகளே வெட்டப்படுகின்றன. இந்த மீன்பிடி முறையை சாதாரண குடியான மீனவன் செய்யும் போது, அது சூழலியல்சார்ந்த (நnஎசைழnஅநவெயட கசநைனெடல) ஆகிறது. அதுவே இலாப நோக்கு கொண்ட முதலாளிகளின் கைக்கு போகும்போது, சூழலை நோக்கிய அழிச்சாட்டியமாகிறது. சாதாரண குடியான மீனவர்களின், சூழல்சார்ந்த அறிவும், அவர்கள் வாழிடத்தில் இருக்கின்ற உயிரினங்களின் அறிவும் அற்புதமானது. நியம-வடஅமெரிக்க-மேற்கு ஐரோப்பிய-நிரூபிக்கப்பட்ட- விஞ்ஞானபூர்வ எனத் தொடங்கும் சொல்லாடல்களினால் அவர்களால் பூச்சாண்டி காட்டத் தெரியாது. எங்களது அனைத்து கள ஆய்வுகளுக்கும் அடிப்படையை அவர்களின் அறிவிலிருந்துதான் நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கின்றோம்.

உலக மொத்த நிலப்பரப்பில் 1 சதவீதமும், இலங்கையின் மொத்தப் பரப்பில் 0.1 சதவீதமும்; கண்டல் காடுகள் காணப்படுகின்றன. விவசாயம், அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளுவதற்கு மிக ஏராளமாக வேறு நிலங்கள் இருக்க, கண்டல் நிலப்பிரதேசங்களை நாம் அழிக்க வேண்டுமா?. கண்டல் சூழற்றொகுதி அரியபுத்தகங்கள்; நிறைந்த நூலகம் போன்றது. அற்புதமானது. இதனையாவது நாம் பாதுகாத்த எமது சந்ததிகளுக்கு கொடுப்பது எமது தலையாய பாரிய கடமைகளுள்; ஒன்றாகும்.

யானைகள்

முதலாளித்துவ சூழலியற் சிக்கல்
(செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) - 01

யானைகள் (Elephants).


உயரக் கிளைகள்
முறிந்து கீழக்கிடக்கும்.
சிறு விலங்குகள்
அரைத்து உண்ணும்.
பதைத்த உயிர்கள்
பாங்காய் பசியாறும்.
காலால் உதைத்து
நீர் கொடுக்கும்.
தகித்த உயிர்கள்
தாகம் போக்கும்.
கோடையின் கொடுமையோ
மெல்லக் குறையும்.
மலையாய் விட்டை
எங்கும் விரவிப்போடும்.
காடு சீராட்டி
உயிர் வளர்க்கும்.
ஊட்டுவதால் தாயாகும்.
உதவுவதால் நண்பனாகும்.
காப்பதனால் காவனாலாகும்.
யானைகள் நம்
சூழலின் தோழனாகும்.

மற்றைய ஆசிய நாடுகளின் வரலாற்றினதும், கலாச்சாலரத்தினதும், நாட்டாரியலினதும், புராணங்களினதும், பகுதியாக யானைகள் காணப்படுவது போன்றே இலங்கையிலும் காணப்படுகின்றது. யானைகள் வணங்கப்படு பொருளாகவும், வேட்டையாடிகளின் இலக்காகவும், மக்களின் சமைதாங்கியாகவும், அதே மக்களுக்கு சுமையாகவும், வளர்க்கும் போது மித்துருவாகவும், மிரளும்போது சத்துருவாகவும்;, அரசர்களின் பெருமைக்குரிய பொருளாகவம், பாகனின் நண்பனாகவும், போர் இயந்திரமாகவும், சமாதானத்தினதும், அன்பினதும், பயத்தினதும், வேட்டையாடப்படுவதன் அடையாளமாகவும் பல பாத்திரங்களை வகிக்கின்றன. யானையானது ஆசியாவிலே மனிதனுடன் மிகவும் பெருமைக்குரிய தொடர்புகளை அதன் தூய்மையான இயல்புகள் காரணமாக வகித்து வந்திருக்கிறது. இந்த தொடர்பானது உலகில் மனிதனுக்கும் மற்றைய விலங்குகளுக்கும் உள்ள தொடர்புகளோடு ஒப்பிடும் போது நிகரில்லாத ஒன்றாகவே விளங்குகின்றது.

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் காட்டிலிருந்து யானைகளை பிடித்து வந்து அதனைப் பழக்கி தனது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்துவதன் காரணமாக, மனிதனுக்கு யானையானது அதன்; பல்வேறு வயதுகளிலும்  உபயோகமான ஒன்றாக இருக்கின்றது. யானையானது மத, கலாச்சார ஊர்வலங்களிலும் சடங்குகளிலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் மனிதன் யானைகளை போர் செய்வதற்குப் பயன்படுத்தியிருக்கிறான். மனிதன் எப்போதும் காட்டு யானைகளை பிடித்து அவனுக்கு சேவகம் செய்யப் பழக்கிவிடுகின்றான். யானைகளைப் பிடிப்பதிலும் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.

நுடநிhயவெ என்ற ஆங்கிலச் சொல் தந்தம் (ivory) என பொருள் கொண்ட நடநிhயள3 என்ற பழைய கிரேக்கச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். மிகவும் பெரிய தரைவாழ் முலையூட்டியான யானை வருணம் proboscidea யிலும் குடும்பம் நடநிhயவெனையந யிலும் பாகுபடுத்தப்படுகின்றது. Pசழடிழளஉனைநய என்றால் சுருளக் கூடிய தும்பிக்கை என்பதாகும். இதுவே யானையின் பிரதான சிறப்பியல்பாகும். யானையின் இளம் பருவம் என்பது பிறந்ததிலிருந்து நான்கு வயது வரையாகும். 30-38 வயது வரை யானையானது வேலை வாங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த வயதில்தான் அவைகள் ஒழுங்கான வடிவத்திலும், ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் இருக்கின்றன. 46-53 வயதில் அவைகளின் உறுதி படிப்படியாக குறைகின்றது. 53-60 வயதுகளில் அவைகள் மென்மையான வேலைகளுக்கு ஏற்றவையாகவே இருக்கின்றன.

55 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் eocene காலத்தில் ஆபிரிக்காவில் தோன்றியவையே இந்த யானைகள். பின்னர் உழநழெணழiஉ காலத்தில் ஆபிரிக்காவிலும், ஆசிய, ஐரோப்பா, தென்அமெரிக்க பகுதிகளுக்கும் பரம்பின. யானைகள் அந்தாட்டிகா, அவுஸ்ரலேசியப் பகுதிகள் மற்றும் சில தீவுகளில் மட்டுமே காணப்படுவதில்லை. உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்ற தரைச் சூழற்றொகுதிகளில் யானைகள் காணப்பணுடுகின்றன. American Mastadom (Mammat americanum) woolly mammoth (Mammathus sp.) போன்றவை சரித்திரத்துக்கு முன் வாழ்ந்த யானைகளின் முன்னனோர்களாகும். இவற்றிலிருந்தே தற்போது காணப்படுகின்ற ஆசிய யானைகளும் (Elephas maximus), ஆபிரிக்க யானைகளும் (Loxodonto africana) தோன்றின.

தற்போது ஆசியா யானைகளும், ஆபிரிக்க யானைகளும் மட்டுமே இரு சாதிகளிலும், இரு இனங்களையும், ஆறு உப இனங்களையும் முறையே கொண்டு ஆசிய, ஆபிரிக்கக் கண்டங்களில்; பரம்பிக் காணப்படுகின்றன.
ஆபிரிக்க யானைகளின் உப இனங்கள்:

டுழஒழனயவெய யுகசiஉயயெ யகசiஉயயெ (சவானா உப இனம்)
டுழஒழனழவெய யுகசiஉயயெ உலஉடழவளை (காட்டு உப இனம்)
ஆசிய யானைகளின் உப இனங்கள்:
Elephas maximus maximus (இலங்கை உப இனம் )
Elephaus maximus vilaliya (சதுப்புநில உப இனம்)
Elephasu maximus indicus (இந்திய உப இனம்)
Elephas maximus sumatranus (சுமாத்திரா உப இனம்)
Elephasu maximus hirsutus (மலேசிய உப இனம்)
Elephasu maximus borneensis (போர்னிய உப இனம்)
ஆபிரிக்க ஆசிய யானைகளுக்கிடையிலான பிரதான வேறுபாடுகள் வருமாறு:
African(Loxodonta africana)
Asian(Elephas maximus)

காணப்படும் பகுதிகள்:
ஆபிரிக்காவின் வடபகுதிகளிலுள்ள நாடுகளைத தவிர மற்றெல்லா ஆபிரிக்காவின் பகுதிகளிலும்; பரவிக் காணப்படுகின்றது.

பங்களாதேஸ், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, லாஓஸ், மலேசியா, பர்மா, நேபாளம், தாய்லாந்து, வியட்னாம்

யானைகள் வாழும் காடுகளின் மொத்த அளவு:
4-5 மில்லியன் சதுர கிலோமீற்றர்
500000 சதுர கிலோமீற்றர்.
யானைகளின் குடித்தொகை:
600000-700000
35000-55000
பௌதீக தோற்ற வேறுபாடுகள்:
பெரிய வட்டமான காதுகள்
தலைக்கு மேலே உயர்ந்த காதுகள்
மழுங்கிய தலை
குவிவான முதுகு
ஆண், பெண்யானைகள் இரண்டிலும் தந்தம் காணப்படும்
தந்தம் நேரானதும், தடித்ததும்
தந்தம் 70 கிலோகிராம் நிறையுடையது
நுனியில் இரு மேடுகள் காணப்படும்
சராசரி உயரம் 3.5-4 மீற்றர்
வயதாகும்போது காதின் நுனி உடம்பை நோக்கி வளையும்
அதி உயரப்பகுதி தோளாகும்
முக்கோணக் காதுகள்
அப்படி இல்லை
கும்ப வடிவான தலை
குழிவானதம், சில நேரங்களில் தட்டையானதுமான முதுகு
5வீதமான ஆண் யானைகளில் மட்டும் காணப்படும்.
மென்மையானது வளைந்தது
30 கிலோகிராம் நிறையடையது
ஒன்று காணப்படும.;
2.75 - 3 மீற்றர்.
உடம்பை விலத்தி வளையும்
தலை
;
இரு இனங்களும் IUCN யின் அழிந்து போகும் நிலையிலுள்ள விலங்குகளின் பட்டியலில் உள்ளன.
மனிதர்களுக்கும் யானைகளுக்குமிடையிலான பிரச்சினைகள்.

தற்போது மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையில் உண்டாகும் பிரச்சினைகள் (conflict) பற்றிப் பார்ப்போம். யானைகளைத் திருடுதல், தந்தங்களை திருடுதல், யானைகளின் வாழிடங்களை அழித்தல் போன்றவையே யானைகள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாகும். யானைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயுமிடத்து முந்தைய இரு பிரச்சினைகளையும்விட யானைகளின் வாழிடங்களை அழித்தலே பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. ஏனெனில் பெண் ஆசிய யானைகள்; தந்தங்களை பொதுவாக கொண்டிருப்பதில்லை. ஆண் யானைகளிலும் குறிப்பிட்ட சிலவற்றிலேயே தந்தங்கள் காணப்படுகின்றன. அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு ஆபிரிக்க யானைகளை விட ஆசிய யானைகளே மிகவும் பாரியளவில் முகம் கொடுத்து நிற்கின்றன. 600000 ஆபிரிக்க யானைகள் 33 நாடுகளில் 4 - 5 மில்லியன் சதுரகிலோ மீற்றர் பரப்பளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள், பிரச்சினைகள் காரணமாகவும், யானைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன.

தங்களுக்குத் தேவையான உணவுகளும், வாழிடங்களும் கிடைக்காத போது யானைக் கூட்டமானது தனது வழமையான பாதைகளை விட்டு விலகி வேறுபாதைகளில் அவைகளைத் தேடிப் புறப்படுகின்றது. பிரதானமாக உணவு, நீர் என்பவற்றைத் தேடியே புறப்படுகின்றது. ஒரு இடத்தில் நீரும் உணவு விநியோகங்களும் குறையும் போது, எங்கே உணவும், நீரும் இருக்கிறதோ அந்த இடத்தை நோக்கி சென்று அவைகளைப் பெற்றுக் கொள்ளும். உணவுப் பற்றாக்குறையான காலத்தில் எங்கு உணவு கிடைக்கும் என்ற சிறப்பான அறிவும் யானைகளுக்கு உண்டு. இது கற்றலினாலும், அனுபவத்தினாலும் யானைகள் தங்களுடைய பெற்றோரிடமிருந்தும், பாதுகாவலர்களிடமிருந்தும் அடைந்து கொண்டது எனலாம். பலநூற்றாண்டுகளாய் இந்த யானைகளின் வாழ்வில் இதுதான் நடைமுறையாய் இருந்து வந்திருக்கின்றது. யானைகளின் நேர ஒதுக்கீட்டில் (வiஅந டிரனபநவiபெ)23.1 ஊட்ட நடத்தையானது மிகவும் பெரும் பங்கு வகிக்கின்றது. றியாஸ் அஹமட் குழுவினர் (2004), லகுஹல தேசிய வனஜீவராசிப் பூங்காவில் செய்த ஆய்வுகளில், யானைகள் (ஆண், பெண், குட்டி) தங்களது மொத்த நேரத்தில் (43.63, 45.66, 40.99) சதவீத நேரங்களை, ஊட்ட நடத்தையில் செலவிட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த நேரத்தை தங்கள் வாழிடங்களில் நடத்தலுக்கு செலவிட்டிருக்கின்றன. இதிலிருந்து வாழிடங்களின் அளவும், யானைகளின் ஊட்ட நடத்தைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறியலாம். யானைகள் பயணம்; செய்யும் பாதையில் (உணவு தட்டுப்பாடான காலத்தில், உணவு இருக்கும் இடத்தை நோக்கிப் பயணம் செய்யும் பாதைகள்), தடைகள் ஏற்படும் போது அல்லது அடைபடும் போது, யானைகள் பலவந்தமாக வேறு திசை நோக்கி, அல்லது அதன் பாதைகளில் ஏதாவது அபிவிருத்தித் திட்டங்கள் (உதாரணம்: வீடமைப்பு) உண்டாக்கப்பட்டால், அவற்றை நோக்கி யானைகள் சென்று தங்கள் உணவுகளை தேடுகின்றன. அந்த நேரத்தில் விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு, பல தொல்லைகளுக்கு மத்தியில்; செய்கை பண்ணிய பயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு தெரிந்த முறைகளிலெல்லாம் யானைகளை விரட்ட ஆரம்பிப்பார்கள். மிகவும் அதிகளவான யானைகளின் மரணங்களுக்கு விவசாயிகளே காரணமாகின்றனர். பெரும்பாலும் தங்கள் பயிர்களைப் பாதுகாக்கம் பொருட்டு.

ஆசிய யாiயானது அழிவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மிகவும் பெரிய முலையூட்டியாகும். அவைகளின் பழைய வாழிடங்கள் அழிக்கப்பட்டு அங்கிருந்து; வேறு இடங்களுக்கு துரத்தப்பட்டுள்ளன. இதனால் யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் யானைக்கும் மனிதனுக்குமான பிரச்சினைகள், 1860களில் பிரிட்டிசாரின் காலத்தில் அவர்கள் கோப்பி பயிர்ச்செய்கைக்காக மத்திய மலைநாட்டுக்கு சென்றவுடன்; ஆரம்பிக்கின்றன. அதற்கு முந்திய காலத்தில் இந்த வகையான பிரச்சினைகள் இருந்ததில்லை. மலைகளில், சின்கோனாவும், கோப்பியும் பயிரிடுவதற்காக கண்டபடி காடுகளை இவர்கள் அழித்ததனால் யானைகளி;ன் வாழிடங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டன. ஆரம்பத்தில் யானைகள் மனிதனைவிட்டே விலகிவிட்டன. காலப்போக்கில் வாழிடங்கள் குறைக்கப்பட்டதாலும் உணவுத் தேவையாலும் யானைகள் தங்களது பழைய வாழிடங்களுக்கு பயிர் செய்யப்படாத காலங்களில் திரும்பி வந்தன. அப்போது அவைகள் பயிர்ச்செய்கையாளர்களால் சுடப்பட்டன. தற்போது, இதற்கு மேலதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தமும் மற்ற வனசீவராசிகளைப் பாதித்தது போல பெரிய முலையூட்டியான யானையையும் பாதித்தது. யானைகள் பெரும்பாலும் துப்பாக்கிச் சண்டைகளிலும், கண்ணி, பொறி வெடிகளிலும்; அகப்பட்டுக் கொண்டன.

யானைகள் மனிதனுக்கு பலவகைகளில் பொருளாதார நட்டங்களை ஏற்படுத்தி வருகின்றன. தென்னை, றப்பர், கரும்பு, நெல், தினை போன்ற தானிய பயிர்ச்செய்கைகளை அழித்து பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியுள்ள பொருளாதார நட்டங்களை ஏற்படுத்துகின்றன.
ஆண் யானைகள்தான் பெண் யானைகளைவிட பயிர்களை அழித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரவு நேரங்களில்தான் யானைகள் குடியேற்றங்களுக்குள் உள்நுழைகின்றன. புயிர்ச் செய்கைக் காலங்களில், வயதுவந்த ஆண் யானைகள் வழமையான காடுகளுக்கு அருகிலுள்ள கிராமப்புற எல்லைகளால் பின்னேரங்களில் உள்நுழைந்து, சூரியன் மறைந்தவுடன் வயல்களுக்குள் நுழைகின்றன. பின்னர் இரவு 7.00 மணிக்கும், 11.00 மணிக்கும் இடையில் வெளியேறுகின்றன.

யானைகள் வயல்களுக்குள் உள்நுழைந்தவுடன், அதன் அடுத்த இலக்கு அவைகள் உண்வதற்கு தேவையான பயிர்களை இனங்காண்பதாகும். குiபெநச அடைடநவ 23யானைகளின் விருப்பமான உணவாகும். விசேடமாக பயிர்களுக்கு வெளியெ துருத்தியுள்ள பூந்துணர் பாகங்களை அவைகள் உண்பதற்கு தேர்ந்;ததெடுக்கின்றன. இளநீர் காய்த்துள்ள ஒரு மரத்தை மோதி விழுத்தி, அதன் குருத்தை உண்கின்றன. வாழை மரங்கள் பிளக்கப்பட்டு அதன் மையப்பகுதியிலுள்ள நார்த் தன்மையுள்ள தண்டுகள் நுகரப்படுகின்றன. வாழைகுலையின்;;காம்பும், வாழைப் பூவும் உண்ணப்படுகின்றன. கரும்புகள் முறிக்கப்பட்டு பூரணமாக அரைத்து விழுங்கப்படுகின்றன. மாமரங்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில் மாமரங்கள் நுகபர்படுகின்றன. பலாமரத்தை குலுக்கி பழங்களை விழுத்தி, பாதத்திதனால் மிதித்து நுகரப்படுகின்றன.

யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான முரண்பாடுகளின் போது, யானைகளினால் ஏற்படுத்தப்படும் அழிவுகளைத் தடுப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. யானைகளைப் பிடித்து இன்னொரு வசதியான வாழிடத்திற்கு மாற்றம் செய்தல், வயதுவந்த யானைகளை அந்தக் கூட்டத்திலிருந்து நீக்குதல் போன்றன செய்யப்படுகின்றன. இவ்வாறு வயதுவந்த ஆண் யானைகளை நீக்குதல் பாரியளவில் சேதங்களைக் குறைக்காது போவதுடன், அவைகளின் கருவளத் தன்மை, வளர்ச்சி போன்றவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். யானைகள் மனிதர்களுக்குப் பிரச்சினைகளைக் கொடுக்காமலிருக்கவும், அதன் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தவும், யானைகளை அவைகளின் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு திருப்பி அனுப்பவும், பல வழிமுறைகள் அவ்வப் பகுதி மக்களாலும், வனஜீவராசித் திணைக்களத்தின் அனுசரணையுடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

திண்மமான மண்ணில் அகழிகள் வெட்டல். அகழிகள் நன்கு பராமரிக்கப்படாவிட்டால் யானைகள் அகழிகளை உடைத்துக் கொண்டு; கொண்டு நுழைந்துவிடும்.

உயர்அழுத்த மின்சார வேலியை அமைத்தல். யானைகள் வேலியைத் தாண்ட முற்படும் போது, இந்த வேலி வன்மையான, உயிருக்கு ஆபத்தில்லாத, குறுகியநேர, ஆனால் நினைவில் நிறுத்திவைத்துக் கொள்ளக்கூடிய மின்னதிர்ச்சியை கொடுக்கும்.

கால்வாய்களை செங்குத்தாக வெட்டுதல். இதனால் யானைகள் உள்நுழையாது.

அவசர நிலைமைகளின் போது, பயிற்றுவிக்கப்பட்ட யானைகளை பிரச்சினை கொடுக்கும் காட்டு யானைகளை துரத்துவதற்கு பயன்படுத்தல்.

ஒரு சிறு யானைக் குடித்தொகை தொடர்ச்சியாக பிரச்சினை கொடுக்குமாயின் அவைகள் பிடிக்கப்பட்டு வேறு காடுகளுக்கு கொண்டு விடப்படல். அல்லது அவைகளுக்கு வேலைகளை செய்ய முடியுமென்றால், வேலைகளுக்காக பயிற்றுவிக்கப்படல்.

இந்த வழிமுறைகள் எதுவும் தீர்வு கொடுக்காவிடின், யானைகள் விளைவிக்கும் உயிர், பொருளாதார சேதங்களைப் பொறுத்து, அதிகாரமளிக்கப்பட்ட இடத்திலிருந்து பெறுகின்ற அங்கிகரிக்கப்பட்ட உத்தரவுப்படி யானை சுடப்படல்.

மற்றொரு வகையான யானை-மனிதன் முரண்பாடு என்னவெனில், யானைகள் எதுவித நோக்கமுமின்றி மனிதர்களை கொல்வதாகும். ஆண்களே அதிகளவில் கொல்லப்படுகின்றார்கள். பெண்களும், சிறுவர்களும் பாதிக்கப்பட்ட வீதம் மிகக் குறைவாகும். ஏனெனில் ஆண்களே யானைகளை அதிகளவில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாலாகும்.
யானையானது ஒரு மனிதனைத் தாக்குவதற்கு பாதம், கொம்பு, தும்பி;க்கை போன்றவகைளைப் பாவிக்கின்றது. தாக்குதலின் முடிவில் யானை தும்பிக்கையினால் மனிதனை வேகமாகவும் பலம்கொண்டும் நிலத்திலே தூக்கி அறைகின்றது. இந்த வன்முறை நடத்தையானது, சிலவேளைகளில் பெருமளவிலான மனித உயிர் சேதங்களுடன் முடிவுக்கு வருகின்றது. யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறைக்கப்பட்டாலேயே, யானைகள் ஒரு விருப்புக்குரிய விலங்காக கிராமப்புற மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு மக்களுக்கு யானைகள், சூழல் பற்றிய விழிப்புணர்வும், அதிகாரிகளுக்கு யானைகளின் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அரசியல்வாதிகளுக்கு யானைகளின் சூழல், மக்களின் சூழல் பற்றிய விழிப்புணர்வும் அவசியமாகும்.

இலங்கையின் யானைகளின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், இலங்கை மக்களது கலாசாரத்துடனும், மதநம்பிக்கைகளுடனம் பின்னிப்பிணைந்துள்ள யானைகள் வாழ்வதற்கும், அதன் சந்ததிகள் சிக்கலின்றி விருத்தியடைவதற்கும், நல்ல திட்டங்களை, சிறந்த விஞ்ஞான முறைகளுடனும், அரசியல் ஆதரவுடனும் உருவாக்கினால்தான்; இலங்கையின் யானைகளைப் பாதுகாக்க முடியும்.

இறால் பண்ணைகள்-02

முதலாளித்துவ சூழலியற் சிக்கல் - 03

இறால் பண்ணைகள்:
இறால் பண்ணைகளினால் ஏற்பட்ட சமூக பொருளாதார பிரச்சினைகளைப் பற்றி நோக்குவோம். சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு மூல காரணம் இறால் பண்ணையாளர்களுக்கம் சுற்றயல் மக்களுக்குமிடையே தோன்றும் முரண்பாடுகளே (உழகெடiஉவள). வட மேல் மாகாணத்தில் அவதானிக்கப்பட்டதில், இறால் திருடுதல் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. 25 தொடக்கம் 35 கிராம் அளவுள்ள ( 3 தொடக்கம் 4 மாத வயதான ) இறால்களுள்ள குளத்தில் ஒரு வீச்சு வலையின் (cast net) வீச்சில் 2 தொடக்கம் 3 கிலோ கிராம் இறால்கள் அகப்பட முடியும். இது 1600 ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியைக் கொண்டது. ஒரே இரவில் பல்லாயிரக் கணக்கான ரூபா பெறுமதியுள்ள இறால்கள் திருடு போகின்றன. நாள் முழவதும் நதியில் இறங்கி மீன்பிடித்தாலும் ஒரு மீனவனுக்கு 350 ரூபாவிற்கு மேல் கிட்டுவதில்லை. எனவே பணத்தாசை காரணமாக திருட்டுத்தனம் ஊக்குவிக்கப்பட்டு திருடர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் இறால் திருடு போவது சம்பந்தமான முறைப்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆராச்சிக்கட்டுவ மதுரங்குளி போன்ற பகுதிகளிலும் மட்டக்களப்பு பகுதிகளிலும் இது நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

யாதாயினும் ஒரு பொருள் விவசாயிக்கு அல்லது பண்ணையாளனுக்கு தொந்தரவை அல்லது விரும்பத்தகாததை செய்யுமாயின் பீடை என்கிறது உயிரியல். மட்டக்களப்பு வாவியைச் சுற்றிச் செய்கை பண்ணப்படும் இறால் பண்ணைகளின் முக்கிய பீடை மனிதன் என்பது எமது அவதானங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

75% மான கிராம மக்கள் இறால் பண்ணைகளினால் தோற்றுவிக்கப்படும் வெள்ளப்பெருக்கு தங்களத வீடுகளையும் விவசாய நடவடிக்கைகளையும் பாதிப்பதால் இந்தப் பண்ணகைளுக்கு எதிராக இருக்கிறார்கள். இதன் காரணமாக, வெள்ளப்பெருக்கு சம்பந்தமான பிரச்சினைகளும் பண்ளையாளர்களுக்கும் கிராமத்தவர்களுக்குமிடையே சமூகவியற் பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.
1995ம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மக்களில் 2மூ மான மக்களுக்கு தோல் நோயும், 92மூ மான மீனவர்களுக்கு மீன்பிடியில் குறைவும், இறால் பண்ணைக் கழிவுநீர் நீர் நிலைகளில் விடப்பட்டதால் ஏற்பட்டதாக தெரிய வந்திருக்கின்றது.

இறால் பண்ணைச் செய்கைக்காக கண்டற் சூழற்றொகுதிகளை (காடுகளை) அழித்ததனால், கண்டற் காடுகளை நம்பிய குடிசைக் கைத்தொழிற் துறையானது பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது. இதனால் குடிசைக் கைத்தொழிலாளர்களுக்கும் இறால் பண்ணையாளர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. அத்தோடு குடிசைக் கைத்தொழிலாளர்களின் வருமானமும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்பு கண்டல் காடுகள் அரச காணிகளில் இருந்தன. எனவே மக்கள் அதனை இலகுவாக பயன்படுத்தினர். இப்போது இவைகள் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால் கண்டல் காடுகளை பாவிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கண்டற் காடுகளிலிருந்து பெறப்படுகின்ற பொருட்களால் மீன்பிடி உபகரணங்கள் செய்ய முடியாமற் போனமையும் மீன்கள் இனப்பெருக்கும் இடங்கள் அழிந்தமையும்; கிராமிய மீனவர்கள் வருமானத்தை இழக்க காரணிகளாகியிருந்தன.

ஆடு மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலங்களிலும் இறாற் பண்ணைகள் அமைக்கப்பட்டதால், பண்ணையாளர்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கமிiடியல் முரண்பாடுகள் தோன்றின. இதே போன்று நெற் செய்கையாளர்களுக்கும், தென்னைச் செய்கையாளர்களுக்கும் பண்ணைச் செய்கைக் காரர்களுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றின.

எனவே இறாற் பண்ணைகளினால் சூழலில் ஏற்படும் தாக்கமானது, ஒரு கைத்தொழில் என்ற வகையில் இறாற் பண்ணைகளின் நிலைபேறான தன்மைக்கே (sustainability) சவால் விடுகிக்னறன. தரக்குறைவான நீரியற் பண்புகளாலும் சுற்றுச் சூழல் பாதிப்புக்களாலும் இறால் உற்பத்தியில் ஏற்படும் குறைவானது இறாற் பண்ணைகளினால் வரும் வருமானத்திலும் பாரிய குறைவை ஏற்படுத்துகின்றன. இந்தக் காரணிகளுடன் சமூகவியற் காரணிகளும் சேர்ந்து இறால் பண்ணைகளின் தொடர்ச்சியான இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

மக்கள் நலனையும், சுற்றுச் சூழல் நலனையும் முதன்மைப்படுத்திய சூழலுக்கும் சமூகத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தாத இறால் வளர்ப்புத் திட்டங்கள்தான் இறால் உற்பத்தியைக் கூட்டி அதன் நிலைபேற்றுத்தன்மையையும் மாறாமல் வைத்திருக்கும்.

இறால் பண்ணைகள்

முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் - 03


இறால் பண்ணைகள் - 01

வர்த்தகமயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ விவசாய (Agriculture), நீர்pயல்வளர்ப்பு (aquaculture) முறைகள்தான் இன்றைய சூழலின் நிலைத்;த பேணுகைக்கு சவால்விடும் காரணிகளாக இருந்து வருகின்றன. இவைகள் தமது தொழில் நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு, உணவுப் பொருட்களின் தரம், மதிப்பு, நோய்த் தடுப்புத் திறன், சூழலுக்கு ஏற்ற தன்மை போன்றவற்றை தூர எறிந்த விட்டது. முதலாளித்துவமானது சந்தையைக் கட்டுப்படுத்துவதற்காக வர்த்தகத்தைக் கைப்பற்றியது. பின்னர் விவசாயத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதில் தனது நுட்பங்களை பயன்படுத்தியது. இதனால் சூழலின் சமனிலை பாதிக்கப்பட்டு, சூழல் மாசடைந்து, பல்தேசியக் கம்பனிகளுக்கு சாதகமான சூழலின் உயிரியலின் எளிமையான தன்மை உதயமானது. மேற் சொன்ன விடயங்களை இலங்கையின் வடமேற்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் செய்கைபண்ணப்பட்டுவரும் இறால் பண்ணை- நீரியல் வளர்ப்பு முறைகளுடாக நோக்குவோம்.

நீரியல் வளர்ப்பை (aquaculture) - நீர்ச் சூழலில் வாழுகின்ற தாவர விலங்குகளை அச் சூழலில் வளர்த்து அறுவடை செய்யும் முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். இம் முறையில் மீன்கள், (உணவிற்காகவும், மீன்களுக்கான இரைகளாகவும், அலங்கார வளர்ப்பு நோக்கத்திற்காகவும், முத்து, மட்டி, கடற் சாதாளைகள், களைகள், முதலைகள் (தோல்களுக்காக), தவளைகள் (உணவிற்காகவும், பரிசோதனைகளுக்காகவும்), கணவாய், ஆமைகள் போன்றவைகளும் வளர்க்கப்படுகின்றன.

Pநயெநரள அழழெனழn (வெள்ளை இறால்)ஐ மையமாகக் கொண்ட இறால் வளர்ப்பானது மிகவும் விரைவாக வளர்ந்து வரும், ஏற்றமதி நோக்கான கைத்தொழிலாகவும், இலங்கைக்கு அதிக வெளிநாட்டுச் செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு கைத்தொழிலாகவும் வளர்ந்து வருகின்றது. நீரியல் வளர்ப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்ததில் கிடைத்த வெளிநாட்டுச் செலாவணியில் இறாலானது 48% தொடக்கம் 70ம% வரையில் பங்கு வகிக்கின்றது. துரதிருஸ்டவசமாக இறால் வளர்ப்புக்குத் தேவையான நிலமும், உவர் நீர் வசதிகளும் உள்ள பகுதிகள் இலங்கையில் மிகக் குறைவாகும். இதன் காரணமாக இறால் பண்ணைகளின் பரம்பல் இலங்கையில் ஒரு குறித்த பகுதிகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இறால் வளர்ப்பானது, இலங்கையில் வடமேல் மாகாணத்தின் 120 கிலோமீற்றர் நீள 10 கிலோமீற்றர் அகலப் பரப்பிற்குள் அடங்கும் சிலாபம் கடனீரேரி, டச்சுக் கால்வாய், முந்தல் கடனீரேரி, புத்தளம் கடனீரேரி, மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு கடனீரேரி, வாழைச்சேனை கடனீரேரி, வாகரை கடனீரேரி பகுதிகளில் இரு ஏக்கர்கள் முதல் 300 ஏக்கர்கள் வரை நூற்றுக் கணக்கணக்கான அனுமதியுள்ளதும் , மற்றும் சட்டவிரோதமானதுமான முயற்சிகள் வர்;த்தக நோக்கில் குறுகிய கரையோர பரப்பில் செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. வுடமேல் மாகாணத்தின், முந்தல் கடனீரேரி, டச்சுக் கால்வாய்ப் பகுதிகளில் 70மூமான இறால் பண்ணைகள் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இறாலின் தேவையானது ஜப்பான், அமரிக்கா. ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகம். "இறால் வளர்ப்புத் திட்டங்கள் அதிகரித்து வருகின்றபோதும், கடலில் இருந்து பிடிக்கப்படும் இறாலின் அளவு மிகவும் அதிகமாகவே உள்ளது. மேல் நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு இறால் வளர்ப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அமைந்துள்ளது. நமது நாட்டின் தற்போதைய ஏற்றுமதி மிகவம் குறைவு." என்று கருதிய நமது நாட்டுக் கொள்கை வகுப்பாளர்களும், முதலீட்டு அதிகார சபையும் (டீழுஐ) இத்தகைய இறால் வளர்ப்புப் போன்ற நீரியல் வளர்ப்பு முறைககள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தனா. இதன் நிமித்தம் அரச, தனியார் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சிகரமான கடன்களை வழங்கின. வழங்கியும் கொண்டிருக்கின்றன.

பெருகி வரும் இத்தகைய சட்டபூர்வ, சட்டவிரோத இறால் பண்ணைகளே, அதிகரித்து வரும் கடல்நீரேரிகளினதும், அதனை அண்டி வாழும் மக்களினதும், உயிரிகளினதும் சுற்றுச் சூழலுக்கு மிகவும் மாசையும், அபாயத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக செய்யப்பட்டு வருகின்ற ஆய்வுகள் தெரிவிக்கி;ன்றன. இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்ற இறால் வளர்ப்பு முறைகள் தன்மாசுபடலையும் (autopollution) - அதாவது தானே தனது சுற்றுச் சூழலையும் தன்னையும் மாசுபடுத்திக் கொள்வதுடன் மற்றச் சூழலையும் மாசுபடுத்தச் செய்து கொண்டிருக்கின்றன. வடமேல் மாகாணத்தின் கடனீரேரிகளில் (lagoon) இல் செய்யப்பட்ட ஆய்வுகள் அந்த நீரேரிகளை அண்டி வாழ்ந்த மக்களினதும், உயிரிகளினதும், பௌதிக, கலாச்சார, மானிட கூறுகள் இறால் பண்ணைகளினால் எதிர் கொண்ட பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்;தன.

இந்த வெளிப்படுத்தப்படட பிரச்சினைகள் யாவை என்று பர்ர்ப்பதற்கு முன், இறால் பண்ணைகளால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு அரசாங்கம், இறால் பண்ணை செய்கையாளர்களை ஆரம்ப சுற்றாடற் பரிசீலனை (ஐnவையைட நுnஎசைழnஅநவெயட நுஒயஅiயெவழைn) செய்ய வேண்டுமென பணிக்கப்படுகின்றது. இந்த பரிசீலனை அறிக்கையானது, இறால் பண்ணைகளினால் சூழலுக்கு ஏற்படக் கூடிய தீய பாதிப்புக்களையும், இவற்றிற்கான பரிகாரங்களையும், அல்லது தீர்வுகளையும் கொண்டிருக்கின்றன. இந்தப் பரிசீலனை அறிக்கையின் பிரதிகள், சில அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரமுள்ள அரச நிறுவனங்களுக்கும், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும். இத் திட்டத்தினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதக-சாதகங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படும். அத்துடன்; முதலாளி அல்லது தொழிலாளி சார்பான முடிவுகளை எடுக்க அல்லது மதில்மேல் பூனையாக இருக்க அரசியல்வாதிகளும், இத்திட்ட அறிக்கைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இந்தபரிசீலனை அறிக்கையானது, இத்திட்டங்களை அங்கிகரிக்கும் அதிகாரமளிக்கப்பட்ட சபை அவசியமென்று கருதினால், சுற்றாடற் பாதிப்பு அறிக்கையை (Environmental Impact Assessment ) சுருக்கமாக EIA ஐத் தொடர்வதற்கான அவசியத்தையும், தேவைகளையும் கொண்டதாக இருக்கும்.

ஆரம்ப சுற்றாடற் பரீசீலனை அறிக்கைக்கு உதாரணமாக, வடமேல் மாகாணத்தில் கடனீரேரிகளின் ஒரத்தில், பல கோடிக்கணக்கான ருபாய்களை முதலீடு செய்த பெரிய நிறுவனமொன்று சமர்ப்பித்த ஆரம்ப சுற்றாடற் பரிசீலனை அறிக்கையைப் பார்ப்போம்.

முதலாளித்துவ சூழலியல்-02

முதலாளித்துவ-சூழலியற் சிக்கல் - 02

நாம் எதிர்கொள்ளுகின்ற சூழலியற் சிக்கலானது நாங்கள் வாழ்ந்துகெர்ணடிருக்கின்ற முதலாளித்துவ பொருளாதார உலகத்தின் நேரடி விளைவு என முன்னர் பார்த்தோம். உலகில் இதற்கு முன்னர் வரலாற்று ரீதியாக நிலவிய புராதன பொதுவுடமைசமூக பொருளாதார முறை, ஆண்டான்-அடிமைப் பொருளாதாரமுறை, மானிய பொருளாதார முறை போன்றன சூழலைச் சிதைத்து இயற்கைச் சமநிலையைக் குழப்பிவிட்டு உயிரிகளின் நீடித்த நிலைத்த நிலவுகைக்கு சவாலாக இருந்தது மிகக் குறைவு. ஆனால் வரலாற்று முதலாளித்துவம் ஒன்றுதான் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் உலகைப் பரவி, மனிதனுக்கும் அவனின் பயன்பாட்டுக்குரிய உயிhகளுக்குமான நிலவுகைக்கு அபாயத்தை ஏற்படுத்தியது எனலாம்.

சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்பட்டு சேதமாக்கப்படுவதன் தீவிரத்தன்மையை உணரும் திறன் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றது. சூழலிற்கு ஏற்படுத்தப்படும் சேதத்தின் தன்மையை உயிரியல், பௌதிக, இரசாயன, சமூக, கலாசார பண்பாட்டு, மானிடவியல் ரீதியாக பலமுறைகளில் பகுப்பாயலாம். ஆனால் உண்மையில் சூழலியற் பிரச்சினைகள் இயற்கை விஞ்ஞான பகுப்பாய்வுகளோடு, தற்போதையை உலகின் அரசியற்-பொருளாதார கொள்கைகளோடு பகுத்தாய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

எங்களுக்கு பல சகாப்தங்களுக்கு முன் வாழ்ந்த எழுத்தறிவில்லாத, கல்வியறிவில்லாத மனிதர்களோடு ஒப்பிடுகையில் நாங்கள் அறிவில் கூடுதலானவர்களாக இருக்கிறோம். முன்பு வாழ்ந்து இறந்தவர்களை விட, எங்களுக்கு தீங்கு தரும் நுண்ணுயிர்கள் பற்றியதும், சுகாதாரப் பிரச்சினைகள் பற்றியதும், சுற்றுச் சூழலில் கலக்கின்ற நஞ்சுகள் பற்றியதும், அதனைத் தடுப்பது பற்றியதும் அறிவு அதிகம் எனலாம். அந்த அறிவினால் நம்மைப் பாதுகாத்தும் வந்திருக்கின்றோம். பாதுகாத்தும் வருகின்றோம். இந்த அறிவினை பல்வேறு வழிகளில் பெற்றிருக்கின்றோம். தனியொரு நபரை எடுத்துக் கொண்டால், முன்பிருந்த சூழலியலின் அரசியல் பிரச்சினை விடயங்கள் பற்றிய அறிவைவிட இப்போது அதிகம். இந்த பிரச்சினை விடயங்களை ஒரு ஆரோக்கிய வழியில் முன்னெடுத்து செல்கிறோமா என்பது கேள்விக் குறியே. நிறைய நேரங்களில் நாம் இந்த முன்னெடுத்துச் செல்கையை நிராகரித்து விடுகிறோம். எனவே இதனைப் பற்றி விவாதிப்பதற்குரிய நேரத்தை நாம் அடைந்துவிட்டோம். ஏனெனில் எம்மைச் சுற்றி அபாயம் அதிகரித்துவிட்டது. சுற்றுச் சூழலின் கூறுகளின் அம்சங்களில் -ஒசோனில் ஓட்டை என்றும், பச்சை வீட்டு தாக்கம் என்றும், அணு உலைக் கசிவுகள் என்றும் அபாயம் அதிகரித்துவிட்டதாக தரவுகளோடும், ஆய்வுகளோடும் நியாயித்து நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உண்மையில், “அபாயம் அதிகரித்து விட்டது, அதற்கு ஒவ்வொருவரும் எதிர்வினை காட்டத்தான் வேண்டும்” என்பதை நாம் ஒரு கருதுகோளாக வைத்துக் கொள்வோம். இந்த அதிகரித்து வரும் அபாயத்திற்கு எதிர்வினை செய்வதற்கு முன், அதன் முன்னே இரு கேள்விகள் உதயமாகின்றன.

1) யாருக்கு அபாயம் காத்துக்கொண்டிருக்கிறது?
இந்தக் கேள்வி மேலும் இரு கூறுகளையுடையது,
1) மனித குலத்திற்கு மத்தியில் யாருக்கு அபாயம் காத்துக்கொண்டிருக்கிறது?
11) உயிர்வாழ் அங்கிகளுக்கு மத்தியில் யாருக்கு அபாயம் காத்துக் கொண்டிருக்கிறது?
2)அதிகரித்த அபாயம் என்ன கூறுகிறது? யாருக்கு அபாயம் காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறது?

இதில் முதலாவது கேள்வி, முதலாளி-தொழிலாளி, சுரண்டுவோர்-சுரண்டப்படுபவர் வகையான கேள்வியும், இரண்டாவது கேள்வி ஆழமான சூழலியல் சம்பந்தப்பட்ட கேள்வியுமாகும்.

இப்போது விடயத்திற்கு வருவோம். இந்த இரு கேள்விகளும் உதயமானது, முதலாளித்துவ மையவாத நாகரிக வளர்ச்சியின் அடிப்படை, இயற்கைப் பண்புகள், முதலாளித்து பொருளாதார உலகின் தொழிற்பாடுகள் போன்றவைகளே இந்;த வினாக்களுக்கான மூல காரணங்களாகும். இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு “யாருக்கு” என்று முன்பெழுந்த வினாக்களைப் பகுப்பாய்வோம். முதலாளித்துவத்திற்கு இரண்டு அடிப்படைப் பண்புகள் இருக்கின்றன. முதலாவது பண்பு, முதலாளித்துவமானது தனது ஏகாதிபத்திய தேவைகளின் நிமித்தம் அல்லது அதனை விருத்தி செய்வதற்காக மொத்த உற்பத்தியை கூட்டுதல் என்ற பெயரில் தங்களது முக்கியமான நோக்கத்தை அடைவதற்காக புவியியல் பரப்புக்கள் தாண்டி மூடிவற்ற மூலதனங்களைக் குவித்து வைத்தல். இரண்டாவது பண்பு, வரையறை இல்லாத மூலதனங்களாகும். முதலாளித்துவாதிகள், (குறிப்பாக பெரும் முதலாளித்துவவாதிகள்) தங்களது கணக்கு வழக்குகளைக் காட்டுவதில்லை. இது முதலாளித்துவத்தின் “ஊத்தை இரகசியம்” எனப்படும்.

இவ்வாறான வரையறையற்ற மூலதனத்தை குவித்து, உலக முதலாளித்துவத்தை முதலாளித்துவவாதிகள் விரித்து செல்வதற்கான உழைப்பிற்கு, நிலம் தேவைப்படுகின்றது. இங்கே அவர்கள் (சூழலைக் கருதாது) “இயற்கையை வெல்”, “எல்லாம் மனிதருக்காக” என்ற தாரக மந்திரங்களை உருவாக்கி நிலத்தை சுரண்டோ சுரண்டென்று சுரண்டி தங்களது பரந்த ஏகாதிபத்தியத்திற் தேவைகளுக்கான உற்பத்தியைக் கூட்டுகிறார்கள். மேலே கூறிய தாரக மந்திரங்கள் 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்த முதலாளித்துவ உலக பொருளாதாரத்திற்கு பின்னர் உருவானவைகள்தான். அன்று இதற்கெதிராக கிளம்பிய சமூக எதிர்ப்புக்களையும், கிளர்ச்சிகளையும் அன்றிருந்தே முதலாளித்துவவாதிகள், அடக்கியும், மழுங்கடித்தும் வந்திருக்கின்றார்கள்.

முதலாளித்துவவாதிகளுக்கான வரையறையற்ற மூலதனங்களைக் குவிக்கும், முதலாளித்துவவாதிகளின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கும், இந்த வரலாற்று முதலாளித்துவத்தின், சுற்றுச்சூழற் பிரச்சினை பதினேழாம் நூற்றாண்டில் ஏற்படத் தொடங்கியது. அன்று அயர்லாந்தின் மரங்களை முற்று முழுதாக வெட்டிச் சாய்த்துவிட்டு, இன்று லத்தீன் அமரிக்க நாடுகளின் அமேசன் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று முதலாளித்துவம் கூறுகிறது. முதலாளித்துவத்திற்கு புகார் (ளஅழப) என்பது 50 வருடங்களுக்கு முன்பு ஒரு புதுச்சொல்லாக லொஸ்ஏன்ஜல்சில் இருந்தது. இன்று பாரிஸ், ஏதென்ஸ் எல்லாம் தாண்டி, முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சியுடன், பல எல்லைகளையும் தாண்டி புகாரானது (ளஅழப) எங்கும் பரந்து விரவி, கிழக்கு, தென்கிழக்கு ஆசியா வரை வந்து விட்டது.

ஜனநாயமாதலும் அல்லது அதிக ஜனநாயகம் கூட சுற்றுச் சூழல் சிதைவுக்கு ஒரு காரணமாக இன்று கருதப்படுகின்றது. மக்களின் ஆடம்பர, சொகுசு, உல்லாசத் தேவைகள் அதிகரிக்க, அதற்காக அவர்கள் குரல் எழுப்புவார்கள். உடனே அவர்களின் தேவையை நிவர்த்தி செய்ய அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் காற்று, நீர், நிலம், போன்றவை மாசடையும். அத்தோடு இந்த அதிகரித்த உல்லாச, சுகபோகப் பொருட்களின் உற்பத்திக்குப் பின்னால் பெருந்தொகையான பாதுகாக்கப்பட வேண்டிய உள்நாட்டுக்குரிய மரங்களும், விலங்குகளும் (உ-ம்: காண்டாமிருகம், யானை- கொம்புகளுக்காக, பாம்புகள,;புலி போன்ற பூனையினங்கள் - தோல்களுக்காக), அவைகள் சார்ந்து வாழும் சுற்றாடலும் சிதைக்கப்படுதல் (உ-ம்: மரங்கள் இல்லாவிட்டால் மழை கிடைக்காது அத்துடன் மண்ணரிமானமும் ஏற்படும். ஓரு விலங்கின் எண்ணிக்கை திடிரெனக் குறைதல் இயற்கைச் சமனிலையை குழப்பி இறுதியில் எல்லாவிலங்கின் அழிவுக்கும் காரணமாகும்) என்பது மிகப் பெரிய சோகமாகும்.

முதலாளித்துவவாதிகளின் நோக்கில் அதிகரித்த உற்பத்தி என்பது இலாபத்தை அதிகரிப்பதற்காக. இலாபம் என்பது விற்பனை விலைக்கும், மொத்த உற்பத்திக்கும், செலவுக்கும் இடையே தனியே இயங்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ உலக பொருளாதாரத்தின் வரலாற்றின் தொழிற்படையினருக்கான பேரம் பேசும் சக்தி அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றது. அதிகரித்த உற்பத்தி தேவை காரணமாகவும், இலாப நோக்கம் கருதியும், குறைந்த விலையில் ஊழியர்கள் தேவைப்பட்டனர். இதனால் முதலாளித்துவம் பசப்பு வார்த்தை காட்டி கிராமப் புறங்களிலிருந்த, கிராமிய உணவுற்பத்திசார்ந்த விவசாய முயற்சிகளில் வெற்றிகரமாக பல நூற்றுக் கணக்கான தொழிலாளர் படைகளை குறைந்;த ஊதியத்திற்கு நகரங்களை நோக்கி நகரச் செய்தன. இதன் காரணமாக கிராமியப் பிறழ்வு ஏற்பட்டது. நகரத்து வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் சென்றவர்களுக்கு முதலாளித்துவம் குறைந்த ஊதியம் கொடுத்து, அத் தொழிலாளர்படைகளை நட்டாற்றில் கைவிட்டது. பின்னர் அவர்களை சேரிப்புறங்களில் தள்ளிவிட்டது. அதிகரித்த சேரிச் சனத்தொகையினரே இன்றைய பெரும் நகரங்களில் சுற்றுச்சூழல் மாசடைதலுக்கு பிரதான காரணிகளும் மிகவும் ஒன்றாக இருக்கிறார்கள். இந்த சேரிப்புறங்களால் நீர், நிலம், வளி, சத்தம் போன்ற மாசுகள் ஏற்பட்டது முதலாளித்துவத்தின் கைவரிசைதான் என்றால் அது மிகையாகாது.

இன்று சூழலியல் ஒரு தீவிரமான அரசியல் போக்காக உலகின் பலபாகங்களில் மாறிக்கொண்டிருக்கின்றது. சூழலைப் பாதுகாப்போம் என்ற மையவாதக் கருத்தைச் சுற்றி பல அரசியல் இயக்கங்கள் சூழல் அழிவைத்தடுப்பதற்கும், நல்ல சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் களத்தில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றன. இன்று எமது நாட்டில் அல்லது எமது பிரதேசங்களில் இவ்வாறான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் அல்லது இவ்வாறான சூழலியல்-அரசியல் போக்கை முன்னெடுத்துச் செல்வதில் எமது பங்கு என்ன என்று ஒவ்வொருவரும் தங்களைப் பார்த்துக் கேட்டுக்கொள்வதும், அதற்கான நடவடிக்கையில் காலம் தாழ்த்தாது இறங்குவதும் மிகவும் முக்கியமானதும், அவசியமானதுமான ஒன்றாக இருக்கிறது.

முதலாளித்துவ சூழலியல்


முதலாளித்துவ-சூழலியற் சிக்கல்

ழுமைழள (வீடு அல்லது வாழ்வதற்கான இடம்), டுழபழள (கற்றல்) என்னும் கிரேக்க சொற்களிலிருந்து தோன்றியது நுஉழடழபல என்னும் சூழலியல். இதிலிருந்து சூழலியல் எனப்படுவது உயிரினங்களை அவற்றின் வாழிடங்களில் கற்றல் எனலாம். அதாவது சுற்றுச் சூழலிருக்கும் உயிரற்ற, உயிருள்ள கூறுகளையும், கற்கும் கற்கையாகும். ஜேர்மனைச் சேர்ந்த ர்யnளெ சுநவைநசஇ 1885இல் சூழலியல் என்னும் பதத்தை உபயோகித்தார். 1869களில் ஒரு உயிரினத்தின் சேதன, அசேதன சூழல்களுக்கிடையிலான உறவுகளைக் கற்றல் சூழலியல் என நுயசநௌவ ர்யஉமநட வரைவிலக்கணப்படுத்தினார். 1963இல் Eugene Odum , இயற்கையின் அமைப்பையும், தொழிற்பாட்டையும் பற்றிய கற்கை என வரைவிலக்கணப்படுத்தினார். இந்த வரைவிலக்கணமே இன்று மிகவும் பெரிதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. பின்னர் இந்தச் சூழலியல் ஒரு வகையில் தற்சூழலியல், ஒன்றிய சூழலியல் என இருவகையாக அணுகப்படும். பின்னர் சாகியம், சமுதாயம், உயிர்க்கோளம் எனப் பல்வேறு மட்டங்களில் உயிருள்ள, உயிரற்ற கூறுகள் ஆராயப்படும்.

பொருளாதார முறைகள் எனப்படும்போது, ஆண்டு-10 சமூகக் கல்விப் பாடத்தில் தொடங்கி, பல்கலைக்கழகம் வரை, அவைகள் மூன்று வகைப்படும், அவையாவன முதலாளிததுவப் பொருளாதார முறை, சோசலிசப் பொருளாதார முறை, கலப்புப் பொருளாதார முறை எனப் போதிக்கப்படுவகின்றன.

எல்லாச் சமூகமும் எல்லாப் பொருளாதார ஒழுங்கமைப்புக்களும் எதிர்நோக்குகின்ற அடிப்படைப் பொருளாதார பிரச்சினைகள் பொதுவானவையாகவும், அவ்வடிப்படைப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் (அருமைத்தன்மை (ளஉயசஉவைல) பொதுவானதாகவும் காணப்படுகின்றது. ஆயினும் ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வுகளின் அடிப்படையிலேயே பொருளாதார அமைப்புக்கள் தோற்றம் பெறுகின்றன. அல்லது அவற்றை அடையாளம் காண முடிகின்றது. பொருளாதார முறை என்பது ஒரு சமூகமானது தனது பொருளாதார நடவடிக்கைகளான உற்பத்தி, நுகர்வு, பங்கீடு போன்றவற்றை எந்த அடிப்படையில் ஒடுங்குபடுத்தியுள்ளது என்பதை விளக்கி நிற்கின்றது.

இனி முதலாளித்துவப் பொருளாதாரத்தை நோக்குவோம். பொதுவாக முதலாளித்துவப் பொருளாதாரம் ஒன்றின் நடத்தையை மூன்று முக்கிய மான உரிமைகள் தீர்மானிக்கின்றன. அவையாவன சொத்துரிமை, பொருளாதார உரிமை, உற்பத்தி உரிமை, அதாவது தனியுடமையாளர் தடையற்ற விதத்தில் தாம் விரும்பிய அளவு சொத்துடமைகளைக் கொண்டு, தான் விரும்பிய தொழிலை ஆரம்பிப்பதற்கும், அதன் வழியாக எத்தொழிலிலும் தான் விரும்பிய அளவு பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உரிய சுதந்திர முயற்சியை இவ்வுரிமைகள் குறிக்கின்றன.

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பினை சந்தைப் பொருளாதாரம், சுதந்திர முயற்சிப் பொருளாதாரம் என்றும் அழைப்பர். இப் பொருளாதார அமைப்பில்; உற்பத்திக் கரணிகள் தனியாருக்கு சொந்தமானவையாக உள்ளன. இவ்வுற்பத்திக் காரணிகளை தனியார் தமது விருப்பப்படி பயனப்படுத்தலாம். இலாப நோக்கத்தினை அடிப்படையாக வைத்தே இங்கு சொத்துடமையாளர்கள் தொழிற்படுகின்றனர். என்ன பொருளை உற்பத்தி செய்வது? எவ்வாறு உற்பத்தி செய்வது? யாருக்கிடையே பங்கிடுவது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விலை முறையே தீர்வு காண்கின்றது. சகல முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்களிலும் இன்று சில கட்டுப்பாடுகள் அரசாங்கத்தினால் பொது நலன் கருதி விதிக்கப்படுகின்றன. எனினும் இத்தகைய கட்டுப்பாடுகள் தனியார் விரும்பிய தொழிலை தொடங்குவதையோ இலாப நோக்கத்தின் அடிப்படையில் இன்னொருவருடன் சேர்ந்து ஒப்பந்தங்களை மேற்கொள்ளுவதையோ தடை செய்வதில்லை.

இங்கிருந்து முதலாளித்துவ சூழலியற் சிக்கலை நோக்குவோம். இலாப நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு சூழிலயல் பற்றிய அக்கறை ஒரு போதும் கிடையாது. ஆனால் கடுமையான எதிர்ப்புக் கிளம்பும்போது முதலாளிததுவம் தனக்கும் சூழல்மீது அக்கறை இருப்பதாக பம்மாத்துக் காட்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டை கைத்தொழிற் புரட்சியின் பொற்காலம் எனலாம். கிடைக்கக்கூடிய அனைத்து மூலப் பொருட்களையும் உபயோகித்து, உற்பத்தி செய்த பொருட்களை அடுக்கி வைத்து, புதிய வளங்களையும், புதிய சந்தைகளையும், கண்டு பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தி;ற்கு முதலாளித்துவம் தள்ளப்பட்டது. அமரிக்கா, அமரிக்கக் கண்டத்தையும், ஐரோப்பிய முதலாளித்துவம் ஆபிரிக்கக் கண்டத்தையும் சுரண்டுவதற்கு தங்களுக்குள் பிரித்துக் கொண்டன. இவர்கள் தங்களது சொந்தப் கருத்துக்கள் மற்றும் நடைமுறை கலாச்சாரங்களையும் சுதேசிகளின் மீது திணித்து அவர்களின் வேர்களை சிதைப்பதிலும் குறியாயிருந்தார்கள். அந்தச் சுதேசிகளின் மீதான இயற்கைச் சுரண்டல்களும், இயற்கையை அழித்து மேற்கொண்டு உட்கட்டமைப்புக்கள் (வீதிகள், கால்வாய்கள், அணைக்கட்டுக்கள், பாலங்கள், கட்டடங்கள் போன்றன) போன்றவற்றினூடும் முதலாளித்துவ-சூழலியற் சிக்கலின் கடுரத் தன்மை வெளியே தெரியத் தொடங்கியது. காலம் காலமாக இயற்கையோடு இணைந்திருந்த பயிர் முறைகளை காலனித்துவம் அடியோடு ஒழித்தது. காலனியவாதிகள் அந்த இடத்தினை பணப்பயிர்களினால் மாற்றீடு செய்து கொண்டார்கள். கலப்புப் பயிர் முறைகளும், ஓரினப் பயிரினால் மாற்றீடு செய்யப்பட்டது. முதலாளித்துவவாதிகளின் சூழலின் மீதான சுரண்டற் போக்கினால் சுதேசிகளின் கிராமங்களின் தீவிர உணவுப் பிரச்சினைகள் ஏற்பட்டன. மக்கள் மேலும் மேலும் வறுமைநிலைக்கு உள்ளாகத் தொடங்கினார்கள்.

உலகப் போர்களுக்குப் பிந்தைய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, வரையறையற்ற தொழில்நுட்பத்திற்கும், வரையறையற்ற உற்பத்திக்கும், ஏகபோக நுகர்தலுக்கும் கால்கோளாக அமைந்தது. இதனால் அந்த முதலாளித்துவ நாடுகளே பாதிக்கப்பட்டன. (கிழக்கு ஐரோப்பிய கம்யூனிசநாடுகளும் இதேமாதிரி பாதிக்கப்பட்டன. அதனைப் பின்னர் பார்ப்போம்). முதலாளித்துவம் சுற்றுச் சூழலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. சூழலை என்றுமே அள்ளக் குறையாத பாத்திரமாகக் கருதியது. சூழலியற் பிரச்சினைகளை ஒரு சிறிய பிரச்சினையாகக் கூட அவர்கள் கருதவில்லை.

இன்றைய முதலாளித்துவத்தின் சிக்கல், சூழலியற் சிக்கலின் ஒரு பகுதியே. முதலாளித்துவம் தனது அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால் அல்லது தொழில்நுட்பவெறியினால் (technofascism) இறுமாப்புடன் இயற்கையை அலட்சியம் செய்தது. இன்று அதனால் ஏற்பட்ட சூழலியற் சிக்கலுக்கான விலையை முதலாளித்துவத்துடன் இணைந்து எல்லோரும், அமில மழையாய், அணுஉலைக் கசிவாய், ஓசோன் ஓட்டையாய், எல்-நினோவாய், லா-நினோவாய் விலை கொடுக்கவேண்டியுள்ளது.

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...