Saturday, October 8, 2011

உயிர் தொழிநுட்பவியல் ஏகாதிபத்தியவாதம்-02

விதைநெல்லில் மழுங்கடிக்கப்பட்ட பரம்பரையலகு.

இலங்கை பரம்பரை பரம்பரையாக ஒரு விவசாய நாடு. வடமத்திய மகாணத்தில் காணப்படும் பாரம்பரிய குளங்கள் இதற்குச் சான்று. நம் அரசர்கள் இக் குளங்களைக் கட்டுவித்து நெற்செய்கையை ஊக்குவித்து வந்தனர். நம் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். நெற்செய்கை அவர்களுக்கு கைவந்த கலையாகும். நமக்கு என்றொரு பயிர்ச்செய்கைக் கலாச்சாரத்தை உள்ளடக்கிய மரபு வழி விவசாய சமூகத்தினர் நாம் என்பதில் பெருமையடைகின்றோம். ஆனால் இன்றைய உலகை ஆட்டிப்படைக்கும் நவீன தொழில்நுட்பம் நம் விவசாய நடவடிக்கைகளிலும் தலையைப் போட்டு குழப்பத் தொடங்கியுள்ளது.

பண்டைய காலம் தொட்டே இரங்கை ஒரு பூர்வீக விவசாய நாடாக இருந்து வந்தள்ளது. இதற்கு இலங்கையின் பல பாகங்களிலும் குளங்கள் இதற்கு சான்றுகளாகும். உலகிலேயே ஒரு சதுர கிலோமீற்றருக்கு காணப்படும் குளங்களின் அடர்த்தி கூடிய நாடு இலங்கையாகும். இந்தக் குளங்களை பல சிங்கள, தமிழ் அரசர்கள் கட்டுவித்து, விவசாயத்திற்கு அதிலும் குறிப்பாக நெற்செய்கையை ஊக்குவித்தனர். இலங்கையில் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தில் வல்லமையுள்ளவர்கள். அதிலும் மரபுவழி, கலாச்சார, பாரம்பரிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய முறைகளை கையாண்டு வெற்றிகண்டவர்கள். பண்டைய இலங்கையிலுள்ள குளக்கட்டுமான, நீர்ப்பாசன, சேதனப் பசளையை நம்பிய விவசாய முறைகள் இன்றும் மேற்கத்தைய விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாகவே இருக்கின்றது. இருந்தும் இன்றைய நவீன தொழில்நுட்ப எகாதிபத்தியவாதம் நமது பண்டைய விவசாய முறைகளைச் சிதைப்பதில் குறியாயிருக்கின்றது.

நமது முன்னோரான விவசாயிகள் தமக்கு வேண்டிய விதை நெல்லை தமது வயல்களிலிருந்து பெற்ற அறுவடைகளிலிருந்து கணிசமான ஒரு பகுதியைச் சேமித்து விதையாகப் பயன்படுத்தி, நோய், பீடைத் தாக்கங்களிலிருந்து இயற்கையான பாதுகாப்பை பெற்று, நல்ல செழிப்பான அறுவடைகளைப் பெற்றார்கள்.

1950-60 களில் அதிக விளைச்சலைத் தரும் நெல்லினங்கள் என்று கூறிக் கொண்டு வெளிநாடுகளிலிருந்து புது நெல்விதையினங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. கூடவே விளைச்சலை அதகரிப்பதற்கான இரசாயனப் பசளைகளும் அந்நாடுகளிடமிருந்தே வாங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குறுகிய கால நெல்லினமொன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இருபோக நெற்செய்கை முப்போகமாக அதிகரித்தது. பல்லினப் பயிர்ச்செய்கை விடுத்து ஓரினப் பயிர்ச் செய்கையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக அதிக விளைச்சல்கள் கிடைத்தாலும், நோய் கிருமிகளினதும், பீடைகளினதும் தாக்கம் அதிகரித்தது. மிகவும் விரைவாகப் பல்கிப் பெருகிய கிருமிகளையும், பீடைகளையும் அழிப்பதற்கு இரசாயனக் கொல்லிகளை வகை தொகையாக இறக்குமதி செய்து கண்-மண் தெரியாமல் பிரயோகித்து பீடைகளும், கிருமிகளும் ஒழிந்ததாக சந்தோசம் கொண்டார்கள்.
                                      **

ஒரு அங்கியின் விருத்திக்கும், தொழிற்பாட்டுக்கும், கட்டமைப்புக்கும், அதன் கலத்தின, கருவின், நிறமூர்த்தத்தில் காணப்படும் பல்லாயிரக்கணக்கான பரமப்பரையலகுகள் காரணமாகும். இந்தப் பரம்பரையலகுகளே ஒரு அங்கியின் தோற்றவமைப்பiயும், பரம்பரையமைப்பையும் தீர்டமானிக்கின்றன. மேற்கத்தைய நாடுகளின் ஆதரவில், சில விவசாயக் கம்பனிகள் நிறைய விதைகளை உருவாக்கியுள்ளன. அவ்றிறல் முக்கியமானது, இந்தியத துணைக் கண்ணடத்தினதும், தென்கிழக்காசிய, சீன, ஜப்பான் நாடுகளினதும் பிரதான உணவுப் பொருளான நெல்லாகும். ஒழத்துக் கட்டும் முயற்சியில்மi அணுகுண்டுகளை வைத்துச் சோதனை செய்த ஏகாதிபத்திதயவாதம்ம அன்று அணுக்கு;ணடுகளை விடுத்தது நெல்லில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கியயுள்ளது.

இன்று மழுங்கடிக்கப்பட்ட பாலுக்குரியதா பரம்பரையலகைக் கெர்ணடு;ளள விதை நெல்ல அன்று பாவனைக்கு விடப்பட்டடுள்ளன. இந்த விதைகள் முளைத்து பியராக வளர்ந்து, அறுவடை செய்யும் போது, அந்த விதைகளை உணவிற்காக மதாத்திரமே பயன்படுத்த முடியும். அவற்றை விதை நெல்லாக்ப பயன்படுத்தித மீண்டம் பியர்ச் செ;யiகியல் மேற் கொள் முடியாது. ஏnனினல் அந்த விதைக்குள்ள மிகவும் வீரியமான டமலட்டுத் த்னமை புகுத்தப்பட்டுள்ளதுர். இதனால் இலங்கை போன்ற நாடுகிளலு;ளள் விவசாயிகள் ஒ;வவொரு முறையும் நடுகைக்காக வெளிநாட்டு புதிய பல வகை நெல் விதையினங்களையே நம்பியிருக்க வே;ணடிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இந்தக் கதைகளை உற்பத்தி செ;யம் நாடுகள். தங்கள் நாடுகிளல் இதனை பயன்படுத்த விரும்புவதில்லை. அபிவிருத்திதயடைந்த நாடுகளோ இநத் விதைகளைப் பயனபடுத்துவதை புத்திதசாதுரியமாக தவிர்த்துவிடுகின்றன.

இந்த மலட்டுத் த்னமையான விதைகளை;ப பாவிக்கும் போது, காலநிலை, நோய், பீடைத் தாக்கம் போன்ற காரணிகளால் அறுவடை பாதிக்கும் நிலைமை ஏற்படலாம். இதனால் விவசாயியின் வருடமானம் குறைந்து, கடனாளியாகும் நிலை ஏற்படும். இதனால் அடுத்த போகத்துக்குரிய நெல்லை வாங்குவதற்குதரிய பணத்திற்கு அவன் திண்டாடி, அடுத்த போக நெற்செ;யகையை அவன் கைவிடுவான்.
இந்த மழுங்கடிக்ப்பட்டட விதை நெல்லை பயிரிட ஊக்கப்படுத்தும், ஆய்வாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பின்னால்ம இலாபத்தை மையம் கெர்ணட பொருளாதார நோக்கு இருக்கிறதே தவிர வேறnhன்றுமில்லை. அந்த விதைகளை ஏற்ப மறுக்கும நாடுகளுக்கு அதிக விளைச்சலை கொடுக்கும், வேறு தொழில்நுட்பங்களையும், வேறு உதவிகளையும் வழங்குவதற்கு மேற்கத்தைய நாடுகளும், நிறுவனங்களும் மறுக்கின்றன.

இன்று இலங்கையில் பல்தேசியக் கம்பனிகன் தமது சுயநலத்திற்காக பெரு;நதொகையான பணத்தை முதலீடு செ;யது இவ்வாறான நடவடிக்கைகளில் நாம் கூடிய விளைச்சலையும், அத்துடன் அவற்றின் பரம்பரையியலைப் பாதுகாக்கவும் (Genetical Conservation) முடியும். இதன் மூலம் எமது நாட்டடுக்குரிய நெல்ல அனங்களைப் பே மூடியும். இல்லையேல் வரும் காலங்கிழளல்ம நமது பாலரம்பரிழய விவசாய நடவடிக்கைகளே தடங்கல் அடைய நேரிடும்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...