Saturday, October 8, 2011

செருப்பு


-அம்ரிதா ஏயெம்-

காலமென்றால் யாதோவென்று தெரியாத ஒரு காலத்தில் காலமே ஒரு காலத்தில், எப்போதோ, எதற்கோ, என்றைக்கோ என்று நிர்ணயிக்க முடியாத காலங்களின் துளிகளில், எதுவுமே இல்லாதிருந்த ஒரு காலத் தூறலில், எல்லாமும் எல்லாம்தான் என்று ஒரு புள்ளிக்குள் அடங்கியிருந்த காலத்தில், வருசம், மாதம், வாரம், நாள், மணி, நிமிடம்,, செகண்ட், இரவு, பகல், முதுவேனில், இளவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி, எதுவுமில்லாமல் உறைந்து கிடந்த காலத்தில் இச்சை, கிரியா, ஞானம் கொண்டு சிருஸ்டி துவங்கியதற்கு முன் ஒரு செக்கனை நாற்பத்தி மூன்று சைபர் வரும் எண்ணின் அடுக்கில் அல்லது பங்கில் உள்ள நேரத்தின் முதல் மணித் துகளின் ரென்சன், பரபரப்பு அப்போது இருந்தது. XY குறிகள் இயங்கின. நீர்கள் பாய்ந்தன. தேடுதல்கள் நடந்தன. செருப்பின் பட்டிகள் அல்லது வார்கள் மாதிரி இருபத்து மூன்று நிறமூர்த்தங்கள் தேடுடியதினுள்ளும் தேடப்பட்டவைகளினுள்ளும் இருந்தன. நூறு கோடிகள் சேர்ந்து தேடப்படும் ஒன்றைத் தேடின. ஓன்றுக்கு கோடிகளா? ஐயோ கடவுளே!. போட்டி. போட்டா போட்டி. மகா போட்டி. போட்டிகளால் வேள்வி செய்த போட்டிகளின் போட்டி. மூலக்கூற்று உயிரியல் நிலையில் தொடங்கிவிட்டிருந்தன. ஓன்று மட்டும் வெற்றி பெற மற்றவைகள் தாடி வைத்து திரும்பி வந்தன. இங்கு ஏமாற்றங்களும் தொடங்கிவிட்டிருந்தன. ஆசை, போட்டி, ஏமாற்றம் மூன்றும் சேர்ந்து சிதைவு. இங்கே சிதைவுகளும் தொடங்கிவிட்டிருந்தன. XX என்பது எக்ஸ். எக்ஸ் என்பது தெரியாப் பெறுமானம் சந்தேகம், சிக்கல், தீர்க்க முடியாதது, கருமை, இல்லை, அழிவு, Y என்பது வை. X என்பது ஆம், உண்டு, அடங்குதல், தலையாட்டுதல். தேடுபவையில் X உம் லு உம் இருந்தன. தேடப்படுபவைகளியில் ஓ உம் ஓ உம் இருந்தன. தேடிச் சேர்நது XY என்றால் “ஆன்” உம், XX என்றால் “ஆள்” ஆகும். முன்னையது ஏன் அழிவு? எனக்கேது அழிவு. பின்னையது அழிவு. அழிவு. அழிவு. அழிவுதான் என்பது.

தேடிச் சேரப்போய்ச் சேரப் போகும் நேரத்திற்கு முன்னேயுள்ள கணம். வயதுகள் சென்றன. XY இற்கு கமக்கட்டு. பூப்புகளில் உரோமங்கள் வளர்ந்தன.. குறிகள் பெருத்தன. தாயென்றும், தங்கையென்றம், அக்காவென்றும், அண்ணியென்றும் பாராமல் குறிகள் விறைத்தன. பஸ்களில் குறிகள் பிட்டத்தில் தேய்த்தன. தேய்ந்தன. மீண்டும் விறைத்தன. எழுந்தன. இயங்கின. குறிகள் பெருத்து வளர்ந்து வீதியால் வரும், போகும் XX  களை வாயில் பல் முளைத்த விலாங்குகளாய் ஊர்ந்து கொத்திக் கடித்து துப்ப உதறி ஒடின.

XX  இன்னும் வளரவில்லை. நாளைதான் அரும்பப் போகும் கன்னி மொட்டுக்கு மூன்று நாளைக்கு முன்னான பிஞ்சுப் பருவம். தாயை வெளிநாடு அனுப்பிய தகப்பன் குறி ஒழிக்க மகள் தேடி, குறி கிழித்தான் இரத்தமும் கண்ணீரும் வெள்ளமாக நீந்தி ஓஓ வளரத் தொடங்கினாள். தந்தையென்றும், சிற்றப்பனென்றும், மாமாவென்றும் பாராமல் போட்டி போட்டுக் கொண்டு குறி கிழிக்கத் தொடங்கினார்கள். பஸ்களின் நெருக்கத்தில் பிட்டத்தில் குறியால் அழுத்தினார்கள். கணங்களுடனும் அவளின் சிதைவுகள் தொடர்ந்தன. திருமண பந்தத்தில் நுழைந்தார்கள். நெருக்கித் தள்ளி யாதையும் சுயநலமாய் முடித்தனர். காலை, மாலை, பகல், இரவு, பாத்திரங்களை தேய்த்துக் கழுவியதுடன், சமையல்காரி, சலவைக்காரி, தாதி, விபச்சாரி, பிள்ளை மெசின், உற்பத்தி-நுகர்வுச் சந்தை பாத்திரங்களையும் மாற்றவைத்தார்கள். சமையற் பாத்திரங்களோடு பாத்திரங்களாய் மேற் சொன்ன பாத்திரங்களாயும் இருந்தாள். அவைகளுக்குள் தொலைத்ததால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

குறிகள் பற்றிய உப கதை: குறிகளின் பயன்கள் யாவை? குறிப்பாக பெண்குறியின் பயன்கள்; யாவை?. வாழைப் பொத்தி புகுத்தி, பின்னர் செத்தல்மிளகாய் கலந்து வறுத்த தூள்களைபுகுத்தி போடும் இடமாகவும், சொக்ஸ்களால் கண்களை கட்டி ஐந்து நிமிடத்திற்கு 32 பேர்களின் குறிகளை ஒழித்து வைக்கும் இடமாகவும் பாவிக்கலாம் என்று என வகுப்பாசிரியர் கேட்ட கேள்விக்கு ஒரு மாணவன் பதில் எழுதினான். இந்த பதி;ல்களைக் கண்ட பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு வாழைப் பொத்தியையம், மிளகாய்த் தூiளையும், குறிகளையும் பற்றி 3200 தரம் எழுதி எதையோ எழுப்பிக் கொண்டன. அதை வாசித்த 3200 வாசகர்களில் 3198 பேரின் குறிகள் மட்டும்தான் விறைத்தன. மீதி இரண்டு பேரின் குறிகள் விறைக்கவில்லை. அதன் காரணத்தை கண்டுபிடிக்க முருங்கை மரம்மீதிருந்த வேதாளம் கீழிறங்கி வந்து விக்கிரமாதித்ய மன்னனிடம், மீதி இரண்டு பேரின் குறிகள் ஏன் விறைக்கவில்லை என்ற காரணத்தை நீ அறிந்தாலும் பரவாயில்லை அறியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்குரிய விடையைச் சொல்லாவிட்டால்,

01) நீ தேசவிடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவன் என மாணவர்களைக் கொண்டு சாட்டுதல் செய்து உன்னைத் துரோகியாக்கிவிடுவேன்.
அல்லது
02) நீ தேசவிடுதலைப் போராட்டத்திற்கு சார்பானவன் என சீருடையாளர்களுக்கு காட்டிக் கொடுத்து உன்னை மாட்டிவிட உன் பேரில் நகரெங்கும் போஸ்டர் அடிப்பேன்.
அல்லது
03) மீடியாக் காரர்களெல்லாம் எனது கைகளில், நான் என்ன நியுஸ் கொடுத்தாலும் விசாரித்து பார்க்காது அதைப் போட்டி போட்டுக் கொண்டு போட்டு தங்களை நோபல் பரிசுக்குரியளவு உயர்த்துவதில் அவர்கள் வல்லவர்கள். அவர்களிடம் உனக்கு இரட்டைக் குறி இருப்பதாக ஒரு கதையைக் கட்டிவிடுவேன்.
அல்லது.
04) உனது குடும்பத்தின் குறிகள் பற்றி பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து தம்பட்டம் அடிப்பேன்.
அல்லது
05) உன் தலை ஆயிரம் துண்டுகளா வெடித்துச் சிதறும்.

இந்த உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அதிராத விக்கிரமாதித்யன், சற்று கிட்ட நெருங்கி யாருக்கும் கேட்காவண்ணம் வேதாளத்தின் காதுகளில் பதிலைச் சொன்னான். எனவே வாசகர்களே, எனக்கு விக்கிரமாதித்யன் சொன்ன பதில்கள் எனது காதில் விழமுடியாத தூரத்தில் நான் நின்றபடியாலும், விளங்கவில்லையாததாலும், உங்களிடமே போட்டிக்கு விட்டுவிடுகின்றோம். உங்களது பதில்கள் எதிர்வரும் ஒரு கிழமைக்குள் எங்களது வாந்தி அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தபால் அட்டையில் வேதாளம் என்ன சொல்லியிருக்கும் போட்டி என்று குறிப்பிட மறக்க வேண்டாம். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக விமான நிலையத்திலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்படும் நடிகையின் காலைச் சுமக்கும் செருப்புடன் போட்டோ எடுத்தலும், தலையில் செருப்;புக்களைத் தூக்கி வைத்திருத்தலும். இரண்டாவது பரிசு- அந்த நடிகையின் பையைத் தூக்கித் திரிதல். மூன்றாவது பரிசு- அந்த நடிகையின் நாய்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளல்

XX  ஐத் தேடினேன். அவளின் இருத்தலை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளின் இருத்தலுக்கான கடந்த காலத்தின் அடையாளத்தின் அரி துகள்களை கூடக் காண முடியவில்லை. அவள் பாத்திதரங்களாய் மாறிக் கொணடேயிருந்தாள்.

XX  ஐக் கண்டேன். அழிவு அழிவைக் கண்டேன். அழிவு அழிவுதானைக் கண்டேன். கதலி வாழை மடலை றோட்டு போடும் சல்லிக் கற்களை நசுக்கும் கல்லூண்டி மெசினால் நசுக்குப்பட்டதுபோல் சாறுபோய், வற்றிய, நபரான பருவத்தில் கண்டேன். அப்போது XX  இன் ஆடைகள் பறந்தன. நிர்வாணமானாள். ஆண்டாண்டு காலமாய் மழை காணாது வறட்சியால் குளம் பொருக்கு பொருக்காய் தொடர்ச்சியாக தலையிலிருந்து கழுத்திற்கும,; பின் மார்பு, வயிறு குறி, தொடை, கால், பாதம், வரை வெடித்தல்கள் தொடர்ந்தன. பார்க்க விகாரமாய் இருந்தன. பின் வெடிப்புக்கள் சீழ் கட்டி அழுகத் தொடங்கின. பின் அழுகியவைகள் உருகி, கீழே ஊனாய் வடிந்தன. இப்போது எலும்புக்கூடு மட்டும் நின்றது. எலும்புக் கூட்டில் நிறையத் துவாரங்கள்;, இடைவெளிகள் இருந்தன. நவ துவாரங்களிற்குப் பதிதலாக. நெஞ்சுக் கூட்டுக்குள், இதயத்திற்குப் பதில் பளிங்காய் சிவப்பும், பச்சையும், நீலமும் கலந்து, இரத்தினமாய் ஏதோ ஒளி வீசியது.

அதை எடுத்தேன். தொட்டதும் குளிர்மையின் அமைதி என்னில் பரவியது. அதை எடுத்துக் கொண்டு அப்படியே ஓலு ஏன் அழிவிடம் போனேன். அவன் குறி தரையில் விழுந்து விலாங்கு மீனாகி போகும் வரும் பெண்களை துரத்திக் கொண்டிருந்தது. பளிங்கு விலாங்கைக் கண்டதும் செருப்பாகியது. என் கையில் இப்போது செருப்பு. இப்போது எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தது. விலாங்கின் தலையில் செருப்பால் ஒரு சாத்து சாத்தினேன். விலாங்கு நிறம் மாறி சுருங்கி அரைக்குள் ஒழித்துக் கொண்டது. ஓலு அமைதியாகி அவன் பாட்டில் சென்று விட்டான். செருப்பு பளிங்காகி, சிவப்பும், பச்சையும் நீலமும் கலந்த இரத்தினமாகி; வானை நோக்கி ஒளித் துணிக்கைகளை கோடுகளாக சிந்தி போய்விட்டது. சாசுவதமாக தங்குவதற்கு போய் விட்டது.
                                                **

அப்போதுதான் வாகனம் நின்றது. வாகனத்திலிருந்து இறங்குவதற்கு மிதி பலகையில் கால் வைத்தவாறு வெளியே மேற்குப் பக்கம் பார்த்தேன். பெரிய இரு ஆல மரங்கள.; அப்போதுதான் வளர்ந்து துளிர்விடத் தொடங்கிய வேப்பங் கன்றுகள். மஞ்சோணா மரங்கள். அதனைத் தொடர்ந்து பரந்த அறுகம்புல் முளைத்த நிலங்கள். ஆல மரத்தில் மைனாக்கள் பேசின. கிளிகள் கத்தின. புறாக்கள் அகவின. கரிக்குருவிகள் வேப்பங் கன்றுகளில் தங்க, அவைகள் இவைகளின் பாரத்தை தாங்காமல்; வளைய, சத்தம் போட்டு பறந்தன. வண்ணத்துக் பூச்சிகள் ஒரு வேளை ரௌனி கோஸ்ரராக்கும்- திரள் திரளாய் பறந்து திரிந்தன. சில்லூரிகள் கத்தின. மனித சஞ்சாரங்களின் பிரக்ஞையையே உணரமுடியவில்லை. தென்றல் ஊவென்று வீசி என்மேல் பட்டது. அமைதியான நிசப்தத்தின் பேய்த் தனிமையின் நடுப்பகலுக்குள் நானும் எனது வாகனமும் நின்று கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

இடது பக்கம் பார்த்தேன். சிலிர் என்ற உணர்வு பரவத் தொடங்கியது. நான் மட்டும்தான் அதனைக் கண்டேன் என உறுதிப்படுத்த முடிந்தது. ஓரு அரிய நிகழ்ச்சியை பதிந்து கொள்ள முடியாது - அது ஓவியமாகவோ. எழுத்தாகவோ, புகைப்படமாவோ போகாது - போனால் ஏற்படும் மனக்கவலை ஏற்பட்டது. எதிர்பார்த்த ஆவர்த்தனத்திற்குட்பட்டவைகளை தவறவிட்டால் கவலைப்படாமலிருக்கலாம். ஆனால் அதுபோலல்லாதவைகளைக் காண்பது அதிஷ்டமாயிருக்கும், அல்லது அரிதாயிருக்கும் என்னும் போது மாற்றுத்தான் வழி.

இரு பெண்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். பெரிய பெண்ணும், சிறிய பெண்ணும் அவர்களின் பின்பக்கமே எனக்குத் தெரிந்தது. பெரிய பெண்ணுக்கு முப்பந்தைந்து வயதும், சிறு பெண்ணுக்கு பன்னிரண்டு வயதும் இருக்கலாம் என அனுமானிக்கிறேன். பெரிய பெண் சிறிய பெண்ணின் தோளில் கைபோட்டுக் கொண்டும் சிறிய பெண் பெரிய பெண்ணின் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டும் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.

திடிரென சிறிய பெண்ணும், பெரிய பெண்ணும் நின்றார்கள். சிறிய பெண், தனது செருப்பிலிருந்த காலை இழுத்து எடுத்து செருப்பைக் கழற்றிப் பெரிய பெண்ணிடம் கொடுக்க பெரிய பெண் அதனை தனது காலில் போடுகிறாள். இப்போது சிறிய பெண் வெறுங்காலோடு, பெரிய பெண் செருப்புக் காலாக பின் இருவரும் தோளிலும் இடுப்பிலும் கையைப் போட்டுக் கொண்டு பழையபடி நடக்கிறார்கள்.

எனது மனம் இறுகத் தொடங்கியது. இரு சோடிக் கால்களுக்கு ஒரு சோடிச் செருப்பு. சமூக, கலாசார பொருளாதாரங்கள் கண்ணுக்கு முன்னே புள்ளிகளாய் நடனமாடி- கண்ணுக்கூடாக நுழைந்து மூளையை புரட்டிவிட தொடங்கின. மூளையோ நிதர்சனத்துக்கும் தர்மத்திற்கும் உட்படாதவகையில் சட்டதிட்டங்களைக் கொண்டு நீதிமன்றம் அமைத்து, விசாரணை செய்ய ஆரம்பித்தது. நீதிமன்றங்களின் சட்டதிட்டங்களின் யதார்த்தம் - விசாரணையின் பின்னர் நடைமுறைப்படுத்தலின் போது உறைக்கத் தொடங்கும் என எனக்குப்பட்டிருக்கும் நான் நிஜமாகவே புறவயங்களுடனும், புறவயப்பட்ட உண்மைகளுடனும் விசாரணை செய்யப்பட்டிருந்தால். அதையும் தாண்டி சிக்கல் தொடர்ந்து கொண்டிருந்தது. விசாரணைக் கூண்டில் நான். மிதி பலகையைச் சுற்றி இருபக்கமும் இருந்த கம்பிகள் வளைந்து அரைவட்டமாகி குற்றவாளிக் கூண்டாக்கி அதில் என்னை ஏற்றின. எனக்கெதிராக குற்றச் சாட்டை சுமத்தி என்னைக் கூண்டில் ஏற்றி வாதாடிக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்த ஆள் மாதிரிதான் இருந்தது. உற்றுப் பார்த்தேன். அதுவும் நான்தான். நீதிமன்றத்துக்கு நீதிபதி தேவைப்பட்டான். யாரைப் போடலாம். சாரதியையா? அல்லது ஊழியர்களுள் இருவருள் ஒருவனையா? அவர்கள் அதிகம் படிக்கவில்லையே. அதிகம் படிக்கவில்லையென்றால என்ன தேவாரத்தையா? இந்த நீதிக்கும், தீர்ப்புக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை என யோசித்துவிட்டு அவர்களில் ஒருவனை நீதிபதியாக வைக்கலாம் என எண்ணுகையில் கறுத்தக் கோட்டுடன் நீதிபதி கண்ணாடியைக் கழற்றிவிட்டு ஆசனத்தில் அமர்கிறார். அவரையும் இதற்கு சற்று முன்னர் எங்கோ கண்ட மாதிரி இருந்தது. கண்ணாடியில் பார்த்திருப்பேன் என எனக்கு விளங்கியது. சுற்று நேரத்திற்கெல்லாம் சூடு பறக்க வழக்காடுதலும், விசாரணைகளும் நடைபெற்றன. நான் “என்ன அழிவு” காரனாகையால் எனக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டுமென நான் வழக்காடினேன். ஆனால் எனக்கு அதிலிருந்த அநீதிகளை நீதிபீட மேசையை நோக்கி விளக்கினேன். நீதிபீட மேசையிலிருந்த நான், கூண்டிலிருந்த என்னை நோக்கி உனக்கு விடுதலை என்றேன். எனக்கோ சந்தோசம். நிரூபிக்க போதுமான சாட்சிகள் இல்லையாம். எதிர்த்தரப்பு நானும் வெளிப்படையாக கவலைபோல் காட்டிக் கொண்டாலும் உள்ளுர அந்த நானுக்கும் சந்தோசம்தான். ஏனெனில் எல்லோரும் ஒரே வர்க்கமானபடியால்.

இவர்கள் பாட்டியும், பேத்தியுமோ அல்லது அக்காவும், தங்கையுமோ இல்லை. அம்மாவும் மகளுமாக இருக்கலாம் என்று துணைப்பாலியல்புக் கூறான இடுப்பும் நடையும் கூறின. கர்ண கடூரமான அம்மாவும் மகளும் அல்ல. அவர்களின் நடையில் சிநேகிதத் தன்மை இருக்கிறது. கதைத்துக்கொண்டே நடக்கிறார்கள்.

பெரிய பெண் சாதாரண சேலையும், இன்னும் சிறிய பெண் சட்டையும் கழுத்திலே காதிலே சிறிய மினுக்கம் குறைந்த தங்கமில்லாத ஏதோவொன்றை நகையாக அணிந்திருக்க வேண்டும் அல்லது அணியாமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். இவைகள் அவர்கள் அன்றாடம் காய்ச்சிகள், அடித்தட்டு மக்கள் எனக் கூறின. ஆனால் செருப்புகளோ அதிர்ச்சிக்குள்ளாக்கின. நான்கு கால்களுக்கு இரு செருப்புக்கள்.

பெரிய பெண் பலவந்தமாக வாங்கவுமில்லை. சிறிய பெண் விருப்பத்துடன் தான் கொடுக்கிறாள். பெரிய பெண் விருப்பத்துடன் வாங்குகிறாள். நான் ஒரு மின்சாரக் கட்டைத்தூரம் ஒரு நடை, நீ ஒரு மின்சாரக் கட்டைத் தூரம் ஒரு நடை தூரச் செருப்பு ஒப்பந்தமோ தெரியாது.

அவர்கள மேற்குப் பக்கமிருந்து வந்தபடியால் - அந்தப் பக்கமிருக்கிற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என நினைக்கிறேன். கொஞ்சம் தாழ்த்தப்பட்டவர்கள், தண்ணீhப் பற்றாக்குறையுடன் சுற்றுச் சூழல் அபிவிருத்திக்கு பூமி அகழ்தல் என்னும் பெயராலும், இறால் பண்ணை என்னும் பெயராலும் அரச சுரண்டல்களுக்கு உள்ளாகும் கிராமம் அந்தப் பெண்களது. அவர்கள் அக் கிராமத்தவர்களாயிருந்தால் - அல்லது அவர்கள் வேறு பகுதியினராக இருந்தாலும்- மேற்சொன்ன புறக் கருவிகளின் புறவயமானதும், அகவயமானதுமான நெக்குவாரங்களினால் கிடைக்கும் விளைவுகள் ஒரு வேளை நடைமுறைச் சூழலில் அகவயமாக சமனாக இருக்கலாம். சூழல் அழிப்பு, நிலம் அகழ்வுக்கு எதிராக அமைச்சருக்கு, அரசாங்க அதிபருக்கு, பிரதேச செயலாளருக்கு, கிராமசேவையாளருக்கு, ஒத்தூதிய சீருடைகளுக்கு பெண்கள் சாத்வீகப் போராட்டம் நடாத்தியபோது  அவர்களில் தலைமை தாங்கிய பெண்கள் சீருடையால் கைது செய்யப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டது, நான் அவ்வூரில் அங்குமிங்கும் சில வருடங்களுக்கு முன் ஆய்விற்காக அலைந்து திரிந்தபோது தெரியவந்தது. அப் பெண்கள் அவ்வூராய் இருந்தால் தைரியசாலிப் பெண்கள். எனது ஞானமோ சமுதாயப் போலிக்கு இடம் கொடாதே என நச்சரித்தது. அவர்களின் உடல்மொழி, அசைவுகள் நச்சரிப்புக்கு ஆறுதல் கூற நச்சரிப்பு அடங்கியது.

இரு சோடிக் கால்களுக்கு ஒரு சோடிச் செருப்பு கொடுக்க வைத்தது எது?
பெரிய பெண்ணும், சிறிய பெண்ணும் அல்லது வசதிக்காக தாயும் மகளும்; கால-இட-தத்துவ இடியப்பச் சிக்கல்களின் ஒரு இழையின் முடிவு ஆதிக்கும் இடையில் ஏதொவொரு புள்ளிகளிலிருந்து இயக்கத்திற்குட்படுபவர்கள். நிற்பவர்கள். சிறிய பெண்ணின் நிகழ்காலம் பெரிய பெண்ணின் இறந்த காலம். பெரிய பெண்ணின் நிகழ்காலம் சிறிய பெண்ணின் எதிர்காலம். பெரிய பெண்ணினதும், சிறிய பெண்ணினதும் காலங்களை முறுக்கெடுத்து விரித்து கணிதமாக்கிப் பார்த்தால் தாயும் மகளும் என தொடைகளில் - இறப்பு பெரிய பெண்ணும், எதிர்பார்ப்பு சிறிய பெண்ணும், இடைவெட்டோ நிகழ்காலத்தில் முறுகிக் கிடந்தது. நிகழ்வதே உண்மை. இறப்பும் எதிர்வும் இதுதான் என விளங்கியது.

அந்தச் சிக்கலின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு ஒருவரை ஒருவர் பிடித்து விளையாடி நொண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓருவர் மாறி ஒருவர் துரத்த முன்னேறி துரத்த விளையாட்டு தொடர்கிறது. நிகழ்கால இடைவெட்டில் இருவரும் ஆளையாள் தொட உருகிக் கரைந்து இருவரிலிருந்தும் ஒரு n;பண் தோன்றுகிறது. இது சிறிய பெண்ணா? பெரிய பெண்ணா? தாயா? மகளா? ஏதோவொன்று ஆனால் பெண்.

                                                                                        **
விதவாவிவாகம், உடன்கட்டை ஏறல், பெண்கள் பாடசாலை, தேவதாசிகள், சாதிபேதம், குழந்தைகள் திருமணம், பால்ய மணம், தீண்டாமை, குழந்தை பெறுதல், குழந்தைகள் குழந்தை பெறுதல், கர்ப்பத்தை தடுத்துக் கலைத்தல், உன்னத மனைவி, சூடான உணவுடன் குளிர் உணவு தவிர்த்தல், கற்பு, தாய்மை, திருமணச் சடங்கு. திரௌபதை, பஞ்சபாண்டவர்கள், ஐங்கனி, குந்திதேவி, துரியோதனன், சேலை, குறி, முலை, ஓவியம், படம், எழுத்து. பத்திரிகை, தொலைக்காட்சி, மஞ்சள், றேடியோ, மலை, பள்ளம், அவள் என்றும் இனிமை, கற்புக் கரசி, என்றும் இளையவள், கன்னி கலையாதவள், கன்னிமை, iஉறமன்மென்சவ்வு, பெண்கள் சங்கம், இரண்டாவது மனைவி, தந்தைக்கு மகள், அதே தந்தைக்கு மனைவி, பலதார மணம், பெண்ணுக்கு கல்வி, தன்னிஷ்ட ஆடை, ஆபாசம், யுத்தப் பெண்கள், அகதிப் பெண்கள், கொங்கைத் தீக் கண்ணகி, அரசியற் பெண் பங்கு, பெண்நிலைச் சிந்தனை, எதிர்ப்புணர்வு, மங்களம்மாள், தாய், மனைவி, வாக்குரிமை, பெண் பாதுகாப்பு, அடிமைத்துவம், சித்திரவதை, சட்டத்தின் முன் பாதுகாப்பு, நடமாட்டம், பேச்சு, சமயம், ஒன்றுகூடற் சுதந்திரம், சமூகப் பாதுகாப்பு உரிமைகள், வேலை, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், பிரஜாவுரிமை, பாலியல் வல்லுறவு, பெற்றோர் வல்லுறவு, திருமண வல்லுறவு, எண்ணக் கருவாக்கம், அரசு மதிப்பு, பால்ப் பாதிப்பு, வறுமை, பாலியற் கருவாக்கம், அரசு மதிப்பு, வறுமை, பாலியற் தேவை, பாலுறவு, பாலியல் பேசுதல் பாவம், படங்களின் பாலுறவுக் காட்சிகள், பலாத்கார முத்தம், பாலியற் தொழிலாளி, கற்பு அழிப்பு, மூன்றிலிருந்து அறுபத்து மூன்று வரை கற்பு அழிப்பு, கருவாடு விற்றல், மீன்பிடித்தல், காய்கறி விற்றல், அடிப்படை வாதம், சத்துச் சாப்பாடு, குடும்ப வருமானம், பெண் மருத்துவம், பெண் மருத்துவர், இராமாயணம், மகாபாரதம், அல்லி அருச்சுனா, கோட், சூட், டை சப்பாத்து, சேவிங்றேசர் சீதனம், சுகபோகம், மகளிர்நோய், கணவன் தொலைதல், பெண் புத்தி பின் புத்தி, பெண்களை நம்பாதே, குடிவெறி, ஆண்விருப்பு-வெறுப்பு, ஆண் தவறு, பெண் சுதந்திரம், ஆண் சந்தேகம், கை, கால், கம்பால் அடித்தல், வெட்டுதல், தீச்சூடு, அமிலம், சுடுநீர் ஊற்றல், குரல்வளை நெரித்தல், பிளேட்டால் பெண் குறி கீறல், வன்சொற் பிரயோகம், பல்கலைக்கழகம், பாலியற் சொல் வல்லுறவு, பகிடிவதை, தற்கொலை, தீமூட்டி, மண்வெட்டிக் கொலை, அயசவையட சயிந, உடலுறவில் பாலியல் உறுப்புக் கடித்தல், கீறல், நெரித்தல், கிழித்தல், இரத்த உறவு தந்தை-மகள், சகோதரன்-சகோதரி, மகன்-தாய,; மாமன்-மருமகள், பாட்டன்-பேத்தி பலாத்கார வல்லுறவு, பாடநூல்களில் பெண்ணுரிமை, பெண் தொழிலாளர், மகளிர் விவகார அமைச்சு, பெண் ஜனாதிபதி, வலுவாக்கம், வீட்டில் பெண்கள், மார்பகங்கள், இளமுலை, குரும்பை, தெம்பிலி, வண்கொங்கை, கலசமுலை, கொப்பைக் குடம், முத்தணி கொங்கை, மு..லை.., தாய்ப்பால், ஈஸ்ட்ரோஜன், ஒக்சிரோஸன், FSH, கருப்பை, LH, மார்பக புற்றுநோய், சினிமா, செயற்கை மார்பகம், சிலிக்கா, பமீலா அண்டர்சன், வரதட்சிணை, உலகமயமாதல், சமூகச் சிதைவு, பெண் கடத்தி விற்றல், காணாமற் போனவர் மனைவிகள், துயரத்தின் சரிதம், காதலுணர்வு, தமிழர் பண்பாடு, ஆண்பால், பெண்பால், பலர்பால், தாய்ப்பால், மத்திய கிழக்கு, பணிப் பெண்கள், எஜமான்கள் தொல்லை, மலடி, கசைநஇ தீபாமேத்தா, ஐந்து பெட்டை பெற்றால் அரசனும் ஆண்டி, தட்டுவாணி கொண்டையில தப்பாமல் பூவிருக்கும், பெட்டைக் கோழி கூவி விடியாது, ஸெகர்ஷோதி கதை சொல்லி, முக்தா, சுமங்கலமாதா, பிரபா, மெற்றிகா, அஷ்வகோஷ், பெயரைச் சொல்லலாமா? கணவன் பேரைச் சொல்லலாமா?, அருந்ததி ரோய், பொக்கரான் அணு குண்டு வெடிப்பு, நர்மதா திட்டம், புக்கர் பரிசு, முச்சுமை, வீட்டு வேலை, வீட்டுக்கு வெளியேயான ஊதிய உழைப்பு, சமூகப் பணி, பெண்ணியற் பொருளாதாரம், அமர்த்தியா சென், கட்டுவலைக் கண்ணகி, மீன்பிடிக்கும் பெண், இராணுவ ஆக்கிரமிப்பு, எண்ணெய் உருக்கல், பூர்சுவா மேட்டுக்குடிப் பெண்கள். தாதி, சேவகி, அழகின் பிறப்பிடம், விளம்பரங்கள், எல்லையற்ற பொறுமையின் பிறப்பிடம், ஓரினச் சேர்க்ககை, பல்லினச் சேர்க்கை, புட்டப் புணர்வு, வாய்ப்புணர்வு, கன்னித்தாய், பண்பாடு, hழரளநறகைந, பெண்களும் குடும்;ப உறவுகளும், பெண்களும் சட்டமும், சமூகமும் பெண்களும், யுத்தமும், பெண்களும் கலாசாரமும், முதல் பெண் பிரதம மந்திரி, பெண்களும் மதங்களும், iவெநசநெவ, வன்முறை, கணவனால் அடித்துக் கொலை, துப்பாக்கிச் சூடு, நஞ்சூட்டிக் கொலை, கிளாரா ஸெல்சின், பெண் எழுத்தாளர், எழுத்துத் திருட்டு, பெண்களிடமிருந்து பேராசிரியர்களின் எழுத்துத் திருட்டு, ஆமை, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பாலினக் கொள்கை, திருமணப் பதிவு, அதீத பாலியல் விருப்புக்குட்படுத்தல், நாள்தோறும் ஏச்சு, வீட்டை விட்டு துரத்தல், உரஞ்சுதல், கிள்ளுதல், பஸ்ஸில் குறியால் பிட்டத்தில் உரஞ்சல,; கிருசாந்தி, கோணேஸ்வரி, குறி, கிறெனட், பத்துச் சீருடையினர், ஜூடாகமாலிட்டா, ராஜினி, சாரதம்மாள், அல்லி அருச்சுனா கதையாடல்கள், கல்யாணி கவிதை, புனிதம், பண்பாடு, புஷ்பமலர், ரேணுகா, அர்த்த நாரீஸ்வரர், வடிசாராயம், குடிகாரன், கண்ணீர், குழப்பம், இளகிய மனம், துக்கம், பயம், கிலேசம், குழப்பம், அரிகுழல், மகடுஉ, நாரி, பிரியை, ஒளவை, நல்வெள்ளி, ஒக்கூர், கொன்றபின் தூக்கிலிட்டுத் தற்கொலையாக்கல், வீட்டு வேலைச் சிறுமிப்பெண், பாலியல் தொந்தரவு, அறுதலி, ஆறுவயதுப் பெண், sex maniac, ஒரு வயதுப் பெண், கண்ணகி, தாசி, தேவதாசி, காமக்கிழத்தி, சேரிப்பரத்தை, இல் பரத்தை, பொறுமை, Zero degree, யோனி மையவாதம், சாருநிவேதிதா, நேநோ, விமர்சன எறி, வீட்டு வேலை, வல்லுறவில் ஆண் நம்பகவானாதல், பெண் தன்மை ஓரங்கட்டல், சட்;டம், ஆண் தனிச் சொத்துரிமை, பொருளாதாரம், கல்வி மறுப்பு, மசாஜ் கருக்கலைப்பு, குப்பியோட்டுத் தூள், அன்னாசிப் பழம், பப்பாளி, கள்ளிச் சொட்டு, திரி, சிதைவு, பூப்பெய்வு, பெண் குழந்தை குறைந்த காலத் தாய்ப்பால் பெறுதல், பெண்குழந்தை போசாக்கற்ற உணவூட்டப்பட வேண்டுமெனல், நோய் முற்றி சிகிச்சை, பதினாறு வயதில் பதினேழு பிள்ளளைக்ள (தென்னை, கமுகு தவிர்த்து), மாமியார் மாமனார் சிச்ருஷை, வரதட்சணைக் கொடுமை, வல்லுறவுச் சட்டம் ஆணுக்குச் சாதகம்,சம்மதம் கேட்டு இல்லையென கத்தியால் குத்தல்.
                                                    **

வாகனத்தை விட்டு இறங்காமலேயே வலது பக்கம் பார்த்துக்கொண்டே நின்றேன். பல புள்ளிகளிலிருந்தெல்லாம் கூட்டுக்கண்ணிலுள்ள இலட்சக்கணக்கான தனிக் கண் ஒவ்வொன்றுக்கூடாகச் சென்று முடிவில் அவை சித்திர வடிவ விம்பமொன்றை ஆக்குகின்றன என்று சொல்கிறது நான் நேற்று இரவு வாசித்த Chapman's Insect structure and function.
**

கூட வந்த இரு ஊழியர்களும், தோள்களில் ஒரு லீற்றர் கலன்களை பெரிய பெட்டியில் அடுக்கி சுமந்து கொண்டு வண்டியைவிட்டு கீழே இறங்கி அருகிலுள்ள இறால் பண்ணைக்குள் நுழைவதற்கு எனது உத்தரவை எதிர்பார்த்திருந்தார்கள். உத்தரவு கொடுத்தேன். வண்டிக்குள்ளிருந்த மூன்று பெண்களையும் இறால் பண்ணைக்குள் போக அழைத்தேன். வர மறுத்தார்கள். போன வாரம் நடந்த சம்பவத்திற்குப் பிறகுதான் அவர்கள் வர மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்கள் வெளியே வராமல் வண்டிக்குள்தான் இருந்தார்கள். நான் பண்ணைக்குள் நுழைகிறேன். செருப்புக்கள் கழற்றுப் பட்டு நிறையக் கிடக்கின்றன. நானும் கழற்றினேன். பண்ணையைப் பார்த்தால் எனக்குத் திகைப்புத்தான் வருவது வழக்கம். நான் பரீட்சித்து, ஆய்வு செய்து கற்ற பண்ணைகள் இப்படியல்ல.

நதியின் கரைகளிலிருந்து கட்டுப்பாடான (நாற்பது அடியாக்கும்) தூரத்தில் பண்ணையின் வரம்புகள் இருக்க வேண்டும். வரம்புகள் பாதுகாப்பானதாயும், உயரமானதாயும், பலமானதாயும், சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டதாயும் இருக்க வேண்டும். களவு, அழிச்சாட்டியங்களிலிருந்து தடுக்க கம்பி வேலி போட்டு கண்ணிமையாத பாதுகாப்பும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கேயோ வரம்புகளில்லாத வரம்புகளும், பயிரை மேய்கின்ற நசிஞ்சான் வேலிகளும்தான் இருக்கின்றன. கண்ட கண்ட மாதிரியெல்லாம் பண்ணைக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்கள். எடுக்கவும் இயலாது. போவதற்கு ஒரு வழி, வருவதற்கு ஒரு வழி. போவதற்கு முன் நீர், ஒரு சேமிப்புக் குளத்தில் ஒரு நாள் பூராக தங்கி, அதிலுள்ள தூசெல்லாம் குளத்தின் அடிப்பாகத்தில் படியவைக்கப்பட்டு, தூசு நீங்கிய தண்ணீர் இன்னொரு குளத்திற்கு பாய இங்கே உயிரியற் தாக்கத்தால் மாசுகள் மீண்டும் நீங்க இப்போது மாசற்ற நல்ல தண்ணீர் வளர்ப்புக் குளங்களுக்கு போக வேண்டும். வளர்ப்புக் குளங்களோ, குஞ்சுகளுக்கொரு குளம், முதிர்ந்தவைகளுக்கொரு குளம். எண்ணிக்கை கூடக்கூட அதற்கொரு குளம் வேண்டும். பின் இவைகளிலிருந்து தண்ணியை பரிகரித்து நதிக்குள் விட வேண்டும். ஆனால் இப்படியா இங்கே நடக்கிறது. தண்ணி அனுப்புறதும் ஒரு வழி, விடுறதும் அதே வழி. குஞ்சுகளுக்கும் ஒரே குளம், வளர்க்கிறதுக்கும் அதே குளம். எல்லாத்துக்கும் அதே குளம். ஓல் இன் வன் குளம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த இந்தச் சட்ட விரோத பண்ணைக் குளங்கள் எல்லாம் அதே வகைதான். வந்தார்கள், வெட்டினார்கள், கட்டினார்கள், போட்டார்கள், எடுத்தார்கள், சென்றார்கள் கேஸ்தான்.

நான் இன்று வந்தது. இந்த நதி இறால் பண்ணைகளின் கழிவால் மாசாயிருக்கிறதா என்பது பற்றிய ஆய்விற்குத்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நதி கறுப்பாக இருந்தது. அல்காக்கள் பூத்து மணத்தன. ஒரு புள்ளியில் ஆரை வைத்து அரை வட்டம் கீறி, பின்னர் ஆறு ஆரைகள் கீறி, ஒவ்வொரு ஆரையிலும் நூறு மீற்றருக்கு ஒரு லீற்றர் தண்ணியெடுத்து ஆய்வு செய்ய வேண்டும். எங்கே பள்ளம் இருக்கிறதோ? படுகுழி இருக்கிறதோ? தெரியாது. இப்படித்தான் ஒரு தலை மறைத்த முஸ்லிம் பெண், ஆற்றில் இறங்கி மீன் பிடித்து, புழுவெடுத்து, படம் பிடித்து, நச்சு மூலகம் கண்டு, மாதக் கணக்கில் சேற்றில் மூழ்கிச் செய்த ஆய்வை, ஒரு பெரிய ஆண் ஆசான் தனது ஆய்வென வெளிநாட்டில் விற்றுவிட்டு வந்துவிட்டார். "பொம்புழப்புள்ள இதுக்கு எனக்கு என்னத்த கிழிச்சிர ஏலும்" என்ற மமதையுடன். மணிரத்தினத்தின் அதிஷ்டம் ஒரு படத்திற்கு தலையங்கம் கிடைத்து விட்டது- எழுத்துக்களைத் திருடாதே!. படத்தை எப்போது எடுப்பாரோ? வயிறு பற்றி எரிதல் என்பது எப்போதுதான் பேராசான்களுக்கு விளங்கப் போகின்றதோ? .

இறால் பண்ணை என்ன பால்? போன வாரம் நான் அழைத்துப் போன பெண்களை உள்ளே நுழையவிடாது, பெண்களின் காலடியே பண்ணைக்கு தீட்டு - இந்தத் தீட்டால் வளம் குன்றுமாம்- என்று தடுத்தது ஞாபகம் வந்தது. அப்படியென்றால் நதி என்ன பால்? இடை ஒளித்து வளைந்து அது ஓடிக் கொண்டிருந்து மாசாகிக் கிடந்தது. யார் காரணம். எல்லோருமே. சட்டம், அரசாங்கம், உத்தியோகத்தர்கள், சமூகம், புத்திஜீவிகள் எல்லோரும். பால்கள் தெளிந்தன. நீர்; சேர்ந்து தெரிந்தன.
                                       **

நடத்தல் என்பது மனிதனுக்கு மட்டும். நடத்தல் என்பது. மனிதனின் தனிக் குணம். செருப்பு என்பது நடத்தலின்போது காலைப் பாதுகாக்க. நடத்தல் என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது. சில வானரங்களைத் தவிர (அவைகளின் நடத்தல்களில் கூட குறைபாடுகள் உள்ளது.) எனவே செருப்பு என்பது மனிதனின் தனிக் குணம். செருப்பு என்பது சுhயதீனமாக்கப்பட்ட கரங்களினால், கருவிகளின் பாவனைகளுடனும், மனைவி, மக்கள், பெண்டு, பிள்ளைகள், குடும்பத்திற்கான உணவு தேடலுடனான ஆதிக்கத்துடனும் ஆபத்திலிருந்தும் தப்பிக் கொள்வதுடன் தொடர்புபட்டது. நிமிர்ந்து நின்று நாரி, முள்ளந்தண்டுகள் உடற்பாரம் தாங்கி, தொடைத் தசைகள் சுருங்கித் தளர்ந்து, முன்னும், பின்னும் தொடையை ஆட்டி, இடுப்புத்தசை இடுப்பை மேல் வெட்டியிழுத்து ஒரு கால் குதியிலிருந்து தொடங்கி கடைசியாக பெருவிரல் உயர மீண்டும் மறுகால்... நடை.. நடை....இதில் ராஜ நடை, வீறாப்பு நடை, பெருமித நடை எல்லாம் சுத்த ஏமாற்று வேலைகள். அந்த நடைகளுக்குள்ளே பிரதான வித்தியாசம் என்வென்றால் இழுப்புகளுக்கும், விரிப்புகளுக்கும் இடையிலுள்ள நேர வித்தியாசம் தவிர வேறொன்றுமில்லை. செருப்பில் அதிகமாகத் தேயும் பாகம் பெருவிரற் கீழ், அதற்குப் பின்னர் குதி. வெறுங்கால், விலங்குத் தோல் கேட்டு, செருப்பாகி, சப்பாத்தாகி, பின் சீருடைச் சப்பாத்தாகி, வீட்டிலும், நாட்டிலும், குறி உதைக்கும் சாதனமானது.

செருப்பு பெண்ணுக்கு நல்லதொரு குறியீடு. “காலில கிடக்கு கவனம்”, “மகனே உனக்கு செருப்பால சேவெடுப்பெண்டா”, "இனி நான் கதைக்கமாட்டன் என்ர செருப்புத்தான் கதைக்கும்”, “இது பிய்யும் கவனம்”, “சப்..சப்..சப்.. ஐயோ அம்மா, அக்கா, தங்கச்சி..” போன்றவை விடைகளாக தெருக்களிலும், பஸ்களிலும், வீடுகளிலும் இருக்கும் சில கேள்விகளுக்கு. இந்த விடைகள் காலத்தாலும் இடத்தாலும் அழிக்கப்படாது பதியவைக்கப்படக்கூடியவை.
                                                               **

நட
தொடர்ந்து
செருப்பு காக்கும்.
மிதி, சிதை
செருப்பு வரும்.
**

Work hard
As a bull;
Depreciate
As a tile;
Skin the bull.
Make the slipper.
Walk on the tile.
Rub, rasp, and scour.
Belittle and again depreciate.
Defind the legs,
Than the skinned bleeding slippers,
Important is your legs.
**

Aevithinne,
Thuvenne,
Pahathvenne,
Mithivediya Araksa karay.
Prahara karanu,
Nethi karanu,
Mella karanu,
Parissamin inne,
Mithivediya thiba.
**

மீண்டும் வலது பக்கம் பார்க்கிறேன். தாயும் மகளும் அல்லது பெரிய பெண்ணும், சிறிய பெண்ணும் சினேகிதிகளாய் கதைத்துக் கொண்டு சூரியனின் ஒளி முறிவின் கோலத்தின் கானல் நீரில் செருப்புக்கள் பல்லக்காய் உயர்ந்து அவர்களை தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...