உயிர்- தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பியக்கங்களும், அதற்கான வெற்றியும்.
பூமியில் வளங்கள் மனித இனத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானது என்றால், அதை நீதியாக, சரிநிகராக எல்லோருக்கும் பங்கிட்டுக் கொள்வதற்கு, சர்வதேச சோசலிசம் மலராமல் சாத்தியமில்லை என்கின்றார் கார்ல் மார்க்ஸ்.
இன்று நடைமுறையில் இருக்கும் பொருளாதார அமைப்பு, உறுதியானதாக இருக்கலாம்.ஆனால் அதனை நிர்வாகம் செய்பவர்கள் முட்டாள்களோ அல்லது கற்பனை வளம் இல்லாதவர்களோ அல்ல. அவர்கள் எதிர்ப்புக்களை சமாளிப்பதில் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்றுள்ளனர். முற்போக்கான கருத்துக்களை முளையிலேயே கிள்ளியெறிய நன்றாகவே அறிந்துள்ளனர். அவர்கள் எப்போதும் சூழலியல் கோரிக்கைகளை தங்களுக்குச் சாதகமாகவே வளைக்க முற்படுவர்.
எனவே இதற்கெதிராக திரண்டெழக் கூடியவர்கள் மக்களே. இதற்கு முதன் முதலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வுக் கருத்துக்கள் ஒரு வலுவான எதிர்ப்புக் குரலாக உருவாக வழி வகுக்க வேண்டும். சுற்றுச்சூழற் சங்கங்கள், சூழலுக்கு ஆதரவு தரும் தொழிற் சங்கங்கள், அணுசக்தி எதிர்ப்பு அமைப்புக்கள் போன்ற பலவும் நிறைய உருவாகி தொடர்ந்து போராட வேண்டும். இத்தகைய போராட்டங்கள் பல வெற்றிபெற்றுள்ளன. வெற்றி பெற்றும் வருகின்றன. இவை நமக்கு மிகுந்த தெம்பை அளிக்கின்றன. நம்பிக்கையும் அளிக்கின்றது. இந்த உயிர்-தொழில்நுபட்பவியலிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பியக்கத்தையம், மக்கள் எதிர்ப்பையும்; நோக்குவோம்.
உணவுற்பத்தியில் பரம்பரையியல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதிலிந்தே அதற்கு எதிராக மக்கள் எதிர்ப்புக்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் மழுங்கடிக்கப்பட்ட விதைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததே மிக அண்மைக்கால நிகழ்வாகும். இந்த எதிர்ப்பியக்கம் இயக்கத்திற்குள்ளாகத் தொடங்கியது ஐரோப்பாவிலேதான் (குறிப்பாக அமரிக்காவிற்கெதிராக) உணவுற்பத்தியில் பரம்பரையியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு ஆதரவாக சட்டங்களை கொண்டு வரும் அரசாங்கங்களுக்கும் மக்கள் நேரடியாக எதிர்ப்பைக் காட்டவும் தொடங்கிவிட்டனர்.
மழுங்கடிக்கப்பட்ட விதைகள் அறிமுகமானதைத் தொடர்ந்து மக்களின் உலகளாவிய எதிhப்பும் தொடங்கியது. இந்த எதிர்ப்புச் சக்திக்கு முகம் கொடுக்க முடியாமல் மழுங்கடிக்கப்பட்ட விதைகளை வியாபார நோக்கில் உற்பத்தி செய்வதில்லை என்று மொன்சன்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் நம்பிக்கை வைக்க முடியாமல் இருக்கின்றது. ஏனெனில் அந்தக் கம்பனியின் பேச்சாளரின் தகவலின்படி வர்த்தக நோக்கைக் கைவிட்டாலும் ஆய்வுகள் தொடரும் என்று கூறப்படுவதே சந்தேகத்திற்கு காரணமாகும். மேலும் இந்த நிறுவனங்களில் பணி செய்யும் விஞ்ஞானிகள் “எதில் ஆபத்தில்லை. வீதியைக் கடப்பதில்கூட ஆபத்திருக்கிறது” என்ற வாதத்தை எழுப்பி புத்திசாலித்தனமாக உயிர்-தொழில்நுட்ப ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிரான கோசத்தை அடக்கப்பார்க்கிறார்கள். அடிப்படை மனித உரிமைகள், மிருகவதைத் தடுப்பு என்றெல்லாம் மூன்றாம் மண்டல நாடுகளை பூச்சாண்டி காட்டும் ஏகாதிபத்தியவாதிகள், ஸ்கொட்லாந்தின் றொஸ்லின் நிறுவனத்தின் - ஒரு வளர்ந்த ஆட்டின் பால்மடிக் கலத்திலிருந்து ஒரு முழு ஆட்டுக்குட்டியை உருவாக்கிவிட்டோம்- என்று அறிவித்தவுடன், அவர்கள அடைந்த புளகாங்கிதத்திற்கு அளவேது. ஆனால் அந்த ஒரு ஆட்டை உருவாக்குவதற்கு 300 ஆட்டு முதிர்மூலவுருக்கள் அல்லது இளங்குட்டிகள் சிதைக்கப்பட்டன என்பதே அந்தப் புளகாங்கிதத்திற்குப் பின்னால் இருந்த சோகமாகும். இது மிருகவதையின் உச்சக் கட்டம்தான் என்பது வெளிப்படை. இதனை இவர்களால் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆராய்ச்சிகளின் அறவியலில் எந்த வகுதிக்குள் சேர்ப்பது என்று தெரியவில்லை. தற்போது ஏகாதிபத்தியவாதிகளின் நிலக்கீழ் சோதனை அறைகளில் மனிதக் குழந்தையை உருவாக்கும் முயற்சியில் எத்தனை ஆயிரம் இளம் குழந்தைக் குஞ்சுகள் அழிந்தனவோ தெரியாது.
உண்மையில் உயிர்-தொழில்நுட்பவியலிற்கு அந்தக் கைத்தொழிலுக்கு வெளியேயுள்ள நுகர்வோர்கள், நுகர்வோர்; சங்கங்கள், சூழலியற் சங்கங்கள், சுயாதீனமான மனித நேயமுள்ள ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள், பொது மக்கள் சுகாதார நல ஸ்தாபனங்கள் போன்றவைகளே பாரியளவில் எதிர்ப்புக்களைக் காட்டி நிற்கின்றன.
பரம்பரை உருமாற்றம் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டால், ஐரோப்பாவில் 80மூ மான மக்கள் இந்த உணவுப் பொருட்களை வெறுப்பதாக அண்மைக்கால கணிப்பீடு ஒன்று குறிப்பிடுகிறது. ஆஸ்த்திரியாவில் 12 இலட்சம் பேர் கையெழுத்திட்டு பரம்பரை உருமாற்றப்பட்ட உணவையும், அங்கிகளையும் தடை செய்யுமாறு அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பியிருந்தார்கள். சமீபத்திய கணக்கெடுப்பொன்று நோர்வேயில் 100% மானோரும், ஜேர்மனியில் 95ம% மானோரும் இந்த உணவு, உயிரினங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. Womens Environmental Network, Friends of the Earth, Green Peace, The Soil Association, Earth First!, Genetic Forum, SAFE Alliance, The Natural Law Party, Genetic Engineering Network, Lobbying for GMO Labeling. போன்ற நிறுவனங்களும், சமூக நலத்தாபனங்களும் பலமாக எதிhப்பியங்களை நடாத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஐரோப்பிய அரசுகள்கூட இந்த எதிர்ப்பியங்களுக்கு செவிசாய்த்து, பாராளுமன்றத்தில அதிக வாக்குகள் பெற்று, இந்தப் பரம்பரை உருமாற்றப்பட்ட உணவுகளுக்கொதிதராகவும், மழுங்கடிக்கப்பட்ட விதைகளுக்கு எதிராகவும் சட்டங்களை உருவாக்கியுள்ளன.
பரம்பரையியல் தொழில்நுட்பங்கள் சம்பந்தமாக ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஆய்வுகளைச் செய்துவரும் னுச. துயநெ சுளைளடநச , “மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்து மொன்சன்ரோ பின்வாங்கிய சம்பவமும், இந்த பரம்பரை உருமாற்றப்பட்ட உணவுகளுக்கெதிராக உலகம் பூராகவும் எழுந்துவரும் எதிர்ப்புணர்வுகளும் மக்கள் சக்தியின் மாபெரும் மதிப்பைக் காட்டுகின்றது. இந்தத் தொழில் நுட்பத்தின் போக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்களும் மக்களே, மேலும் அமரிக்க விவசாயத் திணைக்களம் இத்தகைய ஆய்வுகளுக்கு நிதி உதவி செய்வதும் தவறானது” என்றும் கூறுகிறார்.
ஏகாதிபத்தியத்தின் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கோ அல்லது நம்பிக்கை இழப்பதற்கோ இன்று நேரம் இல்லை. நாம் உடனே நடவடிக்கையில் இறங்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்துத்தான். அதற்கு முதன் முதலாக மக்களாகிய எம்மீது நாம் ஏற்றிக் கொள்ளும் விழிப்புணர்வுதான், வலுவான எதிர்ப்புசக்தியாக மாறி ஏகாதிபத்தியத்தின் சுரண்டல்களிலிருந்தும், அடிபணிவைத்தல்களிலிருந்தும் எம்மைக் காப்பாற்றும் என்றால் அது மிகையாகாது.
மழுங்கடிக்கப்பட்ட விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் உலகளாகவிய ரீதியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினர். இந்த எதிர்ப்புச் சக்திக்குமுகம் கொடுக்க முடியாமல் மழுங்கடிக்கப்பட்ட விதைகளை வர்த்தக ரீதியில் விருத்தி செய்வதில்லை என்று அவற்றின் உற்பத்தியாளர்களான மொன்சன்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உணவு உற்பத்தி முறையில் பாரம்பரிய தொழில்நுட்ப முறை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு இருந்து வந்தது. அதில் மழுங்கடிக்கப்பட்ட விதைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்பே அண்மைக் கால நிகழ்வாகும். இந்த எதிர்ப்பு பிரதானமாக ஐரோப்பாவிலேயே வெளிப்படுத்தப்பட்டது. உற்பத்தியில் பாரம்பரிய தொழில்நுட்ப முறைகளுக்கு ஆதரவாக சட்டங்களை கொண்டு வரும் அரசாங்கங்களுக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
இந்த தொழில்நுட்ப முறைகளால் உற்பத்தி செய்யப்படும் விதைகள் பீடைத் தாக்கத்திலிருந்து விடுபட்டு நல்ல விளைச்சலைப் பெறவேணடுமாயின் தாங்கள் அறிமுகப்படுத்தும் இரசாயனப் பசளை வகைகளையே விவசாயிகள் உபயோகிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட விதை உற்பத்தியாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர். இதிலிருந்து பல்தேசிய நிறுவனங்கள்தான் உலகளாவிய ரீதியில் உணவு உற்பத்தியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளன என்று தெரிகின்றது. பாரம்பரிய தொழில்நுட்பங்கள்; பற்றி சுமார் பத்து வருடங்களாக ஆய்வினைச் செய்துவருகின்ற னுச. துயநெ சுளைளடநச, மொன்சன்ரோ நிறுவனம் மக்களுடைய எதிர்ப்பு சக்திக்கு செவிசாய்த்து தனது விதைகளை சந்தைப்படுத்துவதிலிருந்து பின்வாங்கியது மக்கள் சக்திக்கு இருக்கும் மதிப்பையே காட்டுகின்றது என்கின்றார்.
மழுங்கடிக்கப்பட்ட விதை உற்பத்தித் திட்டம் உப உணவு உற்பத்திப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு கஸ்டங்களைக் கொடுக்கும். விவசாயிகள் ஒரு போகத்தில் அறுவடை செய்தவற்றிலிருந்தே அடுத்த போகத்துக்கு உரிய விதைகளைப் பெறுவார்கள். ஆனால் இந்த மழுங்கடிக்கப்பட்ட விதை உற்பத்தித் திட்டம் அதற்கு இடமளிப்பதில்லை. இதன் மூலம் அதாவது மழுங்கடிகப்பட்ட விதைகள் உலக உணவுத் தேவையை வறுமை நிலைக்கே தள்ளப்படுவான்.
மொன்சன்ரோ நிறுவனத்தில் தற்போது யாருக்கும் நம்பி;க்கையில்லை. ஏனெனில் அது வர்த்தக நோக்கில் விதைகளை உற்பத்தி செய்யப்பபோவதில்லை. ஆனால் ஆராய்ச்சிகள் தொடரும் என்று அறிவித்திருப்பதே அதற்குக் காரணமாகும்.
துயநெ சுளைளடநச யின் கருத்துப்படி, மழுங்கடிக்கப்பட்ட விதைத் தொழில்நுட்பம் நன்மையிலும் பார்க்க பல மடங்கு தீமைகளையே விளைவிக்கும். இவ்விவகாரத்தில் இறுக்கமான கட்டுப்பாடு அவசியம் என்றும், இதில் மக்களின் கருத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
No comments:
Post a Comment