Saturday, October 8, 2011

குரங்குகளின் ராஜ்ஜியத்தில்..


-அம்ரிதா ஏயெம்-

நேரம் இரவு 11.40. வெள்ளைநிறம் பூசப்பட்ட ஜன்னல் குறுக்குக் கம்பிகளினூடாக தூரத்திலே தெரிந்த கேள்ஸ் nஉறாஸ்டலைப் பார்க்கிறேன். இன்னும், கொஞ்ச அறைகளில் விளக்குகள் எரிந்துகொண்டிருப்பது தெரிகிறது. நிறையப்பேர் தூங்க, கொஞ்சப் பேர் விழித்திருந்து படிக்கிறார்கள் போல. எப்போதும் வாழ்க்கையில் நிறையப் பேர் நிறைய நேரங்களில் தூங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். விழித்திருக்கும் நிறையப் பேர்களின் பகுத்தறிவுக் கண்களும், ஞானக் கண்களும் மூடி, சுயநினைவுகளுடன் கண்கள் திறக்க விழிப்பிலேயே நடமாட்டங்களுடன் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என் அறைக்கு 20 அடி முன்னாலிருந்த கறுத்த வீதியின் மெர்க்குரி விளக்கை பார்க்கிறேன். இன்னும் அது எரியவில்லை. பற்றி பற்றி, எரிந்து அணைந்து கொண்டே இருந்தது. மீண்டும் எரியும் என்ற நம்பிக்கை மேலோங்க, எரிய முயற்சித்து, எரிந்து அணைந்து கொண்டிருந்தது. இன்னும் எரியவில்லை. இன்று மட்டுமா எரியவில்லை?. நெடுங் காலமாகவே எரியவில்லை. எப்போது எரியுமோ?. எப்போது இருள் போகுமோ?. எப்போது விடிவு கிடைக்குமோ? மேசை மேல் கிடந்த அந்த குளக்கரை ஆங்கிலப் பத்திரிகையைப் பார்க்கிறேன்.

தேர்தல், தேர்தல் இன்னும் கொஞ்ச நாளையில், கடைசி வருடத்தின் கடைசி மாதத்தின், கடைசி வாரத்தில் தேர்தல் வருகிறதாம். மணலைக் கயிறாய்த் திரித்து, வானத்தை வில்லாய் வளைத்து, வானவில்லில் சாயம் போட்டு, நடந்து சந்தைக்குபோகும் உரித்த கோழியின் தலையில் வைத்து, பல்லில் ஒட்டிய பொய்களுடன், வாயால் வாக்குறுதிகள் வீணியாய் வடிய வடிய, தேர்தல் வருகிறதாம். அமைதி, சமாதானம், அன்பு, உரிமை மீண்டும் வரும் என நகைச்சுவை அடித்து அடித்து தேர்தல் வருகிறதம். சிரித்துவிட்டு பத்திரிகையை தூக்கி மூலைக்குள் எறிந்தேன். வட் எ புல் சிட் எலக்சன். எஸ்.ஜானகியின், என்னிடமிருந்த மீடியம் மெலோடியாக்களில் ஒன்றைப் போட்டேன். மின்விசிறிக் காற்றோடு மோகனமோ அல்லது கல்யாணியோ? காற்றோடு பரவி, புத்துணர்;ச்சி வர, வெள்ளைப் பேப்பர் எடுத்து சோசல் உறயராக்கியல் சிஸ்டம் எமங்; பிறிஸ்பைற்றிஸ் என்ரலஸ் ஒர் உறனுமான் லங்குர், என்று தலையங்கம் இட்டு எழுதத் தொடங்கினேன். உண்மையில் உறயராக்கியல் சிஸ்டம் என்பதை ஆட்சி அதிகார அந்தஸ்த்து நிரையாக்கம் என தமிழ்ப்படுத்தலாமாக்கும்.

**
கெம்பஸின் தெற்குப் பக்கத்தில், கம்பியினால் கிட்டத்தட்ட இருநூறு மீற்றருக்கு கொடி கட்டி, வளர்க்கப்பட்ட பெசன் புறூட் அழிக்கப்பட்டிருந்தது. மாமரங்களிலிருந்து கறுத்தக் கொழும்பான், விளாட் பழங்கள், காய்கள் ஆங்காங்கே இரண்டு கடி, ஒரு கடிகளுடன் குப்பைமேல் வீசப்பட்டு கிடந்தன. கத்தரித் தோட்டத்தில் கத்தரிக் காய்கள் அடிக்கடி களவுகள் போகத் தொடங்கின. பப்பாசிப் பழங்கள் மாயமாய் மறைந்தன. மரவள்ளிக் கிழங்குகள் வேரோடு பிடுங்கப்பட்டு, அதன் தோல்களோ ஓடுகளில் மந்திரமாய் வந்திருந்தன. பயற்றை, வெண்டி, அவரை, பீர்க்குகளும் மறையத் தொடங்கின.. காலையில் அப்போதுதான் முற்றத்தை பெருக்கிவிட்டுப் போக, மீண்டும் சில மணித்தியாலங்களில் வேப்பம் இலைகளும், இலைக்காம்புகள் இல்லாத கத்தா இலைகளும், பிய்த்து எறியப்பட்ட நெருப்புவாகை, அகத்திப் பூக்களும், முறித்துப் போடப்படப்பட்ட சவுக்கு, புங்கை கிளைகளும், முன்பகுதி காரப்பட்ட குரும்பட்டிகளும் கெம்பஸ் வளவு பூராக இறைந்து கிடந்தன. மழை காலம் என்றாலோ கெம்பஸ் பூராக ஒழுகத் தொடங்கின. இந்தப் பிரச்சினை எனது கவனத்திற்கு வந்தது. என்னால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் அல்லது கண்டுபிடிக்க முடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்று சொல்லி வேலையைத் தொடங்கினேன். பொறியியலாளரும், படம் வரையும் பெண்ணும் இரண்டு நாளாக சின்னச் சின்ன சதுரங்கள் போட்டு கீறிய யுனிவர்சிட்டி வளவுகளினதும், கட்டடங்களினதும் வரைபடத்துடன் வேலையைத் தொடங்கினேன்.

பத்தொன்பது பேர் கொண்ட இந்த ட்ரூப்பிற்கு (குழுவிற்கு) கெம்பஸ் ட்ரூப் எனப் பெயரிட்டேன். விக்கி, முறுக்ஸ், வீவர் வயது வந்த மூத்த ஆண்கள். தாறா, சிறா, ஜறா வயது வந்த பெண்கள். அசி,சசி, றொபி, கொரி சிறுவர்கள். சீபா, ஜூலியா, தீபா, கைக் குழந்தைகள். இவர்களின் வீடு கேசெவன் றேன்ஜில், மைக்கிறோபயோலஜி லேபிற்கு அருகிலுள்ள அல்பிசியா மரம். யுனிமேல் (ஆண் தனியன்) ட்ரூப் ஆகிய இந்த ட்ரூபிற்கு தலைவர் விக்கி என தெரிய ஒரு வாரம் எடுத்தது. ஒரு இடத்தில் நடக்கும் அட்டகாசங்களுக்கு தலைமைத்துவம்தான் காரணம். வால் முறிந்த, வயது வந்த, பெருத்த ஆணான விக்கியே தலைமைத்துவம். தலைமைத்துவத்தின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அழிவுகள் பொறுக்க முடியவில்லை. எனவே தலைமைத்துவத்தை மாற்ற தீர்மானித்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 2ம் திகதி, கம்பி வலையால் கூடு செய்து அதற்குள், அவர்களுக்கு விருப்பமான கத்தரிக்காயையும் போட்டு வைத்தோம். எங்கே முன்னேறுவதென்றாலும், தலைவரும், அவரைத் தொடர்ந்து உப தலைவரும்தான் முன்னேறுவது வழக்கம். அது போலவே விக்கி முன்னேயும், வீவர் அதைத் தொடர்ந்தும், இராணுவ வீரர்கள் போர்க்களத்தில் பதுங்கி, பதுங்கி முன்னேறுவது போல், அங்குமிங்கும் பார்த்து முன்னேறி கத்தரிக்காய்கள் கிடந்த கூட்டுக்குள் புக, கூட்டை நாங்கள் மூடிவிட்டோம். பின் அரைமணித்தியாலங்களுக்கு பிறகு, உப தலைவரான வீவருக்கு திறந்து விடுதலையளித்தோம். பின் தலைமைத்துவத்திற்கு, மழைத்தண்ணி பட்டு இலகுவில் அகலக்கூடிய நீலமையினால் இரு பெரிய புள்ளடிகளும், கால்களுக்கு பச்சை மையினால் இரு புள்ளடிகளும் இட்டு, ஒரு மணித்தியாலத்திற்கு பிறகு திறந்து விட்டோம். பின்னர் விக்கியை பின் தொடர்ந்தேன். விக்கி பைன் ஆர்ட்ஸ் ஸ்ராப் ரூம் கூரையில் இருந்த தனது ட்ரூப்பை நோக்கி ஓடியது. உடனே மற்றக் குரங்குகளெல்லாம் பயந்து, விக்கியைவிட்டு விலகி ஓடின. விக்கி கூட்டத்தோடு சேருவதற்கு மிகப் பிரயத்தனம் எடுத்தது. ஆனால் மற்றவர்கள் சேர்த்;துக் கொள்ளவில்லை. இரு கால்கள்களில் நின்றும், இரு கைகளில் நின்றும், பிட்டத்தைக் காட்டியும,; மீண்டும் மீண்டும் தனக்கு பயந்து ஓடவேண்டாமென்றும், மீண்டும் கூட்டத்திற் சேர்க்குமாறும்; வேண்டிக் கொண்டது. ஆனால் அவைகள் எவையும் பலிக்கவில்லை. றிஜக்ஸன் றேட் (ஏற்றுக் கொள்ளாமை வீதம்); விக்கியை விட வீவருக்கு மிக்க குறைவாகவே இருந்தது. ஆனால் ஆரம்பத்தில், இதே நிலமை வீவருக்கு இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் வீவரைச் சேர்த்துக் கொண்டன. விக்கியை அதன் காதலி மட்டும் கொஞ்சம் நேரம் நெருங்கிப் பார்த்துவிட்டு, பின் விலகிக் கொண்டது. எதிரிகளிடம் எளிதில் அகப்பட்ட வீரமில்லாத ஒரு தலைமைத்துவமான நீயும் ஒரு தலைமைத்துவமா? உள்ளே என்ன ஆபத்திருக்கறதென்று தெரியாமல் உன்னை நம்பிய கூட்டத்தையே ஆபத்தில் மாட்டப்பார்த்தாயே? நீயெல்லாம் ஒரு தலைமைத்துவமா? என்ற ஆதங்கத்தினால்தானோ விக்கியை ஏறு;றுக்கொள்ளாமல் இருந்திருக்கும். கடன்களும், உதவிகளும், நிவாரணங்களும் கூட இப்பபடித்தான் கத்தரிக்காய்கள் போல இருக்கவேண்டுமாக்கும் என்று நினைக்கிறேன். ராஜ்ஜியம் போனது, பொருள் போனது, கொண்ட மனைவி போனது, பி;ள்ளைகள் போனது, நம்பி;க்கை போனது.

இப்போது நன்றாக அவதானித்துக் கொண்டிருந்தேன். இப்போது முருக்ஸ் பாய்ந்து, வந்து விக்கியைத் துரத்தியது. விக்கி பணிந்து விலகி ஓடியது. வீவரும் விலகியது. நான் உடனே ;எல்லோரையும் நோக்கி ~நல்ல காலம் பிறந்துவிட்டது. நல்ல காலம் விறந்து விட்டது|, தலைமைத்துவம் மாறிவிட்டது| என்று கூவிக்கொண்டு ஓடினேன். இனி கண்ணாடிகள் உடையாது. ஓடுகள் நொறுங்காது, கூரைகள் ஒழுகாது. பழங்கள் கிழங்குகள் களவு போகாது. பூக்கள் பிய்க்கப்படாது. கிளைகள் முறிக்கப்படாது. என்று கூவிக் கூவி ஓடினேன். ஒரு ராஜ்ஜியத்தின் தலைவிதியை புள்ளடிகள்தான் தீர்மானிக்கின்றன. ஏன் புள்ளடிகள் இட வேண்டும்? என யோசிக்கிறேன். புள்ளடி என்பது கூடாது, வேண்டாம் என்பதைத்தானே குறிப்பது வழக்கம். எதை வேண்டாம் என்று புள்ளடியிடுகிறார்கள். துவேசம், அசமத்துவம், வன்பு, கலகம், யுத்தம் வேண்டாம் என்றுதானே புள்ளடியிடுகிறோம். ஆனால் இவைகள் மீண்டும் புள்ளடிகளுக்குப் பின் வருகிறதே. அப்படியென்றால் வேண்டாம் என்பது அர்த்தத்தை வேண்டும் என்று மாற்றிக்கொண்டதா? அல்லது வேண்டாம் என்பது வேண்டும் என்று புள்ளடியிடுகிறார்களா? என்ன ஒரு ஒற்றுமை. தலைமைத்துவங்கள் மாற புள்ளடியிடுகிறோம். நிலவுகளும் நட்சத்திரங்களும் இன்னும் எறிக்காத ஒரு காரிருளில், ஒரு சின்னஞ்சிறு மின்மினிப் பூச்சியினால் தாறுமாறாய், கோடிழுத்து உமிழப்படும் அற்பாயுளுடன் காற்றிலே கரைந்து போகக் கூடிய ஒளிக் கீற்றின் நம்பிக்கையுடன், இனி பூக்கள்;, காய்கள். பழங்கள். ஓடுகள், மின்சார, தொலைபேசி இணைப்புக்கள் அழிவுக்குட்படாது என்று நானும் புள்ளடிகள் போட்டேன். இந்த நிகழ்வை அன்று இரவே ஜேர்மன் விஞ்ஞானிக்கு தெரிவித்தேன்.

பொழுது விடிந்தது. உதய சூரியன் தன் கிரணங்களைப் பரப்ப பொழுது விடிந்தது. நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன், குயில்கள் பாட பொழுது விடிந்தது. விடியும் இந்நாள் நன்நாளாய் அமைய வேண்டும் என்ற யானையின் தும்பிக்கை நம்பிக்கையோடு சேவல்கள் கூவ பொழுது விடிந்தது. கதிரையில் இருப்பவர்கள் மாறுவார்;கள் அல்லது மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கையோடு கட்டியக்காரனின் பறைச் சத்தம்போன்று காகங்கள் கரைய பொழுது விடிந்தது.

பீல்ட் நோட் புக்கை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவதானங்கள் தொடங்கும் "ட்ரான்;செக்ட்; லைன்"; தொடக்கத்தில் சைக்கிளை சாத்திவிட்டு, கெம்பஸ் ட்ரூப் இரவில் தங்கும் கேசெவன் றேன்ஜில் இருக்கும் அல்பீசியா மரத்தடிக்கு போகிறேன். அசியும், றொபியும் துள்ளிக் குதித்து எனக்கு பல்லிளித்தன. முருக்ஸை தேடினேன். முருக்ஸ் பக்கத்திலிருந்த மாமரத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. பின் கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களை ஒரு கடி, இரு கடிகளுடன் வீசத் தொடங்கியது. பின் பக்கத்திலிருந்த விலங்கியல் ஆய்வுகூடத்தில் தனது நாற்பத்தியிரண்டு கிலோ உடம்பை தூக்கிக்கொண்டு ஓட்டின் மேல் பாய்ந்தது. நிச்சயமாக ஐந்தாறு ஓடுகளாவது உடைந்திருக்கும். பின் கெம்பஸையும் விவசாயப் பண்ணையையும் எல்லையிடும் சுவர்மேல் பாய்ந்து தனது ட்ரூப்பை நோக்கி கத்தியது. உடனே குட்டிகள் வயிற்றைக் பற்றிப் பிடித்து தொங்க மற்றக் குரங்குகள் எல்லாம், தலைமைத்துவத்திற்கு பின்னால் அணிவகுத்தன. இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தோட்டத்து காவலாளிக்கு விளங்கிவிட்டது. அந்த காவலாளிக்கு உத்தியோகம் கொடுத்ததே விக்கியின் அரசாங்கம்தான். இந்த அரசாங்கத்தின் கண்ணுக்குத் தெரியும் முதல் அபிவிருத்தி வேலை இதுதானாக்கும். தடியெடுத்து துரத்த கிழக்குப் பக்கம் ஓடியது. கிழக்குப் பக்கம் துரத்த வேகமாக மேற்குப் பக்கம் நோக்கிய ஓடி, காவலாளியை மறுக்கிவிட்டு, தோட்டத்திதற்குள் புகுந்து, விளையாட்டுக்கள் காட்டத் தொடங்கின.

உலகத்திலே எனக்குப் பிடித்தவைகள், குட்டிப் பூனையும். குட்டி நாயும், குட்டி யானையும், குட்டிக் குரங்கும், குழந்தைப் பிள்ளையுமாகும். இவையெல்லாம் கடவுளின் சத்தங்களைக் கேட்கிற பல வழிகளில் சில வழிகளாகும். றிவாவும், ஜெனியும் விளையாடும்போது பதினோராயிரம் வோல்டேஜ் கரண்ட் கம்பியை, ஆபத்திருக்கிறதென்று தெரியாமல் பிடித்து, ஒரு ஏப்ரலின் பதினான்காம் திகதி, என் கண் முன்னாலேயே கருகி இறந்து விட்டார்கள். இது என்னைப் பாதித்தது. எனது ஆய்வுப் புத்தகத்தை இந்த இரு குட்டிக் குரங்குகளுக்கும்தான் நான் சமர்ப்பணம் செய்தேன். npஜனியின் உடலை பாடம் பண்ணி லேபில் வைத்திருக்கிறேன். போமலின் கண்ணாடித் தொட்டியில் கிடக்கும் ஜெனியை ஒவ்வொரு நாளும் நான் பார்ப்பதுண்டு. ஜெனி துள்ளிக் குதித்து விளையாடி, புரளும் பிரமைதான் என் கண்ணுக்குள் இன்னும் இருக்கிறது. குட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சரித்திரம் சொல்லும். எனது மாமாக்களினதும், சிற்றப்பாக்களினதும், உறவுக்காரர்களினதும் பிள்ளைகளுக்கு பிறந்ததிலிருந்து இன்று வரை நடந்த விடயங்கள் அனைத்தும் எனக்கு தெரிவது போல், அந்தக் குட்டிகளினதும் சரித்திரம் எனக்குத் தெரியும். ஒவ்வொன்றும் புத்தி, சாதுரியம், இயல்பூக்கம் என்பனவற்றில் வேறு வேறான குட்டிகள். அவற்றின் மூக்கின் வளைவின் சிறு வெடிப்பும் கண்களின் மயிர்களின் அடர்த்தியும் வித்தியாசப்பட்டு கவிதையாய் கதைகள் பேசும். அசி, றொபி, சீபா, தீபாவெல்லாம் என் விருப்புக்குரிய குட்டிகள்தான். விரிவுரைகள் நடக்கும்போது, ஜன்னல் கண்ணாடியூடாக புதினம் பார்த்து, அமைதியாக விரிவுரைகளை கேட்டுக் கொண்டிருக்கும். சில வேளை ஜன்னல் கண்ணாடிகளை தட்டிவிட்டு சத்தத்தை உண்டாக்கிவிட்டு, பல்லிழித்து ஓடும். விரட்டினாலோ எதிர்த்து விரட்டும். நான் எடிட்டராக இருந்த சயன்ஸ்; ஜேர்னல் வெளியீட்டின்போதும், அவைகளும் அழையா விருந்தாளிகளாக கலந்து கொண்டன. எல்லோரது பேச்சையும் உன்னிப்பாக கேட்டன. அவைகளுக்கு புத்தகம் கொடுத்து போட்டோவும் பிடித்து வைத்திருக்கிறேன்.

தாறாவுக்கும், சிறாவுக்கும், அசிக்கும், றொபிக்கும் மாடுகள் என்றால் ஒரே கொண்டாட்டம். அனிமல் சயன்ஸின் மேயும் மாட்டு மந்தைகளை ஓட ஓடத் துரத்தும,; நாய்க் குட்டிகள் அகப்பட்டாலோ இன்னும் அவைகளுக்கு ஒரே கொண்டாட்டம். தண்ணி பைப்புகளை திறந்து தண்ணீர் குடித்துவிட்டு மூடாமல் போகும். ஓரு வேளை அவைகளுக்கு மூடத் தெரியாமலும் இருக்கலாம். ஒரு தரம் அவைகள் இரு மாணவிகளை கடிக்கப் போனதாக, அந்த மாணவிகளால் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. நான் சிரித்துக் கொண்டு ~இனி அவர்கள் இப்படிச் செய்யாமல் பார்ததுக் கொள்கிறேன்| என்று சொல்லி அனுப்பினேன். பக்கத்து கிராமங்களிலிருந்தும் இவைகளின் பிரச்சினைகள் வருவதுமுண்டு. நான் அந்த இடங்களுக்கு செல்வதுமுண்டு. அல்லது கூட்டிச் செல்லப்படுவதுமுண்டு. அதுவெல்லாம வேறு கதை. இவைகளின் பிரச்சினைகள் என்பது கிராமங்களுக்கோ அல்லது மாவட்டங்களுக்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அது ஒரு சர்வதேசியப் பிரச்சினை.

இவைகள் மற்றவர்களைக் குழப்பினாலும், அவர்களின் வாழ்க்கை எவ்வளவு சீராக இருக்கின்றது. என்ன ஒரு சீர்மை. உலகத்திலே மனித வாழ்வைத் தவிர எல்லாம் ஒரே சீர்மையைத்தான் பூண்டு கொண்டிருக்கின்றன. மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்வதைவிட. இவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன. காலையில் ஐந்து முப்பதுக்கு எழும்பி கண் விழித்து, அல்பீசியா மரத்திலிருந்து. கத்தா மரத்திற்கு தாவி, பின் எட்டு முப்பது மணிவரை இலைக்காம்பையும். இளந் தளிர்களையும் சாப்பிட்டுவிட்டு, பின் கெமிஸ்ட்ரி லேபிற்கு பக்கத்திலிருக்கும் தொட்டியிலிருக்கும் நீரருந்தி, பின் குறுப் குறுப்பா, பிரிந்து. அடித்து, பிடித்து. கடித்து, பயந்து, பாய்ந்து, பதுங்கி, விளையாடி, சாகசம் செய்து, பின் பத்தரை மணிக்கு அல்பீசியாவிற்கு வந்து, பன்னிரண்டு மணியிலிருந்து இரண்டரை மணிவரை தூங்கி பின் ஓடிப்பிடித்து விளையாடி, பின் மாலைச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு. இரவு ஆறு முப்பதிற்கு அதே மரத்திற்கு தூங்கப் போய் காலையில் விழிக்கும். என்ன ஒரு ஒழுங்கு. ஒரு கட்டுப்பாடு.

ஒரு தடவை இந்த பத்தொன்பதும், ஓட்டைக் கழற்றிவிட்டு கொம்பியூட்டர் யுனிற்றுக்குள் இறங்கிவிட்டன. குரங்குகள் விளையாட்டுக் காட்டத் தொடங்க, என்னை எல்லோரும் தேடத் தொடங்கியிருக்கின்கிறார்கள்;. பின்னர் அவைகளாகவே மனம் மாறி, வெளியே வந்து விட்டன. அன்று அந்த நூற்றுக் கணக்கான கொம்பியூட்டர்களை அன்ரசீட்தான் பாதுகாத்தது. தலைமைத்துவத்;தினால்தான் ஓடுகள் கழற்றப்படுவது வழக்கம்.

அன்று ஒக்டோபர் பதிமூன்றாம் திகதி பதொலொஜி பரீட்சை முடிந்து, பரீட்சை மண்டபத்திலிருந்து இறங்கி வருகிறேன். நான்கைந்து பேர் வெளியே எனக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். எனது குரங்குகளிலொன்றுக்கு பிரச்சினை என்று என்னை அழைத்துககொண்டு போக வந்திருந்தார்கள். லைப்றறிறக்கு முன்னால் சிறிய கூட்டம் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தது. நான் போக வழி விட்டார்கள். நாற்பத்தியிரண்டு கிலோ உடம்புடனும். ஐந்தரையடி உயரத்துடனும் முறுக்ஸ் அடியற்ற மரம்போல உடம்பை சாய்த்து கிடந்தது. என்னை விழித்தது, விழித்து, கண்ணை சிமிண்டி, சிமிண்டி பார்த்தது. மூக்கினால் கொஞ்சமாக இரத்தம் வந்து நின்றிருந்தது. இவைகள் விபத்தில் மாட்டினாலும், உடனே முதலுதவி;க்கு போகவியலாது. அவையெல்லாம் எம்மைச் சுற்றி எதிரியாக நினைத்தால், நாங்கள் அதே கதிதான் .

மெல்ல குரங்குக்கு கிட்ட போய் குனிந்தேன். வாலைத் தொட்டேன். எந்தவித உணர்வையும் காட்டவில்லை. இந்த மூன்று அடி வாலை வைத்துக் கொண்டு எவ்வளவு கூத்துக் காட்டியது. இந்த வாலின் சமநிலையால்தானே பூக்களைப் பிய்ப்பதற்கும், பழங்களை பறித்துக் களவெடுப்பதற்கும் ஒரு மரத்திலிppருந்து இன்னொரு மரத்திற்கோ? அல்லது ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்திற்கோ பாய்ந்து திரிந்தது. அன்று கூத்துக்கள் காட்டிய இந்த வால், இன்று அசைவற்று, உணர்வற்று கிடந்தது. கறுத்த பாதத்தில் கிச்சு கிச்சு மூட்டுகிறேன். இங்கேயும் உணர்வில்லை. எவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்துவிட்டு இந்தக் காலின் உதவியினால்தானே வேகமாக பாய்ந்தும், ஓடியும் தப்பியது. மெல்ல மெல்ல தொடையைத் தட்டுகிறேன். உணர்வில்லை. ஆண்குறியை பிடித்து, பிதுக்கிப் பார்க்கிறேன். சிரிப்பு வருகிறது. அங்கேயும் உணர்வில்லை. இளம் காதலர்கள் காதல்மொழி பேசி, கனிந்து உருகி புணர்ந்து இன்பம்துய்த்துக் கொண்டிருக்கும்போது, அந்தக் காதலனை அடித்துவிரட்டிவிட்டு, எவ்வளவு தரம் இந்தக் குறியினால் பாலியல்வல்லுறவு செய்திருக்கும், அந்த ஆண்குறி இன்று தன் குறியிழந்து கிடக்கிறது. இப்போது நெஞ்சில் கிள்ளினேன். முறுக்ஸ் திரும்பியது. உணர்வைக் காட்டியது. ஸ்பைனல் கோட் டெமேஜ் என்று சுற்றிநின்றவர்களிடம் சொன்னேன்.

அண்ணாந்து பார்க்கிறேன், உயர்ந்த, பெரிய, நிறைய கிளைகளைப் பரப்பிய மருதமரம் அது. அந்த மரத்திலிருந்து இடுப்பு அடிபட வழுந்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டேன். இப்போது, ஒரு கம்பை எடுத்து முருக்ஸிடம் நீட்டினேன். முருக்ஸ் தன் இரு கைகளினாலும் பற்றிக் கொண்டது. உடனே முருக்ஸை கம்பின் உதவியுடன் இழுத்துக் கொண்டு, நிழலில் படுக்க வைத்துவிட்டு, எனிமல் சயன்ஸ் டிப்பார்ட்மென்டில் உள்ள வெற்னரி சேர்ஜனிடம் போய் ஸ்பைனல் கோட் டெமேஜ் விசயத்தைச் சொன்னேன். ~நான் வந்து றீட் பண்ணுறேன். ஆனா கடிக்காம பார்த்துக்கணும். உங்களை அதுக்கு தெரியும்தானே?| என்று சேர்ஜன் கேட்டார். நான் சிரித்துக் கொண்டு ~எனக்கு அவங்களத் தெரியும். ஆனால் அவங்களுக்கு என்னத் தெரியுமெண்டு உறுதியா தெரியாது| என்றேன். சேர்ஜனும் சிரித்தார். நான் காட்போட் மட்டையினால் அந்த நான்கரை அடி முருக்ஸின் வாயை கையினால் அமத்திப் பிடிக்க, மறுகையினால் அதன் இரு கைகளையும் பிடிக்க, சேர்ஜன், நான் முன்பு செய்தது மாதிரி, ஒவ்வொரு அங்கமாக தொட்டுப் பார்த்தார். எலும்பு முறிவுகள் ஏதாவது இருக்கிறதா? என்று சோதனை பண்ணிப் பார்த்தார். எதுவும் இல்லை. ஸ்பைனல் கோட் டெமேஜ்தான்| என்றார். ~இதுக்கு ட்ரீட்மென்ட் இல்ல. பெட் றெஸ்ட்தான் பெட்டர் வே| என்றார் சேர்ஜன். உண்மையில் மனிதன் என்றால் ஆறு மாதம், பெட் றெஸ்ட் எடுத்தால் போதும். ஆனால் இந்த வாய் பேச முடியாத விலங்குகள் றெஸ்ட் எடுக்க முடியாதே. மனிதன் என்றால் வாய்விட்டு எனக்கு அப்படி இருக்கிறது, இப்பபடி வலிக்கிறது என்றல்லாம் சொல்லுவான். ஆனால் தாங்களே தங்களுடைய வேலையைப் பார்க்கும் ,சுயகௌரவம் உடைய விலங்குகளால் அப்படி முடியாதே. விலங்குகளிலேயே மனிதன்தான் மிக நீண்டகாலப் பெற்றார்ப் பராமரிப்பை உடையவன். தங்கி வாழ்பவன். ஆறு வாரங்கள் தொடக்கம் ஆறு மாதங்கள் வரை முடிவடையும் இவைகளின்; பெற்றோர்ப் பராமரிப்புக்கும், அதைவிட அறுபது மடங்கு பெற்றோர்ப் பராமரிப்பு தேவைப்பட்ட எனக்கும் எவ்வளவு வித்தியாசம். அதற்கிடையில் நான் வாலில்லாத பகுத்தறிவுப் பெட்டகமாம். பெட்டகத்தில் எதனை மூடிவைக்க? வறட்டுக் கௌரவத்தையும். பழமைக்குள் புழுதிபடிந்து மறைந்து தேய்ந்திருந்து, பின் கண்டெடுத்த இறுமாப்பையுமா?. இப்பொது முறுக்ஸ் கண்களினால் நீர் வழிய என்னை அப்பாவியாய்ப் பார்த்தது. எங்கோ என் மனம் பிய்த்துக்கொண்டு அழப் பார்த்தது. பயப்படாதே நான் இருக்கிறேன். எப்படியும் உன்னைக் காப்பாற்றுவேன் என்றவாறு பார்த்தேன். மனங்கள் பேசிக்கொள்கிறபோது வார்த்தைகளுக்கென்ன வேலை.

அதன் சமூகத்தில், சாதாரண சிசுவாய் பிறந்து, முலை சப்பி பால் குடித்து பல்லிழித்து, பாய்ந்து, கிளைக்கு கிளை தாவி, சிறுவனாகி, கட்டிளம் பருவத்தினாகி, பெண் துரத்தி, காதலித்து, புணர்ந்து, பெரியவனாகி, தலைமைக்கு பணிந்து, தலைமைவிடுத்து மற்றோர் பணித்து, வலியோர் விடுத்து எளியோர் வருத்தி, வலிமையின் கதை முடிய, வலிமையிலும் வலிமையாகி, தனிக்காட்டு ராஜாவாகி, ராஜாங்கம் நடாத்தி, அடக்கி, ஆண்டு, ஆண்டவனாகியிருந்த முறுக்ஸ், இன்று எதற்கும் நாதியற்ற ஜடமாய், தன் கூட்டத்தால் கைவிடப்பபப்பட்ட நிலையில் கிடக்கிறது. இதுக்கு என்ன பழமொழி பொருத்தமோ தெரியாது. சண்டியனுக்கு சந்தியில்தான் சாவோ? அல்லாவிட்டால், அடாது செய்வோர் விடாது கெடுவாரோ? இல்லாவிட்டால் எளியாரை வலியார் வதைக்கும் போது, அவ்வலியாரை வதைக்க வலியாரிலும் வலியார் வருவாரோ? அப்பபடியென்றால் வலியாhர் மருதமரமா? அல்லாவிட்டால் லைப்றறிக்கு முன்னாலுள்ள கற்தரையா? இவைகளும் இல்லாவிட்டால் விதியா? என்று யோசிக்கிறேன். ~பெற்றர் இஸ் ரேகிங் எ றெஸ்ட்| என்றார் சேர்ஜன். ~தாங்ஸ் லொட்| என்று சேர்ஜனை அனுப்பிவிட்டு யோசிக்கத் தொடங்கினேன்.

முறுக்ஸிற்கு, பெட் றெஸ்ட் எங்கே கொடுக்கலாம் என யோசித்தேன். ஏணியை வைத்து கென்ரீன் பிளேட்டில் ஏறி, கூரைக்கும் பிளேட்டுக்கும் இடையிலுள்ள இடைவெளியைப் பார்த்தேன். அது மழையாலும், வெயிலாலும் பாதிப்பு வராத பாதுகாப்பான இடம் மாதிரிப் பட்டது. உயரம் குறைந்த பணிவான நிலம் போன்ற இடங்கள் என்றால் நாய்கள், அலக்சாண்டர் போன்ற வேட்டையாடிகள் கடித்து குதறிவிடும். இப்போது நெருப்பு வாகை இலையினால் மெத்தை செய்து, முருக்ஸை உரப்பையின் மேல் வைத்து மேலே அதனது நாற்பத்தியிர்ண்டு கிலோ உடம்பை தூக்கிக் கொண்டு ஏறி வாகையிலை மெத்தையில் படுக்கப் போட்டேன். அந்த மெத்தை அதற்கு சௌகரிகமாக இருந்திருக்குமாக்கும் என்னவோ என்று நினைக்கிறேன். நீரும் கொண்டு வைத்தேன். ஆனால் குடிக்கவில்லை. இப்போது முறுக்ஸ் தூங்கத் தொடங்கியது. பின்னேரம் கம்பியுட்டர் யுனிட்டுக்கு வரும்போது முறுக்ஸை ஏறிப் பார்த்தேன். முறுக்ஸ் கொஞ்சம் முனகிக் கொண்டிருந்தது. சாப்பிடுவதற்கு கொஞ்சம் இலைகள் போட்டேன். ஆனால் சாப்பிடவில்லை. இரவைக்கு சாப்பிடுமாக்கும் என்று நினைத்து விட்டு, இறங்கி வந்து விட்டேன்.

சனிக்கிழமை விடிந்தது. காலை ஆறு மணி. ஏணியில் ஏறிப் பார்த்தேன். கைகள் மேலே விறைத்து நிற்க, கால்கள் கீழ் நோக்கி துவண்டு கிடக்க, கண்கள் திறந்திருக்க, பற்கள் தெரிய, சிறுநீரின் மேல் முறுக்ஸ் செத்துக் கிடந்தது. பெருநீர்கள் விரவி நிறைந்து கிடந்த நிலத்தை ஆண்டு பெரு வீரனாய் இருந்த ராஜா, சிறுநீரின் மேல் செத்துக் கிடந்தது. எனக்கு கவலையாகிவிட்டது. பின் முறுக்ஸை தூக்கிக் கொண்டு கீழிறங்கி, கென்ரீனிலிருந்து மண்வெட்டி வாங்கி, முறுக்ஸின் எலும்புக் கூட்டை மியுசியத்திற்கு எடுப்பதற்காக, நெருப்பு வாகை மரத்திற்கு கீழ், முறுக்ஸை புதைத்து அடையாளம் இட்டேன். இரவு முழுக்க நித்திரையே வரவில்லை. முறுக்ஸ் இறந்த துக்கம் வேறு. ஆட்சி மாற்றம் பற்றிய எதிர்பார்ப்பு வேறு.

ஞாயிறு விடிந்தது. ஞாயிற்றுக் கதிர்கள் நன்மைகள் கொண்டு வரும், அமைதிகள் கொண்டு வரும், எல்லோரும் இன்புற்றிருக்க மாற்றங்கள் கொண்டு வரும் என்ற நம்பி;க்கையுடன் ஞாயிறு விடிந்தது.

காலை ஆறுமணி. குளிர் அடித்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு, nஉறாஸ்டலிலிருந்து, ஒரு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கெம்பஸிற்கு, நெடிய கறுத்த வீதிக்கூடாக, யானையின் தும்பிக்கை நம்பிக்கையுடன், கதிரைகளின் மாற்றம் நலம் தரும் என்ற நமபிக்கையுடன், குளிருக்கூடாக போகிறேன்.

விவசாயப் பண்ணைக்குள் நுழைந்தேன். காய்கள் பரந்து கிடந்தன. இலைகள் கிழிந்து கிடந்தன. கெம்பஸ் முற்றம் எங்கும், இலைகளும், பூக்களும் சிதறி;க் கிடந்தன. தாவரவியல் திணைக்களத்தின் ஓடுகள் இரண்டு விழுந்து கிடந்தன. மொழித்துறைக்கு முன்னிருந்த திராட்சைக் கொடிகள் பிய்ந்து கிடந்தன. பௌதிகவியல் திணைக்கள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. அப்போது கெம்பஸ் ட்ரூப் டீன்ஸ் சயன்ஸில் அல்லோல கல்லோலப் படுவதைக் கேட்க முடிந்தது. தள்ளிநின்று பார்க்கிறேன். ஒரு பெரிய தடித்த குரங்கு. ஒரு சிறிய குரங்கை கதற கதற புணர்ந்து கொண்டிருந்;தது. வீவருக்கு ஜயவேவா..

இராமன் ஆண்டாலென்ன?
இராவணன் ஆண்டலென்ன?
இடையில் வந்துதித்த குரங்கு ஆண்டாலென்னன?
விக்கி ஆண்டாலென்ன?
முறுக்ஸ் ஆண்டாலென்ன?
வீவர் ஆண்டாலென்ன?

நேரம் நள்ளிரவு 2.30 மணி. மீண்டும் வெள்ளைநிற ஜன்னலின் கம்பிகளினூடாக தூரத்தேயிருந்த பெண்கள் விடுதியைப்; பார்க்கிறேன். எல்லா அறைகளினதும் வெளிச்சங்கள் அணைக்கப்பட்டிருந்தன. மெர்க்குரி விளக்குகூட எரிய முயற்சித்து, மீண்டும் அணைந்து கொண்டேயிருந்தது. ஒளிர முயன்று தோற்றுக் கொண்டே இருந்தது. இன்னும் ஒளிரவேயில்லை. எப்போது ஒளிருமோ, எப்போது இருள் போகுமோ? எப்போது விடிவு கிடைக்குமோ? நிலவுகளும் நட்சத்திரங்களும் இன்னும் எறிக்காத ஒரு காரிருளில், ஒரு சின்னஞ்சிறு மின்மினிப் பூச்சியினால் தாறுமாறாய், கோடிழுத்து உமிழப்படும் அற்பாயுளுடன் காற்றிலே கரைந்து போகக் கூடிய ஒளிக் கீற்றின் நம்பிக்கையுடன். ~தி என்ட|;, என்று முடித்து விட்டு, எழுதிய கட்டுரையை பைலுக்குள் போட்டுவிட்டு, தூங்கச் செல்கிறேன்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...