Sunday, August 12, 2018

விதைப்பந்துகள்: பூமிப்பந்துக்கான உரமும் மரமும் வரமும்


.எம். றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்
அறிமுகம்: இன்றைய எமது அதீத நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை முறை காரணமாக இயற்கை வளங்கள் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. அதிலும் காடுகள் பெரும் அழிவை எதிர்கொண்டுள்ளனநாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களின் உற்பத்திக்குப் பின்னாலும் காடுகளும் அதன் பல்வேறு தாவர, உயிர் இனங்களும் பலிகொடுக்கப்படுகின்றன. இவ்வாறு அழிக்கப்பட்ட மரங்களை, காடுகளை மீளுருவாக்க குறுகிய காலத்தில் வளரும் பிறநாட்டு மரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த மரங்கள் எமது மண்ணிலுள்ள சுதேச இனங்களுக்கு போட்டியாகி இறுதியில் அவைகளை நிரந்தரமாக அழித்தும்விடுகின்றன.

காடுகள் என்பது மனிதன் உருவாக்கியதும், உருவாக்குவதும் அல்ல. கணக்கிலடங்காத பறவைகள், விலங்குகள், பூச்சிகள், தாவரங்கள் போன்றவைகளால் உருவாக்கப்படுவதே. இவைகள் அபிவிருத்தி என்ற பெயரில் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த காடுகள் அதே வேகத்தில் மீளுருவாக்கம் செய்யப்படவும் வேண்டும். அதே நேரத்தில் பாரியளவிலும், வினைத்திறனாகவும் செய்யப்படவும் வேண்டும். இதற்காக பல முறைகள் நடைமுறையிலுள்ளன. இதில் மிகவும் வினைத்திறனானதும், இலங்கைக்குப் பரிச்சயமற்றதுமான ஒரு முறைதான் விதைப் பந்துகள் முறையாகும்.

விதைப்பந்துகள்  எனப்படுவது பூமி பந்துகள் என்று அழைக்கப்படும் களிமண் பந்துகளாகும்மரங்களையும், காடுகளையும் இலகுவாகவும், விரைவாகவும் உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மிகவும் புராதன எகிப்திய நாட்டு முறையாகும். ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பழங்குடிகளாலும் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எரிமலை சாம்பல் கலந்த பகுதிகளில் விமானங்களிலிருந்து விதைப்பந்துகளை தூவி இலகுவாக காடுகளை உருவாக்கினர். இதில் ஜப்பானிய தாவரவியல் அறிஞர் மசனோபு புகுகோவின் விதைப்பந்து மீள்கண்டுபிடிப்பும் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. பலவருட ஆய்வுக்குப் பிறகு புகுகோ அரிசி, பார்லி, காய்கறி, பழங்கள், செய்வதற்கான முறைகளை உருவாக்கினார். இங்கு சிறியளவு நிலம் குழப்பப்படுவதுடன். பசளையும் குறைவாகவே தேவைப்பட்டது.

விதைப் பந்து என்பது செம்மண் அல்லது களிமண் மற்றும் பசுஞ்சாணம், இயற்கை உரம் போன்றவற்றை விகிதசமனாக கொண்ட கலவையால் உருவாக்கப்படும் உருண்டையாகும். இதன் நடுவில் பயன்தரும் மரங்கள், தாவரங்கள், மலர்கள், மூலிகைகள் போன்றவவற்றின் விதைகள் பெரும்பாலும் வைக்கப்படும். }வரம் வளர்வதற்கு தேவையான நீர், போசணைப் பொருட்கள், நுண்ணுயிர்கள் போன்றவற்றைக் கொண்ட விதைபந்தில் உள்ள விதைகள் ஓரு வருடம் வரை முளைத்திறன் உடையதாக இருக்கும். அத்துடன் களிமண்ணில் கலந்துள்ள சாணம், நுண்ணுயிர்களின் தொழிற்பாட்டை கூட்டி தாரவத்தின் வேர், மண்ணில் எளிதில் செல்லும் வகையில் மண்ணை பக்குவப்படுத்தும். நாம் அன்றாடம் சாப்பிடப்பயன்படுத்தும் அல்லது பயன்படுத்தும் பழங்கள், காய்கறிகள், தானியங்களிலிருந்து விதைகளைச் சேகரித்து, எளிதாக விதைப் பந்துகளை உருவாக்க முடியும். (ஓய்வு நேரங்களில்கூட).

விதை பந்துகளை தயாரிக்க, தேவையான பொருட்கள்: செம்மண் அல்லது களிமண், தரமான மரங்களின் விதைகள், பசுஞ்சாணம் மற்றும் நீர் போன்ற நான்கு பொருட்களே மிகவும் முக்கியமானது. சேதன உரமும் கலக்கப்படுவது வரவேற்கத் தக்கதே. அத்துடன் வெறும் விதைகளை நீண்ட தூரத்திற்கு எறிய முடியாது. சேதனப்பசளையும் களியும் எறியும்போது விதைகளைத் தூக்கிச் செல்லும் கருவியாகப் பயன்படுகின்றது. களியானது விதையையும், சேதனப் பசளையும் சேர்த்து வைத்திருப்பதுடன், நிலத்திலே விழும்போது உடையாமலும் பாதுகாக்கின்றது. அத்துடன் கடுமையான காலநிலைகளில்  விதைகளைப் பாதுகாக்கின்றது. விதைகளைச் சாப்பிடும் எலி, பறவைகள் போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கின்றது. பெரும்பாலும் எளிதில் அணுகமுடியாத இடங்கள், பாதையோரங்கள், கைவிடப்பட்ட இடங்கள் போன்றவைகளில் எறியப் பயன்படும். இங்கு பசுஞ் சாணமும் சேதனப் பசளையும் விதைகள் முளைப்பதற்கு தேவையான போசணைகளைத் தருவதுடன் அத்துடன் தாவரங்கள் உறுதியாக வளர்வதற்கும் உதவுகின்றன.

செய்முறை:
இதில் பல முறைகள் இருக்கின்றன.
5              பங்கு களிமண், 3 பங்கு சாணத்தை, (தேனப் பசளைகள், நன்றாக உக்கிய குப்பைகள், கொஞ்சம் சிறிதாக வெட்டிய கடதாசிகளையும், வைக்கோல்களை, பருத்தி, கம்பளி, உமி, கார்ட்போட் போன்றவைகளையும் இவைகளுடன் பாவிக்கலாம்;). இவைகளை லேசாக 1 தொடக்கம் 2 பங்கு தண்ணீர் தெளித்து கலந்து கோதுமை மாவின் பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்பிசைந்து பந்துகளாக்கிகொள்ள வேண்டும். பந்தின் நடுவே மையப் பகுதியில் மரத்தின் விதையை வைக்க வேண்டும். (விரும்பினால் 3 விதைகளையும் வைக்கலாம்). முதலில் ஒரு நாள் பூராக நிழலில் உலர்த்தி, பின் 1-3 நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். ஏனெனில்; சூரிய வெப்பத்தினால் விதைப் பந்துகள் இறுகுவதன் காரணமாக அவற்றில் வெடிப்புகள் உருவாகாமல் பாதுகாக்கலாம். பின்ன குளிர்ந்த உலர்ந்த இடங்களில் சேமிக்க வேண்டும். விதைப் பந்துகள் பொதுவாக 10 – 80 மில்லிமீற்றர் அல்லது 0.4 – 3.15 அங்குல விட்டமுள்ளதாக காணப்படும்.  200 கிலோ களிமண், 2 கிலோ விதைகள் மூலம் 4000 க்கும் அதிகமான விதைப் பந்துகளை உருவாக்கலாம். களியானது நொறுக்கி நன்றாக அரிக்கப்பட வேண்டும். இறுதியாக விதைப்பந்துகளை காட்டுமண்ணில்  புரட்டுவது, மைக்கோறைசா போன்ற பங்கசுக்களை விதைப்பந்துகளில் பரவச்செய்து விதைகளை இலகுவாக முளைக்கச் செய்யும். அழிந்து வரும் பாரம்பரிய பயிர்கள், மரங்களை பாதுகாப்பதில் விதைப் பந்துகள் முக்கிய பங்கை ஆற்ற முடியும். காட்டு மலர்கள், உணவுத் தானியங்கள், மூலிகைத் தாவரங்கள்  போன்றவைகளையும் உருவாக்கலாம்விதைப்பந்துகளுக்கு ஒரு தாவரத்தின் விதையையும் அல்லது பல தாவரங்களின் விதைகளையம் பாவிக்கலாம். இது கூட்டு நடுகை எனப்படும். அதாவது ஒரு தாவரம் வளரும்போது அதனுடன் வளரும் மற்றத் தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை, பூச்சி பீடைத் தாக்கங்களைக் குறைத்தல் அல்லது விரட்டல், மண்ணைப் பதப்படுத்தல் போன்ற உதவிகளைச் செய்யும். அத்துடன் விதைப்பந்துகளானது மண்வளத்தையும் பெருமளவில் அதிகரிக்கச் செய்கின்றது. விதைப்பந்துகள், பந்து வடிவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெவ்வேறு வடிவங்களிலும் காணப்படலாம். விதைப்பந்துகள் சூரிய வெப்பமான நாளில்தான் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அது உலரும். இல்லாவிட்டால் உலராத ஈரம் காரணமாக உடனடியாக விதைப்பந்தின் உள்ளேயே விதைகள் முழைக்கத் தொடங்கி, துளிர்விட்டு, விதைப்பந்துகள் வீசப்படுவதற்கு முன்னரேயே அவைகளிலுள்ள விதைகள் இறந்துவிடும்.

பல அபிவிருத்தி அடைந்த வட அமரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள், இந்தியா (உதாரணம் தமிழ்நாடு) போன்றவற்றில் இது வெற்றியடைந்த முறையாக காணப்படுகின்றது.
இந்த விதைப் பந்துகளை மழைக் காலத்துக்கு முன்பாக தரிசு நிலங்களிலும் காடுகளிலும் எறிந்துவிட அல்லது போட்டுவிட வேண்டும். மழையின்போது இவை மண்ணோடு மண்ணாக கரைந்து செடிகளும் மரங்களும் இயல்பாக முளைக்கும். மண்ணில் கலந்துள்ள சாணமானது, மண்ணில், நுண்ணுயிர்களை உருவாக்கி, செடியின் வேர், மண்ணில் எளிதில் செல்ல, ஏற்ற வகையில், மண்ணை இலகுவாக இளக்கிவிடும். மாட்டெருவிலுள்ள நுண்ணுயிர்களால் வெளிவிடப்படும் போசணைப் பொருட்களின் காரணமாக, தாவரத்தின் வேர்கள் தம்மை அம்மண்ணில் உறுதியாக நிலைப்படுத்திக் கொள்ளும். விதைகளானது தங்களது சுற்றாடல் காரணிகளான நீர், பொருத்தமான வெப்பநிலை, வளர்வதற்கு பொருத்தமான நிலை (position) போன்றவைகள் கிடைக்கும்வரை உறங்குநிலையிலேயே காணப்படும். விதைப்பந்துகளை ஏறிந்து பொதுவாக 3 வாரங்களின் பின் விதைகள் நிலத்தின் கீழ் வேர்விட, முளைவிடத் தொடங்கும். பின்னர் இயற்கையின் காலநிலைக்கு முகம்கொடுத்து, மரமாக வளரத் தொடங்கும். அதே நேரம் களி கரைந்து மற்றயவைகளும் வளரத் தொடங்கும். இதற்கு பல நாட்களும், வாரங்களும், மாதங்களும் எடுக்கலாம். இதற்கு மழையின் தன்மையைப் பொறுத்து காரணமாகும்.

வெறும் விதைகளை விதைத்தாலோ அல்லது தூவினாலோ அவை நுண்ணுயிரிகள், விலங்குகள்  போன்றவற்றினாலும், அதீத காலநிலைக் காரணிகளான வெப்பம், குளிர் போன்றவற்றினாலும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கின்றன. பூச்சிகள், எலிகள், பறவைகள் சாப்பிட்டுவிடவும் வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும். ஆனால், விதைப்பந்தில் நீர் பட்டவுடன், அவை இளகுவதுடன், நுண்ணுயிர்களை உண்டாக்கி, நிலத்தையும் இலகுவாக்கி விடும்.
பொதுவாக ஒரு தாவரம் விதையாக தூவப்பட்டு இயல்பாக முளைப்பதுதான் ஆரோக்கியமானது. அப்போது தான் மண்ணில் விதையின் ஆணி வேரும் செங்குத்தாக ஊடுருவிச் செல்லும். இந்த வகையில் ஒரு மரம் எவ்வளவு உயரமாக பூமியின் மேற்பரப்பில் வளர்கிறதோ அவ்வளவு உயரத்துக்கு பூமிக்கு கீழே ஆணி வேரும் ஊடுருவும். ஆனால், சிறு பொலித்தீன் பைகளில் உருவாக்கப்படும்; மரக்கன்றுகளின் வேர்கள் நேராக அல்லாமல் வளைவாகவும் சுருண்டும் இருக்கும். அந்தக் கன்றுகளை மண்ணில் நட்டால் அவற்றின் வேர்கள் பூமியை ஆழமாக ஊடுருவிச் செல்லாமல் பக்கவாட்டிலேயே செல்லும். இதனாலேயே தெருக்களிலும் வீடுகளிலும் நடப்படும் மரங்கள் புயலில் விழுந்துவிடுகின்றன. அதேசமயம் காடுகளில் இயற்கையான விதைப் பரவல் மூலம் வளரும் மரங்கள் உறுதியாக இருக்கின்றன.

மேலும் ஒரு விதை இயல்பாக மண்ணில் விழுந்து வளரும்போது தான் அந்தத் தாவரம் இடம், நீர், சூரியஒளி, நிழல் போன்றவைகளுக்கு ஏற்ப தன்னைத் தானே தகவமைத்துக்கொண்டு வளரும். நீர் குறைந்த அளவு கிடைத்தாலும் கல்சுவர்களில் ஆலமரம் வேர் பிடித்து வளர்வதும், கரைபுரண்டு ஓடும் ஆற்றின் கரையோரத்திலும் கூட நாவல் மரங்கள் தழைத்திருப்பதும் இதற்கு உதாரணங்களாகும். வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு ஒரு வாரம் நீர் பாய்ச்சவில்லை என்றால் வாடிவிடும். ஆனால், அதே வீட்டில் அருகில் புதரில் வளரும் செடிகள் மாதக்கணக்கில் நீர் இல்லாத நிலையிலும் செழித்து வளர்ந்திருக்கும்.

விதைப்பந்து முறையில் எங்கள் சூழலிலும் காடுகளிலும் அழிந்துபோன அல்லது அழிவின் விளிம்பிலிருக்கும் மரங்களை அல்லது பாரம்பரிய மரங்களை (உதாரணமாக புளி, புங்கை, வேம்பு, நாவல், இலுப்பை, ஆலை, தேத்தா, கொன்றை, மகிழம், குன்றிமணி, பூவரசு போன்றவை) அவற்றின்; விதைகளை பாவித்து விதைப் பந்துகளை உருவாக்கலாம். வுpதைகளை விலைகொடுத்து வாங்காமல் மரங்களின் கீழே விழுந்து கிடக்கும், நாளாந்த வீட்டுப் பாவனையில் பாவிக்கும் (உதாரணம் புளி) விதைகளைச் சேகரித்து வைத்து, விதைப் பந்துகளை உருவாக்கலாம். விதைகளில் பதர்களும், மாசுக்களும் நீக்கப்பட வேண்டும்;.

வீசுதல்:
வாகனங்களில் நீண்டநேரம் பயணம் செய்யும்போதும், மலையேறும் போதும், மாணவர்களும், மக்களும் சுற்றுலா செல்லும்போதும், அல்லது நாளாந்தம் வாகனங்களில் பிரயாணம் செய்யும்போதும் (தொழிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதைப் பந்துகளையாவது வீசிவிட்டுச் செல்லலாம்;) மழை காலத்திற்கு முன் அவ்வப்போது மரங்களும் காடுகளும் தேவையான இடங்களிலும், தரிசு நிலங்களிலும் இந்த விதைப் பந்துகளை வீசிவிட்டுச் செல்லலாம்அத்துடன் வீட்டுத்தோட்டங்கள், பயிர்நிலங்கள், வீதியோரங்கள், தரிசு நிலங்கள் போன்றவற்றில் கூட வீசிவிட்டுச் செல்லலாம். வீசியெறியும்போது, 1) வீசியெறியப்படும் இடங்களில் விதைப்பந்துகள் முளைப்பதற்கு நல்ல வாய்ப்புள்ளதாவென்பதையும், 2) இளம் பருவத்தை அடைவதற்கு நல்ல வாய்ப்புள்ளதாவென்பதையும், 3) தாவரமாக முதிர்ந்து வளர்ந்து பூ, பழம், கனி, போன்றவைகளைத் தருவன என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். விதைப் பந்துகளின் வெற்றியானது அது எறிவதற்கு பொருத்தமான காலம், விதைக் கலவை, காலநிலை, மழைவீழ்ச்சியின் தன்மை போன்றவற்றைப் பொறுத்துக் காணப்படுகின்றது. விதைப்பந்துகளுக்கான விதைகளையும், அவை எறியப்படவேண்டிய இடங்களையும், அவை எந்த நேரத்தில் எறியப்பட வேண்டும் என்பதையும் நாம் தேர்வு செய்ய வேண்டும்;.

1 மீற்றர் பரப்பளவிற்கு 10 விதைப்பந்துக்கள் போதுமானது. விதைப்பந்துகளை வீசினால் போதும், அவைகளில் 95 சதமானவை மரங்களாக வளர்ந்து காடுகளாகிவிடும். இதற்கு எந்தவிதப் பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. குறுகிய கால அவகாசத்தில் பல மரங்களை இந்த முறையில் வளர்க்க முடியும். இவற்றிலுள்ள விதைகள் தரையில் உள்ள மண்ணுடன் கலந்து சிறிய செடிகளாக வளர சுமார் 45 நாட்கள் ஆகும். இந்த முறை கால, நேர, செலவுச் சிக்கனம்மிக்க 100 மடங்கு வேகமான முறையாகும்.

வுதைப்பந்துகளால் உருவாகும் நன்மைகள்
1)            கைவிடப்பட்ட நிலங்களை மீண்டும் அழகானதாகவும், பாவனைக்குட்படுத்தக்கூடியதாகவும் மாற்றுவதற்கு
2)            எறிந்த இடங்களில் தாவர விலங்குகளை மீண்டும் கொண்டு வர
3)            மண்ணை போசணையுள்ளதாக்கி மக்களுக்கும் விலங்குகளுக்கும் உணவைக் கொடுக்க
4)            பல சாகியங்கள,; பல குடித்தொகைகளை மீண்டும் அந்த இடங்களில் கொண்டுவர
5)            உயர்நிலங்களின் உயிரிகளை மீளக்கொண்டு வர
6)            நிலம்பண்படுத்த முடியாத இடங்களில் உயிரிகளை மீளக்கொண்டுவர
7)            கேரில்லா கார்டன்ஸ் - இது மனஅழுத்தத்தை குறைக்கின்றது. (குடும்பத்துடன் செய்யப்படுவது).
8)            பெரிய பரப்பில் உழுதுல், நிலம்பண்படுத்தல் அவசியம் இல்லை.
9)            பாரிய மனித வளமும் தேவை இல்லை.
10)          நேரமும், சக்தியும், நிதியும் சேமிப்பாகும்.
11)          விதைப்பந்துகள் உருவாக்குவதற்கு விந்தையானது. குசநைனெடல யானது, பரஸ்பர நல்லுறவையும் அதிகரிக்கின்றது.
12)          கல்வி
13)          மகிழ்ச்சி

விதைப் பந்துகள் ஒரு தாக்கமான இயக்கமாக சமூக, பாடசாலை, பல்கலைக்கழக மட்டங்களில் கொண்டு செல்லப்பட வேண்டும். இது மிக மிக எளிய நுட்பமாக இருப்பதனால் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சிறு சிறு குழுக்களாக விதைப்பந்து உருவாக்கத்தில் ஈடுபடவேணடும்;. புhடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்விப் பாடவிதானத்தில் ஒப்படையாக இது கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் பாடசாலை விடுமுறை நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கு விதைப்பந்துகள் செய்வதற்கு பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும். மேலும் சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும். அது துண்டுப் பிரசுரங்கள், வீதி நாடகங்கள் போன்றனவற்றின் மூலம் செய்யப்படலாம்.

இது எங்களது அழிந்துபோன இயற்கை மீட்டெடுக்கும் பெரும் போராட்டம். இதற்கு இயற்கை நேசிக்கும் மனமும், ஆர்வமும், முயற்சியும் இருந்தாலே போதும் விதைப்பந்துகள் மூலம் நாம் காடுகளை உருவாக்கவிடலாம். விதைப்பந்துகள் மூலம் பூமிப் பந்தைக் காப்போம். விதைப்பந்துகளே பேராயுதம். வருகின்ற மழைக்காலத்தை விதைப் பந்துகளுடன் வரவேற்போம்!












பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...