Tuesday, October 23, 2018

உரையாடல் தொடர்கிறது……



20.10.2018 தினகரனின் சாஜித்தின் முத்தாரம் பகுதிக்காகஉரையாடல் தொடர்கிறது...” என்னும் பகுதிக்காக சாஜித் மூன்று கேள்விகளில் ஒரு உரையாடலை நிகழ்த்தியிருந்தார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் ஆழமானதும், என்னை தோண்டியெடுத்து எனது முக்கியமான ஒரு பக்கத்தை வெளியுலகுக்கு காட்டச் செய்ததுமாய் இருந்தன கேள்விகள்.
மனமார்ந்த நன்றிகள் சாஜித்.

உரையாடல் தொடர்கிறது……

அம்ரிதா ஏயெம் என்னும் புனைப்பெயர் கொண்ட .எம் றியாஸ் அகமட் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையின் சிரேஸ்ட விரிவரையாளராக பணியாற்றுகிறார். இலக்கிய வடிவத்திலும் இயங்குதலின் செயற்பாட்டாளராகவும் இவரது பயணம் மிக நீண்டது. முத்தாரம் பகுதிக்காக மூன்று கேள்விகளைக் கேட்டேன்.

1) எழுத்துச் செயற்பாடுகள் ஒருபுறம் இருக்க, விதைகள் எறியும் பசுமைப் புரட்சி பற்றி சொல்லுங்கள்?

எழுத்திற்கும் வாழ்விற்கும் தொழிலுக்கும் பெரிய வித்தியாசத்தை வழமையாக நான் உணர்வதில்லை. விதைப்பந்துகள் என்பது மூன்று பங்கு களியும்> ஒரு பங்கு பசுஞ்சாணமும் கலந்து ரொட்டிக்கு மாவு பிவைசதுபோலு உருண்டையாக்கி அதன் நடுவில் ஒரு விதையை வதை;து ஒரு நாள் நிழலிலும்> பின்னொரு நாள் வெயிலிலும் காயவைத்து> அதனை சேமித்து> பின்னர் நாங்கள் வெளியே தூரப் பிரயாணங்கள் செல்லும்போது அதனை மரங்கள்> காடுகள் தேவையான இடங்களில் வீசிவிட்டு செல்லவேண்டும். பின்னர் மழை பெய்ய, களி கரைந்து விதைகள் முழைக்கத் தொடங்கும். பந்துக்குள் விதைகள் ஒரு வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். இது புராதன எகிப்து முறையாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு ஜப்பானியர்கள் இந்த முறை மூலம் காடுகளை வளர்த்து வெற்றியடைந்திருந்தார்கள். ஆனால் இது இலங்கைக்கு பரிச்சயமற்ற முறை. இந்த முறையை இங்கு உருவாக்க வேண்டும் என்று கடந்த ஆறுமாத காலமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு பாரம்பரிய மரங்களின் விதைகளைச் சேகரித்து, பின்னர் விதைப்பந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்களைச் சேகரித்து, விதைப்பந்துகளை உருவாக்கி> அதனது வெற்றித் தன்மையை பரிசோதிப்பதற்காக நான் தற்போத கடமையாற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின், உயிரியல் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் அதனைப் பரிசோதித்தேன். வியக்கத்தக்க வகையில் விதைப்பந்துகளிலிருந்து வேம்பு, புளி, நாவல்அன்னமுன்னா, ஆத்தி போன்ற மரங்கள் வளரத் தொடங்கியிருந்தன. இந்த பரீட்சார்த்ததிட்டம் வெற்றிபெற்ற கையோடு எனது மாணவர்களின் பாடத்திட்டத்திற்குள் விதைப்பந்துகளைப் புகுத்தி அவர்களுக்கு இந்த திட்டத்தை புரியவைத்து பங்குதாரராக்கினேன். அவர்கள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதியையும் சேர்ந்தவர்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு சென்று சுமார் 130 க்கு வகைகளுக்கு அதிகமான பல்லாயிரக்கணக்கான விதைகளைச் சேகரித்து வந்து மலைக்கவைத்தார்கள். இந்த மாத முடிவில் ஆயிரக் கணக்கில் விதைப்பந்துகள் செய்யும் திருவிழா இங்கே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த தமிழிலும், சிங்களத்திலும் வீதி நாடகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் மும்மொழிகளிலும் பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த இசைநடனக் கல்லூரியை சேர்ந்த எனது மாணவர்களும் இதற்கு கைகொடுக்க வந்திருப்பது ஒரு இன்னுமொரு பலமாகும். ;னனொரு புறம் என்னிடம் கற்று தற்போது வேலைசெய்துகொண்டிருக்கும் மாணவர்களும், எனது ஆசிரியர்களும் இதற்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். Nது நேரம் எனது இலக்கிய நண்பர்களும் இதற்குத் தேவையான விதைகளை அனுப்புவதுடன், இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தி இலங்கையை பசுமையானதாக மாற்ற உறுதி பூண்டிருக்கிறார்கள்.

2) விலங்கியலுக்கும் இலக்கியத்திற்குமான உறவு எத்தகையது?

முன்னர் கூறியது போன்றுதான் எனது எழுத்தும், வாழ்க்கையும், தொழிலும் ஒரே நேர்கோட்டில்தான் உள்ளன. 2001ம் ஆண்டுவிலங்கு நடத்தைகள் அல்லது விலங்குகள் தொகுதி ஒன்றுஎன்ற எனது சிறுகதைத் தொகுதிபற்றி அமரிக்க பல்கலைக்கழக மொழியில்துறை பேராசிரியர் சுரேஸ் கனராஜா Third Eye என்ற ஆங்கில சஞ்சிகையில் எழுதும்போதுமானிடவியலாளர் டென்னிஸ் ரெட்லொக் போன்றவர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரைகளையும், களப்புத்தகக் குறிப்புகளையும் நாவல் போன்ற இலக்கியமாக்கியிருக்கிறார்கள். அதுபோல அம்ரிதா ஏயெமும் (நானும்); எனது ஆய்வுக்கட்டுரைகளையும் களப்புத்தகக் குறிப்புக்களையும் இலக்கியமாக்கியிருக்கிறேன்என்று குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மைதான். குரங்குகள், ஓணான்கள், ஆமைகள், பாம்புகள், எலிகள், யானைகள், மான்கள், மீன்கள், கோழிகள், பறவைகள், மரங்கள், காடுகள், விதைகள், கடல்கள், வாவிகள், ஆறுகள், குளங்கள் போன்றவற்றில் ஆய்வுகள் செய்து சர்வதேச சஞ்சிகையில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையே நான் சிறுகதைகளாக்கினேன். ஆனால் இது தமிழில் வித்தியாசமான ஒரு முயற்சியாக இருக்கலாம் என நினைக்கிறேன். இருபது வருட காலமாக பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. அதற்காக நான் அலட்டிக்கொள்ளவும் இல்லை.

3) அதிகமான உங்களது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். கதைகளின் நுட்பம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அழுத்தங்கள் நிறைந்த ஒரு காலப் பகுதியில் பிரச்சினைகளை பெரும்பாலும் பிரச்சினையில்லாமல் சொல்லுவதற்கு குறியீடுகள் பயன்பட்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. நிறைய இடங்களில் குறியீடும் குறிப்பானும் புகுந்து விளையாடியிருக்கும். எனது எந்தக் கதைகளும் நேர்கோடானது அல்ல. அதற்காக அவை முற்றுமுழுதாக இருண்மையானதும் அல்ல. வாசகன் அதனைக் கடப்பதற்கு போதுமான ஒளியை அதனுள் பரவவிட்டிருக்கின்றேன் என்று பேராசிரியர் எம்..நுஹ்மான் எனது தொகுதியின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். எனது விலங்குகளின் உலகம், சுற்றுச்சூழலாயும் அரசியலாயும் சமூகவியலாயும், தத்துவமாயும் வெவ்வேறு தளங்களில் விரியக்கூடியன என்று கருதுகின்றேன். சிலவேளை அதற்குள் எல்லோருக்கும் நுழைய முடியாது என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. அவ்வாறன்று. எல்லோரும் நுழையலாம். காலமும் இடமும் பொதுவாக எங்கும் குறிப்பிடப்படுவதுமில்லை. அதனால் அந்தக் கதைகள் எக்காலத்திற்கும் நின்று நிலைத்தாடக்கூடிய தன்மையையும் பெறுகின்றன. பொதுவான பெயர்களைக் கொண்ட கதை மாந்தர்களே உலாவுவார்கள். மேம்போக்காக அவர்களுக்கு அடையாளங்கள் தெரிந்தாலும், அவர்கள் இனம், மதம். மொழி, புவியியல் எல்லை கடந்தவர்கள். அங்கே இரண்டே இரண்டு அடையாளம்தான். நசுக்குவோன்- நசுக்கப்படுவோன், அடிப்போன்அடிபடுவன், மிதிப்போன் - மிதிபடுபவன். இறுதியாக கூறப்போனால் விலங்கியலாய், சூழலியலாய், சமூகவியலாய், அரசியலாய், வானியலாய், பொருளியலாய், தத்துவவிசாரமாய் விரிந்து காலமும் இடமும் கடந்த, மதமும் இனமும் மொழியும் புவியியல் பரப்பும் கடந்த நேர்கோடற்ற, பல்வேறு இசங்களையும் மொழியின் பல்வேறு வகையான சாத்தியப்பாடுகளின் பரிசோதனை முயற்சிகளையும் குறியீடுகளையும் உள்வாங்கிய மானிடத்தின் எல்;லை கடந்த அன்பே என் கதைகளின் நுட்பமாயிருக்கலாம் என்பேன்.



பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...