Saturday, October 8, 2011

கண்டல் காடுகள்

முதலாளித்துவ சூழலியற் சிக்கல்
(செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) - 2

கண்டல் காடுகள் (Mongroves).

பச்சை பச்சையாய்
இலைகள் பளபளத்துக் கைகள் காட்டும்.
மிண்டி வேரும் உதைப்பு வேரும்
காவல்காரர்களாய் நிற்கும்.
மீன்கள் மரமேறி
பின் வழுக்கி கீழே விழும்.
நண்டுகளும், நத்தைகளும்
ஊரிகளும், மட்டிகளும்
பெருநடையில் படையெடுக்கும்.
புhம்புகளும் முதலைகளும்
ஓடிப்பிடித்து விளையாடும்.
இறால்களும், மீன்களும்
துள்ளிக்குதிக்கும்.
ஒரு பறவை மீன்களைக்
கௌவக் கொத்தும்.
பின்னொரு புறவை முட்டையிடும்
குஞ்சும் பொரிக்கும்.
நாளுக்கு பலமுறை
நீரோ ஏறியிறங்கும்.
குடியானவனின் வாழ்க்கையோ
ஏறியிறங்காமல் ஓட்டும்.
இந்த அற்புத வனம்
அழகுமிகு கண்டல்வனம்.

கண்டல் என்ற சொல் களப்புக்களின் கரையில் வளரும் விசேட இசைவாக்கங்களைக் கொண்ட தாவர இனங்களை பொதுவாக குறிக்கின்றது. உதாரணம்: சிவத்தக் கடண்டல் (றைசோபோறா), கறுப்புக் கண்டல் (புறுகைறா), தேன் கண்டல் (அவிசினியா).

கண்டல் சூழற்றொகுதியில் காணப்படும், வைரம் செறிந்ததும், வித்துக்களில் மிகவும் சிறந்த இசைவாக்கங்களைக் கொண்டதும், வாவி, களப்பு, பொங்குமுகங்கள் போன்றவற்றின் அலையடிப்பு பிரதேசங்களுக்கு இடையில் வளர்வதுமான தாவரங்களை கண்டல்கள் என ஓரளவு வரையறுக்கலாம். இலங்கையில் ஏறத்தாள 40 இனங்கள், மரங்களாகவும், பற்றைகளாகவும், பூண்டுகளாகவும் காணப்படுகின்றன.
குடா, களப்பு, கழிமுகங்கள், பொங்குமுகங்கள் போன்றவற்றின் சேற்றுப் பாங்கான பகுதிகளில், உவர், சேற்று சூழலுக்கு விசேட இசைவாக்கங்களைக் கொண்ட தாவர, விலங்கு குடித்தொகையும், அதன் உயிரற்ற கூறுகளும் கண்டல் சூழற்றொகுதி எனப்படும். கண்டல் சூழற்றொகுதி பல கூறுகளைக் கொண்டதாகும். இதன் சூழற்றொகுதியானது கடல், நன்னீர் சூழற்றொகுதியின் கூறுகளைக் கொண்டள்ளது.

இந்த சூழற்றொகுதி உயர்ந்த உற்பத்தித் திறனை உடையதும், மிகுந்த வளத்தைக் கொண்டதுமாகும். இதன் உற்பத்தித்திறன் மழைக்காட்டின் உற்பத்தித் திறனைவிட அதிகமாகும். அலை ஓட்டங்கள் போசணைப் பொருட்களை மற்றைய சூழற்றொகுதிக்கு விநியோகிப்பதால் கண்டல் சூழற்றொகுதி சக்தி உதவியளிக்கும் சூழற்றொகுதி எனவும் அழைக்கப்படுகின்றது.

இலங்கையின் மிகப்பெரிய கண்டல் சூழற்றொகுதி புத்தள-டச்சுக்குடா-போர்த்துக்கல்குடா தொகுதியாகும். இரண்டாவது பெரிய தொகுதி மட்டக்களப்பு என நம்பப்படுகின்றது. இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 0.1 சதவீத கண்டல் சூழற்தொகுதியைக் கொண்டுள்ளது.
1992ம் ஆண்டு இருந்த இலங்கையின் கண்டல் காடுகளின் பரப்புக்கள் பின்வருமாறு: ஹெக்டேயர்களில்.

அம்பாறை-292, மட்டக்களப்பு-1421, காலி-187, கம்பஹா-122, ஹம்பாந்தோட்டை-539, யாழ்ப்பாணம்-260, களுத்;துறை-70, கிளிநொச்சி- 312, குருநாகலை-1261, மாத்தறை-6, முல்லைத்தீவு-463, புத்தளம்-2264, இரத்தினபுரி-1461. மொத்தம் 8687 ஹெக்டேயர்களாகும்.
இலங்கையின்; கண்டல் தாவரங்களை எடுத்து நோக்கினால் றைசோபோறாவில் இரு இனங்களும், சிரியொப்ஸ் (சிறுகண்டல்) இல் இரு இனங்களும், சொனறேசியாவில் (கிண்ணமரம்) மூன்று இனங்களும் காணப்படுகின்றன. அவிசினியா (கண்ணா)வில் இரு இனங்கள், ஏஜிசிறஸ் (வெற்றிலைக்கண்ணா)வில் ஒரு இனமும்,, அகான்தஸ் (முள்ளி)யில் ஒரு இனமும், எக்ஸோகரியா (தில்லை)யில் ஒரு இனமும், சைலோகாபஸ் (கடல்மாங்காய்)யில் இரு இனமும், கிளடென்றோன் (பிச்சு வெள்ளாத்தி)யில் ஒரு இனமும் காணப்பணடுகின்றன. இங்கு காணப்படும் ஒரே ஒரு பாமே குடும்பத் தாவரம் நிபா புறுட்டிகன்ஸ் ஆகும். ஒரேயொரு பன்னம் அக்றொஸ்ரிகம் (மின்னி)யாகும். ஹெரற்றீரா (சோமுந்திரி), டொலிகோடென்றோன் (வில்பாதரி), செபரா மங்கா (நச்சு மாங்காய்), டெரிஸ் (தேக்கில்) போன்றவையும் காணப்படுகின்றன.

வுpலங்குகளை நோக்கும்போது பறவைகள், இறால், நண்டுகள், மொலஸ்காக்கள், பொலிக்கீற்றாப் புழுக்கள், மீன்கள் போன்றவற்றை காணலாம்.

கண்டல்காடுகளின் பயன்கள்:
ஆதிகாலத்திலிருந்தே மனிதன் இந்த சூழற்றொகுதிக்கு தீங்கு விளைவிக்காமல் நிறைய நன்மைகளைப் பெற்று வந்திருக்கின்றான். இங்கு சில பயன்களை பார்ப்போம்:

மீன்கள், இறால், மொலஸ்காக்கள் உணவுக்காக பிடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அக்ரோஸ்ரிக்கத்தின் இளந்தளிர்கள் கறி சமைக்கப்பயன்படுகின்றன. நிபாவிலிருந்து அல்கஹோல், விநாகிரி என்பன தயாரிக்கப்படுகின்றன. அவிசினியா, றைசோபோறா போன்றவை விறகாகப் பயன்படுகின்றன. றைசோபோறாவில் இருந்து பெறப்படும் காபன் கரியானது மிக உயர்நத வினைத்திறனை உடையது. கண்டல் மரங்கள் உயர்ந்த தனின் அளவைக்; கொண்டுள்ளதால் இயற்கையாகவே பூச்சி புழு அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது. எனவே இது கட்டட வேலைகளுக்குக்;, கம்பாகவும் பயன்படுகின்றது. றைசோபோறா, புறுகைறா, அவிசினியா போன்றவற்றிலிருந்து பெறப்படுகின்ற வெட்டு மரங்கள் படகுகள் கட்டடம், மீன்பிடி உபகரணங்களை செய்யவும்; பயன்படுகின்றது. இங்கு காணப்படும் பொதுவான மீன்பிடிமுறை டிசரளரிடைந1 மீன்பிடி முறையாகும். நீர்;ப்பகுதிகளில் கண்டல் மரங்கள் வெட்டப்பட்டு போடப்படுகின்றன. போடப்பட்ட மரத்தின் பகுதிகளை மீன்கள் வாழிடமாகவும், இரைகொல்லிகளிடமிருந்து தப்பித்து ஒழிப்பதற்கும், இனப்பெருக்கத்தில் சில வாரங்களுக்குப் பின், போடப்பட்டட மரங்களைச் சுற்றி வலை போடப்பட்டு, மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

கண்டல் தாவரங்கள் வீட்டுப் பாவனைப் பொருட்கள், தளபாடங்கள் போன்றன செய்யவும் பயன்படுகின்றன. பெந்தோட்டவில் செபரா, முகமூடி செய்யப்பயன்படுகின்றது. றைசோபோறா, சிரியோப்ஸிலிருந்து பெறப்படும் தனின், வலையை சாயமிட உதவுகின்றது. இது அதன் பாவனைத் தன்மையின் காலத்தைக் கூட்டுகின்றது. இந்த மரங்களின் பட்டைகள் அகற்றப்பட்டு, பைகளில் அடைக்கப்பட்டு கிராமப் புறங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன. ஓவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான கிலோ பட்டைகள் அகற்றப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

கண்டல் சூழற்றொகுதியில் உள்ள மொலஸ்காக்களின் ஓடுகள் சுண்ணாம்பு உற்பத்திக்குப் பாவிக்கப்படுகின்றன. அவிசினியா போன்றவற்றின.; இலைகள் விவசாயத்தில் பசுந்தாட் பசளையாகப் பாவிக்கப்படுகின்றன. கண்டல் நிலங்கள் பெரும்பாலும் மீன் வளர்ப்புக்கும், இறால் வளர்ப்புக்கும் மிகவும் உகந்ததாகும். இறால் வளர்ப்புக்கு உவர் நீர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

கால்நடைகளின் தீவனமாகவும், இதன் இலைகள் பாவிக்கப்படுகின்றன. கிண்ணமரத்தின் சுவாச வேர்கள் தக்கை மூடிகள் உற்பத்திக்குப் பயன்படுகின்றன. எலும்பு முறிவைக் குணப்படுத்த றைசோபோறாவின் பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. காயங்களை சுகப்படுத்தத புறுகைறா, கிண்ண மரங்களின் இலைகள் பாவிக்கப்படுகின்றன. தோல் வியாதிக்கு தில்லை மரத்தின் பால் பயன்படுத்தப்படுகின்றது. கண்டல் சூழற்றொகுதியில் இருந்து தேன், மெழுகு போன்றவைவைகள் கூட ஒரு குறித்த அளவில் எடுக்கப்படுகின்றன. மீனுக்கு உணவாகப் பயன்படுத்தும், புரதம் நிறைந்த பெரிய பொலிக்கீற்றாக்கள் இங்கு பெறப்படுகின்றன.

கண்டற் சூழற்றொகுதியானது கரையோர மீன்பிடியில் பிரதான பங்கை வகிக்கின்றது. இது இளம் கடல் குஞ்சு மீன்களுக்கும், வளரும் இடமாகவம். உணவளிக்கும் இடமாகவும் பயன்படுகின்றது. கண்டல் சூழற்றொகுதி இல்லாத இடங்களில் பிடிபடும் மீனின் அளவு வழமையாகக் குறைவாகக் காணப்படுகின்றது. ஏனெனில், கண்டல் தாவரங்கள் வாழிடமாகவும், எதிரிகளிடமிருந்து ஒழிப்பதற்கும், பயன்படுவதோடு, அதிலிருந்து விழுகின்ற, இலைகள், குச்சிகள் என்பவற்றைக் கொண்டு கூடுகள் கட்டி அவைகளிலேயே முட்டையிட்டு ஒட்டி வைக்கின்றன. மட்டக்களப்பு வாவியில் றியாஸ் அஹமட், மீனா தர்மரெத்தினம் (2003) இரு உள்நாட்டு இனத்திற்குரிய மீன்களில் மேற் கொண்ட ஆய்வுகள், கண்டல் தாவரங்களையொட்டிய பகுதிகளிலேயே அதிகளவான கூடுகள் கட்;டப்பட்டிருந்தன என்று தெரிவிக்கின்றன. இதே மாதிரியான முடிவுகளையே பின்ரோ, புஞ்சிஹேவ (1996), நீர்கொழும்பு வாவியில் பெற்றிருக்கின்றார்கள்.

நீரில் விழுந்து அழுகும் போசணை மிகுந்த தாவரப் பாகங்கள், அலை அடிப்பினால் நுண்ணங்கிகளுக்கு கொடுக்கப்பட்டு, இந்தப் போசணைப் பதார்த்தங்கள் அழுகலுக்கு உட்பட்டு, அழுகல் வளரி உணவுச் சங்கிலியின் முதற் கொழுவியாக தொழிற்பட்டு, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பெரிய மீன்களை போசிக்க உதவுகின்றன. றைசோபோறாவின் மரத்தில் 6.1 சதவீதமும், இலையில் 3.1 வீதமும் புரதம் காணப்படுகின்றது. இவை நீரில் விழுந்து 12 மாதத்திற்குப் பின், இதன் புரத உள்ளடக்கம் 22 சதவீதமாக அதிகரிக்கின்றது.

கண்டல் காடுகள். ஆற்று முகங்கள், கழிமுகங்கள், வாவிகளின் கரையைப் பாதுகாப்பதுடன் அடையல்களை வேர்கள்; பிடித்து வைத்திருப்பதனால் வாவிகளையும், முருகைக் கற்பாறை, கடலின் புற்படுக்கை என்பவற்றiயும் அடையல்கள் சேராமல் பாதுகாக்கின்றது. இயற்கையாக நிலம் வளர்க்கும் செயற்பாட்டில் சூறாவளியின் பாதிப்பு என்பவற்றையும் தடை செய்கின்றன. கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது, உயிh,; பொருளாதார சேதங்களை இந்தக் கண்டல் காடுகள் பெருமளவில் குறைத்திருக்கின்றன (உதாரணம்: அந்தமான் தீவுகள்).

கண்டல் தாவரங்கள் சூழலை மாசுபடுத்தும் காரணிகளை உறிஞ்சும் தகவுடையது. இதனால் வாவிகளில் மாசுபடலை குறைக்கின்றது. கண்டல் காடுகள் மீன்பிடித்து, படகு விட்டு, பறவை,, விலங்குகளை இரசித்து பொழுது போக்கும் ஒரு இடமாகவும், பாவிக்கப்படுகின்றது. வேறு நாடுகளிலிருந்து இடம் பெயரும் பறவைகளுக்கு புகலிடம் அளிக்கின்றன. இவையெல்லாவற்றையும் விட, ஆர்வமுள்ள பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறந்த ஒரு பரிசோதனை கூடமாகவம் பயன்படுகின்றது.

இலங்கையின் கண்டல்காடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:

மனிதன் என்பவன் சுயநலம் கொண்ட ஒரு சமூகப் பிராணி. எப்போதும் சூழலை தனக்கு ஏற்றாற்போல மாற்றி, அதிலிருந்து எவ்வளவிற்கு நன்மைகளைப் பெற முடியுமோ அவ்வளவு நன்மைகளை பெற்று, அதன் தொடர்ச்சியான நிலவுககைக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாமல் சுயநலமாக இருந்து விடுகின்றான். இலங்கையின் கண்டல்காடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இதுதான் மூலகாரணமாக இருக்கின்றது.

இலங்கையின் கலா ஓயா கண்டல் தொகுதிதான் மிகவும் குறைந்த பாதிப்புக்குள்ளானதாகும். பெந்தோட்டை கண்டல் தொகுதி உல்லாசப் பிரயாண கைத்தொழிலினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. புத்தளம்-கல்பிட்டி பகுதிகளில் உள்;ள கண்டல் தொகுதிகள், இறால் வளர்ப்பினால் பாதிக்கப்ட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தசாப்தங்களாக திட்டமிடப்படாமல் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற இறால் பண்ணைகள், தற்போது பல்கிப் பெருகிய வண்ணமே உள்ளன. இதன் காரணமாகவும் கண்டல்கள் பாரிய பிரச்சினையை எதிர்னோக்கியுள்ளன. இதன் காரணமாக மட்டக்களப்பு வாவியின் அண்டிய காடுகளும், வாழைச்சேனை வாவியின், காவத்தைமுனை கண்டல் காடுகளும் பெருமளவில் இறால் வளர்ப்பிற்காக அழிக்கப்பட்டிருக்கின்றன.

வுடக்கு-கிழக்கு மாகாணங்களிலேயே கண்டல் காடுகள் கண்மண் தெரியாமல் கடந்த ஒரு தசாப்பத காலமாக பாதுகாப்பு காரணங்களினால் பாரியளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு வாவியின் கரையோரத்திலும், வீதிகளின் கரையோரங்களில் உள்ள மரங்கள் வருடத்திற்கு பல தடவைகள் வருடம் அடியொடு வெட்டப்பட்டும் (தில்லை) தீயிடப்பட்டுப் (தைபா) வருவதைக் காணலாம். இதே பிரச்சினையை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று-பொத்துவில் (ஊறணி, திருக்கோவில், தம்பிலுவில்) பிரதான நெடுஞ்சாலையிலும் அவதானிக்கலாம். இதே மாவட்டத்தில் ஒலுவில் பகுதியில் குறிப்பிடத்தக்களவு கண்டல்கள் காணப்படுகின்றன. நடைபெறப்Nபுhகும் துறைமுக நிர்மாணத் திட்டத்தால் அவைகளும் கணிசமான அளவு பாதிக்கப்பட வாய்ப்பிருக்கின்றன. இதே மாதிரியான பிரச்சினையை திருகோணமலை மாவட்டத்தில், புல்மோட்டை, இறக்கண்டி, நிலாவெளி, சாம்பல்தீவு, சல்லி, மட்டிக்களி, கொட்டியாரக் குடாவைச் சுற்றிய பகுதிகள், மூதூர் போன்ற பகுதிகளிலும் அவதானிக்கலாம். பயங்கரவாதப் பிரச்சினைகள் காரணமாக காடுகளுக்கு சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத அன்றாடங் காய்ச்சிகள், தங்கள் வீதிக்கு அருகாமையில் உள்ள கண்டல் வளங்களை (குறிப்பாக விறகு) பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். இதன் காரணமாகவும் கண்டல் காடுகள் பெரும் அழிவை எதிர்நோக்கியுள்ளன.

அதைவிடுத்து, அனுமதி பெறாமல் கண்டல் நிலம் விவசாய நிலமாகவும் மாற்றப்படுதல் (உதாரணம்: படுவான்கரைப் பகுதிகள்-பன்குடாவெளி) நகரவாக்கம், வீதி விஸ்தரிப்ப, உல்லாசப் பிரயாண ஹோட்டல நிர்மாணம், தொழிற்சாலை நிர்மாணம் என்பன கூட கண்டல் காடுகளின் தொடர்ச்சியான நிலவுகைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

நீர்கொழும்பு பகுதியின் டிசரளரிடைந மீன்பிடி முறையினால் கண்டல் காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மட்டக்களப்பு வாவியிலும் நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை தமிழில் தூபமுட்டி மீன்பிடி முறை எனலாம். ஒரு சிலரின் கருத்துப்படி ஒரு குறிப்பிட்டளவில் இந்த மீன்பிடி முறைக்காக கண்டல்தாவரங்களின் கிளைகள் அகற்றப்படும் போது, pசரniபெ விளைவால் தாவரம் மீண்டும் செழித்து வளருகின்றது என்கின்றனர். இந்த முறைகளுக்காக பெரும்பாலும் முழு மரங்களும் அடியோடு வெட்டப்படுவதில்லை;. மேம்போக்காக சில சிறு சிறு கிளைகளே வெட்டப்படுகின்றன. இந்த மீன்பிடி முறையை சாதாரண குடியான மீனவன் செய்யும் போது, அது சூழலியல்சார்ந்த (நnஎசைழnஅநவெயட கசநைனெடல) ஆகிறது. அதுவே இலாப நோக்கு கொண்ட முதலாளிகளின் கைக்கு போகும்போது, சூழலை நோக்கிய அழிச்சாட்டியமாகிறது. சாதாரண குடியான மீனவர்களின், சூழல்சார்ந்த அறிவும், அவர்கள் வாழிடத்தில் இருக்கின்ற உயிரினங்களின் அறிவும் அற்புதமானது. நியம-வடஅமெரிக்க-மேற்கு ஐரோப்பிய-நிரூபிக்கப்பட்ட- விஞ்ஞானபூர்வ எனத் தொடங்கும் சொல்லாடல்களினால் அவர்களால் பூச்சாண்டி காட்டத் தெரியாது. எங்களது அனைத்து கள ஆய்வுகளுக்கும் அடிப்படையை அவர்களின் அறிவிலிருந்துதான் நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கின்றோம்.

உலக மொத்த நிலப்பரப்பில் 1 சதவீதமும், இலங்கையின் மொத்தப் பரப்பில் 0.1 சதவீதமும்; கண்டல் காடுகள் காணப்படுகின்றன. விவசாயம், அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளுவதற்கு மிக ஏராளமாக வேறு நிலங்கள் இருக்க, கண்டல் நிலப்பிரதேசங்களை நாம் அழிக்க வேண்டுமா?. கண்டல் சூழற்றொகுதி அரியபுத்தகங்கள்; நிறைந்த நூலகம் போன்றது. அற்புதமானது. இதனையாவது நாம் பாதுகாத்த எமது சந்ததிகளுக்கு கொடுப்பது எமது தலையாய பாரிய கடமைகளுள்; ஒன்றாகும்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...