Saturday, October 8, 2011

யானைகள்

முதலாளித்துவ சூழலியற் சிக்கல்
(செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) - 01

யானைகள் (Elephants).


உயரக் கிளைகள்
முறிந்து கீழக்கிடக்கும்.
சிறு விலங்குகள்
அரைத்து உண்ணும்.
பதைத்த உயிர்கள்
பாங்காய் பசியாறும்.
காலால் உதைத்து
நீர் கொடுக்கும்.
தகித்த உயிர்கள்
தாகம் போக்கும்.
கோடையின் கொடுமையோ
மெல்லக் குறையும்.
மலையாய் விட்டை
எங்கும் விரவிப்போடும்.
காடு சீராட்டி
உயிர் வளர்க்கும்.
ஊட்டுவதால் தாயாகும்.
உதவுவதால் நண்பனாகும்.
காப்பதனால் காவனாலாகும்.
யானைகள் நம்
சூழலின் தோழனாகும்.

மற்றைய ஆசிய நாடுகளின் வரலாற்றினதும், கலாச்சாலரத்தினதும், நாட்டாரியலினதும், புராணங்களினதும், பகுதியாக யானைகள் காணப்படுவது போன்றே இலங்கையிலும் காணப்படுகின்றது. யானைகள் வணங்கப்படு பொருளாகவும், வேட்டையாடிகளின் இலக்காகவும், மக்களின் சமைதாங்கியாகவும், அதே மக்களுக்கு சுமையாகவும், வளர்க்கும் போது மித்துருவாகவும், மிரளும்போது சத்துருவாகவும்;, அரசர்களின் பெருமைக்குரிய பொருளாகவம், பாகனின் நண்பனாகவும், போர் இயந்திரமாகவும், சமாதானத்தினதும், அன்பினதும், பயத்தினதும், வேட்டையாடப்படுவதன் அடையாளமாகவும் பல பாத்திரங்களை வகிக்கின்றன. யானையானது ஆசியாவிலே மனிதனுடன் மிகவும் பெருமைக்குரிய தொடர்புகளை அதன் தூய்மையான இயல்புகள் காரணமாக வகித்து வந்திருக்கிறது. இந்த தொடர்பானது உலகில் மனிதனுக்கும் மற்றைய விலங்குகளுக்கும் உள்ள தொடர்புகளோடு ஒப்பிடும் போது நிகரில்லாத ஒன்றாகவே விளங்குகின்றது.

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் காட்டிலிருந்து யானைகளை பிடித்து வந்து அதனைப் பழக்கி தனது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்துவதன் காரணமாக, மனிதனுக்கு யானையானது அதன்; பல்வேறு வயதுகளிலும்  உபயோகமான ஒன்றாக இருக்கின்றது. யானையானது மத, கலாச்சார ஊர்வலங்களிலும் சடங்குகளிலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் மனிதன் யானைகளை போர் செய்வதற்குப் பயன்படுத்தியிருக்கிறான். மனிதன் எப்போதும் காட்டு யானைகளை பிடித்து அவனுக்கு சேவகம் செய்யப் பழக்கிவிடுகின்றான். யானைகளைப் பிடிப்பதிலும் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.

நுடநிhயவெ என்ற ஆங்கிலச் சொல் தந்தம் (ivory) என பொருள் கொண்ட நடநிhயள3 என்ற பழைய கிரேக்கச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். மிகவும் பெரிய தரைவாழ் முலையூட்டியான யானை வருணம் proboscidea யிலும் குடும்பம் நடநிhயவெனையந யிலும் பாகுபடுத்தப்படுகின்றது. Pசழடிழளஉனைநய என்றால் சுருளக் கூடிய தும்பிக்கை என்பதாகும். இதுவே யானையின் பிரதான சிறப்பியல்பாகும். யானையின் இளம் பருவம் என்பது பிறந்ததிலிருந்து நான்கு வயது வரையாகும். 30-38 வயது வரை யானையானது வேலை வாங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த வயதில்தான் அவைகள் ஒழுங்கான வடிவத்திலும், ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் இருக்கின்றன. 46-53 வயதில் அவைகளின் உறுதி படிப்படியாக குறைகின்றது. 53-60 வயதுகளில் அவைகள் மென்மையான வேலைகளுக்கு ஏற்றவையாகவே இருக்கின்றன.

55 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் eocene காலத்தில் ஆபிரிக்காவில் தோன்றியவையே இந்த யானைகள். பின்னர் உழநழெணழiஉ காலத்தில் ஆபிரிக்காவிலும், ஆசிய, ஐரோப்பா, தென்அமெரிக்க பகுதிகளுக்கும் பரம்பின. யானைகள் அந்தாட்டிகா, அவுஸ்ரலேசியப் பகுதிகள் மற்றும் சில தீவுகளில் மட்டுமே காணப்படுவதில்லை. உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்ற தரைச் சூழற்றொகுதிகளில் யானைகள் காணப்பணுடுகின்றன. American Mastadom (Mammat americanum) woolly mammoth (Mammathus sp.) போன்றவை சரித்திரத்துக்கு முன் வாழ்ந்த யானைகளின் முன்னனோர்களாகும். இவற்றிலிருந்தே தற்போது காணப்படுகின்ற ஆசிய யானைகளும் (Elephas maximus), ஆபிரிக்க யானைகளும் (Loxodonto africana) தோன்றின.

தற்போது ஆசியா யானைகளும், ஆபிரிக்க யானைகளும் மட்டுமே இரு சாதிகளிலும், இரு இனங்களையும், ஆறு உப இனங்களையும் முறையே கொண்டு ஆசிய, ஆபிரிக்கக் கண்டங்களில்; பரம்பிக் காணப்படுகின்றன.
ஆபிரிக்க யானைகளின் உப இனங்கள்:

டுழஒழனயவெய யுகசiஉயயெ யகசiஉயயெ (சவானா உப இனம்)
டுழஒழனழவெய யுகசiஉயயெ உலஉடழவளை (காட்டு உப இனம்)
ஆசிய யானைகளின் உப இனங்கள்:
Elephas maximus maximus (இலங்கை உப இனம் )
Elephaus maximus vilaliya (சதுப்புநில உப இனம்)
Elephasu maximus indicus (இந்திய உப இனம்)
Elephas maximus sumatranus (சுமாத்திரா உப இனம்)
Elephasu maximus hirsutus (மலேசிய உப இனம்)
Elephasu maximus borneensis (போர்னிய உப இனம்)
ஆபிரிக்க ஆசிய யானைகளுக்கிடையிலான பிரதான வேறுபாடுகள் வருமாறு:
African(Loxodonta africana)
Asian(Elephas maximus)

காணப்படும் பகுதிகள்:
ஆபிரிக்காவின் வடபகுதிகளிலுள்ள நாடுகளைத தவிர மற்றெல்லா ஆபிரிக்காவின் பகுதிகளிலும்; பரவிக் காணப்படுகின்றது.

பங்களாதேஸ், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, லாஓஸ், மலேசியா, பர்மா, நேபாளம், தாய்லாந்து, வியட்னாம்

யானைகள் வாழும் காடுகளின் மொத்த அளவு:
4-5 மில்லியன் சதுர கிலோமீற்றர்
500000 சதுர கிலோமீற்றர்.
யானைகளின் குடித்தொகை:
600000-700000
35000-55000
பௌதீக தோற்ற வேறுபாடுகள்:
பெரிய வட்டமான காதுகள்
தலைக்கு மேலே உயர்ந்த காதுகள்
மழுங்கிய தலை
குவிவான முதுகு
ஆண், பெண்யானைகள் இரண்டிலும் தந்தம் காணப்படும்
தந்தம் நேரானதும், தடித்ததும்
தந்தம் 70 கிலோகிராம் நிறையுடையது
நுனியில் இரு மேடுகள் காணப்படும்
சராசரி உயரம் 3.5-4 மீற்றர்
வயதாகும்போது காதின் நுனி உடம்பை நோக்கி வளையும்
அதி உயரப்பகுதி தோளாகும்
முக்கோணக் காதுகள்
அப்படி இல்லை
கும்ப வடிவான தலை
குழிவானதம், சில நேரங்களில் தட்டையானதுமான முதுகு
5வீதமான ஆண் யானைகளில் மட்டும் காணப்படும்.
மென்மையானது வளைந்தது
30 கிலோகிராம் நிறையடையது
ஒன்று காணப்படும.;
2.75 - 3 மீற்றர்.
உடம்பை விலத்தி வளையும்
தலை
;
இரு இனங்களும் IUCN யின் அழிந்து போகும் நிலையிலுள்ள விலங்குகளின் பட்டியலில் உள்ளன.
மனிதர்களுக்கும் யானைகளுக்குமிடையிலான பிரச்சினைகள்.

தற்போது மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையில் உண்டாகும் பிரச்சினைகள் (conflict) பற்றிப் பார்ப்போம். யானைகளைத் திருடுதல், தந்தங்களை திருடுதல், யானைகளின் வாழிடங்களை அழித்தல் போன்றவையே யானைகள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாகும். யானைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயுமிடத்து முந்தைய இரு பிரச்சினைகளையும்விட யானைகளின் வாழிடங்களை அழித்தலே பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. ஏனெனில் பெண் ஆசிய யானைகள்; தந்தங்களை பொதுவாக கொண்டிருப்பதில்லை. ஆண் யானைகளிலும் குறிப்பிட்ட சிலவற்றிலேயே தந்தங்கள் காணப்படுகின்றன. அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு ஆபிரிக்க யானைகளை விட ஆசிய யானைகளே மிகவும் பாரியளவில் முகம் கொடுத்து நிற்கின்றன. 600000 ஆபிரிக்க யானைகள் 33 நாடுகளில் 4 - 5 மில்லியன் சதுரகிலோ மீற்றர் பரப்பளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள், பிரச்சினைகள் காரணமாகவும், யானைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன.

தங்களுக்குத் தேவையான உணவுகளும், வாழிடங்களும் கிடைக்காத போது யானைக் கூட்டமானது தனது வழமையான பாதைகளை விட்டு விலகி வேறுபாதைகளில் அவைகளைத் தேடிப் புறப்படுகின்றது. பிரதானமாக உணவு, நீர் என்பவற்றைத் தேடியே புறப்படுகின்றது. ஒரு இடத்தில் நீரும் உணவு விநியோகங்களும் குறையும் போது, எங்கே உணவும், நீரும் இருக்கிறதோ அந்த இடத்தை நோக்கி சென்று அவைகளைப் பெற்றுக் கொள்ளும். உணவுப் பற்றாக்குறையான காலத்தில் எங்கு உணவு கிடைக்கும் என்ற சிறப்பான அறிவும் யானைகளுக்கு உண்டு. இது கற்றலினாலும், அனுபவத்தினாலும் யானைகள் தங்களுடைய பெற்றோரிடமிருந்தும், பாதுகாவலர்களிடமிருந்தும் அடைந்து கொண்டது எனலாம். பலநூற்றாண்டுகளாய் இந்த யானைகளின் வாழ்வில் இதுதான் நடைமுறையாய் இருந்து வந்திருக்கின்றது. யானைகளின் நேர ஒதுக்கீட்டில் (வiஅந டிரனபநவiபெ)23.1 ஊட்ட நடத்தையானது மிகவும் பெரும் பங்கு வகிக்கின்றது. றியாஸ் அஹமட் குழுவினர் (2004), லகுஹல தேசிய வனஜீவராசிப் பூங்காவில் செய்த ஆய்வுகளில், யானைகள் (ஆண், பெண், குட்டி) தங்களது மொத்த நேரத்தில் (43.63, 45.66, 40.99) சதவீத நேரங்களை, ஊட்ட நடத்தையில் செலவிட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த நேரத்தை தங்கள் வாழிடங்களில் நடத்தலுக்கு செலவிட்டிருக்கின்றன. இதிலிருந்து வாழிடங்களின் அளவும், யானைகளின் ஊட்ட நடத்தைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறியலாம். யானைகள் பயணம்; செய்யும் பாதையில் (உணவு தட்டுப்பாடான காலத்தில், உணவு இருக்கும் இடத்தை நோக்கிப் பயணம் செய்யும் பாதைகள்), தடைகள் ஏற்படும் போது அல்லது அடைபடும் போது, யானைகள் பலவந்தமாக வேறு திசை நோக்கி, அல்லது அதன் பாதைகளில் ஏதாவது அபிவிருத்தித் திட்டங்கள் (உதாரணம்: வீடமைப்பு) உண்டாக்கப்பட்டால், அவற்றை நோக்கி யானைகள் சென்று தங்கள் உணவுகளை தேடுகின்றன. அந்த நேரத்தில் விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு, பல தொல்லைகளுக்கு மத்தியில்; செய்கை பண்ணிய பயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு தெரிந்த முறைகளிலெல்லாம் யானைகளை விரட்ட ஆரம்பிப்பார்கள். மிகவும் அதிகளவான யானைகளின் மரணங்களுக்கு விவசாயிகளே காரணமாகின்றனர். பெரும்பாலும் தங்கள் பயிர்களைப் பாதுகாக்கம் பொருட்டு.

ஆசிய யாiயானது அழிவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மிகவும் பெரிய முலையூட்டியாகும். அவைகளின் பழைய வாழிடங்கள் அழிக்கப்பட்டு அங்கிருந்து; வேறு இடங்களுக்கு துரத்தப்பட்டுள்ளன. இதனால் யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் யானைக்கும் மனிதனுக்குமான பிரச்சினைகள், 1860களில் பிரிட்டிசாரின் காலத்தில் அவர்கள் கோப்பி பயிர்ச்செய்கைக்காக மத்திய மலைநாட்டுக்கு சென்றவுடன்; ஆரம்பிக்கின்றன. அதற்கு முந்திய காலத்தில் இந்த வகையான பிரச்சினைகள் இருந்ததில்லை. மலைகளில், சின்கோனாவும், கோப்பியும் பயிரிடுவதற்காக கண்டபடி காடுகளை இவர்கள் அழித்ததனால் யானைகளி;ன் வாழிடங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டன. ஆரம்பத்தில் யானைகள் மனிதனைவிட்டே விலகிவிட்டன. காலப்போக்கில் வாழிடங்கள் குறைக்கப்பட்டதாலும் உணவுத் தேவையாலும் யானைகள் தங்களது பழைய வாழிடங்களுக்கு பயிர் செய்யப்படாத காலங்களில் திரும்பி வந்தன. அப்போது அவைகள் பயிர்ச்செய்கையாளர்களால் சுடப்பட்டன. தற்போது, இதற்கு மேலதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தமும் மற்ற வனசீவராசிகளைப் பாதித்தது போல பெரிய முலையூட்டியான யானையையும் பாதித்தது. யானைகள் பெரும்பாலும் துப்பாக்கிச் சண்டைகளிலும், கண்ணி, பொறி வெடிகளிலும்; அகப்பட்டுக் கொண்டன.

யானைகள் மனிதனுக்கு பலவகைகளில் பொருளாதார நட்டங்களை ஏற்படுத்தி வருகின்றன. தென்னை, றப்பர், கரும்பு, நெல், தினை போன்ற தானிய பயிர்ச்செய்கைகளை அழித்து பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியுள்ள பொருளாதார நட்டங்களை ஏற்படுத்துகின்றன.
ஆண் யானைகள்தான் பெண் யானைகளைவிட பயிர்களை அழித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரவு நேரங்களில்தான் யானைகள் குடியேற்றங்களுக்குள் உள்நுழைகின்றன. புயிர்ச் செய்கைக் காலங்களில், வயதுவந்த ஆண் யானைகள் வழமையான காடுகளுக்கு அருகிலுள்ள கிராமப்புற எல்லைகளால் பின்னேரங்களில் உள்நுழைந்து, சூரியன் மறைந்தவுடன் வயல்களுக்குள் நுழைகின்றன. பின்னர் இரவு 7.00 மணிக்கும், 11.00 மணிக்கும் இடையில் வெளியேறுகின்றன.

யானைகள் வயல்களுக்குள் உள்நுழைந்தவுடன், அதன் அடுத்த இலக்கு அவைகள் உண்வதற்கு தேவையான பயிர்களை இனங்காண்பதாகும். குiபெநச அடைடநவ 23யானைகளின் விருப்பமான உணவாகும். விசேடமாக பயிர்களுக்கு வெளியெ துருத்தியுள்ள பூந்துணர் பாகங்களை அவைகள் உண்பதற்கு தேர்ந்;ததெடுக்கின்றன. இளநீர் காய்த்துள்ள ஒரு மரத்தை மோதி விழுத்தி, அதன் குருத்தை உண்கின்றன. வாழை மரங்கள் பிளக்கப்பட்டு அதன் மையப்பகுதியிலுள்ள நார்த் தன்மையுள்ள தண்டுகள் நுகரப்படுகின்றன. வாழைகுலையின்;;காம்பும், வாழைப் பூவும் உண்ணப்படுகின்றன. கரும்புகள் முறிக்கப்பட்டு பூரணமாக அரைத்து விழுங்கப்படுகின்றன. மாமரங்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில் மாமரங்கள் நுகபர்படுகின்றன. பலாமரத்தை குலுக்கி பழங்களை விழுத்தி, பாதத்திதனால் மிதித்து நுகரப்படுகின்றன.

யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான முரண்பாடுகளின் போது, யானைகளினால் ஏற்படுத்தப்படும் அழிவுகளைத் தடுப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. யானைகளைப் பிடித்து இன்னொரு வசதியான வாழிடத்திற்கு மாற்றம் செய்தல், வயதுவந்த யானைகளை அந்தக் கூட்டத்திலிருந்து நீக்குதல் போன்றன செய்யப்படுகின்றன. இவ்வாறு வயதுவந்த ஆண் யானைகளை நீக்குதல் பாரியளவில் சேதங்களைக் குறைக்காது போவதுடன், அவைகளின் கருவளத் தன்மை, வளர்ச்சி போன்றவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். யானைகள் மனிதர்களுக்குப் பிரச்சினைகளைக் கொடுக்காமலிருக்கவும், அதன் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தவும், யானைகளை அவைகளின் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு திருப்பி அனுப்பவும், பல வழிமுறைகள் அவ்வப் பகுதி மக்களாலும், வனஜீவராசித் திணைக்களத்தின் அனுசரணையுடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

திண்மமான மண்ணில் அகழிகள் வெட்டல். அகழிகள் நன்கு பராமரிக்கப்படாவிட்டால் யானைகள் அகழிகளை உடைத்துக் கொண்டு; கொண்டு நுழைந்துவிடும்.

உயர்அழுத்த மின்சார வேலியை அமைத்தல். யானைகள் வேலியைத் தாண்ட முற்படும் போது, இந்த வேலி வன்மையான, உயிருக்கு ஆபத்தில்லாத, குறுகியநேர, ஆனால் நினைவில் நிறுத்திவைத்துக் கொள்ளக்கூடிய மின்னதிர்ச்சியை கொடுக்கும்.

கால்வாய்களை செங்குத்தாக வெட்டுதல். இதனால் யானைகள் உள்நுழையாது.

அவசர நிலைமைகளின் போது, பயிற்றுவிக்கப்பட்ட யானைகளை பிரச்சினை கொடுக்கும் காட்டு யானைகளை துரத்துவதற்கு பயன்படுத்தல்.

ஒரு சிறு யானைக் குடித்தொகை தொடர்ச்சியாக பிரச்சினை கொடுக்குமாயின் அவைகள் பிடிக்கப்பட்டு வேறு காடுகளுக்கு கொண்டு விடப்படல். அல்லது அவைகளுக்கு வேலைகளை செய்ய முடியுமென்றால், வேலைகளுக்காக பயிற்றுவிக்கப்படல்.

இந்த வழிமுறைகள் எதுவும் தீர்வு கொடுக்காவிடின், யானைகள் விளைவிக்கும் உயிர், பொருளாதார சேதங்களைப் பொறுத்து, அதிகாரமளிக்கப்பட்ட இடத்திலிருந்து பெறுகின்ற அங்கிகரிக்கப்பட்ட உத்தரவுப்படி யானை சுடப்படல்.

மற்றொரு வகையான யானை-மனிதன் முரண்பாடு என்னவெனில், யானைகள் எதுவித நோக்கமுமின்றி மனிதர்களை கொல்வதாகும். ஆண்களே அதிகளவில் கொல்லப்படுகின்றார்கள். பெண்களும், சிறுவர்களும் பாதிக்கப்பட்ட வீதம் மிகக் குறைவாகும். ஏனெனில் ஆண்களே யானைகளை அதிகளவில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாலாகும்.
யானையானது ஒரு மனிதனைத் தாக்குவதற்கு பாதம், கொம்பு, தும்பி;க்கை போன்றவகைளைப் பாவிக்கின்றது. தாக்குதலின் முடிவில் யானை தும்பிக்கையினால் மனிதனை வேகமாகவும் பலம்கொண்டும் நிலத்திலே தூக்கி அறைகின்றது. இந்த வன்முறை நடத்தையானது, சிலவேளைகளில் பெருமளவிலான மனித உயிர் சேதங்களுடன் முடிவுக்கு வருகின்றது. யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறைக்கப்பட்டாலேயே, யானைகள் ஒரு விருப்புக்குரிய விலங்காக கிராமப்புற மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு மக்களுக்கு யானைகள், சூழல் பற்றிய விழிப்புணர்வும், அதிகாரிகளுக்கு யானைகளின் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அரசியல்வாதிகளுக்கு யானைகளின் சூழல், மக்களின் சூழல் பற்றிய விழிப்புணர்வும் அவசியமாகும்.

இலங்கையின் யானைகளின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், இலங்கை மக்களது கலாசாரத்துடனும், மதநம்பிக்கைகளுடனம் பின்னிப்பிணைந்துள்ள யானைகள் வாழ்வதற்கும், அதன் சந்ததிகள் சிக்கலின்றி விருத்தியடைவதற்கும், நல்ல திட்டங்களை, சிறந்த விஞ்ஞான முறைகளுடனும், அரசியல் ஆதரவுடனும் உருவாக்கினால்தான்; இலங்கையின் யானைகளைப் பாதுகாக்க முடியும்.

No comments:

Post a Comment

மரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா

–  ஏ . எம் .  றியாஸ்   அகமட் ( சிரேஸ்ட   விரிவுரையாளர் ,  தென்கிழக்குப்   பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...