முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் - 03
இறால் பண்ணைகள் - 01
வர்த்தகமயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ விவசாய (Agriculture), நீர்pயல்வளர்ப்பு (aquaculture) முறைகள்தான் இன்றைய சூழலின் நிலைத்;த பேணுகைக்கு சவால்விடும் காரணிகளாக இருந்து வருகின்றன. இவைகள் தமது தொழில் நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு, உணவுப் பொருட்களின் தரம், மதிப்பு, நோய்த் தடுப்புத் திறன், சூழலுக்கு ஏற்ற தன்மை போன்றவற்றை தூர எறிந்த விட்டது. முதலாளித்துவமானது சந்தையைக் கட்டுப்படுத்துவதற்காக வர்த்தகத்தைக் கைப்பற்றியது. பின்னர் விவசாயத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதில் தனது நுட்பங்களை பயன்படுத்தியது. இதனால் சூழலின் சமனிலை பாதிக்கப்பட்டு, சூழல் மாசடைந்து, பல்தேசியக் கம்பனிகளுக்கு சாதகமான சூழலின் உயிரியலின் எளிமையான தன்மை உதயமானது. மேற் சொன்ன விடயங்களை இலங்கையின் வடமேற்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் செய்கைபண்ணப்பட்டுவரும் இறால் பண்ணை- நீரியல் வளர்ப்பு முறைகளுடாக நோக்குவோம்.
நீரியல் வளர்ப்பை (aquaculture) - நீர்ச் சூழலில் வாழுகின்ற தாவர விலங்குகளை அச் சூழலில் வளர்த்து அறுவடை செய்யும் முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். இம் முறையில் மீன்கள், (உணவிற்காகவும், மீன்களுக்கான இரைகளாகவும், அலங்கார வளர்ப்பு நோக்கத்திற்காகவும், முத்து, மட்டி, கடற் சாதாளைகள், களைகள், முதலைகள் (தோல்களுக்காக), தவளைகள் (உணவிற்காகவும், பரிசோதனைகளுக்காகவும்), கணவாய், ஆமைகள் போன்றவைகளும் வளர்க்கப்படுகின்றன.
Pநயெநரள அழழெனழn (வெள்ளை இறால்)ஐ மையமாகக் கொண்ட இறால் வளர்ப்பானது மிகவும் விரைவாக வளர்ந்து வரும், ஏற்றமதி நோக்கான கைத்தொழிலாகவும், இலங்கைக்கு அதிக வெளிநாட்டுச் செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு கைத்தொழிலாகவும் வளர்ந்து வருகின்றது. நீரியல் வளர்ப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்ததில் கிடைத்த வெளிநாட்டுச் செலாவணியில் இறாலானது 48% தொடக்கம் 70ம% வரையில் பங்கு வகிக்கின்றது. துரதிருஸ்டவசமாக இறால் வளர்ப்புக்குத் தேவையான நிலமும், உவர் நீர் வசதிகளும் உள்ள பகுதிகள் இலங்கையில் மிகக் குறைவாகும். இதன் காரணமாக இறால் பண்ணைகளின் பரம்பல் இலங்கையில் ஒரு குறித்த பகுதிகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இறால் வளர்ப்பானது, இலங்கையில் வடமேல் மாகாணத்தின் 120 கிலோமீற்றர் நீள 10 கிலோமீற்றர் அகலப் பரப்பிற்குள் அடங்கும் சிலாபம் கடனீரேரி, டச்சுக் கால்வாய், முந்தல் கடனீரேரி, புத்தளம் கடனீரேரி, மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு கடனீரேரி, வாழைச்சேனை கடனீரேரி, வாகரை கடனீரேரி பகுதிகளில் இரு ஏக்கர்கள் முதல் 300 ஏக்கர்கள் வரை நூற்றுக் கணக்கணக்கான அனுமதியுள்ளதும் , மற்றும் சட்டவிரோதமானதுமான முயற்சிகள் வர்;த்தக நோக்கில் குறுகிய கரையோர பரப்பில் செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. வுடமேல் மாகாணத்தின், முந்தல் கடனீரேரி, டச்சுக் கால்வாய்ப் பகுதிகளில் 70மூமான இறால் பண்ணைகள் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இறாலின் தேவையானது ஜப்பான், அமரிக்கா. ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகம். "இறால் வளர்ப்புத் திட்டங்கள் அதிகரித்து வருகின்றபோதும், கடலில் இருந்து பிடிக்கப்படும் இறாலின் அளவு மிகவும் அதிகமாகவே உள்ளது. மேல் நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு இறால் வளர்ப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அமைந்துள்ளது. நமது நாட்டின் தற்போதைய ஏற்றுமதி மிகவம் குறைவு." என்று கருதிய நமது நாட்டுக் கொள்கை வகுப்பாளர்களும், முதலீட்டு அதிகார சபையும் (டீழுஐ) இத்தகைய இறால் வளர்ப்புப் போன்ற நீரியல் வளர்ப்பு முறைககள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தனா. இதன் நிமித்தம் அரச, தனியார் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சிகரமான கடன்களை வழங்கின. வழங்கியும் கொண்டிருக்கின்றன.
பெருகி வரும் இத்தகைய சட்டபூர்வ, சட்டவிரோத இறால் பண்ணைகளே, அதிகரித்து வரும் கடல்நீரேரிகளினதும், அதனை அண்டி வாழும் மக்களினதும், உயிரிகளினதும் சுற்றுச் சூழலுக்கு மிகவும் மாசையும், அபாயத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக செய்யப்பட்டு வருகின்ற ஆய்வுகள் தெரிவிக்கி;ன்றன. இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்ற இறால் வளர்ப்பு முறைகள் தன்மாசுபடலையும் (autopollution) - அதாவது தானே தனது சுற்றுச் சூழலையும் தன்னையும் மாசுபடுத்திக் கொள்வதுடன் மற்றச் சூழலையும் மாசுபடுத்தச் செய்து கொண்டிருக்கின்றன. வடமேல் மாகாணத்தின் கடனீரேரிகளில் (lagoon) இல் செய்யப்பட்ட ஆய்வுகள் அந்த நீரேரிகளை அண்டி வாழ்ந்த மக்களினதும், உயிரிகளினதும், பௌதிக, கலாச்சார, மானிட கூறுகள் இறால் பண்ணைகளினால் எதிர் கொண்ட பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்;தன.
இந்த வெளிப்படுத்தப்படட பிரச்சினைகள் யாவை என்று பர்ர்ப்பதற்கு முன், இறால் பண்ணைகளால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு அரசாங்கம், இறால் பண்ணை செய்கையாளர்களை ஆரம்ப சுற்றாடற் பரிசீலனை (ஐnவையைட நுnஎசைழnஅநவெயட நுஒயஅiயெவழைn) செய்ய வேண்டுமென பணிக்கப்படுகின்றது. இந்த பரிசீலனை அறிக்கையானது, இறால் பண்ணைகளினால் சூழலுக்கு ஏற்படக் கூடிய தீய பாதிப்புக்களையும், இவற்றிற்கான பரிகாரங்களையும், அல்லது தீர்வுகளையும் கொண்டிருக்கின்றன. இந்தப் பரிசீலனை அறிக்கையின் பிரதிகள், சில அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரமுள்ள அரச நிறுவனங்களுக்கும், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும். இத் திட்டத்தினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதக-சாதகங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படும். அத்துடன்; முதலாளி அல்லது தொழிலாளி சார்பான முடிவுகளை எடுக்க அல்லது மதில்மேல் பூனையாக இருக்க அரசியல்வாதிகளும், இத்திட்ட அறிக்கைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இந்தபரிசீலனை அறிக்கையானது, இத்திட்டங்களை அங்கிகரிக்கும் அதிகாரமளிக்கப்பட்ட சபை அவசியமென்று கருதினால், சுற்றாடற் பாதிப்பு அறிக்கையை (Environmental Impact Assessment ) சுருக்கமாக EIA ஐத் தொடர்வதற்கான அவசியத்தையும், தேவைகளையும் கொண்டதாக இருக்கும்.
ஆரம்ப சுற்றாடற் பரீசீலனை அறிக்கைக்கு உதாரணமாக, வடமேல் மாகாணத்தில் கடனீரேரிகளின் ஒரத்தில், பல கோடிக்கணக்கான ருபாய்களை முதலீடு செய்த பெரிய நிறுவனமொன்று சமர்ப்பித்த ஆரம்ப சுற்றாடற் பரிசீலனை அறிக்கையைப் பார்ப்போம்.
No comments:
Post a Comment