முதலாளித்துவ சூழலியற் சிக்கல்
(செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) - 3
முருகைக் கற்பாறைகள் (Coral reefs):
நீலத் திரையின் கீழே
மச்ச வெளியின் ஊடே
வண்ணங்கொண்டு குழைத்தெடுத்த
ஒரு ஓவியக்காடு
வெண்மையாயொரு காடு
உறுதியாய் தாங்க
பசுமையாயொரு காடு
ஒளி தொகுக்க
நீலமாயொரு காடு
இரையாக மாற
கருமையாயொரு காடு
இரை கொல்லியாக
செம்மையாயொரு காடு
திகில் கொடுக்க
மண்ணிறமாயொரு காடு
வன்முறைகள் செய்ய
மஞ்சளாயொரு காடு
மறைந்து ஒழிக்க
நடத்தைக் கோலங்களின்
கும்மாளம்
வண்ணங்கொண்டு குழைத்தெடுத்த
ஓவியக்காடு
முருகைக்கற் பாறைச் சூழற்றொகுதியே உலகில் உள்ள சூழற்றொகுதிகளில் உற்பத்திகூடியதும், உயிரினப்பன்மை கூடிய சூழற்றொகுதியாகும். ஒரு தனி முருகைக்கற் சூழற்றொகுதி மூன்றாரயிரத்தி;ற்கும் அதிகமான உயிரினங்களுக்கு ஆதாரமளிக்கிறது. உலகில் உள்ள கடல்மீன்களில் மூன்றிலொரு பங்கு மீன்கள் இச்சூழற்றொகுதியிலேயே காணப்படுகின்றன. அத்துடன் இது கரையோரத்தைப் பாதுகாப்பதிலும் மிகுந்த பங்களிப்பைச் செய்கின்றது.
முருகைக் கற்பாறைகள் கணம்; உnனையசயை சேர்ந்த விலங்குகளாகும். பொலிப்புக்களான இவ்வுலங்குகள் தொகுதிகளாக வாழ்கின்றன. இவைகளின் கல்சியம் காபனேற் நிறைந்த உடற்கூறுகள் படிந்து இறுகுவதனாலேயே முருகைக் கற்பாறைகள் தோன்றுகின்றன. இதன் வளர்ச்சி வருடத்திற்கு 0.3 – 10 சென்ரிமீற்றர் வரை வேறுபடுகின்றது. பல்வேறு வகையான முருகைக் கற்பாறை இனங்கள், பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் முருகைக்கற் பாறைகளை உருவாக்குகின்றன. உதாரணம்: விரல், மேசை, இலை, மூளை வடிவங்கள். முருகைக் கற்கள் பல்வேறு வகையான பாகுபாட்டிற்கும் (classification) உட்படுத்தப்படுகின்றன.
முருகைகற் பாறைகள் அயன வலயத்தில் வட அகலாங்கு 30 பாகைக்;;கும் தென் அகலாங்கு 30 பாகைக்கும்; இடைப்பட்ட வலயத்திற்குள்ளேயே செறிந்து பரந்திருக்கின்றன. உலகில் 600000 சதுர மைல் பரப்பில் முருகைக் கல் காணப்படுவதுடன், அவற்றுள் 60 சதவீதமானவை இந்து சமுத்திரத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நன்கு விருத்தியடைந்த மூன்று வகையான முருகைக்கற் பாறைகள்; காணப்படுகின்றன. இலங்கையில் தென்மேற் கரையோரத்தில் அம்பலாங்கொடையில் இருந்து தெவிநுவர வரையும், யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்பிட்டிய, சிலாபம், நீர்கொழும்பு, ஹிக்கடுவை, காலி, மாத்தறை, தங்காலை ஆகிய பிரதேசங்களில் முருகைக்கல் பரம்பிக்;; காணப்படுகின்றன. மன்னார் குடாவிலும், கற்பிட்டி தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் மிகவும் விருத்தியடைந்த முருகைக் கற்களைக் காணலாம். இலங்கையில், உள்நாட்டிற்குரிய 68 இனங்களும், 183 சாதிகளும் இதுவரைக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1585 கிலோமீற்றர் நீளமுள்ள கரையோரத்தை இலங்கை கொண்டுள்ளது. இதிலே கிழக்கு கரையோரம், வாகரையிலிருந்து வாழைச்சேனை வரையும், பின்னர் மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரையும், அடுத்து ஒலுவிலிலிருந்து பொத்துவிலுக்கு அப்பால் வரையும் தொடர்ச்சியாக இதன் பரம்பலைக் காணலாம்.
முருகைக் கற்பாறைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நோக்குவோம். முருகைக் கற்கள் சுண்ணாம்பு உற்பத்திக்காக எடுக்கப்படுதல் ஒருபெரிய பிரச்சினையாகும். ஆதிகரித்துவரும் சனத்தொகைக்கு ஏற்ப, கட்டடத் தேவைகளும் அதிகரிக்க, அதன் நிமித்தம் சுண்ணாம்புத் தேவைக்கான கேள்வியும் அதிகரித்த நிலையில் உள்ளது. இலங்கையின் கட்டுமானப் பணிகளில் 90 சதவீதம் சுண்ணாம்பு பயன்படுகின்றது. இதன் காரணமாக, உயிருள்ள முருகைக் கற்கள் சுண்ணாம்பு உற்பத்திக்காக உடைத்து எடுக்கப்படுகின்றன.
டைனமைற் பாவித்து மீன்பிடித்தல், கரைவலை (Beach sein), பை வலை (moxy net)4, அடித்தள வலை (Bottomset net) பாவித்து மீன் பிடிக்கும் போது அவைகள் முருகைக் கற்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பை வலை, முருகைக் கற்களில் வாழும் அலங்கார மீன்களை பிடிக்க பயன்படுகின்றது. சயனைட் வில்லைகள் போன்ற நஞ்சுகளைப் பாவித்து மீன்பிடிக்கும் போது, இறந்த மீன்கள், முருகைக் கற்களுக்குள் சிக்குப்படும்போது, முருகைக் கற்கள் உடைக்கப்பட்டு அதற்குள் சிக்குப்படும் மீன்கள் எடுக்கப்படுகின்றன.
கடந்த இரு தசாப்தங்களாக அலங்கார மீன்களின் ஏற்றுமதி அதிகரித்து வந்திருக்கின்றது. தற்போது உள்ள நீர்வளர்ப்பு ஏற்றுமதி வர்த்தகத்தில், இறால், சிங்கி இறால் போன்றவற்றிற்குப் பிறகு, அலங்கார மீன்களின் ஏற்றுமதியே அதிக அந்நிய செலாவணியை அச் சூழற்றொகுதியே அழிகின்ற நிலைக்கு உள்ளாகும். இவ்வலங்கார மீன்களில், அழிவுக்குள்ளான நிலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய உள்நாட்டு இனங்கள் பலவும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
1970 களிலிருந்து இலங்கையின் உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. இந்த உல்லாச பிரயாணிகளை கவருவதில் முருகைக் கற்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 1992 யில், 300000 உல்லாசப் பயணிகளின்; இரவுகள், ஹிக்கடுவையில் முருகைக் கற்களுக்காக செலவிடப்பட்டுள்ளன. உல்லாசப் பிரயாணிகளின் முருகைக் கற்களின் மேல் நடத்தல், நீந்துதல், சுழியோடுதல், படகுவிடுதல், கண்ணாடி அடித்தள படகு விடுதல், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான நங்கூரமிடுதல், போன்ற செயல்களால் முருகைக் கற்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றன. இந்த உல்லாசப் பிரயாணிகளுக்கு விற்பனை செய்வதற்கான பல்வேறு வகையான உயிரினங்கள் (உதாரணம்: சங்கு, அலங்கார உயிரினங்கள் போன்றவை) சூழலிருந்து அகற்றப்பட்டு விற்கப்படுகின்றன.
கடல் மாசடைதல் முருகைக் கற்பாறைகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றாகும். ஹோட்டல்கள் தங்களது கழிவுகளை நேரடியாக கடலில் கொட்டுவதாலும், தும்புக் கைத்தொழில், தோல் உற்பத்தி, சாயக் கைத்தொழில், றப்பர் கைத்தொழில், உணவு பதனிடும் கைத்தொழில், கடதாசி ஆலைகள் போன்றவைளும், மனிதர்களும் தங்கள் கழிவுகளை நேரடியாக கொட்டுவதாலும் முருகைக் கற்பாறைகள் பாதிக்கப்படுகின்றன.
நிலப் பிரதேங்களில் காடுகளும், மண்ணைப் பிடித்துவைத்தருக்கக் கூடிய தாவரங்களும் அழிக்கப்படுவதால், நிலப் பிரதேசங்களிலுள்ள அடையல்களும், போசணைப் பொருட்களும், முருகைக் கற்பாறைத் சூழற்றொகுதியை அடைந்து, நற்போசணையாக்கத்தை (நரவாசழிhiஉயவழைn) உருவாக்கி அதன் சூழற்றொகுதியிலுள்ள உயிரினங்களுக்கு பாதிப்பையும் அழிவையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் கடலில் சேரும் விவசாய, வீட்டு, எண்ணெய்க் கழிவுகளும் பாரிய சேதத்தினை ஏற்படுத்துகின்றன.
எண்ணெய் ஆய்வுக்கு கடல் அடித்தளங்களைத் தோண்டுதல், துறை முகம் அகழல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், குளிரவைக்கும் ஆலைகள், கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு, கப்பல் கழுவுதல், போன்றனவும் பாதிக்கின்றன.
முருகைக் கற்களின் பிரதான எதிரி, நட்சத்திர மீன்களாகும். நட்சத்திர மீன்களின் பிரதான உணவு முருகைக் கற்களாகும். ஆய்வாளர்களால் வழமையாக முருகைக் கற்களின் மீது காணப்படுகின்ற நட்சத்திர மீன்கள் வெட்டிக் கொல்லப்படுவது வழக்கம்.
அடுத்ததாக இயற்கை அனர்த்தங்கள் முருகைக் கற்களைப் பாதிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. பெற்றோலியப் பொருட்கள், நிலக்கரி என்பன எரிக்கப்படுவதனால், வெளியேறும் காபனீரொட்சைட்டு;, மெதேன், ஓசோன் போன்ற வாயுக்கள் சூழல் வெப்பநிலையை கூட்டி, கடல் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இதன்காரணமாக கடல்பெருக்கெடுத்து கடலரிப்பைத் தடுக்கும் கண்டல் தாவரங்கள், காடுகள் போன்றவற்றை அழிக்கின்றன. இதன் காரணமாக முருகைக்கற்கள் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் உலக வெப்பமாதலினால் கடல்நீரின் மட்டம் 2 மில்லிமீற்றராக உயருகின்றது. எல்நினோ விளைவாலும் உலகவெப்பமாதல் நடைபெற்று, கடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும் போது, முருகைக்கற் பாறையில் ஒன்றியவாழியாக (ளலஅடிழைவெ) வாழுகின்ற, ஸ_ஸான்தலே என்னும் அல்கா இறக்க நேரிடுகின்றது. இந்த அல்கா ஒளித்தொகுப்பு செய்து உணவை முருகைக் கற்களுக்கு கொடுக்க, முருகைக் கற்கள் அல்காக்களுக்கு இருக்க இடம் கொடுக்கும். இந்த அல்கா இறந்து, சில நாட்களுக்குப் பிறகு, முருகைக் கல்லும் இறந்துவிடும். இது உழசயட டிடநநஉhiபெ எனப்படும். 1998;ல் இந்த பிரச்சினை மோசமான அளவில் அதிகரித்துக் காணப்பட்டது.
இனி பாசிக்குடாவை நோக்குவோம். பாசிக்குடா மட்டக்களப்பிற்கு வடக்கே 28 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் முருகைக்கற் பாறைகளைக் கொண்ட அமைதியான அலையடிப்பு குறைந்த குடாவாகும். பாசிக்குடா இலங்கையின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இது வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளகைளை;க கவர்வதில் முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகின்றது. 1980களின் ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாக பெரிதும் கவனிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. பின்னர் 2003 சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்ட நிலையிலிருந்தது. தற்போது இலங்கையில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக உல்லாசப் பிரயாணிகளின் வருகை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட மோசமான சூழலைத் தொடர்ந்து நிலவிய அச்சுறுத்தல்கள் காரணமாக, தொழில்வாய்ப்பு தேவைப்பட்ட மக்கள், அளவுக்கதிகமாக முருகைக் கற்பாறைகளை கடலிலிருந்து உடைத்தும், அண்டிய நிலப்பிரதேசங்களிலிருந்து அகழ்ந்தும், சுண்ணாம்பு உற்பத்திக்காக பாவிக்கத் தொடங்கினார்கள். இதன் காரணமாக கரையோரம் பல நூறுமீற்றர்களுக்கு கடலினால் அரிக்கப்பட்டது. மீனா தர்மரெத்தினம், கிருகைராஜா (2003) ஆய்வுகளின் படி, இந்த முருகைக் கல் அகழ்ந்தெடுத்தலில் நாளாந்தம் அதிகமான ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் குடும்ப சூளைகள், சிறுவர் சளைகள் என வகைப்படுத்தியுள்ளார்கள்.
தொடர்ச்சியான முருகைக் கல் அகழ்வினால், உல்லாசப் பிரயாண சபைக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பு கொண்ட விடுதியின் எச்ச சொச்சங்களை கடலுக்குள் பார்க்கலாம். அதன் தூண்களை கடற்கரையிலிருந்து 50 மீற்றர் தொலைவில், கடலுக்கடியில் தற்போதும் காணலாம். பல ஏக்கர் தென்னந்தோட்டங்களும் கடல் அரிப்பினால் இன்று வரை இழக்கப்பட்டுள்ளன. கடல் நீர், ஊரை நோக்கி வருவதனால், நன்னீர் உவர்நீராதல் பிரச்சினையும், நிலப்பிரதேசங்களில் சுவட்டு சுண்ணக் கற்கள் அகழப்பட்டு, நிலம் கைவிடப்படுவதால், நிலம் பயனின்றிப் போய், நீர் தேங்கி, நுழம்பு பெருகி சுகாதாரப் பிரச்சினையும் ஏற்படுகின்றது.
மீனாதர்மரெத்தினம், கிருபைராhஜா (2003) யின் படி, உல்லாசப் பிரயாண சபைக்கும், தனியாருக்கும் சொந்தமான பலநூறு ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் குன்று குழியுமாக்கப்பட்டு பயனற்ற நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதையும், அந்தப் பிரசதேசத்தில் இவர்கள் பல நூற்றுக்கணக்கான குழிகளை அவதானித்துள்ளார்கள். சுண்ணாம்புச் சூழைகள் காரணமாக காபனீரொட்சைட்டு விடப்படுதலும், காடழிப்பும் நடைபெற்றன. சமாதான ஒப்பந்த காலத்திற்கு பின்னர், ஏதோவொரு வகையில் குழுக்களினால் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சுண்ணாம்பு உற்பத்திக்காக முருகை; கல்லை உடைப்பது பாரியளவில் குறைந்திருக்கக் காணப்பட்டது.
வாழைச்சேனை வாவியிலிருந்தும், பாசிக்குடாவின் பகுதிகளிலிருந்தும், மீன்பிடிக் கைத்தொழில், விவசாய நிலங்களிலிருந்தும் விடப்படுகின்ற கழிவுகளும், வாழைச் சேனை கடதாசி ஆலையிலிருந்து விடப்படுகின்ற, கழிவுகளும் இம் முருகைக் கற்பாறைத் தொகுதியை அடைவதனால் இச் சூழற்றொகுதியின் கடல்நீரின் பண்புகள் பாதிப்படைகின்றன. றியாஸ் அஹமட், மீனாதாமரெத்தினம் (2004), முன்சுனாமிய ஆய்வுகளின் படி பாசிக்குடா முருகைக்கற்பாறைச் சூழற்றொகுதி 15.81 சதவீத உயிருள்ள முருகைக் கற்களைக் கொண்டுள்ளது. இறந்த, இறந்ததும் அல்காக்களுடன் கூடியதும்;, மணற்பகுதிகள் என்பன முறையே 10.6-29.66 சதவீதம், 3.22-8.6 சதவீதம், 6.2-28.86 சதவீதங்களில் கொண்டிருந்தன. மணற்பகுதிகள் கூடியளவில் மேற்குப் பகுதியிலேயே காணப்பட்டன. இந்தப் பகுதியில்தான் உல்லாசப் பிரயாணிகளின் நடவடிக்கைகள் அதிகமாகக் காணப்பட்டன. இச் சூழற்றொகுதியின் மொத்த அடித்தளப் பரப்பில் உடைந்த முருகைக்கற்பாறைத் துண்டுகள் 18.87 சதவீத இடத்தைப் பிடித்தன. உல்லாசப் பிரயாணிகள் நடவடிக்கைகள் காரணமாக கலங்கற்தன்மை அதிகரித்ததன் விளைவாக உயிருள்ள முருகைக்கற் பாறைகளின் சதவீதம் குறைவடைந்து கொண்டே செல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் காணப்பட்ட முருகைக்கற் பாறை இனங்கள் கொனியஸ்ற்றியா, அக்றோபோறா என்பனவாகும்.
அல்காக் கூட்டம், பெரிய, சின்ன அல்காக்கள் என்பன முறையே 3.47 சதவீதம், 1.89 சதவீதம், 0.79 சதவீத இடங்களைப் பிடிக்கின்றன. கடற்பஞ்சு விலங்குகளும், மற்றவிலங்குகள் (கடல்அனிமன், மீன்கள், புழுக்கள், நட்சத்திரமீன், கடல்அட்டை, முறேவிலாங்குகள், மொலஸ்காக்கள் போன்றன) முறையே 1.23 சதவீத, 1.61 சதவீத இடங்களையும் பிடித்தன.
இந்தச் சூழற்றொகுதியி;;ன் சராசரி உவர்த்தன்மை 32 ppவ ஆகவும், வெப்பநிலை 28.6 செல்சியஸ் ஆகவும், ஒளிபுகவிடு தன்மை 75-88 சென்ரிமீற்றராகவும் இருந்தன.
பாசிக்குடாவின் முருகைக் கற்பாறைச் சூழற் தொகுதியின், உயிருள்ள முருகைக் கற்பாறைகளின் அளவு, நீர்கொழும்பு, ஹிக்கடுவ, போன்ற இடங்களிலுள்ள உயிருள்ள முருகைக் கற்பாறைகளின் அளவுகளுக்கு சமமானதாக இருப்பதால், 1998 யில் இலங்கையில் ஏற்பட்ட உழசயட டிடநநஉhiபெ யினால் பாசிக்குடாவும் பாதிக்கப்பட்டதாக இவர்கள் கருதுகிறார்கள்.
றியாஸ் அஹமட், மீனா தாமரெத்தினம் (2004) ஆகியோர்களின் அறிக்கையின்படி, முருகைக் கற்பாறைச் சூழற்றொகுதியின் அடித்தளங்கள் பாரியளவில் பல்வேறு பொருட்களால் மாசுபடுத்தப்பட்டிருப்பதை அவதானித்திருக்கிறார்கள். பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருட்களே (பொலித்தீன் பை, பொலித்தீன் கடதாசி, பிளாஸ்ரிக் போத்தல்கள்) அதிகளவில் அவதானிக்கப்பட்டன. இவைகள் உல்லாசப் பிரயாணிகளால் பாவிக்கப்பட்டபின் தூக்கியெறியப்பட்டவைகளாகும். இதற்கு அடுத்த நிலையில் தூண்டில் கயிறு, வலைகள், நங்கூரங்கள் என்பனவும் அவதானிக்கப்பட்டடன. இவைகள் மீன்பிடி நடவடிக்கை காரணமாக விடப்பட்டவை. இதற்கடுத்த நிலையில் எலும்புகள், மரத்துண்டுகள், கண்ணாடித் துண்டுகள், கற்கள் என்பனவும் காணப்பட்டன.
மார்ட்டின் மெய்னல், மட்டியாஸ் றஸ்ற் (2005) யின் பின்சுனாமிய ஆய்வுகளின்படி, 100 மீற்றர் நீளமாக இருந்த பாசிக்குடாவின் கடற்கரை, தற்போது 15 மீற்றருக்கு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
புhசிக்குடா முருகைக் கற்பாறைத் தொகுதி தற்போது எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினை என்னவெனில், கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது, அருகிலிருந்த இராணுவ முகாம் முற்றாகப் பாதிக்கப்பட்டதனால், அந்த முகாமிலிருந்த கண்வெடிகளும், பீரங்கிக் குண்டுகளும் கடலுக்குள் அள்ளுப்பட்டுச் சென்றன. எனவே எதிர்கால ஆய்வு வேலைகளுக்கு முதற் கட்டமாக முருகைக் கற்பாறைச் சூழலிலுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.
எனவே பாசிக்குடாப் பிரதேசத்தில் சமாதான ஒப்பந்த காலத்திற்கு முன்னர் தீவிரமாக நடைபெற்ற சுண்ணாம்பு கைத்தொழில், சட்டவிரோத முருகைக் கல் அகழ்வுகள், காடழி;ப்பு காரணமாகவும், ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஒழுங்கற்ற உல்லாசப் பிரயாண முகாமைத்துவத்தாலும், இவ்விரு காலங்களிலும், சுற்றுச்சூழலிலிருந்த கைத்தொழில் முயற்சிகளின் பொறுப்பற்ற போக்குகளினாலும், இச்; சூழற்றொகுதியின் நிலைபேறான தன்மை கேள்விக் குள்ளாக்கப்பட்டுள்ளது. அதற்காக, இயற்கை வளங்களை சிறந்த முறையில் முகாமை செய்வதும், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மக்களை பங்குபற்றச்; செய்;தலும், அதன் மூலம்; சூழலுக்குப் பாதகமாக இருக்கும் தொழில் முயற்சிகளையும், அவர்களின் பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றின்; அடிப்படையில் அவர்களுக்கான மாற்றுத் தொழில் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதும் மிக முக்கியமானவைகளாகும்.
No comments:
Post a Comment