Saturday, October 8, 2011

இறால் பண்ணைகள்-02

முதலாளித்துவ சூழலியற் சிக்கல் - 03

இறால் பண்ணைகள்:
இறால் பண்ணைகளினால் ஏற்பட்ட சமூக பொருளாதார பிரச்சினைகளைப் பற்றி நோக்குவோம். சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு மூல காரணம் இறால் பண்ணையாளர்களுக்கம் சுற்றயல் மக்களுக்குமிடையே தோன்றும் முரண்பாடுகளே (உழகெடiஉவள). வட மேல் மாகாணத்தில் அவதானிக்கப்பட்டதில், இறால் திருடுதல் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. 25 தொடக்கம் 35 கிராம் அளவுள்ள ( 3 தொடக்கம் 4 மாத வயதான ) இறால்களுள்ள குளத்தில் ஒரு வீச்சு வலையின் (cast net) வீச்சில் 2 தொடக்கம் 3 கிலோ கிராம் இறால்கள் அகப்பட முடியும். இது 1600 ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியைக் கொண்டது. ஒரே இரவில் பல்லாயிரக் கணக்கான ரூபா பெறுமதியுள்ள இறால்கள் திருடு போகின்றன. நாள் முழவதும் நதியில் இறங்கி மீன்பிடித்தாலும் ஒரு மீனவனுக்கு 350 ரூபாவிற்கு மேல் கிட்டுவதில்லை. எனவே பணத்தாசை காரணமாக திருட்டுத்தனம் ஊக்குவிக்கப்பட்டு திருடர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் இறால் திருடு போவது சம்பந்தமான முறைப்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆராச்சிக்கட்டுவ மதுரங்குளி போன்ற பகுதிகளிலும் மட்டக்களப்பு பகுதிகளிலும் இது நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

யாதாயினும் ஒரு பொருள் விவசாயிக்கு அல்லது பண்ணையாளனுக்கு தொந்தரவை அல்லது விரும்பத்தகாததை செய்யுமாயின் பீடை என்கிறது உயிரியல். மட்டக்களப்பு வாவியைச் சுற்றிச் செய்கை பண்ணப்படும் இறால் பண்ணைகளின் முக்கிய பீடை மனிதன் என்பது எமது அவதானங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

75% மான கிராம மக்கள் இறால் பண்ணைகளினால் தோற்றுவிக்கப்படும் வெள்ளப்பெருக்கு தங்களத வீடுகளையும் விவசாய நடவடிக்கைகளையும் பாதிப்பதால் இந்தப் பண்ணகைளுக்கு எதிராக இருக்கிறார்கள். இதன் காரணமாக, வெள்ளப்பெருக்கு சம்பந்தமான பிரச்சினைகளும் பண்ளையாளர்களுக்கும் கிராமத்தவர்களுக்குமிடையே சமூகவியற் பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.
1995ம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மக்களில் 2மூ மான மக்களுக்கு தோல் நோயும், 92மூ மான மீனவர்களுக்கு மீன்பிடியில் குறைவும், இறால் பண்ணைக் கழிவுநீர் நீர் நிலைகளில் விடப்பட்டதால் ஏற்பட்டதாக தெரிய வந்திருக்கின்றது.

இறால் பண்ணைச் செய்கைக்காக கண்டற் சூழற்றொகுதிகளை (காடுகளை) அழித்ததனால், கண்டற் காடுகளை நம்பிய குடிசைக் கைத்தொழிற் துறையானது பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது. இதனால் குடிசைக் கைத்தொழிலாளர்களுக்கும் இறால் பண்ணையாளர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. அத்தோடு குடிசைக் கைத்தொழிலாளர்களின் வருமானமும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்பு கண்டல் காடுகள் அரச காணிகளில் இருந்தன. எனவே மக்கள் அதனை இலகுவாக பயன்படுத்தினர். இப்போது இவைகள் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால் கண்டல் காடுகளை பாவிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கண்டற் காடுகளிலிருந்து பெறப்படுகின்ற பொருட்களால் மீன்பிடி உபகரணங்கள் செய்ய முடியாமற் போனமையும் மீன்கள் இனப்பெருக்கும் இடங்கள் அழிந்தமையும்; கிராமிய மீனவர்கள் வருமானத்தை இழக்க காரணிகளாகியிருந்தன.

ஆடு மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலங்களிலும் இறாற் பண்ணைகள் அமைக்கப்பட்டதால், பண்ணையாளர்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கமிiடியல் முரண்பாடுகள் தோன்றின. இதே போன்று நெற் செய்கையாளர்களுக்கும், தென்னைச் செய்கையாளர்களுக்கும் பண்ணைச் செய்கைக் காரர்களுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றின.

எனவே இறாற் பண்ணைகளினால் சூழலில் ஏற்படும் தாக்கமானது, ஒரு கைத்தொழில் என்ற வகையில் இறாற் பண்ணைகளின் நிலைபேறான தன்மைக்கே (sustainability) சவால் விடுகிக்னறன. தரக்குறைவான நீரியற் பண்புகளாலும் சுற்றுச் சூழல் பாதிப்புக்களாலும் இறால் உற்பத்தியில் ஏற்படும் குறைவானது இறாற் பண்ணைகளினால் வரும் வருமானத்திலும் பாரிய குறைவை ஏற்படுத்துகின்றன. இந்தக் காரணிகளுடன் சமூகவியற் காரணிகளும் சேர்ந்து இறால் பண்ணைகளின் தொடர்ச்சியான இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

மக்கள் நலனையும், சுற்றுச் சூழல் நலனையும் முதன்மைப்படுத்திய சூழலுக்கும் சமூகத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தாத இறால் வளர்ப்புத் திட்டங்கள்தான் இறால் உற்பத்தியைக் கூட்டி அதன் நிலைபேற்றுத்தன்மையையும் மாறாமல் வைத்திருக்கும்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...