குறிப்பு -
யாழ்ப்பாணம், திருமறைக் கலாமன்றத்தின் கலைமுகம் (ஜனவரி-மார்ச் 2017, இதழ் 61), கலை, இலக்கிய, சமூக இதழில் எனது நேர்காணல் வெளிவந்துள்ளது. நேர்கண்டவர் கவிஞர் கருணாகரன்.
"ஒரு
சமூகத்தின் மனச்சாட்சி எழுத்தாளர்கள்தான்"
-
அம்ரிதா ஏயெம்
01) சிறுகதைகளில்
இன்று
ஏற்பட்டிருக்கும்
புதிய
மாற்றங்கள்,
திறப்புகள்
என்று
நீங்கள்
அவதானித்த
விசயங்கள்?
முன்னைய எழுத்துக்களுக்கும்,
பின்னைய
எழுத்துகளுக்கும் பெருமளவில் வேறுபாடுகள் இருக்கின்றன.
இவர்கள் சமூகத்தை,
குடும்பத்தை,
தனிமனிதனை எவ்வாறு எழுத்துக்களால் அணுகினார்கள்
என்பதிலேயே இந்த வித்தியாசங்கள் இருக்கின்றன
என நினைக்கின்றேன்.
முன்னைய எழுத்தாளர்கள் தொடாத
அல்லது தொடத் தயங்கிய பல
விடயங்களை,
சொற்களை,
வார்த்தைப் பிரயோகங்களை எந்த விதத் தயக்கமுமின்றி
இன்றுள்ளவர்கள் எழுதுகின்றனர்.
ஆனால் சிறுகதைகளில் எவரும்
எதனையும் எழுதலாம் என்ற ஜனநாயகப் போக்கு அதிகரித்துக்
காணப்படுகின்றது.
முன்னைய எழுத்தாளர்கள் தொடத்
தயங்கிய அல்லது குறைவாக தொட்ட
தனிமனித வாழ்வின் நெருக்கடி,
பெண் உடல்,
ஆண்
உடல்,
ஆண் பெண்களுக்கிடையேயான பாலியற்
சிக்கல்கள்,
சாதி,
மதம்,
இனம்,
மொழி,
நிலம் சார்ந்த பிரிவினைகளையும்,
குற்றம்,
வன்முறை,
மனப் பிறழ்வு,
உதிரி
மனிதர்கள் போன்றவைகளையும்,
இவைகள் சார்ந்த இருண்மையான
பிரதேசங்களுக்குள்,
ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டும்,
தைரியமாகப் பேசுகின்றன.
புனிதங்களைத் தூக்கி எறிந்து,
அதனைக்
கட்டுடைத்து,
கேள்விக்குட்படுத்துகின்றன.
நேரடியாகவும்,
பயமில்லாமலும் பேசுகின்ற தன்மையும் காணப்படுகின்றது.
அடுத்ததாக, பிரசுர வாய்ப்பு அதிகரித்தும்,
பிரசுர செலவு குறைந்தும் காணப்படுவதன்
காரணமாக சராசரிக்கும் கீழான எழுத்தாளர்கள்கூட, தங்களுடைய
எழுத்துக்களை தாங்களே பதிப்பித்து, தாங்கள்
வைக்கும் வெளியீட்டு விழாவில் விற்பனையாகும் சொற்ப தொகை பிரதிகளின்;
மூலம் புத்தகத்தின் உற்பத்திச் செலவை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதனால்
ஏற்பட்ட தூண்டல் காரணமாகவும் நிறையப்
பேர் எழுதத் தொடங்கியுள்ளனர்.
காட்சி ஊடகங்களின் பெருக்கம்,
ஆங்கில மொழி அறிவு, உயர்கல்வி, பொருளாதார வசதி அதிகரிப்பு, இணையப்
பயன்பாடு போன்றவை பல்வேறு போக்குககளை
உருவாக்கியுள்ளன. உத்தி சார்ந்த போக்குகளுக்கும்,
அதன் வடிவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், அதன் உள்ளார்ந்த பெறுமதிக்கே
முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு தென்படுகின்றது. மைய
ஓட்டத்தினின்றும் விலக்கப்பட்ட அல்லது விலகிய பிரதேசங்களுக்குரிய
பேச்சு வழக்குகளை பதிவிடுவதிலும் கூடிய கரிசனை காட்டப்பட்டு
வருகின்றது. அத்துடன் வாய்மொழி மரபான கதைசொல்லும் பாணியும்
விருத்தியடைந்துள்ளதாகத் தென்படுகின்றது.
02) காட்சி
ஊடகங்களின்
செல்வாக்கு,
இணையம்,
கைத்தொலைபேசியில்
உள்ள
அதிகபட்ச
சாத்தியங்கள்
என்ற
புதிய
தொழில்
நுட்ப
யுகத்தில்
புதிய
சிறுகதைகள்
இனி
எப்படி
அமையக்கூடும்?
சிறுகதைகள்
இன்று
எதிர்கொண்டிருக்கின்ற
சவால்கள்
என்ன?
ஏறத்தாள பத்து வருடங்களுக்கு
முன்னர் திண்ணை.கொம் இணையப்
வாரப் பத்திரிகையில்; பிரசுரிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பான கவிஞர் டீன்கபூர் அவர்களின்
திண்ணைக் கவிதைகள் என்ற நூலுக்கு நான்
எழுதிய முன்னுரைக்கு “திண்ணைக் கவிதைகள்- இணையத் தமிழுக்கு ஒரு
அணி” என்று தலைப்பு கொடுத்திருந்தேன்.
அந்தக் கவிஞர் அந்தக் கவிதைகளை
நேரடியாக கணணியில் தட்டச்சு செய்து, மெயில் மூலம்
அந்த இணைய வாரப் பத்திரிகைக்கு
அனுப்பியிருக்கலாம். அதன் பின்னர் 2016ம்
ஆண்டு, நசீகா முகைதீன் என்ற
இளம் பெண் கவிஞையின் கவிதைத்
தொகுப்பிற்கான முன்னுரைக்கு நான் கொடுத்த தலையங்கம்“அரிந்த ஆப்பிள் கோளங்கள்
முகநூல் தமிழுக்கு ஒரு அணி”.முற்று
முழுதாக ஸ்மார்ட் போனினாலேயே தட்டச்சு செய்யப்பட்டு முகநூலிலேயே பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் இந்தத் தொகுதியில் அடங்குகின்றன.
பத்து வருடங்களுக்குள் தொழில்நுட்பத்தின்
அகோர வளர்ச்சி பல்வேறு சாத்தியப்பாடுகளையும் எமக்கு சாத்தியப்படுத்திவிட்டுள்ளது.
ஆக இந்த பத்து வருடங்களுக்குள்
இணையத் தமிழ் முகநூல் தமிழாக
மாறியிருக்கிறது. முன்னொரு காலத்தில் ஒரு படைப்பை எழுதி,
கலந்து ஆலோசித்து, விவாதித்து, வெட்டிக் கொத்தி, திருத்தி, அதனை
தபாலில் இட்டு, போஸ்ட் பண்ணி,
அது பத்திரிகை அல்லது சஞ்சிகை நிறுவனத்தை
அடைந்து, அங்கே நீண்ட பரீசீலனை
அல்லது சிபாரிசுகளுக்குப் பிறகு அது பிரசுர
வாய்ப்பைப் பெறுவதற்கு ஒரு மாத காலத்திற்கு
மேல் எடுத்துவிடுகின்றது. இப்போது அப்படியல்ல, நவீன
தொழில்நுட்ப வளார்ச்சி காரணமாக, முகநூலில் பதியப்பட்ட அல்லது இவர்களால் தங்களுக்காகவே
உருவாக்கப்பட்ட முகநூல் அல்லது இணையப்
பக்கங்களில், இணைய சஞ்சிகைகளில் உடனே
பிரசுரிக்கப்பட்டுவிடுகின்றன.
அதன் பிறகு அவர்களின் படைப்புக்கள்
விருப்பக்குறிகளால் நிரம்பியும் வழிகின்றன.
முதுகநூல்களும், இணையங்களும் தற்போது படைப்புக்களால் நிரம்பி
வழிகின்றன. இது ஒரு புதிய
போக்காக காணப்பட்டாலும், எதுவும் விரைவாகவும், வேகமாகவும்,
அதிக எண்ணிக்கையிலும் உற்பத்தி நடைபெறும்போது அதன் தரம் கேள்விக்குள்ளாவது
நியதியே.
முழு உலகமும் நுகர்வுக்
கலாசாரத்திற்குள் சுருங்கி வருகின்ற நிலை, படைப்பாளர்கள் சந்திக்கத்
தொடங்கும் மற்றொரு சவாலாகும். இந்
நிலையில், இலக்கியம் ஒரு படைப்புச் செயற்பாடு
என்ற நிலையில் இருந்து, உற்பத்திச் செயற்பாடாக மாற்றமுறும் பயங்கரம் இருக்கிறது. அது பணம், புகழ்,
அதிகரத்துவம் போன்றவைகளை அடைந்து கொள்வதற்கான ஒரு
வழியாகவும் அண்மைக்காலமாக எழுத்தாளர்கள், முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்;
சிலரின் ஏட்டிக்கு போட்டியாக நடாத்தும் இலக்கிய விழாக்கள்; போன்றன
உணர்த்துகின்றன. அப்படிப்பட்ட படைப்பின் அந்தரங்கமான குரல், அதன் வெளிச்சம்
சம்;பந்தமாக கேள்விகள் எழுவது
சகஜமே. சிறுகதைகள் போன்ற படைப்புக்களுக்கு பக்ககங்களை
ஒதுக்குவதில் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் காட்டுகின்ற ஓர வஞ்சனையும், அதன்
அளவுகள் சில பக்கங்களுக்குள் குறைக்கப்பட்டதும்
காட்சி ஊடகங்களால் ஏற்பட்ட பாதிப்பாகத்தான் இருக்கும்
என்பதில் ஐயம் எதும் இல்லை.
(03) அப்படியென்றால், புதிய
சிறுகதைகள்
எப்படியான
வடிவங்களில்,
கூறு
முறைகளில்
இருக்கும்?
தற்போது புதிய சிறுகதை
வடிவங்கள், short fiction என்ற வடிவில் வரத்
தொடங்கியுள்ளன. தமிழில் அராத்து, பேயோன்
போன்றவர்கள் அதனை முயற்சித்திருக்கிறார்கள். இந்த short
fiction மூன்று வகையாக காணப்படுகின்றது flash
fiction (1000 சொற்களுக்கு
உட்பட்டது), micro fiction (300 சொற்களுக்குட்டபட்டது), nano fiction (100 சொற்களுக்குட்பட்டது). இந்த புதிய சிறுகதை
வடிவங்கள் இப்படி மாறிக்கொண்டிருப்பதற்கு பல உட்புற
காரணிகள் இருக்கலாம். மாற்றம் ஒன்றே மாறாதது.
அந்த வகையில் சிறுகதைகளின் நீண்ட
வடிவில் மாற்றம் தேவைப்பட்டு, (ஒரு
வகையில் அதன் மேல் சலிப்பும்
ஏற்பட்டிருக்கலாம்) அது short fiction ஆக
சென்றிருக்கலாம். இன்னொரு காரணம், இந்த
அவசர யுகத்தில், நீண்ட எழுத்துக்களை வாசிக்க
நேரமில்லா ஒரு கூட்டத்திற்காகவும், இவைகள்
உருவாகி இருக்கலாம். Short fiction யில் இன்னொரு வடிவமாக
கனடாவைச் சேர்ந்த அர்ஜூன் பாசு
என்பவர், ஆங்கிலத்தில் twitter தளத்தில் 140 எழுத்துக்களுக்குள்
அடங்கும், சிறுகதை வடிவத்தை பாவிக்கத்
தொடங்கியிருந்தார். இதனை தற்போது பலரும்
பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சிறுகதைகளுக்காக இவர்
சோர்ட்டி என்ற விருதையும் பெற்றுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில், காண்பிய ஊடகங்களின் பெருக்கம்,
தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக, வடிவிலும், அளவிலும், பாரிய மாற்றங்களுடன்,
சிறுகதைகள் காண்பியக் காட்சிகளுடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
04) உங்களுடைய
கதைகளின்
பிராந்தியம்
எப்படி
வேறாக
மாறியது?
நான் பிறந்தது எனது
தாயின் ஊரில். வளர்ந்தது எனது
தந்தையின் ஊரில். இரண்டுக்கும் 20 கிலோமீற்றர்
வித்தியாசம். தாயின் ஊரில் நான்
பிறந்த வீட்டிற்கு முன்னால் கண்ணாக்காடுகள் சூழ்ந்த ஒரு ஆறு
ஓடி கடலுடன் கலக்கும். நான்
சிறிய பருவத்தில் எனது தாயிடம் தண்ணிக்
கப்பலில் படிக்கப் போவேன் என்றும் சொல்வேனாம்.
எனது மிகச் சிறிய வயதில்
தந்தை ஆசிரியராக முதலில் பணிபுரிந்த இடத்திற்கு
நாங்கள், படகில் அல்லது லோஞ்சில்தான்
போவது வழக்கம். இவையெல்; சேர்ந்து என்னில்
கடலை ஆழமாக விதைத்து விட்டிருந்தன
எனது அடிமனதில். இந்த விதைகள்தான் எனது
பட்ட, பட்டமேற் படிப்புகளின் களனாகவும் இருந்தன. இதைத் தவிர்த்து சொல்ல
முடியாத இரத்தமும் சதையுமான காரணங்களும் என்னையுமறியாமல் என் அடிமனதில் இருக்கலாம்.
நான் கடலின் பிள்ளை. ஆனால்
நீங்கள் சொல்கின்ற பிராந்தியம் விரும்பியோ பிரும்பாமலோ தேசிய, சர்வதேச ரீதியில்
புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியாமாக இருப்பது
குறிப்படத்தக்கது. ஆனால் அதற்கும் கதைக்
களன்களிற்கும் பெரும்பாலான நேரங்களில் தொடர்புகள் இல்லை.
05) விலங்குகள்,
மனிதர்கள்,
சமூக
அமைப்பு,
சூழலியல்
மற்றும்
அரசியல்,
பொருளாதாரம்
என்ற
ஒரு
சங்கிலியில்
பிணைக்கப்பட்டிருக்கும்
நெருக்கடி
மிக்க
உறவில்
எதை
முக்கியத்துவப்படுத்துவதற்கு
முனைகிறீங்கள்?
சூழல் உயிருள்ள, உயிரற்ற
காரணிகளின் கலவை என்றும், அவை
ஒன்றுடன் ஒன்று இடைத்தொடர்பானது என்றும்,
சூழல் மாசடைதல் என்பது சூழலில் ஏற்படுத்தப்படும்
அல்லது ஏற்படும் விரும்பத் தகாத மாற்றம், நிலத்தில்,
நீரில், வளியில், கதிர்த்தொழிற்பாட்டில், ஒளியில், ஒலியில் ஏற்படக்கூடியது என்றும், சூழலில்
ஏற்படும் இவ்வாறான மாற்றங்களைத் தடுப்பதற்கு பல்வேறு வழிகள், கடதாசிகளில்
எழுதப்பட்டிருந்தாலும், இதற்கு அடிப்படையானது சுற்றுச்
சூழல் பற்றிய விழிப்புணர்வு என்றே
கருதுகின்றேன். சுற்றுச் சூழல் விழிப்புணர்வானது நான்கு
மனித பங்குதாரர்களைக் கொண்டிருக்கலாம் (என்னைப் பொறுத்த வரையில்).
(ஒரு வேளை இதனைவிட அதிகமாகவும்
இருக்கலாம்). பங்குதாரர்களாக பொதுமக்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களைக் கொள்ளலாம்;.
சூழலிலிருந்து வளங்களையும், நன்மைகளையும் பெறுவதோடு சூழலோடு பொதுமக்களின் தொடர்பு
முடிந்துவிடுகிறது. ஆசிரியர்களுக்கு உரிய காலத்துக்குள் சுற்றுச்
சூழலைக் கற்பித்து முடிப்பதோடும், ஆய்வாளனுக்கு சுற்றுச் சூழலை ஆய்வு செய்து
அதனை கௌரவமான, மகத்துவமான, புகழ்பெற்ற, பெருமைக்குரிய, மேற்று ஐரோப்பிய, வட
அமெரிக்க நியமங்களுக்குட்பட்ட, சொற்ப தொகையினரே வாசிக்கக்கூடிய
சஞ்சிகைகளில் பிரசுரித்து, பேராசிரியர் பதவி உயர்வுக்கு புள்ளிகளைப்
பெறுவதோடும், மாணவர்களுக்கோ, கற்றதனை மனனம் செய்து
எழுத்தால் ஒப்புவித்து உயர்ந்த புள்ளிகளைப் பெறுவதோடும்
முடிகிறது. அரசியல்வாதிக்கோ கிடைக்கப்போகும் தரகுக்காகவும், அரசியல் இருப்பை உறுதி
செய்வதற்காகச் செய்யப்போகும் அபிவிருத்தித் திட்டங்களோடும் தொடர்பு முடிகிறது.
சுற்றுச் சூழல் என்பதே வாழ்க்கைக்கும்,
கல்விக்கும், இதர செயற்பாடுகளுக்கும் அடிப்படையான
ஒரு விடயமாகும். சுற்றுச் சூழல்தான் உணவு தருகிறது. உடை
தருகிறது. உறையுள் தருகிறது. ஓளடதம்
தருகிறது. இன்னோரன்ன பிறவும் தருகிறது. சுற்றுச்
சூழல் இன்றி மருத்துவம் இல்லை.
கால்நடை இல்லை. விவசாயம் இல்லை.
விலங்குகள் இல்லை. தாவரங்கள் இல்லை.
இரசாயனங்கள் இல்லை. வர்த்தகம் இல்லை.
நிருவாகம் இல்லை. நிதி இல்லை.
நீதி இல்லை. அரசியல் இல்லை.
சமூகங்கள் இல்லை. தத்துவங்கள் இல்லை.
மதங்கள் இல்லை. மொழிகள் இல்லை.
கலைகள் இல்லை. ஆக சுற்றுச்
சூழல் என்பதே அடிப்படையானது. எனவே
சுற்றுச் சூழல் சம்பந்தமான விழிப்புணர்வை
மக்களிடையே ஏற்படுத்தல் என்பதுவும் மிக மிக அடிப்படையான
ஒன்றாகும்.
இந்த அடிப்படையில் நான்
சூழலைத்தான் முக்கியத்துவப்படுத்துகின்றேன். தாவரங்கள், விலங்;குகள், மனிதர்கள்,
சமூகங்கள், அரசியல், பொருளாதாரம் போன்றவைகள்; சூழல் என்ற சங்கிலியின்
பல கண்ணிகள். இவைகளுக்கிடையில் ஒரு சமநிலை வேண்டும்;.
எவரும் எவரையும் பாதிக்காத வகையில் இருந்து, அந்த
சூழலின் நிலைபேறான இருப்புக்கு உதவ வேண்டும்.
உதாரணமாக அபிவிருத்தித்; திட்டம் ஒன்றை செயற்படுத்தும்;போது, அவை தாவர
விலங்குகளிற்கும், அருகிலுள்ள சமூகங்களுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பற்றதாக
இருக்க வேண்டும். அந்த அபிவிருத்தி திட்டம்,
சூழலுக்கு பாதிப்பாக இருந்தாலும், அதீத இலாபத்தை நோக்கமாகக்
கொண்ட உற்பத்தி முறை காரணமாக, சமூக
அமைப்புக்கள் எவ்வளவு எதிர்ப்பைக் காட்டிhனாலும், அரசியல் இந்த திட்டத்தை
நடைமுறைப்படுத்த அனுமதி கொடுத்தால், அதன்
காரணமாக செயற்படுத்தப்படும், பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட திட்டம் சூழலின்
சமநிலையைக் குழப்பி, தனது இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும்.
இதற்கு இலங்கையின் பல அபிவிருத்தித் திட்டங்களை
உதாரணமாக கூறலாம்.
(06)
ஆகவே எழுத்தாளர்கள் இயற்கையின்
இருப்புக்கும்
இயற்கை
மீதான
மனித
அழிப்புக்கு
எதிராகவும்
செயற்பட
வேண்டியுள்ளது.
தங்களுடைய
குரலை
வெளிப்படுத்துவது
அவசியம்
என்கிறீர்கள்.
வணிகமும்
பொருளாதார
நலன்களும்
அரச
அதிகார
மயப்பட்டுள்ள
சூழலில்
எழுத்தாளர்களின்
குரல்களுக்கான
அதிகாரம்,
சமூகப்
பெறுமதி
என்ன?
ஒரு சமூகத்தின் மனச்சாட்சி
எழுத்தாளர்கள்தான். மருத்துவனோ, சட்டத்தரணியோ, பொருளியலாளனோ அல்ல. மருத்துவன், சட்டத்தரணி,
பொருளியலாளன் எழுத்தாளனாய் இருரந்தால் அவன் சமூகத்தின் மனச்சாட்சியாக
முடியும். இந்த
சமூகத்தின் ஒரு அம்சமாகிய இயற்கையின்
இருப்புக்கு, இயற்கை மீதான மனித
அழிப்புக்கள் நடைபெறும்போது, வேறு எந்தத திறத்தாரையும்விட
எழுத்தாளர்களின் குரலே அதற்கு எதிராக
உக்கிரமானதாயும், வலுவானதாயும், அதீத கவன ஈர்ப்பு
பெற்றதாகவும் இருக்கும். ஏனெனில் மற்றைய திறத்தார்
எழுத்தாளர்களைவிட இந்த எதிர்ப்புக்களை ஒரு
தாக்கமான இயக்கமாக கொண்டு செல்வதற்கு உரிய
வெளிப்படுத்துகை திறன் அற்றவர்களாக இருப்பர்.
ஒரு எழுத்தாளனுக்குத்தான் அந்த சக்தியும், திறனும்
உண்டு. இது நான் அனுபவ
ரீதியில் கண்ட உண்மை.
வரையறையற்ற மூலதனத்தை குவித்து, உலக முதலாளித்துவத்தை முதலாளித்துவவாதிகள்
விரித்து செல்வதற்கான உழைப்பிற்கு, நிலம் தேவைப்படுகின்றது. இங்கே
அவர்கள் (சூழலைக் கருதாது) “இயற்கையை
வெல்”, “எல்லாம் மனிதருக்காக” என்ற
தாரக மந்திரங்களை உருவாக்கி நிலத்தை சுரண்டோ சுரண்டென்று
சுரண்டி தங்களது பரந்த ஏகாதிபத்தியத்
தேவைகளுக்கான உற்பத்தியைக் கூட்டுகிறார்கள். மேலே கூறிய தாரக
மந்திரங்கள் 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்த
முதலாளித்துவ உலக பொருளாதாரத்திற்கு பின்னர்
உருவானவைகள்தான். அன்று இதற்கெதிராக கிளம்பிய
சமூக எதிர்ப்புக்களையும், கிளர்ச்சிகளையும் அன்றிருந்தே முதலாளித்துவவாதிகள், அடக்கியும், மழுங்கடித்தும் வந்திருக்கின்றார்கள். இலாப நோக்கத்தினை அடிப்படையாகக்
கொண்டு இயங்கும் இந்த முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு
சூழலியல் பற்றிய அக்கறை ஒரு
போதும் கிடையாது. ஆனால் கடுமையான
எதிர்ப்புக் கிளம்பும்போது முதலாளித்துவம்
தனக்கும் சூழல்மீது அக்கறை இருப்பதாக பம்மாத்துக்
காட்டும்.
சூழலிலுள்ள உயிர்கள்;, தாவரங்கள்,; விலங்ககள் போன்றன அரசியல், பொரளாதார,
வணிகமயமான திட்டங்களால் உயிரினப் பல்வகைமை, சூழல் அழிவுக்குள்ளாகும்போது அல்லது உயிரினப்
பல்வகைiயின் கூறுகளான பறவைகள், ஊர்வன, பூச்சிகள், ஆறு,
கடல், அலை போன்றவற்றிற்கு அழிவுகள்
ஏற்படும் போது அவை பற்றி
அறிவும், விழிப்புணர்வையம் நாம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த விழிப்புணர்விற்கான குரலை ஏற்படுத்த வேண்டியவர்கள்
எழுத்தாளர்களே.
இன்று நடைமுறையில் உள்ள
அரச, தனியார், இயந்திரங்களில் உள்ளவர்கள், எதிர்ப்புகளை சமாளித்து அதனை முளையிலேயே கிள்ளி
எறிவதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் சூழலியல்
கோரிக்கைகளை தங்களுக்கு சாதகமாகவே வளைக்க முற்படுகின்றனர். எனவே
இதற்கெதிராக திரண்டெழக் கூடியவர்கள் மக்களே. இதற்கு முதன்
முதலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த
விழிப்புணர்வுக் கருத்துக்கள் ஒரு வலுவான எதிர்ப்புக்
குரலாக உருவாக வழி வகுக்க
வேண்டும். சுற்றுச்சூழற் சங்கங்கள், சூழலுக்கு ஆதரவு தரும் தொழிற்
சங்கங்கள், அணுசக்தி எதிர்ப்பு அமைப்புக்கள் போன்ற பலவும் நிறைய
உருவாகி தொடர்ந்து போராட வேண்டும். இத்தகைய
போராட்டங்கள் பல வெற்றிபெற்றுள்ளன. வெற்றி
பெற்றும் வருகின்றன. இவை நமக்கு மிகுந்த
தெம்பை அளிக்கின்றன. நம்பிக்கையும் அளிக்கின்றது. இதற்கும் கடுமையாக பின்னால் நின்று உழைத்தவர்கள் எழுத்தாளர்களே.
இன்று சூழலியல் ஒரு தீவிரமான அரசியல்
போக்காக உலகின் பலபாகங்களில் மாறிக்கொண்டிருக்கின்றது.
சூழலைப் பாதுகாப்போம் என்ற மையவாதக் கருத்தைச்
சுற்றி பல அரசியல் இயக்கங்கள்
சூழல் அழிவைத் தடுப்பதற்கும், நல்ல
சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் களத்தில் கச்சை கட்டிக் கொண்டு
நிற்கின்றன. இவ்வாறான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் அல்லது இவ்வாறான சூழலியல்-அரசியல் போக்கை முன்னெடுத்துச்
செல்வதில் எழுத்தாளர்களே முக்கிய பங்க வகிக்கிறார்கள்.
சூழலின் மீது வணிகமும், பொருளாதார
நலன்களும், அரச அதிகாரங்களும் மையப்பட்டுள்ள
நிலையில,; அருந்ததிரோய், அல்பிறட் கொறொஸ்பி; இவர்களைக் கண்டு ஏன் அரச
இயந்திரங்கள் பயப்படுகின்றன என்பதை இவ்வாறுதான் புரிந்து
கொள்ளவேண்டி இருக்கிறது.
(07) தமிழ்,
முஸ்லிம்
என்ற
அரசியற்
சொல்லாடல்கள்
இன்று
இலக்கியத்திலும்
வலுவடைந்திருக்கின்றன.
இது
தொடர்பாக
உங்களுடைய
வரலாற்றுப்பார்வை
என்ன?
இதனை நான் இவ்வாறே
பார்க்க முனைகின்றேன். 1951ம் ஆண்டு, இலங்கை
பல்கலைக்கழகத்தினால் (அப்போதைய பேராதனை பல்கலைக்கழகம்)
பேராசிரியர் வி. செல்வநாயகம் என்பவரால்
எழுதி வெளியிடப்பட்ட நூலில் முஸ்லிம்கள் தமிழுக்கு
செய்த தொண்டுகள் பற்றியும், தமிழ் வளர்த்த முஸ்லிம்கள்
பற்றிய வரலாறும் எழுதப்பட்டிருக்கவில்லை. அதேவேளை இந்நூல் பல்கலைக்கழகங்களிலும்,
ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளிலும் பாடநூலாக இருந்தது. அப்போது அது முஸ்லிம்களை
கொஞ்சம் கிளர்ந்தெழச் செய்தது எனலாம். அதன்
காரணமாக எம்.எம் உவைஸ்
என்பவர் பல்வேறு ஆய்வுகளைச் செய்தார்.
இதற்கு உறுதுணையாக பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, கலாநிதி,
ஏ.எம்.ஏ.
அஸீஸ், பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றோர்
இருந்தார்கள். இதன் காரணமாக பதியுத்தீன்
மஹ்மூத் கல்வி அமைச்சராக இருந்த
காலத்தில் தமிழ் மொழிப் பாடத்திட்டத்திலும்
மாற்றங்கள் ஏற்பட்டது. தமிழ் இலக்கியம் (அ)
பாடத்திட்டம், (ஆ) பாடத்திட்டம் எனவும்,
மாணவர்கள் தமிழ் முஸ்லிம் மாணவர்கள்
இஸ்லாமிய இலக்கியத்தினையும் தமிழ் இலக்கியத்தினையும் வேறுவேறாகப்
பயின்று பரீட்சைக்கு தோற்றினர்.
இதன் பிறகு மருதமுனையில்
1996ம் ஆண்டு, உலகின் முலாவது
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு
நடக்கத் தொடங்குகின்றது. அன்றிலிருந்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற
ஒன்றை ஒரு சாரார் நிறுவவும்,
இன்னொரு சாரார் அதனை எதிர்க்கவும்
முனைகின்றனர். தேர்ந்த வாசிப்பும், இலக்கிய
போக்குகளோடும் பரீச்சயமான ஒரு இளைஞர் குழு,
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பதில்
வருகின்ற தமிழ் என்பதே அதிகாரத்துவத்தின்
இன்னொரு வடிவம். எனவே அதனை
நீக்கம் செய்து, அதனை முஸ்லிம்
தேசிய இலக்கியமாக மாற்றம் செய்ய வேண்டும்
என்று களத்தில் நின்றது.
நவாஸ் சௌபி எழுதிய
‘முஸ்லிம் தேசிய இலக்கியம’; என்ற
நால் இங்கு முக்கியத்துவமான ஒன்றாகம்.
முஸ்லிம் எழுத்துக்கள் ஈழத்தமிழ் இலக்கியத்திற்குள்ளும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்குள்ளும் அடக்க முடியாத
காரணங்களையும், முஸ்லிம் தேசிய இலக்கியத்திற்குள் அடக்கப்பட
வேண்டும் என்ற காரணங்களையும் தருக்கரீதியாக
முன்வைக்கின்றது. “தமிழ்” என்பது இன்னொரு
அடையாளமாகவும், அதிகாரமாகவும் இருப்பதை உணர்ந்ததாகவும் “இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்” என்பதை
“இஸ்லாம் இலக்கியம்” என்றே அழைக்கலாமே என்ற
எண்ணம் தோன்றியதாகவும் அதன் தொடர்ச்சியாகவே “முஸ்லிம்
தேசிய இலக்கியம்” என்ற இலக்கிய அடையாளத்தை
முன்வைப்பதாகவும் முன்னுரையில் கூறுகின்றார்.
“முஸ்லிம்களின் தனித்துவமான இருப்பினையும், சுயத்தினையும் கொண்ட பண்பாடு, கலாசாரம்,
சம்பிராதாயங்கள், சடங்குகள், பாரம்பரியங்கள், அழகியல் சார்ந்த அகமன
படைப்புகள், மண்வளம் கொண்ட மொழிப்பயன்பாடுகள்
என்று முஸ்லிம்களின் எல்லா வகையான படைப்புகளையும்
“முஸ்லிம் தேசிய இலக்கியம்” உள்ளடக்கும்.
இவற்றுள் கவிதை, சிறுகதை, நாவல்,
நாடகம், நாட்டாரியல், ஓவியம், ஆய்வுகள் என்று
இன்னும் பல இலக்கியப் படைப்புகளும்
முக்கியம் பெறுகின்றன.
மதம், பக்தி இலக்கியம்
என்ற வரையறைக்குள் சுருங்கிய இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தினை முஸ்லிம்களின்
முழு எழுத்து வடிவங்களையும் உள்ளடக்கக்
கூடிய வகையில் விரிந்த ஓர்
இலக்கிய அடையாளமாக பேச முனைவதே “முஸ்லிம்
தேசிய இலக்கியம்” ஆகும்.” என்று வரையறை
செய்கின்றார். அதாவது “தமிழ்” என்று
அடையாளத்தால் அடக்கப்படும் “ஈழத் தமிழ் இலக்கியம்”
என்ற அடையாளத்தில் இருந்து தனித்துவமான இலக்கிய
அடையாளம் ஒன்றை முன்னெடுப்பதும் ஏற்கனவே
வழக்கத்தில் இருந்த “இஸ்லாமியத் தமிழ்
இலக்கியம்” என்ற இலக்கிய அடையாளம்
ஏற்படுத்தக்கூடிய மதம், பக்தி இலக்கியம்
என்ற வரையறையை விட்டு, முழுமையான இலக்கிய
அடையாளம் ஒன்றை தாங்கி நிற்பதும்
இதன் நோக்கங்களாகும் என அவர் கருதுகிறார்.
தமிழர்களைப் பொறுத்தவரை “தமிழ்” என்பது அடையாளம்
சார்ந்த விடயம் என்றும், முஸ்லிம்களைப்
பொறுத்தவரை “தமிழ்” என்பது மொழியேயன்றி
அடையாளமல்ல என்கிற தர்க்கத்தையும் முன்வைக்கின்றார்.
அதேவேளை, 1980 களின் ஆரம்பத்தலிருந்தே தொடங்கிவிட்டிருந்த
முஸ்லிம் தமிழ் இன முறுகல்களும்,
இந்த இடைவெளியை இன்னும் அதிகமாக்க தொடங்குகின்றன.
1990களிற்கு பிறகு தமிழீழ விடுதலைப்
புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைககள் காரணமாக, இந்த அரசியற் சொல்லாடல்கள்
மேலும் வலுவடையத் தொடங்குகின்றன.
நகைச்சுவையாக ஒரு விசயத்தை சொல்வார்கள்.
தமிழ்த் தேசியத்தை வளர்த்தது செல்வநாயகமும், வே. பிரபாகரனும் அல்ல,
மாறாக எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்காவே தமிழ்
தேசியத்தை வளர்த்தார் என. இதே விடயத்தை
முஸ்லிம் தேசியத்திற்கும் பிரயோகிக்கலாம். முஸ்லிம் தேசியத்தை வளர்த்தது எம.;எச்.எம்.
அஸ்ரப் போன்றவர்கள் அல்ல. மாறாக வே.
பிரபாகரன், பொட்டு அம்மான், கருணா
அம்மான், கரிகாலன் போன்றோரே அதனை வளர்த்தனர் எனக்
கூறலாம்.
08) இந்த நிலை
– இவ்வாறான
இரட்டை
நிலை
அல்லது
பிரிநிலை
எவ்வாறான
எதிர்கால
அடையாளமாகும்?
இந்த இரட்டை நிலை
அல்லது பிரிநிலைக்கான சாதகமான காரணிகள் இரு
சாரார்களின் உள்ளங்களிலும் திட்டமிட்டு வளர்க்கப்பட்டிருக்கின்றன அல்லது வளர்க்கப்படுகின்றன என்றே
கருதுகின்றேன். இந்த இடைவெளி எதிர்காலத்தில்
அதிகரித்துச் செல்லும் என்றே தோன்றுகின்றது. அதற்கு
ஏதுவான காட்சிகள் நொடிக்கொரு தரம் மாறிக்கொண்டே இருக்கின்றன.
09) இலக்கியத்தில் அடையாளம்
குறித்த
பிரச்சினைகளைப்
பற்றிய
உங்கள்
பார்வை?
அடையாளம் என்பது அடையாளம் சம்பந்தப்பட்ட
இயங்குதளத்துடன் அல்லது சம்பந்தப்பட்ட பிரச்சினையுடன்
வாழ்ந்தவரால் அல்லது வெளியேறியவரால் எழுதப்பட்ட
எழுத்தா என்பதில் பிரச்சினை இல்லை. மாறாக அவைகளின்
வாழ்வினைப் பதிந்திருத்தலும், அவைகளுடன் எல்லா வகையில் சேர்ந்திருத்தலும்
என்றே கருதுகின்றேன். அடையாளம் இன்றி இயங்க ஆசைப்பட்டாலும்,
அதிகாரத்துவத்தின் காரணமாக தலித் இலக்கியம்,
பெண்ணிய இலக்கியம், ஈழ இலக்கியம் போன்ற
அடையாளங்கள் உருவாகியிருக்கலாம். இதன் காரணமாக, அவைகளை
நோக்கி வாசகர்களின் கவனம் குவிக்கவும்பட்டிருக்கும். இதன் காரணமாகவும்
ஒரு வகையில் அடையாளம் முக்கியப்படுத்தப்பட்டிருக்கும்.
மொழியை அடிப்படையாகக் கொண்ட
அடையாளத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டது போல் ஒரு மாயை
தென்பட்டாலும், அது கொண்ட அதிகாரம்
காரணமாக பல்வேறு அடையாளங்களுடனும், உட்கிளைகளுடனும்
பல பிரிவுகள் பிரிந்து
கொண்டன. புவியியல் ரீதியாக இந்திய, இலங்கை,
தென்கிழக்கு ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய,
ஓசியானிக், வட அமெரிக்க தமிழர்கள்
என்ற அடையாளங்களுடனும், இன அடையாளங்களுடனும் (தமிழ்,
முஸ்லிம்), சாதி,
பால், நிலம் (வடக்கு, கிழக்கு,
தெற்கு) மேலும் இன்னொரு வகுதிக்குள்
புலம்பெயர் இலக்கியம், தலித் இலக்கியம். எதிர்ப்பிலக்கியம்
போன்றனவும் தோற்றம் பெற்றுக் காணப்படுகின்றன.
(10).
புனைவுச்
செயலின்
அடிப்படைகள்,
அதற்குரிய
அடையாளம்
என்ன?
(அதாவது
புனைவொன்றை
உருவாக்கும்போது
அதை
உருவாக்குவோர்
கவனிக்க
வேண்டிய
அடிப்படைகள்
- வடிவம்,
உத்தி,
மொழிதல்,
மொழி,
சமூக
நிலை,
வரலாறு,
உளவியல், அடையாளம், புதுமை,
சமனிலை
அல்லது
மீறல்
போன்றவை
என்ன?
புனைவுச் செயலின் அடிப்படைகள் குறித்து
ஒருமித்த கருத்து இந்தத் துறையிலுள்ள
எவரிடமும் இல்லை. ஒருவர் கதைப்பின்னல்,
கதை மாந்தர், கதைக்களன் போன்றவைகள்தான் அடிப்படைகள் என்றும், இன்னொருவர் கரு, கதைமாந்தர், முரண்பாடு,
பகைப்பலம், உரையாடல்கள் போன்றவைகள்தான் அடிப்படைகள் என்றும் கூறுகிறார். இன்னொருவரோ
இவைகளுடன் நோக்குநிலையும் முக்கியம் என்று கூறுகிறார்.
கதைக்கரு என்னும்போது அன்பு, பொறாமை, வேலையின்மை,
சோசலிசம், இறைக்கொள்கை, பகுத்தறிவ போன்றவைகளாகவும், கதைப்பின்னல் என்பது கதைமாந்தர் செயு;யும், சொல்லும், சிந்திக்கும்
விடயங்களாக வரும், கதைமாந்தர் என்பது.
கதாபாத்திரம், இவர்களின் புனைவின் ஓட்டத்தில் பங்குபற்றுபவர்கள். மனிதர்கள் அல்லாத ஜீவராசிகளும் இந்த
இந்த பாத்திரத்தை வகிக்கும். இவர்களுக்குரிய பண்புகளை புனைவுகளில் படைப்பாளிகள் வார்த்துச் செல்கிறனர். இவர்கள் மூலமே புனைவு
நகர்கிறது. இதற்கு பல்வேறு உத்திகளை
படைப்பாளிகள் பயன்படுத்துகின்றனர். புறத்தோற்றம், பழக்கவழக்கங்கள், பிற பாத்திரங்களுடன் கொள்ளும்
உறவு, உரையாடல், செயற்பாடுகள், பெயர் ஆகியவற்றை உரியமுறையில்
கையாள்ளவதன் மூலம் குறிப்பிட்ட பண்புகளை
கதா பாத்திரங்களுக்கு வழங்குகின்றனர்.
கதாபாத்திரங்களுக்கிடையே நிகழ்த்தும், உரை புனைவுக்கு முக்கியமானதொன்றாகும்.
இவை புனைவின் பல்வேறு அம்சங்களை வாசகர்களுக்கு
உணர்த்துவதில் முன்னிலை வகிக்கின்றன. கதாபாத்திரங்களின் பண்புகள், பகைப்புலத் தன்மைகள், மனநிலை, உணர்வுகள் போன்றவற்றை
உணர்த்துவற்கு உரையாடல் பயன்படுகின்றது. உரையாடல் எழுத்துநடையிலும், பேச்சுவழக்கிலும் நடைபெறுகின்றன. புனைவுகளின் கதைசொல்லல், கதையின் நிகழிடம், வருணணைகள்
போன்றவையும் முக்கியம். வருணனைகளில் கதாபாத்திரம் சில வேளைகளில் ஈடுபடும்.
சில வேளை படைப்பாளி நேரடியாகவோ
விளக்கவுரை செய்வார். சில வேளைகளில் புனைவில்
புனைவை நகர்த்த கதாபாத்திரம் தமக்கு
தாமே தனிமொழியாக பேசிக்கொள்வதும் உண்டு. புனைவிற்கு முரண்பாடு
முக்கியம் என பல்வேறு அறிஞர்கள்
கூறியிருக்கிறார்கள். முரண்பாடு முதன்மைக் கதை மாந்தரையும், எதிர்க்கதை
மாந்தரையும் அல்லது நன்மையையும் தீமையையும்
பிரித்து வைக்க உதவும். இந்த
முரண்பாடு உளவியல் தன்மைகொண்டதாக இருக்கும்.
தன்னுடனும், இன்னொருவருடனும், சமூகத்துடனும், இயற்கையுடனும், மீயியற்கை சக்திகளுடனுமான முரண்பாடுகளாக அமையும். முற்காலத்தில் மனிதனுக்கும் விதிக்கும், தற்காலத்தில் மனிதனிற்கும் இயந்திரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும் இடையிலாதானதாக
முரண்பாடு காணப்படுகின்றது.
ஆனாலும் இன்னுமொரு விடயத்தையும்
சொல்ல வேண்டும். தோசை கண்டு பிடிக்கப்பட்ட
காலத்தில் அத ஒரு புதிய
ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால்
பின் வந்த காலங்களில் அது
பழைய விடயமாகி, அதன் அளவும், வடிவங்களும்,
உள்ளீடுகளும் மாறி, மீறி வௌ;வேறு தோற்றங்களையும், பெயர்களையும்
எடுத்தன. இதே போலத்தான் மேற்சொன்ன
புனைவுச் செயலின் அடிப்படைகள் அனைத்தும்
அது தோன்றிய காலத்திற்கு புதுமையானவையாக
இருக்கலாம், காலம் செல்லச் செல்ல
அது பழமையாகிறது. அது பழமையிலிருந்து புதுமைக்கு
மாறவேண்டியிருக்கிறது. அதனை எவ்வாறு மேலும்
புதுமையாக அல்லது புனைவாக மாற்றுவது
என்பது முக்கியமான ஒன்றாகும. இதற்கு அது கொண்டிருக்கின்ற
இயல்பைக் கலைக்க வேண்டும். முன்பிருந்த
அர்த்தங்களையும், பொருள்கோடல்களையும் மாற்றத்திற்குட்படுத்த வேண்டும். புது அர்த்தங்கள் கொடுக்கப்பட
வேண்டும். நேர்கோடானது நேர்கோடற்ற முறையில் மாற்றமுற வேண்டும். தொடர்ச்சியானது தொடர்ச்சியற்ற முறையில் மாற்றத்திற்குள்ளாக வேண்டும். குறிப்பான்-குறியீடுகள் வேறு அர்த்தங்களை கற்பிக்க
வேண்டும். இதன் காரணமாக அந்த
நிலையிலிருந்த புனைவுகள் மீறலுக்குட்பட்டு உடைத்துக் கொண்டு மெற்றா பிக்சனாக
மாறியிருக்கின்றன.
11. வாழ்க்கைக்கும் புனைவுக்கும்
இடையிலான
ஒற்றுமையும்
விலகலும்
எப்படியானது?
இலக்கியம்
ஏற்கனவே
உள்ள
வாழ்க்கையையும்
பேசுகிறது.
புதிய
வாழ்க்கை
ஒன்றையும்
முன்வைக்கிறது.
உள்ள
வாழ்க்கையை
மையப்படுத்தி
புதிய
வாழ்கையை
அவாவுகிறது.
உள்ள
வாழ்க்கையை
மறுசீரமைக்கக்
கோருகிறது
என்ற
வகையில்,
வாழ்க்கைக்கும்
புனைவுக்கும்
இடையிலான
உறவும்
விலகலும்
என்ன?
இந்தக் கேள்வியை நெருங்கும்போது
ஒரு விடயத்தை அவதானிக்க முடிகிறது. அது புனைவை வாழ்க்கையிலிருந்து
வேறொன்றாக பார்க்கும் தன்மை தென்படுகின்றது. அதற்கான
காரணம் என்னவெனில் வாழ்க்கை என்பது யதார்த்தங்களை மாத்திரம்
கொண்டதாகவும், புனைவுகள் வெளியிலெங்கோவிருந்து வந்து சேர்வது போலவும்,
அது வாழ்க்கை என நம்பப்படுகின்றவைகளுக்கு அந்நியமானது என்பது
போன்ற புரிதல்களின் போதாமைகள்தான் இன்னும் கற்பனை செய்தலை
பொய் சொல்வதாக தமிழ்மனம்
புரிந்து வைத்திருக்கிறது. ஆனால் கற்பனையும் சேர்ந்தது
தான் வாழ்க்கை. உண்மை யதார்த்தம் என
நம்பப்படுபவைகளும் புனைவின் சாத்தியங்களால் உருவாக்கப்பட்டு தங்களை நிலை நிறுத்திக்
கொண்டவைகள்தான். இதனை இன்னும் தீர்க்கமாக
சொல்வதென்றால் நாம் நம்பிக் கொண்டிருக்கும்
வாழ்க்கையின் கூறுகளும் புனைவுகளின்
உற்பத்திகள்தான். புனைவுகளாலானது இவ்வுலகு. நம் வாழ்க்கையும்தான்.
;
முன் இல்லாமல் இருந்து,
இப்போது உருவாகி இருக்கிறது. நாம்
நம்புகின்ற எல்லாமே உருவாக்கப்பட்டதாகும். எல்லாமே புனைவின்
சாத்தியங்களால் உருவாக்கப்பட்டதே. ஏற்கனவே புனைவுகளால் உருவாக்கபட்ட
ஒன்று தன்னை நிலைநிறுத்தி, ஒற்றை
அடையாளம் கொடுக்க முயற்சித்து மறுதலிக்க
முடியாத ஒன்றாக முயற்சிக்கிறது. அதற்கு
பின்னர் வந்தவைகள் ஒற்றை உண்மையை உருவாக்கி
தன்னை அதிகாரமாக்க முயற்சிக்கின்றன.
என்னைப் பொறுத்தவரை புனைவுக்கும்
வாழ்க்கைக்கும் இடையே பெரிய வித்தியாசம்
இருப்பதில்லை. புனைவுகளில் எப்போதும் உண்மை மனிதர்களும், அவர்களின்
வாழ்க்கையும் வந்து கொண்டே இருக்கும்.
இன்றைய புனைவு நாளைய யதார்த்தம்.
நாளைய யதார்த்தம் எதிர்கால புனைவாகவும் மாறலாம். சொந்தப் புனைவுகளைவிட வாழ்க்கை
சுவாரசியம் மிக்கது. ஒரு படைப்பாளி புனைவுக்கும்
வாழ்க்கைக்கும் இடையில் இருந்து, அதில்
வாழ்ந்து மீள மீள பிறப்பெடுக்கும்
பரவசத்தை அடைகிறான். உண்மையில் இலக்கியம் என்பதே உண்மையை புனைவின்
மூலம், புனைவை உண்மை மூலமும்
நிருபிக்க முனைவதே என்றும் சொல்லலாம்.
புனைவு உண்மையை பயன்படுத்துவதன்
காரணமாக உண்மையாக மாற ஆரம்பிக்கின்றது. ஆரம்பத்தில்
புனைiவாக இருப்பது பின்னர்
உண்மையாக மாறுகிறது. உதாரணமாக ஆதர்சி கிளாக்கின் புனைவுகள்
பின்னொரு கலத்தில் உண்மைகளாக மாறின. அதே போலத்தான் வால்ட்
டிஸ்னியின் புனைவுப் பாத்திரங்கள் பின்னொரு நாளில் யதார்த்தமாகி உலா
வந்தததையும் நாம் காணலாம்.
பிரதிகளுக்குள் உருவாக்கப்படும் புனைவுகள் ஆசிரியர் தனக்கு நேர்ந்த அனுபவங்களை
சொல்லிவிடுகிறார் என்பதாகவே புரியப்பட்டு கதையாடப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் மொழி தன்
மாறுபடும் இயல்பினூடாக ஆசிரியரின் எதிர்பார்ப்பினை சிதறடித்து வாசகனுக்கு பல அர்த்த சாத்தியங்களை
கொடுத்து பிரதிக்குள் வைத்தாலும் கூட அதனால் அவ்வெதார்தத்தினை
அப்படியே வெளிப்படுத்தி விடுகிறது. ஆக, புனைவு நேர்ந்த
அனுபவங்களைப் பேசாமல் புதிய அனுபவங்களை
உருவாக்கிவிடுகிறது. ஆசிரியர் யதார்த்த விசயங்களினை பேச முடிவதில்லை. அது
பிரதிக்குள் உருப்பெறும் யதார்த்தமாக மாறிவிடுகிறது
12. முஸ்லிம் இலக்கியம்,
மலையக
இலக்கியம்.
போரிலக்கியம்,
போருக்குப்
பிந்திய
இலக்கியம்,
பெண்ணிலக்கியம்,
தலித்
இலக்கியம்,
கிறிஸ்தவ
இலக்கியம்,
தமிழ்த்தேசிய
இலக்கியம்,
எதிர்ப்பிலக்கியம்
என்ற
மாதிரியான
வகைப்படுத்தல்கள்
சரியானவையா?
அவசியமானவையா?
இவையெல்லாம்
அவசியமானவை
என்றால்,
இவை
அனைத்தும்
அரசியல்
இலக்கியங்களாகத்தானே
இருக்க
முடியும்?
அப்படியென்றால்
அரசியல்
இலக்கியத்தை
ஆளுகை
செய்யமுடியாது
என்று
சொல்லப்படுவதைப்பற்றி?
பண்டைய அரசர்களின் காலம்,
போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம்
போன்ற காலங்களில் வௌ;வேறு இலக்கியங்கள்
வளர்ச்சியடைந்தன. இதனால் மதங்களுக்கிடையே போட்டி
ஏற்பட்டது. போர்த்துக்கேயர் காலத்தில் பள்ளு இலக்கியங்கள், ஓல்லாந்தர்
காலத்தில் சமுதாயச் சிந்தானைகள் கொண்ட, முற்போக்கு இலக்கியங்கள்,
கிறிஸ்தவ இலக்கியங்கள் போன்றன உருவாகின. இவை
19ம் நூற்றாண்டில் சைவ இலக்கிய வளர்ச்சிக்கு
காரணமாயின. இங்கே சைவ, கிறிஸ்தவ
இலக்கியங்களுக்கிடையே போட்டிகள் ஏற்பட்டன.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மரபு சார்ந்தவர்களுக்கும், அதனை மீறமுயன்றவர்களக்கம்
ஒரு எழுத்துப் போராட்டம் தொடங்கியது. பின்வந்த காலங்களில் சமூக ரீதியாகவும், அரசியல்
ரீதியாகவும் போரட்டங்கள் நடக்கத் தொடங்கின. வெளியாருக்கு
எதிரான குரலாக இருந்த இலக்கியம்,
பின்னர் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைப் பேசிய பின்னர், இடது
சாரிகளின் எழுச்சிகளோடு மாற்றுக்குரலாக ஒலித்தது. இதன் காரணமாக விவாத
அரங்குகள் திறந்து விடப்பட்டன. மார்க்சிய
விமர்சனம், சோசலிச யதார்த்தவாதம் என்று
விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பின்னர் இடதுசாரிய அரசியல்
இலக்கியத்தில் திருப்திபடாத சிலர், வேறொரு தளத்தில்
படைப்புக்களில் கலைச்சிறப்புக்கள் இருக்க
வேண்டும் என்று வலியுறத்தினர்.
இதே காலப் பகுதியில்
மலையகப் பிரதேசத்தில் மலையக இலக்கியம் தனித்த
அடையாளத்துடன் கருக்கொண்டது. பின்னர் நாடு சுதந்திரம்
அடைந்து, அதற்கு பிற்பட்ட காலத்தில்
அரசியல் தலைவர்கள் தங்கள் குறுகிய இலாபங்களுக்காக
தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் பிரிவினையை
வளர்த்து நின்றனர். இதன் காரணமாக எதனையும்
இனரீதியாக அணுகும் முறை உருவானது.
இது இலக்கியத்திலும் புகுந்து கொண்டது. இதனால் தமிழ் தேசிய
இலக்கியம் உருவானது.
இதே காலப்பகுதியில் இடதுசாரிய மார்க்சிய இலக்கியமும் உருவானது.
இலக்கியத்தின் புதிய போக்குகளும், துலக்கமான
அடையாளங்களும் இவற்றுக்கான இயங்கு தளங்களும் உருவாகின.
படைப்பு, விமர்சனம் என்ற தீவிர செயற்பாடு
ஈழத்து இலக்கியத்தை நிறுவியது. இதே வேளை இலங்கையில்
வடபகுதியில் நடந்த சாதியத்திற்கு எதிரான
போராட்டங்கள் தலித் இலக்கியத்திற்கும், ஈழப்போராட்ட
இலக்கியத்திற்கும் வித்திட்டன. அதன் பின்னர் ஈழத்திலக்கியம்
என்ற போக்கு உருவானது.
இதேகால கட்டத்தில், மண்வாசனையுள்ள
பிராந்திய ரீதியான படைப்புக்கள் தோற்றம்
பெறத் தொடங்கின. இலங்கையிலுள்ள பிரதேச அடையாளம், நிலவியல்,
மொழி, தொழில், வாழ்க்கைமுறை போன்றவற்றை
அடையாளப்படுத்தும் இலக்கிய போக்கும் வளர்ச்சியடைந்தது.
ஈழப் போராட்டம், ஈழப்போராக மாறி முஸ்லிம்களை நெருக்கவாரத்திற்குள்ளாக்கியபோது,
முஸ்லிம்கள் தங்கள் இருப்பை, அடையாளத்தை
முன்னிறுத்த முஸ்லிம் இலக்கியம் என்ற போக்கை உருவாக்கினார்கள்.
இதன் காரணமாக எதிர்ப்பிலக்கியம் என்ற
போக்கும் வளரத் தொடங்கியது. இதே
காலப்பகுதியில், நாட்டின் நெருக்குவாரங்களால் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து குடியேறியவர்களால்,
தங்கள் நாட்டை, வாழும் நாட்டை
எண்ணி படைக்கப்பட்ட படைப்புக்கள், புலம்பெயர் இலக்கியம் என்ற போக்கை உருவாக்கியது.
புலத்தில் அங்கிருந்தவர்களால் அதே காலப் பகுதியில்,
அதிகாரத்திற்கும், ஜனநாயக விரோதத்திற்கும் எதிராக
எழுதப்பட்டதால் மீண்டும் எதிர்ப்பிலக்கியப் போக்கு வளர்ச்சியடைந்தது.
இதே காலப்பகுதியில், பெண்களும்
எழுத்து இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்கள். தங்கள்
குரல்களை அழுத்தமாக பதிவு செய்யத் தொடங்கினர்.
இதன் காரணமாக பெண்ணிய இலக்கிய
போக்கும் உருவானது. இதன் பிறகு யுத்தம்
நிறைவடைந்ததற்கு பிறகு, நாட்டில் சிறுவர்கள்,
அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக விழிப்புணர்வ ஏற்பட்டவுடன் சிறுவர்சார்பு இலக்கியப் போக்கும் தோற்றம்பெறத் தொடங்கியது. எதிர்காலத்தில் மாற்றுப் பாலினத்தவர் சம்பந்தமாக ஒரு புதிய இலக்கியப்
போக்கு உருவாகும் சாத்தியம் இல்லாமலும் இல்லை. எனவே இந்தப்
போக்குகள் இனம், நிலப் பிரதேசம்,
பால், சாதி, சார்ந்து பல
வகையான அடையாளங்களுடன் வளரச்சியடையத் தொடங்கியது. இதன் காரணமாக முஸ்லிம்
இலக்கியம், மலையக இலக்கியம். போரிலக்கியம்,
போருக்குப் பிந்திய இலக்கியம், பெண்ணிலக்கியம்,
தலித் இலக்கியம், கிறிஸ்தவ இலக்கியம், தமிழ்த்தேசிய இலக்கியம், எதிர்ப்பிலக்கியம் போன்ற இலக்கிய போக்குகள்உருவாக
காரணமாபக இருந்தன.
இவையெல்லாம், சரியானவை, அவசியமானவை என்பதற்கு அப்பால், அந்தந்த காலத்தின் அரசியல்
இயங்கியலின் காரணமாக உருவானவை. எனவே
இவை அனைத்தும் அரசியல் இலக்கியங்களாகத்தான் இருக்க
முடியும். அரசியல் இலக்கியத்தை ஆளுகை
செய்ய முடியாது என்று சொன்னாலும், யதார்த்தம்
அப்படி அல்ல. ஏனெனில் அரசியல்
சமூக, வாழ்வியலின் எல்லாக்கூறுகளிலம் உட்புகுந்து இரண்டறக் கலந்துள்ள நிலையில்தான் காணப்படுகின்றது. அரசியல் இலக்கியத்தை எப்போதும்
காவுகேட்பது வழமை என்னும் ஒரு
விசயம் உண்டு. அரசியல் உள்ளவாங்கப்படும்போது,
கலை ஊற்று எங்கோ அடைபடத்
தொடங்குகிறது என்ற ஒரு கருத்தும்
உண்டு. அரசியலும் இலக்கியமும் முரண்படாத ஒரு புள்ளியை கண்டடைவது
மிகவும் கடினமாகும்.