Monday, January 13, 2025

விலங்குகள் பிளாஸ்ற்றிக், பொலித்தின் உண்ணுதல்


தவறுதலாகவும் அல்லது வேண்டுமென்றும் பொலித்தீன். பிளாஸ்ரிக் போன்றவைகளை உணவுடன் விலங்குகள் உண்ணும் நிலை மனிதனால் ஏற்படுத்தப்படுவதே வனசீவராசிகளுக்கும், விலங்குகளுக்கும் அழிவை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது. இதன் காரணமாக வருடாந்தம் இலட்சக்கணக்கான கடல்வாழ், தரைவாழ் உயிரிகள் இறந்தபோகின்றன. பொலித்தீன் அல்லது பிளாஸ்ரிக்குகளை விலங்குகள் உண்ணும் போது அவை கொண்டுள்ள நச்சுப்பொருட்கள் காரணமாக நோய்கள் உண்டாவதுடன், இனப்பெருக்கத்தையும் பாதிக்கின்றன. அத்துடன் விழுங்கிய பொலித்தீன் இரைப்பையின் பெரும்பகுதியை அடைப்பதால், பசி உணர்வைக் குறைத்து, குறைவான உணவை உண்டு, குறைந்த சக்தியைப் பெற்று, பலவீனமான நிலைக்கு உள்ளாகி மாதக் கணக்காக அல்லது வருடக் கணக்காக வருந்தி உயிரை இழக்கின்றன.

விலங்குகள் இறந்து உக்கிப்போனாலும், அவை உட்கொண்ட பொலித்தீன் உக்குவதற்கு 1000 வருடங்கள் எடுக்கும் என்பதை மனதி

ற்கொள்ளுவோம்.
விலங்குகள் பொலித்தீன் உண்பதைத் தவிர்ப்போம், ஆகக் குறைந்தது, பசித்த விலங்குகளுக்கு பொலித்தீனை அகற்றிவிட்டாவது உணவைக் கொடுப்போம்.

No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...