Thursday, January 14, 2021

மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 1) அம்பாறை மாவட்டம்.

ஏ.எம். றியாஸ் அகமட்

அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து

கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்
”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட அம்பாறை மாவட்ட ஊர்கள்
1. சாளம்பக்கேணி
2. வீரமுனை
3. செந்நெல்கிராமம்
4. மல்வத்தை
5. மல்கம்பிட்டி
6. மருதமுனை
7. சேனைக்குடியிருப்பு
8. சாய்ந்தமருது
9. காரைதீவு
10. மாவடிப்பள்ளி
11. பாலமுனை
12. கருங்கொடித்தீவு
13. பட்டியடிப்பிட்டி
14. இசாங்கனிச்சேனை
15. ஆலையடிவேம்பு
16. நாவற்காடு
17. கோளாவில்
18. பாணன்காடு
19. அளிகம்பை
20. தம்பட்டை
21. காஞ்சிரங்குடா
22. தாண்டியடி
23. குண்டுமடு
24. களப்புக்காடு
25. பசறிச்சேனை
26. சங்கமாங்கண்டி
27. கோமாரி

நல்லதொரு பதிவு. எங்கள் ஊரின் பழைய பெயரான கருங்கொடித் தீவு விடயத்தில் நீங்கள் சொல்வது உண்மை. கருங்கொடி என்றால் எந்தக் கொடி என்றே தெரியாமல் போயிற்று.

மாவடிப்பள்ளி, வரிப்பத்தான்சேனை, ஆலையடிவேம்பு, தாழைவெட்டுவான்

பனங்காடு, இத்தியடி 


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...