Wednesday, January 13, 2021

ஐயாயிரம் பனை நடுகை

 

றைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கிளப் இந்த வார இறுதியில் நடாத்தவிருக்கும் 5000 பனை விதைப்பு விழாவிற்கான பனை விதைகளைச் சேகரிப்பதில், கழகத் தலைவர் கலீல் கபூர், செயலாளர் றிஸ்வர் சத்தார் ஆலோசனையில், அந்தக் கழகத்தின் அங்கத்தவர்களான கலாநிதி சத்தார் பிர்தவ்ஸ் (உதவிக் கல்விப் பணிப்பாளர்), எச். நைறுஸ்கான் (உதவிக் கல்விப் பணிப்பாளர்), அஸ்ரிப், டொக்டர் அசீம் (மருத்துவ அதிகாரி), நானும், மற்றும் கலாநிதி சத்தார் அவர்களின் கடைசிப் புதல்வர் றெமொ (இவர் அங்கத்தவர் அல்ல) ஆகியோரும் தொடர்ச்சியாக பங்குகொண்டு. சுமார் 5000 பனை விதைகளை சேகரித்திருக்கிறோம்.


----

Rider’s Hub Cycling Club இனர், இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு 5000 பனை விதைப்பை வெற்றிகரமாக மருதமுனைப் பிரதேசங்களில் நடாத்தி முடித்திருந்தனர். என்னைக் கௌரவித்த மிக நெகிழ்வான தருணம். இதற்கு கழகத்தின் தலைவர் கலீல் கபூர், செயலாளர் றிஸ்வர் சத்தார், பொருளாளர் மலீக் றஹ்மான், மற்றும் அங்கத்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். RHCC ஒரு சைக்கிளோட்டக் கழகம் என்பதற்கு அப்பால், ஒரு சமூகப் பொறுப்பு வாய்ந்த கழகம் என்பதை மீண்டுமொரு தடவை நிரூபித்திருக்கிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள.




No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...