Wednesday, January 13, 2021

விமானப் படைக்கு விதைப்பந்துகள் விநியோகம்

 இலங்கையின் பல பாகங்களிலும் விமானங்களிலிருந்து வீசுவதற்காக
(சிங்கராஜவனம் உட்பட) பல்லாயிரக்கணக்கான விதைப்பந்துகளை வேர்கள் அமைப்பினரால், இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று (10.12.2020), மட்டக்களப்பு வனபரிபாலன தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேர்கள் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் றமேஸ் சிவநாயகம், ஆசிரியர் அவர்களும், அதன் அங்கத்தவர்களும், மாவட்ட வனபரிபாலன அதிகாரி பிறனீத் சுரவீர, உதவி மாவட்ட வனபரிபாலன அதிகாரிகள் அஜித், ஜாயா, ஆகியோரும் விமானப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மரங்களுக்கு மொழிகளும் இல்லை. பிரதேசங்களுக்கும் இல்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் நஞ்சை உறிஞ்சி நல்லதாய்த் தருவது. நன்மை பயப்பது. நன்றி. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். பயணங்கள் முடிவதில்லை. தொடரும்.

-----


வேர்கள் அமைப்பினர் அன்பளிப்புச் செய்திருந்த பல்லாயிரக்கணக்கான விதைப்பந்துகளையும் லஹீகல-கித்துலான வனத் தொகுதியில் வீசுவதாக நேற்று காலை விமானப்படையினர் அறிவித்திருந்தனர். அவ்வாறே மாலை வீசியும் இருந்தனர். இன்று படங்களுக்குரிய இணைப்புக்களும் கிடைத்தன. வேர்கள் அமைப்பினருக்கும், வனபரிபாலன அதிகாரிகளுக்கும், விமானப் படையினருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும். இன்னும் உத்வேகம் அதிகரிக்கின்றது. பயணங்கள் முடிவதில்லை.






No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...