Sunday, January 10, 2021

வீதியோர மரங்களும் - உயிரியல் பல்வகைமையும்

 



வீதியோர மரங்கள் விலங்குப் பல்வகைமையைக் காத்தலில் அளப்பரிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக பறவைகளுக்கு அவை சுவர்க்கம். அதுவும் சுதேசிய மரங்கள்தான், விதேசிய மரங்களைவிட விலங்குப் பல்வகைமையை ஊக்குவிக்கின்றன என உலகின் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடிப்படையில் விலங்கியலான எனக்கு இந்த மரங்களும், அதன் விலங்குப் பல்வகைமையுமே முதற் தெரிவு. அண்மையில் குருநாகலில் எங்களது சைக்கிளோட்ட கழகத்திற்கு சைக்கிள்களை கொள்வனவு செய்யச் சென்றிருந்தபோது வீதியோர மரமொன்றை அவதானித்தேன். அந்த மரத்தில் சுமார் 500 க்கு மேற்பட்ட காகம், மைனா, புளுணி, புறா போன்ற பறவைகள் காணப்பட்டன. வாகனங்களின் அதீத வெளிச்சம், அளவுக்கதிகமான சத்தம் போன்றவை பறவைகளின் நிம்மதியைக் கெடுக்கின்ற காரணிகளாக இருக்கின்றன.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...