திருகோணமலையின் மான்கள் வீதிகளிலும், மனிதக் குடியிருப்புக்களின் அருகிலும், அச்சமின்றி அலைந்து திரிவது வேறு எங்கும் காண்பதற்கு அரிதான ஒரு நிகழ்வாகும். காட்டு விலங்குகளில் வீட்டுவளர்ப்பாக்கம் நடைபெறும் பரிணாம செயன்முறைக்கு மிகச் சிறந்த நடைமுறை உதாரணமாகும். மிக நீண்ட காலங்களுக்கு முன்னே, இந்த மான்களின் நடத்தைகளில் செய்த ஆய்வுகளும் என்னிடமிருக்கின்றன.
நெடுந்தீவின் குதிரைகளைப் போன்றே, திருகோணமலையின் மான்களும் மரபுரிமையாகும். ஆனால் இந்த மான்கள் பொலித்தீனை உண்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றன. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றன. இது மனிதர்களின் மிக மலினமான நடைத்தைக்கும் சிறந்த உதாரணமாகும். திருகோணமலையின் மரபுரிமையை பாதுகாப்பதும், மான்களைப் பாதுகாப்பதும் எமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
h Public
திருகோணமலை பிறடெறிக் கோட்டையை (திருக்கோணேஸ்வரம் கோவில்) மையமாகக் கொண்டு சுமார் 1200 மான்கள் காணப்படுவதாக கருதப்படுகின்றது. 2018ல் ஒரு கணக்கெடுப்பும் நடைபெற்றது. மான்கள் பெருக்கம், இடப்பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, இணையன்களுக்கான போட்டி, பொலித்தீன்-பிளாஸ்ரிக் உண்ணல், உல்லாசப் பிரயாணிகள் உணவு வழங்கல் போன்றன மான்களின் குடித்தொகையை பாதிக்கும் காரணிகளில் முக்கியமானவையாகும்.
இன்று காலை, பிறடெறிக் கோட்டையிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மிகுந்துபுர பகுதியில் ஒரு மான் காயம்பட்டு சுற்றித் திரிகின்ற செய்தி கிடைத்து, வனசீவராசிகள் திணைக்கள வைத்திய நிபுணர் தலைமையிலான குழு, உத்தியோகத்தர்களின் பலத்த முயற்சியின் பின் மானைப் பிடித்து, காயங்களுக்கு மருந்திட்டு, கோட்டைப் பகுதியில் மானை மீண்டும் விடுவித்தனர். மான்களிடமிருந்து சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment