Thursday, January 14, 2021

மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 2) யாழ்ப்பாண மாவட்டம்.

-ஏ. எம். றியாஸ் அகமட்

அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்
”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட யாழ்ப்பாண ஊர்கள்
 1. இருபாலை
 2. இளவாலை
 3. ஏழாலை
 4. குப்பிளான்
 5. குரும்பசிட்டி
 6. கொக்குவில்
 7. சண்டிலிப்பாய்
 8. சில்லாலை
 9. சிறு விளான்
 10. திருநெல்வேலி
 11. பலாலி
 12. பன்னாலை
 13. புன்னாலைக்கட்டுவன்
 14. பெரியவிளான்
 15. பொன்னாலை
 16. மாசியப்பிட்டி
 17. மாதகல்
 18. மாவிட்டபுரம்
 19. மானிப்பாய்
 20. வட்டுக்கோட்டை
 21. வடலியடைப்பு
 22. வயாவிளான்
 23. அறுகுவெளி
 24. அல்லாரை
 25. கிளாலி
 26. கேரதீவு
 27. கொடிகாமம்
 28. சரசாலை
 29. தச்சன்தோப்பு
 30. நாவற்குழி
 31. நுணாவில்
 32. மீசாலை
 33. ஆத்தியடி
 34. கட்டைக்காடு
 35. தும்பளை
 36. துன்னாலை
 37. நெல்லியடி
 38. பருத்தித்துறை
 39. புகலிடவனம்
 40. மணல்காடு
 41. மருதடிக்குளம்
 42. முள்ளியான்
 43. வெற்றிலைக்கேணி
 44. விடத்தல்பளை
 45. காரைதீவு
 46. புங்குடுதீவு
 47. வேலணை
 48. பெருங்காடு
 49. காரைநகர்
 50. அல்லைப்பிட்டி
 51. சரவணை
 52. பரித்தியடைப்பு
 53. புளியங்கூடல்
 54. வேலணை
 55. ஆலங்கேணி
 56. காரைநகர்
 57. சாமித்தோட்டமுனை
 58. பூமுனை
 59. மாவலித்துறை
வேம்படி
முடமாவடி
பூநாறிமரத்தடி
கொண்டலடி
இலந்தை கலட்டி
மஞ்சவனப்பதி
அரசடி
சாமியின் தோட்டம்
அல்லாரை
அறுகுவெளி
ஈஞ்சடி
கள்ளியம்காடு
பொன்னாலை
தில்லையம்பலம்
நெல்லண்டை
மந்துவில் ---

அரசடி (மாவிட்டபுரம்), ஆலடி {இளவாலை)


'புளி'யம்பொக்கணை
'மா'ங்குளம்
கிளி 'நொச்சி'
'நெல்லி'யடி
'பருத்தி'த்துறை
'முல்லை'த்தீவு
'மல்லிகை'த்தீவு

இலந்தைக்குளம், புங்கன்குளம், கொய்யாத்தோட்டம், ஈச்சமோட்டை, விளாத்தியடி, நாவலடி (இவ்விடங்கள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறைக்கு அண்மையில்), அத்தியடி, இலுப்பையடி (சந்தி).

வட்டுக்கோட்டை வழியிலேயே அருகருகாக மாவடி ,புளியடி.
75 ஆண்டுகளுக்குமேலான 25 இலுப்பை மரங்கள் நின்றது கண்ணகை அம்மன் கோவிலில் . ஆலயத்தைமூடி வேலியிட்டு அத்தனை இலுப்பை மரங்களையும் வெட்டி வெறுவளவாக இருக்கு கோயில் நிலம்.

முல்லைத்தீவு :மாஞ்சோலை கேப்பாபிளவு:தேக்கங்காடு நாயாறு:புளியமுனை கொக்கிளாய்:தென்னைமரத்தடி வலயர்மடம்:இடைக்காடு தண்ணீர்றூற்று:ஆலடிச்சந்தி

தாழையடி.
மருதங்கேணி,
நாவலடி
பன்னக்கட்டை,
புளியடி
மருதடி,
வேம்படி,
ஆலையடிவேம்பு,
பூவரசங்குளம்,
வேப்பங்குளம்,
சின்னப்பூவரசங்குளம்,
மருதோடை,
மல்லிகைத்தீவு,
விளாங்காடு,
கள்ளியங்காடு

வணக்கம்
இந்த படத்தில் இருக்கும் மரம்மாதிரி
சாவகச்சேரி பெரியமாவடி என்ற இடத்தில்
கச்சாய் கடலோறம் ஆகப்பழைய மரங்கள் உள்ளது.

Urumpiraai

நெல்லியடி, வெற்றிலைக்கேணி, புளியம்பொக்கணை, ஆலடி, அரசடி, காரைதீவு, புங்குடுதீவு எனப் பல உண்டு

urumpiraay...
"piraay" enpathu oru maram.

பிராய்- பராய்
பராய் மருவி பிராய் என ஆனது. தமிழ்நாட்டில் திருப்பராய்த்துறை உள்ளது. பராய் மரங்களை நான் கண்டதில்லை

Vivek Thamotharampillai
 புங்கம் மரம் புங்குடுதீவில் அழிந்தது போல் பராய் மரமும் உரும்பிராயில் அழிந்து விட்டதாகவும், இப்பொழுது அம் மரக்கன்றை உரும்பிராயில் ஒரு கோயிலில் மீள்னடுகை செய்துள்ளதாகவும் பதிவுகள் கூறுகின்றன.

வரணி- (மாவிலங்கு)


3

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...