Wednesday, January 13, 2021

பறவைகளின் அவதி

இன்றைய அதிகாலை (19.10.2020) சைக்கிள் ஓட்டத்தில், மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட எல்லையை வரையறுக்கும் துறைநீலாவணை வீதியால் சென்று கொண்டிருந்தபோது வழமைக்கு மாறாக மிக அதிகமான வெளிநாட்டு, இடம்பெயர் பறவைகளைக் காணக்கூடியதாக இருந்தது. இதற்கு என்ன காரணம் யோசித்தேன். காரணம் தட்டுப்பட்டது.

இலங்கையின் முக்கிய பறவைகள் சரணாலயமாக கருதப்படக்கூடியதும், இலங்கைக்கு பறவைகள் இடம்பெயரும் மூன்று பாதைகளில் (மேற்கு விந்திய, கிழக்கு விந்திய, அந்தமான் பாதைகள்) ஒன்றான கிழக்கு விந்திய இடம்பெயரும் பாதையில், முக்கிய கேந்திர தலமாக விளங்கும் மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பறவைகள் சரணாயலத்தில் இரு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ வைப்பே காரணம் என நினைக்கின்றேன். இந்த அனர்த்தத்தினால் சுமார் நான்கு ஏக்கர் கண்டல் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அடிக்கடி மனிதர்களினால் இந்த தீ வைப்பு சம்பவங்கள் நிகழத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. அத்துடன் இந்த பறவைகள் சரணாலயம் கள்ள உறுதிகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றது. இதனை தட்டிக் கேட்பது யார்? இதற்குரிய தீர்வினைத் தருவது யார்?

நான் தற்போது குறிப்பிட்ட அம்பாறைமட்டக்களப்பு எல்லைப் பிரதேசத்தில் குறுகிய நிலப் பரப்பிற்குள் ஆயிரக் கணக்கான பறவைகள் மிகவும் அவதிக்கும், அசௌகரியத்துக்குள்ளாவதை அவதானிக்ககூடியதாகவுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால் உயிர்பல்வகைமையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். அது அழிவிற்கான கட்டியமாகவே இருக்கும்..

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...