Tuesday, January 12, 2021

கடலாமைகள்

 உலகத்தில் உள்ள ஏழு இன கடலாமைகளில் ஐந்து இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அவை பின்வருவனவாகும். Green Turtle (Chelonia mydas),Olive Ridley (Lepidochelys olivacea), Hawksbill (Eretmochelys imbricata), Loggerhead (Caretta caretta) and Leatherback (Dermochelys coriacea).

தவறுதலாக மீன்பிடி உபகரணங்களில் பிடிபடுதல், சட்டவிரோதமாக முட்டைகளை சேகரித்தல், முட்டைகளும், குஞ்சுகளும் இரைகொல்லிகளினால் உண்ணப்படல், வாழிடங்கள் அழிக்கப்படல், மாற்றப்படல் போன்றன கடலாமைகளின் இருப்பைச் சவாலாக்கும் பிரதான காரணிகளாகும்.
இவைகளில் தவறுதலாக மீன்பிடி உபகரணங்களில் (வலைகளில் அல்லது தூண்டில்களில்) பிடிபடல் மிக முக்கியமான ஒன்றாகும். இதனை ஆங்கிலத்தில் பை-கெச் என்பார்கள். தவறுதலாக பிடிபடும் இவ்வாறான உயிரினங்கள் அவர்களின் உபகரணங்களுக்க சில நேரங்களில் சேதங்களை ஏற்படுத்துவதும் உண்டு. இதன் காரணமாக இந்த உயிரினங்களை கொன்றுவிடுவார்கள். இன்று காலை பசிய கடலாமை (கிறின் ரேற்ல்) ஒன்று இவ்வாறாக கொல்லப்பட்டமையை கண்டேன். இலங்கையில் அழிவின் விழிம்பிலுள்ள இவ்வாறான உயிரினங்களை பாதுகாப்பது எல்லோரினதும் கடமையாகும்.
(@ Addalaichenai)



No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...