யானைகள் குடும்பங்களாக வாழ்கின்றன. பல குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்த சமூகமயமாகின்றன. பெண் யானைகள் குடும்பக் கூட்டங்கள்களாக வாழ்கின்றன. அவை பெரம்பாலும் ஒரு பெண்ணும், அதனது பிள்ளைளும் அல்லது சொந்தங்களான பல பெண் யானைகளும், அவைகளின் பிள்ளைகளான குடும்பக் கூட்டங்களாகவே வாழ்கின்றன. ஆண் யானைகள் பெரும்பாலும் கூட்டத்திலுள்ள வயது முதிர்ந்த பெண் யானைகளாகலேயே வழி நடாத்தப்படுகின்றன. யானைகளின் குடும்பம் தாய்வழி குடும்பமாகும்.
ஆண் யானைகள் பருவ வயதை அடையும்போது, குடும்பத்தைப் பிரிந்து, தனியாக அல்லது மற்ற ஆண்களுடன் கூட்டமாக வாழ்கின்றன.
இனப்பெருக்க காலத்தில் பெண் துணை தேவைப்படும்போதே தனியான ஆண் யானைகள் குடும்பத்தை தேடிச் செல்லும். அப்போது அதன் குருதியில் ரெஸ்ரெஸ்ரரோன் ஓமோனின் அளவு அதிகரித்துக் காணப்படும். இதனால் கோபம் கூடும். இந்த நிலை மதம் பிடித்த நிலை எனப்படும். ஆங்கிலத்தில் மஸ்த் எனப்படும். நாளாந்த வாழ்வில் வெவ்வேறு பொருள்கோடலுடன் பாவிக்கும் இது ஒரு பாரசீக சொல்லாகும். இந்த மதம் பிடித்த மஸ்த்து நிலை மற்ற யானைகளுடன் போட்டி போட்டு, சண்டை பிடித்து, இன்பபெருக்கச் செயற்பாடுகளில் மற்ற யானைகளின்மீது ஆதிக்கம் செலுத்தி, தனக்குத் தேவையான இணையைப் பெறுவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இந்த நடத்தையானது இந்த யானைகள் தப்பிப் பிழைப்பதற்கும், அவைகளின் இனப்பெருக்க வெற்றிக்கும் மிக முக்கியமானதாகும். இந்த நடத்தைகளையும், அதன் காலங்களையும் புரிந்து கொள்வதன் மூலம் ஓரளவு யானை-மனிதன் முரண்பாடுகளிலிருந்து தவிர்ந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment