Delonix regia என்ற விஞ்ஞானப் பெயரையுடைய நெருப்பு வாகை, (මල් මාර, flame tree) மடகாஸ்கருக்கு உரித்தானது. இலங்கையில் 1841களில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதப்படுகின்றது. சுற்றாடலுக்கு மிகுந்த அழகைக் கொடுக்கும் தீமையில்லாத மரங்களில் முதன்மையானது. முன்னொரு காலத்தில் வீட்டின் வளவைச் சுற்றிய உயிர்வேலிகளில் இவை காணப்பட்டன. இப்போது இந்த மரங்களைக் காண்பது அரிது. இதன் வித்து கொண்டிருக்கும் தடித்த வித்துறை காரணமாக, முழைக்கச் செய்வது கொஞ்சம் கடினமானது. வீட்டில் முளைக்கச் செய்திருக்கின்றேன். பலவகையான (12 க்கு மேற்பட்ட பௌதிக, இரசாயன பரிகரிப்புக்களுடன்) ஆய்வுகள் தொடர்கின்றன. குல் மொஹர் மலரே.. என ஹரிஹரன் பாடுவது இந்த மரத்தின் மலரைத்தான்.
No comments:
Post a Comment