நீர்க் காகங்கள், பறந்து செல்லும்போது, மீன்கூட்டங்களைக் கண்டால், பெருங்கூட்டமாக பறந்துகொண்டே அவைகளைப் பின் தொடர்ந்து, நீரின் மேற்பறப்பில் திடிரென இறங்கி ஒழுங்கற்ற விதமாக நீரில் நேர.கோட்டில் மிதக்க ஆரம்பிக்கின்றன. சில நிமிடங்களின் பின், ஒழுங்குமுறையாக கயிறுபோல் மிதக்கும் நீர்க் காகக் கூட்டத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒவ்வொரு நீர்க் காகமும் சுழியோடி மீன் பிடிக்கும். இது போன்ற பல வியக்கத்தக்க வினைகத்திறனான மீன் பிடித்தல் முறைகளை இவை கொண்டுள்ளன. இவ்வாறே மற்றயவைகளும் மீன்களை மிக வினைத்திறனாக பிடிக்கும். ஒரு கட்டு வலையாக, அல்லது அடித்துவிரட்டும் கட்டு வலையாக, பல தூண்டில்கள் கொண்ட தூண்டல் உபகரணமாக, இழுவை வலையாக இந்த நீர்க்காகக் கூட்டங்கள் தங்களை மாற்றிக் கொண்டு மீன்களைப் பிடிக்கின்றன. இந்தப் படங்கள், நான் வேலைக்குச் செல்லும் வழியில் மட்டக்களப்பு வாவியின் ஆரம்பப் புள்ளியான, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, கிட்டங்கியில் எடுத்தவையாகும்.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Tuesday, January 12, 2021
நீர்க் காகங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
மரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா
– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...


-
பொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...
-
– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஷ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் , வந்தாறுமூலை ) சனத்தொகைப் பெருக்கம் , அதன் காரணமா...

No comments:
Post a Comment