Thursday, January 14, 2021

மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 03) மட்டக்களப்பு மாவட்டம்.

- ஏ.எம். றியாஸ் அகமட்

அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்
”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட ஊர்கள்
1. மாங்கேணி
2. புனானை
3. பனிச்சங்கேணி
4. வட்டவான்
5. வாகரை
6. கதிரவெளி
7. பால்சேனை
8. மாஞ்சோலை
9. ஓட்டமாவடி
10. பாலைநகர்
11. கறுவாக்கேணி
12. கும்புறுமூலை
13. வாழைச்சேனை
14. பெரியபுல்லுமலை
15. மரப்பாலம்
16. வேப்பவட்டுவான்
17. கொடுவாமடு
18. மாவடிவேம்பு
19. களுவன்கேணி
20. சித்தாண்டி
21. மஞ்சந்தொடுவாய்
22. நாவற்குடா
23. நொச்சிமுனை
24. பாலமீன்மடு
25. புன்னைச்சோலை
26. கருவேப்பங்கேணி
27. தாண்டவன்வெளி
28. தாமரைக்கேணி
29. புளியந்தீவு
30. ஆரையம்பதி
31. காங்கேயனோடை
32. மாவிலங்கத்துறை
33. தாழங்குடா
34. அம்பிலாந்துறை
35. அரசடித்தீவு
36. கடுக்காமுனை
37. மகிழடித்தீவு
38. முனைக்காடு
39. கொக்கட்டிச்சோலை
40. மண்டூர்
41. வெல்லாவெளி
42. காக்காச்சிவட்டை
43. பாலையடிவட்டை
44. விளாந்தோட்டம்
45. நெல்லிக்காடு
46. பலாச்சோலை
47. வீரன்சேனை
48. தும்பன்கேணி
49. வன்னிநகர்
50. மாங்காடு
51. தேத்தாத்தீவு
52. பட்டிருப்பு
53. மகிழூர்
54. இலுப்படிச்சேனை
55. பாவற்கொடிச்சேனை
56. காஞ்சிரங்குடா
57. கரயாக்கந்தீவு
58. குறிஞ்சாமுனை
59. பருத்திச்சேனை
60. ஈச்சந்தீவு
61. நாவற்காடு
62. விளாவெட்டுவான்
63. மகிழவெட்டுவான்
64. உன்னிச்சை
65. நரிப்புல்தோட்டம்
66. ஆயித்தியமலை

மாங்காடு என்பதில், சாதாரண மா என்பதை உணர்வதைவிட, காட்டுமா என்றொருவகை உள்ளது, 50 அடி வரை வளரும், கரிய பச்சை சிறிய இலைகள், காய்களும் சிறியவை இலுப்பை காய் அளவில் இருக்கும், சுவையான பழங்கள். கொம்மாதுறையில் புகையிரத வீதியருகில் 1980 வரை நிறையவே இருந்தன. அழிக்கப்பட்டுவிட்டன.

Seenivasan Giridaran
 ஆமாம். உண்மை. அது சுதேசிய வகை. இந்த காட்டுமா சம்பந்தமாக 
Slm Hanifa
 அருமையான பதிவொன்றை நீண்ட நாட்களுக்கு முன் இட்டிருக்கிறார். தேடிப் பார்க்க. படிக்க. நிறைய விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது.

மருங்கை நகர்

Ollikulam

கின்னியடி

திருக்கொண்டையடிமடு
ஓட்டமாவடிக்கு அங்கால இருக்கு சேர்

கூழாவடி, அரசடி, புன்னைச்சோலை, நாவலடி, பனிச்சையடி, 

மட்டக்களப்பு மாநகரம் 70 80 முன்னைய காலங்களில் புளியந்தீவு என அழைக்கப்பட்டது




No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...