அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்
”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட கிளிநொச்சி மாவட்ட ஊர்கள்
01) ஆலங்கேணி
02) உருத்திரபுரம்
03) கண்டாவளை
04) கிராஞ்சி
05) கிளாலி
06) கிளிநொச்சி
07) குமிழமுனை
08) செம்மண்குண்டு
09) நாகதேவன்துறை
10) நாச்சிக்குடா
11) நாவலடி
12) பச்சிலைப்பள்ளி
13) பாலாவி
14) புல்லாவெளி
15) புளியம்பொக்கணை
16) பூநகரி
17) பொன்னாவெளி
18) மாசார்
19) முகமாலை
20) வட்டக்கச்சி
21) பன்னங்கண்டி
22) விசுவமடு
23) புன்னைநீராவி
24) பாலைதீவு
No comments:
Post a Comment