Saturday, February 27, 2021

மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள் 06) முல்லைத்தீவு மாவட்டம்.


அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து
கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்
”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட முல்லைத்தீவு மாவட்ட ஊர்கள்
1. குமுழமுனை
2. கீளமுறிப்பு
3. கொக்கிளாய்
4. மல்லிகைத்தீவு
5. மாமூலை
6. முல்லைத்தீவு
7. முள்ளியவளை
8. முள்ளிவாய்க்கால்
9. பெரிய இத்திமடு
10. புதரிக்குடா
11. தச்சடம்பன்
12. கோம்பாவில்
13. விசுவமடு
14. மாங்குளம்
15. மணவாளன்பட்டமுறிப்பு
16. இரணைப்பாலை
17. ஒலுமடு
18. தண்ணிமுறிப்பு
19. தண்டுவான்
20. திருமுறிகண்டி
21. துணுக்காய்
22. கொல்லவிளாங்குளம்
23. கரும்புளியங்குளம்
24. பொன்னகர்
25. புளியங்குளம்
26. பூவரசங்குளம்
27. கருவேலங்கண்டல்
28. உயிலங்குளம்
29. நட்டாங்கண்டல்
30. வன்னிவிளாங்குளம்
31. கரைச்சிக்குடியிருப்பு
32. பாலையடி
33. வவனிக்குளம்

மாஞ்சோலை
    • Amritha Ayem
      காதலியார்சம்மளங்குளம், மாஞ்சோலை
      2
      • Like
      • Reply
      • 8w
      • Edited
    • Boo and Buddy Boo with text great work sticker
      1
      • Like
      • Reply
      • 8w
    • 2) கூழாமுறிப்பு
      15) மணவாளன்பட்டமுறிப்பு
      30) நட்டாங்கண்டல்
      எண்டு வரோணும்
      1
      • Like
      • Reply
      • 8w
      • Edited
    • எமது இடம் வேப்பம் குளம் வேப்ப மரங்கள் நிறைந்த இடம்
      1
      • Like
      • Reply
      • 8w
    • மேழிவனம், கல்விளான், சேர்த்துக் கொள்ளலாம். பழைய நில அளவை வரைபடங்களில் ஒவ்வொரு காணித்துண்டின் விபரத்திலும் காணியின் பெயர் முக்கியமானதாய் இருந்தது. இப்போதும் பாவிக்கின்றோம். மரங்கள் சார்ந்து அல்லது காடுகளின் பெயர்கள் சார்ந்ததாய் அவை இருக்கும். சில பெயர்கள் ஞாபகம் இருக்கின்றன. கட்டைக்கரையில்காடு, வேலுருவையடிக்காடு.
      3
      • Like
      • Reply
      • 8w
    • அனிஞ்சயன்குளம்
      1
      • Like
      • Reply
      • 8w
      • Like
      • Reply
      • 8w
    • இங்கு ஊர்களின் பெயர்கள் தரப்படுள்ளன, சில மரங்களை குறிப்பனவாக உள்ளன. சில மரத்தொடர்பு உள்ளதா எனக்கேள்வி எழுகிறது.
      1
      • Like
      • Reply
      • 8w
    • அருமை
      1
      • Like
      • Reply
      • 8w
    • காஞ்சூர மோட்டை
      😁😁😁😁😁😁😁😁
      1
      • Like
        • Mookilaaru, naakancholai
          1
          • Like
          • Reply
          • 8 w
        • மாஞ்சோலை
          1
          • Like
          • Reply
          • 8 w
        • ஒதியமலை
          கூழாமுறிப்பு
          காஞ்சூரமோட்டை
          மதிரமடு
          நாவல்காடு
          நொச்சிமோட்டை
          பாலங்காடு
          கள்ளியடி
          1
          • Like
          • Reply
          • 8 w
          • Edited
        • முள்ளியவளை. முள்ளி சக வளை. முள்ளி_மத்தி. வளை_ வாழ்விடம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...