”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட திருகோணமலை மாவட்ட ஊர்கள்
1. மாங்கேணி
2. புல்மோட்டை
3. தென்னைமரவாடி
4. அடம்பனை
5. பங்குறுகஸ் வாவி
6. பன்குளம்
7. கிண்ணியா
8. முள்ளிப்பொத்தானை
9. பொத்தானை
10. தாமரைவில்லு
11. முத்துச்சேனை
12. சுங்கான்குழி
13. ஈச்சிலம்பற்றை
14. புன்னையடி
15. சேருவில்லு
16. பலாத்தோப்பு
17. தோப்பூர்
18. கட்டைபறிச்சான்
19. இலக்கந்தை
20. சம்பூர்
21. பாலத்தடிச்சோலை
22. கிளிவெட்டி
23. மேன்கமம்
24. மல்லிகைத்தீவு
25. சுண்டல்காடு
26. தென்னமரவடி
No comments:
Post a Comment