Saturday, February 27, 2021

மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள் 05) வவுனியா மாவட்டம்.

அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்

”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட வவுனியா மாவட்ட ஊர்கள்
1. அனந்தர்புளியங்குளம்
2. ஆண்டியாபுளியங்குளம்
3. இளமருதங்குளம்
4. ஈச்சங்குளம்
5. கண்ணாட்டி
6. கள்ளிக்குளம்
7. கூமன்குளம்
8. சமளங்குளம்
9. சாலம்பைக்குளம்
10. சாஸ்திரிகூளாங்குளம்
11. சின்ன அடம்பன்
12. தாண்டிக்குளம்
13. தோணிக்கல்
14. நொச்சிமோட்டை
15. பட்டாணிச்சிபுளியங்குளம்
16. பட்டிக்குடியிருப்பு
17. பண்டாரிக்குளம்
18. பம்பைமடு
19. பாலமோட்டை
20. பாவற்குளம்
21. பிரப்பமடு
22. பூமடு
23. பூவரசங்குளம்
24. பெரியகாடு
25. பெரியதம்பனை
26. பெரியபுளியங்குளம்
27. மககச்சக்கோடியா
28. மகாமயிலங்குளம்
29. மகாரம்பைக்குளம்
30. மகிழங்குளம்
31. மடுக்கந்தை
32. மரக்காரன்பளை
33. மருதங்குளம்
34. மருதமடுவ
35. மருதமடு
36. மருதோடை
37. மாங்குளம்
38. மாமடுவ
39. மாமடு
40. மார இலுப்பை
41. ரம்பைக்குளம்
42. வைரவபுளியங்குளம்

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...