Wednesday, January 13, 2021

புங்கை மரம் (வித்திலிருந்தும், தண்டிலிருந்தும்)

 இரண்டு படங்கள். முதலாவது படத்தில் இருக்கும் புங்கை மரம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் விதையை நட்டு உருவாக்கியது. இரண்டாவது படத்தில் இருக்கும் புங்கை மரம் தண்டுத் துண்டத்தை வேரூக்கி ஓமோனுடன் பரிகரித்து, இரண்டாவது வாரத்தில் கிளைகள் விடத் தொடங்கி நான்காவது வாரத்திற்குள் (இரு வாரங்களுக்குள்) உருவாக்கியது. இரண்டு மரங்களும் சுமார் 100 சென்ரி மீற்றர் உயரங்களையுடையன. பதியமுறை இனப்பெருக்கமே வேகமான வளர்ச்சிக்கு சிறந்தது. வித்து மூலம் உருவாக்கப்படும் மரங்கள், தங்களது இளமைக் காலத்தைக் கடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுக்கும். ஆனால் பதியமுறையில் அப்படியல்ல. விரைவாக விளைவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...