Tuesday, January 12, 2021

பாலை விதைகளும், பரிகரிப்பும்



இயற்கையான நிலைமைகளில் பாலை விதைகள் முளைப்பதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும். ஆனால் அவைகளை இரசாயன பரிகரிப்பு செய்யும்போது, முளைத்தலை இலகுவாக்கலாம். 1% KNO3 உடன் பரிகரிப்பு செய்த பாலை விதைகள் சுமார் இருபது நாட்களுக்குப் பிறகு முளைக்கத் தொடங்கியிருக்கின்றன. அதேவேளை இரு மாதங்களுக்கு முன் சாதாரணமாக நடப்பட்ட விதைகள் இன்னும் முழைக்கத் தொடங்கவில்லை. பாலை மரங்களை பதியமுறை இனப்பெருக்கத்தின் மூலமும் உருவாக்கலாம். மழைகாலம் தொடங்கியவுடன் பாலை மரங்களுக்கு கீழ் முளைத்திருக்கும் பாலை நாற்றுக்களை வேர்கள் அறுந்துபோகாமல் மண்ணுடன் கவனமாகப் பிடுங்கி பொலித்தீன் பைகளில் நடுவதன் மூலமும், செயற்கையான நிலைமைகளில் உருவாக்குவதற்கு மிகவும் கடினமான, இந்த அரிய பாலை மரங்களை நுாற்றுக் கணக்கில் உருவாக்கிக் கொள்ளலாம்.


பரிகரிக்கப்பட்டதும், பரிக்கப்படாததுமான பாலை விதைகள் மெதுவான வேகமெடுத்து முளைக்கத் தொடங்கியிருக்கின்றன. எமது பிரதேசங்களின் காடுகளின் குறியீடான பாலைகளை நுாற்றுக் கணக்கில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையும் மெதுவாக வேகமெடுத்து முளைக்கத் தொடங்கியிருக்கின்றது. (இந்தச் சோதனையை எனது வீட்டிலேயே செய்துகொண்டிருக்கின்றேன்).





No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...