Tuesday, January 12, 2021

கூழா விதைகளும், பரிகரிப்புகளும்

 பெரும்பாலான உலர் வலயத்திற்குரிய சுதேசிய தாவரங்களை வித்துக்கள் மூலம் இனம்பெருக்கிக் கொள்ளலாம். அதீத வெப்பத்திலிருந்தும், நீரிழப்பிலிருந்தும், பாதுகாப்பதன் நிமித்தம் இந்த விதைகள் மிகவும் கடினமான வித்துறைகளைக் கொண்டு காணப்படுகின்றன. மரங்கள் இந்த தடித்த வித்துறைகளை பரிணாமரீதியாக ஏற்படுத்திக் கொண்டன. இவ் வகையான வித்துக்கள் இயற்கை நிலைமைகளில் மிகவும் மந்த கதியிலேயே முழைக்கின்றன. பழங்களை உண்ணும் விலங்குகளினால் உண்ணப்பட்டு, கழிக்கப்பட்ட வித்துக்கள் விரைவாக முழைக்கின்றன. இந்த வித்துக்களின் உறைகளின் பருமனையும், விருத்தியையும் எந்தக் காரணிகள் கட்டுப்படுத்துகின்றன என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றன.

இவ்வகையான தடித்த வித்துறைகள் கொண்ட வித்துக்களிலிருந்து நாற்றுக்களை உருவாக்குவது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கின்றது.
தற்போது, இந்த சவாலை முறியடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றோம். கூழா விதைகளை, 10 வகையான பரிகரிப்புக்கள் செய்து (உடனடியாக பழத்துடன், காய்ந்த பழத்துடன், இவைகளின் தோற்களை நீக்கி, 24, 48 மணித்தியாலம் நீரில் ஊற வைத்து, காய்ந்த விதைகளை, 1 சதவீதம், 2 சதவீதம் பொட்டாசியம் நைத்திரேற் கரைசலில் ஊறவைத்து, வித்துறைகளை நீக்கி, சில அமிலங்களுடன் ஊறவைத்து போன்ற பல பரிகரிப்புக்கள்) ஒரு பரிசோதனை செய்தோம். அவற்றுள் ஒரு பரிகரிப்புக்குமிக விரைவான பதிலளித்தது. மகிழ்ச்சி. பாலை, நறுவிளி, வெரளி என கற்கைகள் தொடருகின்றன.



No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...