Sunday, January 10, 2021

அறபிகளும், தாவரங்களும்

 

February 13, 2020 
Shared with Public
Public
அறபிகளைக் கண்டு நான் பிரமிக்கும் ஒரு விடயம் அவர்களுக்கும் தாவரங்களுக்குமடையிலான உறவாகும். அதற்கு அவர்களின் காலநிலை, பொருளாதாரம், கலாச்சாரம், பின்பற்றுகின்ற சமய வாழ்க்கை முறைகளும் காரணமாக இருக்கலாம். அறபு நாடுகளில் ஒன்றான ஓமான் உலகத்திலே நான்காவது அழகான நாடாக கருதப்படுகின்றது. இயற்கையாகவே பல்வேறு காலநிலை அமைப்புக்களைக் கொண்டமைந்து காணப்படுகின்றது. ஓமானின் தலை நகரான மஸ்கட்டிலும், அதன் சுற்றயற் பகுதிகளிலும் நான் பார்த்து பிரமித்த ஒரு விடயம் நகரங்களின் வீதியெங்கும் நடப்பட்டு, உயர்ந்து, பசுமையாகச் செழித்து வளர்ந்து இருக்கும் பல மரங்களின் தொகுதியாகும். அவைகளில் மிக முக்கியமானது வேப்ப மரங்களாகும். உலகெங்கும் வேப்பை மரங்கள் பரம்பலுக்குள்ளானதின் பின்புலத்தில் இந்தியர்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றார்கள். ஓமானின் பாலைவன இல்புகளைத்தாண்டி வீதியெங்கும் பசுமையும் அடர்ந்த வேம்புகளும் காணப்படுவதற்கு முன்னே பலரின் கடின உழைப்பு இருந்திருக்கின்றது. அறபியர்களால் சிரிஸ் என அழைக்கப்படும் வேம்பு இங்கு இரண்டு வருடங்களில் நன்றாக பராமரிக்கும்போது பத்து அடி வரை மிக வேகமாக வளரத் தொடருகின்றது. மூன்று வருடங்களில் பூக்கத் தொடங்கும் இம்மரங்களில் 60 தொடக்கம் 70 சதவீதமானவை ஏப்பரல் தொடக்கம் மே மாதங்களிலும் எஞ்சியவை ஒக்டோபர் தொடக்கம் நவம்பர் மாதங்களிலம் பூக்கத் தொடங்குகின்றன. சுற்றுச் சூழலிலுள்ள காபனீரொட்சைட்டை அதிகளவில் உறிஞ்சும் தன்மையைக் கொண்ட வேம்பு, அதன் சுற்றயலையும் குளிராக வைத்திருக்கின்றது.; பல்வேறு விலங்கினங்களுக்கு புகலிடமளித்து உயிரினப் பல்வகைமையின் நிலைபேறான தன்மைக்கு ஒத்தாசையாக இருப்பதையும் எனது அதிகாலை நீண்ட நடையில் அவதானிக்க முடிந்தது. வாகனங்களுக்கும், மனிதர்களுக்கும் இழைப்பாறும் இடமாக இருக்கும் வேம்பை ஓமானிகள் மருத்தவத்திற்கும் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றார்கள். இந்த வேம்புகளைச் சாத்தியப்படுத்த அதற்குப் பின்னால் தொழில்நுட்பமும், பல தரப்பினரின் கடின உழைப்புக்களும் இருக்கின்றன. வேம்பு வெப்பக் காலநிலைக்கு வேகமாக வளரும் மரமாகும். வேம்பின் மாண்பை மற்றவர்கள் உலகம் முழுவதும் உணர்ந்திருக்கின்றார்கள். நாங்கள் எப்போது எங்கள் முற்றத்து மல்லிகைகளை மதித்தோம்? எப்போது மதிக்கப்போகிறோமோ தெரியாது? வேம்பை நடுவோம். நல்லதோர் உலகைச் செய்வோம்

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...