சூழலில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் சூழல் மாசடைதல் என ஓரளவு வரையறுக்கலாம். அல்லது சூழலின் சமநிலையில் மீள முடியாத மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் சூழல் மாசடைதல் எனலாம்.
இவை தரை, நீர், காற்று, ஒலி, கதிர்த்தொழிற்பாட்டு மாசடைதல் என பலவகைப்படும்.
இன்று அதிகாலை சைக்கிளோட்டத்தில், சுமார் ஒரு கிலோமீற்றருக்கும் குறைவான வீதியின் இரு ஓரங்களின் ஒரு மீற்றருக்கு உட்பட்ட எல்லைக்குள் நான் அவதானித்த முகக் கவசங்கள். எனது விரைவான அவதானிப்பில், சுமார் 32 முகக் கவசங்களை அவதானித்திருந்தேன். அவை தவறுதலாகவோ, வேண்டுமென்றோ வீசப்பட்டிருக்கலாம். பாவித்த முகக் கவசங்கள் பற்றியும், அதனால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
முகக் கவங்களை பாதுகாப்பாக அகற்றுதல் சம்பந்தமான விடயங்களை நாங்கள் ஒழுங்காக முகாமை செய்யாமல் விட்டால், வளமான இலங்கையின் எதிர்காலத்தில், சூழல் மாசடைதலில் முகக் கவச மாசடைதலும் தவிர்க்க முடியாத ஒரு வகையாகிவிடும்.
No comments:
Post a Comment