Thursday, January 14, 2021

தேத்தாத்தீவும், தேத்தாமரங்களும்: ஊரின் பெயர்களிலுள்ள சுதேசிய மரங்களும், அவைகளை மீளுருவாக்கலும் -


அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து
கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்

”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும். இந்த வகையில், ”தேத்தாதீவு” என்ற ஊரின் பெயரிலுள்ள தேத்தா மரங்களை எனது வீட்டில் உருவாக்கி கொண்டிருக்கின்றேன். இதற்கான விதைகளை வேர்கள் அமைப்பினர் சேகரித்து தந்திருந்தனர். இந்த மரங்களை ”தேத்தாத்தீவைச் சேர்ந்த சக்கரவர்த்தி மேல்கொண்ட அன்பின் நிமித்தம்” உருவாக்குகிறேன் என்றும் கூறலாம். வேர்கள் அமைப்பும், வேர்கள் றமேசும் தேத்தாதீவைச் சேர்ந்தவர்கள் என்பதும் கூடுதல் தகவல்.

தேத்தா மரம்

Strychnos potatorum என்கின்ற விஞ்ஞானப் பெயரையுடைய தேத்தா மரமானது (clearing-nut tree தேத்தா, ඉඟිනි) 40 அடிக்கு மேல் வளரும் இலையுதிர்க்கின்ற, அயனமண்டல கிழக்காசியாவுக்குரிய சுதேசிய மரமாகும். மிகுந்த மருத்துவ குணமும் கொண்டது. இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னர் கிணறுகள் கட்டும்போது, அடிப்பகுதி கொட்டுக்கள், தேத்தா மரத்தினாலேயே செய்யப்பட்டு பதிக்கப்படுவது வழக்கம். தேத்தாக் கொட்டைகள் நீரிலுள்ள மாசுக்களையும், கடினத்தன்மையயும் அகற்றும் தன்மையும், நீரினைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மையும் கொண்டன.
இழந்துபோன தேத்தா மரங்களை மீட்டெடுப்போம். தேத்தா மரங்களைக் கெண்டாடுவோம். அவைகளை மீட்கப்போகும் தேத்தாத்தீவாரையும் கொண்டாடவோம். தேத்தா வாழ்க.





No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...