மட்டக்களப்பில் ஒரு இலட்சம் பனை நடுகையை வேர்கள் அமைப்பினர் முன்னெடுக்கின்றனர்.
பனை மிக மிக நன்மைகளையும், பிரயோசனங்களையும் நீண்ட காலத்திற்கு கொடுப்பதால், கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு பனையானது ஒப்பிடப்படுகின்றது. இந்த மரம் கற்பகதரு எனவும் அழைக்கப்படுகின்றது. பனை என்பது புராதன காலத்து கருவளத்துக்கு பொறுப்பான பெண் தெய்வமாகும். அந்த தெய்வத்தின் பெயரையே இந்த மரத்துக்கு வைத்துள்ளார்கள். எனவே பனை வளமும், வாழ்வும், கூடியது. பெருக்குவதும், வளர்ப்பதும் இலகுவானது. இயற்கை மனிதகுலத்திற்கு பரிசாகக் கொடுத்த மிகச் சிறந்த மரங்களுள் பனை மிக முக்கியமானது. பனையானது பலவகையான சூழலியல், பொருளியல், சமூகவியல், மருத்துவவியல் போன்றவகைளுடன் தொடர்புடைய பல நன்மைகளைக் கொடுக்கின்றது. பனை ஆயிரம் நன்மைகளைத் தந்தாலும், புவி வெப்பமடைவதையும், நிலத்தடிநீர் குறைவதையும் தடுக்கும் நன்மைகளுக்காகவேனும் பனையை நடவேண்டும். பாதுகாக்க வேண்டும். பனை தமிழ்நாட்டு அரசின் தேசிய மரமாகும். உலகின் பல கலாசாரங்களுடன் தொடர்புபட்டதைப்போன்றே, தமிழர்களின் கலாச்சாரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
இந்த வகையில் மட்டக்களப்பில் ஒரு இலட்சம் பனை நடுகையை, வேர்கள் அமைப்பினர் அடுத்த வாரம் தொடங்கவிருக்கிறார்கள். அதற்காக தற்போது பல பகுதிகளிலும் பனம் விதைகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழ்த்துவோம். பனை நடுவோம்.
வெப்பமாதலிலிருந்து பூமியைக் காப்போம்.
நிலத்தடி நீரைக் காப்போம்,
கலாச்சாரத்தையும் காப்போம்.
--
நாளை (28.11.20) ஆரம்பமாகவிருக்கும் ஒரு இலட்சம் பனை விதைப்பு சம்பந்தமாக வேர்கள் அமைப்பினருடன் திட்டமிடலும், கலந்துரையாடலும், விதைகள் சேகரித்தலும், கள விஜயங்களும்.....
வேர்கள் அமைப்பினரின் மட்டக்களப்பின் ஒரு இலட்சம் பனை விதைப்புத் திட்டத்தின் கீழ், இன்று தேத்தாதீவில் 3000 விதைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வை வெற்றிகரமாக சாத்தியமாக்கிய வேர்கள் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் றமேஸ் சிவநாயகம் ஆசிரியர் அவர்களுக்கும், மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்களுக்கும் வாழ்த்துக்களும். நன்றிகளும். பயணங்கள் முடிவதில்லை.
No comments:
Post a Comment