நண்பர்
Jeyan Deva
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வட பிராந்தியங்களில் மூங்கில்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் சம்பந்தமான ஒரு ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றோம். நேற்றைய பின்னேரமும், இன்றைய பொழுதும் களிஓடை ஆற்றங்கரை மூங்கில்காடுகளில் கரைந்தது. நிறைய மூங்கில் நாற்றுக்களையும், முளைகளையும் சேகரித்தோம். இது மிகவும் கடினமான ஒரு பணியாக இருந்தது. எனது நெருங்கிய உறவினரும், நண்பரும் விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரியுமான முகம்மட் நிப்றாஸ் இதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்கிறார். விரைவில் பல நுாற்றுக்கணக்கான கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என நம்புகிறோம். உலகைப் பசுமையாக்கும்போது மக்களின் ஜீவனோபாயத்திற்கான மூலங்களையும் உயர்த்துவோம்.
No comments:
Post a Comment