Mycteria leucocephala என்ற விஞ்ஞானப் பெயரைக் கொண்ட இந்தப் பறவை, ஆங்கிலத்தில் Painted Stork, தமிழில் சங்குவளை நாரை, மஞ்சள் மூக்கு நாரை, சிங்களத்தில் ලතුවැකියා எனப்படுகின்றது. இது நாரைக் குடும்பத்தில் பெரிய பறவையாகும். உலர் வலயத்தின் குளங்கள், வாவிகள், தாழ்நிலங்கள் போன்றவற்றில் பெரும்பாலும் கூட்டங்களாயும், சில தனியாயும் காணப்படும். இவைகள் மீன்கள், தவளைகள், நீர்ப் பாம்புகள், நண்டுகள், பல்லிகள் போன்றவைகளை உணவாகக் கொள்கின்றன. வழமையாக வருடத்தின் ஆரம்ப காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள மரங்களில் கூடுகட்டி இனம்பெருக்குகின்றன. இது வெளிநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பறவையல்ல. ஆனால் உள்நாட்டிற்குள்ளே சிறிது துாரம் உணவுக்காக, இனப்பெருக்கத்திற்காக இடம்பெயரும்.
நிற்கும்போது 3.5 அடி உயரமும், இரு சிறகுகளுக்கும் இடையே 5.5 அடி துாரமும், சுமார் 5 கிலோகிராம் நிறையும் கொண்டது. ஆணும், பெண்ணும் தோற்றத்தில் ஓரே மாதிரியாக தோன்றினாலும், ஆண் பெண்ணைவிட அளவில் சற்று பெரியது. அபாயத்திற்கு அருகில் வந்துவிட்ட பறவை. இவைகளை பாதுகாக்க வேண்டும். மனிதர்களும் இவர்களுடைய பிரதான எதிரிகளாயிருக்கிறார்கள்.
மின்கம்பத்தினால் இந்த விபத்து நடந்திருக்குமானால் அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இலங்கை அரசாங்கம் தற்போது மின்சார கம்பிகளை பிளாஸ்ரிக் திரிகோர் பண்டல் கம்பிகளாக மாற்றி வருகின்றது. அவை குறைந்த இடத்தை எடுத்து, விலங்குகளுக்கும், மரங்களுக்கும் பாதிப்புக்களையும் குறைக்கின்றன.
ஒவ்வொரு நாளும், ஏதோவொரு காரணியால், குடித்தொகை குறைந்து வரும் மஞ்சள் மூக்கு நாரைகள், அதன் உணவு நடத்தைகள் காரணமாக, நீர்ச்சூழற் தொகுதியில் முக்கிய பாத்திரத்தை வகித்து வருகின்றன. அவைகளின் குடித்தொகையில் ஏற்படும் பாதிப்பு, சூழற்றொகுதியின் சமனிலையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே அவைகளை பாதுகாப்பது அவசியமாகும்.
No comments:
Post a Comment