நான் பணி செய்யுமிடத்தில்ல இருந்த Delonix regia, விஞ்ஞானப் பெயரையுடைய நெருப்பு வாகை, (මල් මාර, flame tree) என்ற இந்த மரம், இரண்டு நாட்களுக்கு முன் அடித்த கச்சான் காற்றில் அடியோடு வீழ்ந்துவிட்டது. ஏதோவொரு காரணத்தால் வேர்கள் இறந்துவிட்டிருந்தன. கறையான் தாக்கமும் காரணமாக இருக்கலாம். ஏனெனில் அருகில் கறையான் புற்றுக்களும் காணப்படுகின்றன. கடந்த மூன்று வருடங்களாக புதிய மரங்களை உருவாக்குவதற்கு ஆயிரக்கணக்கான விதைகளைத் தந்துதவியது இந்த மரம். இந்த மரத்தின் சேமிப்பாக நுாற்றுக் கணக்கான விதைகளும் என்னிடம் கைவசமிருக்கின்றன. அதன் விதைகளிலிருந்து உருவாக்கிய ஒரு மரத்தை அதே இடத்தில் நடலாம் என நினைக்கின்றேன். தனது கடைசி நிமிடம் வரை தனக்கிருக்கின்ற பிரச்சினைகளை வெளியே தெரியாவண்ணம் மறைத்துக்கொண்டு, (நான் இரண்டு, மூன்று தடவைகள் ஏறியும் என்னையும் கீழே வீழ்த்தாமல்), தனது கடைசி மூச்சை விட்டிருக்கிறது. மரங்களுக்கு முடிவில்லை. ஏனெனில் மரங்கள் என்னும் உயர்திணையின் தொடர்ச்சியாய் நாங்களாய், விதைகளாய் நிறைய இருக்கின்றன.
-----
நான் பணி செய்யுடமிடத்தில் கடந்த மாதம் இதே நாள் இதே இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்த பெரிய நெருப்பு வாகை மரமொன்று வீழ்ந்து இறந்துவிட்டிருந்தது. அந்த இடத்தில், இன்று (12.11.2020) வீட்டில் வளர்த்து வந்த இரண்டு வயதுடைய, நான்கு அடி உயரமுள்ள புங்கை கன்று ஒன்றை நட்டோம். இந்த மழை அதனை வளர்த்துவிடும். மரங்கள் ஒருபோதும் முடிவதில்லை.
No comments:
Post a Comment