Wednesday, January 13, 2021

மீலாதும் நபியும், மரம் நடுகையும்


இந்தக் கொறோனா காலம், ஒப்புக்கொண்ட கருத்தரங்குகள், செயலமர்வுகள், சொற்பொழிவுகள், பயிற்சிப் பட்டறைகள், கள விஜயங்கள், செயற்பாடுகள் போன்றவற்றை புரட்டிப் போட்டிருக்கின்றது. வழமையாக வடகீழ்ப் பருவப் பெயர்ச்சி மழை தொடங்க காலில் சக்கரம் முழைக்கத் தொடங்கியிருக்கும். நாட்டின் பல பாகங்களுக்கும் சக்கரம் உருளத் தொடங்கியிருக்கும். அதனையும் குறோனா புரட்டிப் போட்டிருக்கின்றது. இந்தச் சிக்கலான கால கட்டத்தில், வீட்டில் நுாற்றுக் கணக்கான மரங்களை உருவாக்கியிருக்கின்றோம். இந்த மழை காலத்தில் நடுவதற்கு கேட்ட நண்பர்களுக்கு தயார் நிலையில் அவை இருக்கின்றன. குறோனா கட்டுப்படுத்தினாலும், அரசாங்கம் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் எங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் அட்டாளைச்சேனை, கோணாவத்தை ஆற்றோரங்களில் மூங்கில், புங்கை நடுகைகளை மேற்கொண்டோம். இதற்கு எனது உறவினர்கள் எம்எச்எம். சஜாத், சுஜா செயின் ஆகியோர் உதவியாக இருந்தனர். இந்த இக்கட்டான கால கட்டத்தில் இதனைப் மிகப் பெறுமதியான விடயமாக உணருகின்றோம். இன்று வெள்ளிக்கிழமை நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினம். இந்தப் புண்ணிய தினத்தில் இந்த நடவடிக்கைக்கு இன்னும் ஒரு பெறுமதி சேருகின்றது. நடவடிக்கைகள் தொடரும்…

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...