இன்று (30.11.2020) தொப்பிகல பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில், வேர்கள் அமைப்பினரால் 4000 விதைப் பந்துகள் வீசப்பட்டும், மரங்களும் நடப்பட்டன. இதனை தொப்பிகல பகுதி வனப் பாரிபாலன அதிகாரி எம்.எச். முகம்மட் கியாஸ் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் நானும், வாழைச்சேனை வன விரிவாக்கல் அதிகாரி எஸ்.எல். சபீக் அவர்களும் கலந்து கொண்டிருந்தோம். வேர்கள் அமைப்பின் சார்பில் பிரபல தொழில்நுட்ப பாட ஆசிரியர் றமேஸ் சிவநாயகம் அவர்களும், அவரிடம் க.பொ.த (உயர்தரம்) கற்று, இன்று இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்களில் கற்கும் 12 பட்டதாரி மாணவர்களும் (பிருந்தாபன், அபிமன், லோஜன், துதிசன், சினோஜன், இனேகாந்த், சன்ஜிபன், கினுசன், பிரவீணன், சபிலாஸ், சேருன், பிரகாஸ்) பங்குபற்றியிருந்தனர். இந்த விதைப் பந்துகள் அவரின் எல்லா தரத்து மாணவர்களின் பங்கேற்புடனும் செய்யப்பட்டிருந்தன. இது முடிவல்ல ஆரம்பம். எல்லோருக்கும் நன்றி
.
No comments:
Post a Comment