Tuesday, January 12, 2021

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தாவரங்களின் உயிரியல் பல்வகைமை

தாவரவியல் விசேட கற்கை நெறி இறுதி வருட மாணவிகளுடன் நேற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு, அந்த வைத்தியசாலையின் தாவரங்களின் உயிரியல் பல்வகைமையை அளவிடவும், அங்குள்ள மருத்துவ தாவரங்களை அடையாளம் காணவும் ஒரு விஜயத்தை மேற்கொண்டோம். இதற்கான ஏற்பாடுகளை அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆசாத் ஹனிபா ஏற்பாடு செய்து தந்திருந்தார் (பகற் போசணத்துடன்). அத்துடன் அங்குள்ள உத்தியோகத்தர் சரீபா சபீக் உட்பட பலரும் எங்களுக்கு பேருதவியாக இருந்தார்கள். நுாற்றுக்கணக்கான மருத்துவ தாவரங்கள் அங்கு மண்டிக் கிடக்கின்றன. நாங்கள் அடையாளம் கண்டவைகளில் சில பின்வருமாறு-

நீர்ப்புலா, சிறுகுறிஞ்சா, புணர்நவா, நாய்க்கடுகு, நாயுருவி, தாக்கத்தி மூக்குட்டை, முடக்கத்தான், காட்டுத் திராட்சை, அத்தி, குப்பைமேனி. காட்டு எலுமிச்சை, சீந்தி, நன்னாரி, தண்ணிச்சோறு, காட்டவாசி, கல்உழுவை, குண்டுமணி, மல்காரை, அம்மன் பச்சரிசி (சிவப்பு), அம்மன் பச்சரிசி (பச்சை), மஞ்சள் கரிசலான்கண்ணி, தயிர்விழா, மூத்திரக் கஸ்ஸா, சிறு நெருஞ்சி, கீழ்க்காய் நெல்லி, மூக்குத்திப் பூண்டு, ஓரிலைத் தாமரை, மொசுமொசுக்கை, காட்டுப் பாவை, கொவ்வை, சீதேவியார் செங்கழநீர், பொன்னாங்காணி, சீமைப் பொன்னாங்காணி, காட்டுக்கொத்தமல்லி, சிவப்பறுகு, தேவதாரு, சிறுபுள்ளடி, மகத்தி, பசளி, கத்தாளை, காணா வாழை, விச முருங்கை, சாத்தாவாரி, கள்பூரவள்ளி, காட்டாமணக்கு, சிற்றாமணக்கு, சூரியகாந்தி, நான்குமணி, பட்டி, சேம்பு, கருநீத்துப் பச்சை, நத்தை சூரி, தோகை ஆறு, இரணைக் கள்ளி, வள்ளலை, இறச்சி நெகிட்டான். மலைப்பனை, நாகதாளி, பசளி, துப்பட்டி உட்பட இன்னும் பல நுாற்றுக் கணக்கான மருத்துவ தாவரங்களும் இருக்கின்றன.
இந்தப் பிரதேசத்தின் சிறந்த ஒரு மூலிகைத் தோட்டத்தை உருவாக்கும் வாய்ப்புக்களும், சாத்தியங்களும் இந்த வைத்தியசாலைக்குள் கொட்டிக் கிடக்கின்றன. அதுவே வைத்திய அத்தியட்சகரின் கனவும் கூட. விரைவில் அதனை அவர் சாத்தியப்படுத்துவார்.












No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...